Tamil News | Online Tamil News |
- சொந்த தொகுதியில் ராகுல் படுமோசம்
- அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு: அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
- இலங்கை தீர்மானத்தை புறக்கணித்தது ஏன்?மத்திய அரசு விளக்கம்
- லோக்சபா தேர்தல் மூலம் ஜெ., ஆட்சியை ஒதுக்க வேண்டும்: ஸ்டாலின் பேச்சு
- ஜெ., கூட்டத்திற்கு போனால் ரூ.500 மருத்துவ செலவு: விஜயகாந்த் கிண்டல்
- ஜெ., ஹெலிகாப்டர் இறங்க 16 மரங்கள் காலி: அ.தி.மு.க.,வுக்கு, அபராதம் விதிக்க ரயில்வே முடிவு
- 'இறைவன் போட்ட கணக்கு சரி!'கருணாநிதி திடீர் அறிவிப்பு
- பெண் பத்திரிகையாளரை கற்பழித்த மூன்று கொடூரர்களுக்கு துாக்கு: மும்பையை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு
- விஜயகாந்த், ராமதாஸ் பிரசார திட்டங்களில் குளறுபடி: மோடி தமிழகம் வரும் வரை இழுபறி தொடரும்?
- பா.ஜ.,வை நெருங்குகிறாரா லாலு? காங்கிரசாருக்கு சந்தேகம்!
- கலைஞர் 'டிவி'க்கு ரூ.113 கோடி; டி.டி., கல்லூரிக்கு ரூ.1,200 கோடி: வரி பாக்கிக்காக வருமான வரி நோட்டீஸ்
| சொந்த தொகுதியில் ராகுல் படுமோசம் Posted: உ.பி., மாநிலம் அமேதி தொகுதி, 1980ல் இருந்து, காங்., கட்சியின் சொந்த தொகுதியாகவே இருந்து வருகிறது. கடந்த, 2004 முதல் அந்த தொகுதியின் எம்.பி.,யாக காங்., கட்சியின் துணைத் தலைவர் ராகுல் இருந்து வருகிறார். தற்போது அதே தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். ஆனால், அந்த தொகுதியில் பல்வேறு பிரச்னைகளை அவர் இதுவரை கவனிக்கவும் இல்லை, தொகுதி பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை. இது எவ்வளவு மோசமாக உள்ளது என்றால், ராகுல் அமேதியில் வசிப்பதாக ஒரு சான்று வேண்டும் என்று, அவர் சார்பில் ஒரு வழக்கறிஞர் விண்ணப்பம் செய்தார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி பல்வேறு ... |
| அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு: அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி Posted: சென்னை : அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவர்.அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் தர ஊதியத்தை இணைத்து, அகவிலைப்படி நிர்ணயிக்கப்படும். அகவிலைப்படி, 6 மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்தப்படும். கடந்த ஆண்டு, ஜூலை மாதம் வரை, 90 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டது. அதை 100 சதவீதமாக உயர்த்தி, 2014 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, தற்போது, தமிழக அரசும், மாநில அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, 10 சதவீதம், உயர்த்தி ... |
| இலங்கை தீர்மானத்தை புறக்கணித்தது ஏன்?மத்திய அரசு விளக்கம் Posted: புதுடில்லி : ''மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது இல்லை என்ற கொள்கையால் தான், இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பை, இந்தியா புறக்கணித்தது,'' என, வெளியுறவுசெயலர், சுஜாதா சிங் கூறினார்.மத்திய வெளியுறவு துறை செயலர், சுஜாதா சிங் நேற்று கூறியதாவது:23 நாடுகள் ஆதரித்ததால் வெற்றி:ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை, 23 நாடுகள் ஆதரித்ததால் வெற்றி பெற்றது. இதற்கான ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இது தொடர்பாக, மத்திய ... |
| லோக்சபா தேர்தல் மூலம் ஜெ., ஆட்சியை ஒதுக்க வேண்டும்: ஸ்டாலின் பேச்சு Posted: சிவகங்கை : " லோக்சபா தேர்தலின் மூலம், ஜெ., ஆட்சிக்கு, மக்கள் ஓவர்...ஓவர்... அளிக்க வேண்டும்," என, சிவகங்கை மாவட்ட தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அவர் பேசியதாவது:ஜெயலலிதா தனி விமானம், ஹெலிகாப்டரில் தான் பறக்கிறார். தேர்தல் பிரசார கூட்டத்திற்கு, ஹெலிபேட் தளம் அமைக்க, ரயில்வே இடத்தை ஆக்கிரமித்து, 50 மரங்களை வெட்டினர். இதற்காக, அக்கட்சிக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெலிபேட் தளம் அமைக்கவே, ரூ.30 லட்சம் வரை செலவழிக்கின்றனர். காரில் வந்து மக்களை சந்திக்க ஜெ.,அஞ்சுகிறார்.கருணாநிதி ... |
| ஜெ., கூட்டத்திற்கு போனால் ரூ.500 மருத்துவ செலவு: விஜயகாந்த் கிண்டல் Posted: கொடைக்கானல் : ''அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூட்டத்திற்கு, 200 ரூபாய் கொடுத்து, ஆட்களை கூட்டி செல்கின்றனர். அந்த கூட்டத்திற்கு, உச்சி வெயிலில் போய்வந்த தாய்மார்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில், 500 ரூபாய் செலவழிக்க வேண்டி உள்ளது,'' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பேசினார்.திண்டுக்கல் தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, கொடைக்கானலில் விஜயகாந்த் பேசியதாவது:உதாரணம்:தர்மபுரியில், பா.ம.க., வேட்பாளர் அன்புமணி மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தன் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு மிக சிறப்பாக இருப்பதாக, ... |
| ஜெ., ஹெலிகாப்டர் இறங்க 16 மரங்கள் காலி: அ.தி.மு.க.,வுக்கு, அபராதம் விதிக்க ரயில்வே முடிவு Posted: திருச்சியில் இன்று பிரசாரம் செய்ய வரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், ஹெலிகாப்டர் தரையிறங்க, 'ஹெலிபேடு' அமைக்க, 16 மரங்களை வெட்டியதை கண்டித்து, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம், அ.தி.மு.க.,வுக்கு, அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.திருச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளரும் தொகுதியின் எம்.பி.,யுமான குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய, முதல்வர் ஜெயலலிதா, இன்று திருச்சி வருகிறார். பொன்மலை, ரயில்வே மைதானத்தில், மாலை 3:00 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.இந்த இடத்தில் ஹெலிபேடு அமைக்க, அங்கு நின்றிருந்த 15 யூக்கலிப்டஸ் மரம் மற்றும் ஒரு வேப்ப மரம் ... |
| 'இறைவன் போட்ட கணக்கு சரி!'கருணாநிதி திடீர் அறிவிப்பு Posted: சென்னை : 'தி.மு.க.,வில் உள்ள 80 லட்சம் உறுப்பினர்களும், கட்சி உறுப்பினர் அல்லாத மற்றொருவரை அழைத்து சென்று, ஓட்டு அளிக்க செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர், இறைவன் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், 'கட்சி உறுப்பினர்களாக, 80 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கட்சி உறுப்பினர் அல்லாத மற்றொருவரை தன்னுடன் அழைத்து சென்று, நம் அணி வேட்பாளருக்கு ஓட்டு அளிக்க செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், மேலும், 80 லட்சம் ஓட்டுக்கள் நமக்கு கிடைக்கும்' என, ... |
| Posted: மும்பை : மும்பையில், பாழடைந்த மில் வளாகத்தில் பெண் பத்திரிகையாளர் உட்பட இரண்டு பெண்களை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மூன்று குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை அளித்து மும்பை செஷன்ஸ் கோர்ட் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.நகரின் மைய பகுதியில்...கடந்த ஆண்டு ஆகஸ்டில், மும்பையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், தன் ஆண் நண்பர் துணையுடன், நகரின் மையப்பகுதியில் செயல்படாமல் இருந்த பாழடைந்த சக்தி மில் என்ற தொழிற்சாலை வளாகத்தை, புகைப்படம் எடுக்க சென்றார்.செடிகள் அடர்ந்திருந்த அந்த வளாகத்திற்குள் அவர்களை வழிமறித்த கும்பல், ... |
| விஜயகாந்த், ராமதாஸ் பிரசார திட்டங்களில் குளறுபடி: மோடி தமிழகம் வரும் வரை இழுபறி தொடரும்? Posted: தமிழகத்தில் பெரும் இழுபறிக்கு பின் அமைக்கப்பட்ட பா.ஜ., தலைமையிலான கூட்டணியில், தலைவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததால் பெரும் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக தகவல் பரவி உள்ளது. இதனால், விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் பிரசார திட்டங்களில் குழப்பம் ஏற்பட்டு, கூட்டணி கட்சி தொண்டர்கள் இடையேயும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடுகிறது. அந்தக் கட்சிக்கு, பல உதிரி கட்சிகள் ஆதரவளிக்கின்றன. 7 கட்சிகள்அதேபோல, தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், மனித நேய ... |
| பா.ஜ.,வை நெருங்குகிறாரா லாலு? காங்கிரசாருக்கு சந்தேகம்! Posted: பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பா.ஜ.,வை நெருங்குவதாக, காங்கிரசாருக்கு திடீர் சந்தேகம் எழுந்துள்ளது.பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளமும், காங்கிரசும், லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு நடந்தது. ஆனால், பீகாரில், ராஷ்டிரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு, அதிக செல்வாக்கு உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தை கழற்றி விட்ட காங்கிரஸ், லாலுவுடன் கை கோர்த்தது. ஆனால், காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்காமல் இழுத்தடித்து வந்த லாலு, ... |
| Posted: சென்னை: கலைஞர் 'டிவி' மற்றும் டி.டி., மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின், வரி பாக்கிக்காக, இறுதி கட்ட நோட்டீசை, வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. கலைஞர் 'டிவி' 113 கோடி ரூபாயும், டி.டி., மருத்துவக் கல்லூரி, 1,200 கோடி ரூபாயும், வரி செலுத்த வேண்டும் என, நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.வருமான வரித்துறையின் ஆய்வுகள் முடிந்து, இறுதி கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதால், நோட்டீசை எதிர்த்து, இரு நிறுவனங்களும் மேல்முறையீடு செய்யும் என, தெரிகிறது. கலைஞர் 'டிவி' நிறுவனம், 2011- 12ல், செலுத்த வேண்டிய வருமான வரிக்காக, முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு, அந்நிறுவனம் அளித்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 05,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |