Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட்

Posted: 04 Apr 2014 01:53 PM PDT

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்றசெயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட 20-வது நிமிடத்தில், புவிவட்டச்சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதாகஇஸ்ரோ தெரிவித்தது. பி.எஸ்.எல்.வி.1பி வரிசையில்ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின் பேசிய இஸ்ரோ தலைவர்ராதாகிருஷ்ணன், இதேபோல் இன்னும் 4 செயற்கை கோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது. அதில் 2 ...

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Posted: 04 Apr 2014 11:31 AM PDT

டி20 உலகக் கோப்பை 2-வது அரையிறுதியில், தென் ஆப்பிரிக்க அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அசத்தலான பேட்டிங் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட விராட்கோலி ஆட்ட நாயகனாகத் தேர்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் 173 ரன்கள் என்ற சற்றே கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, துவக்க வீரர்கள் #ரோஹித் சர்மாவும், ரஹானேவும் சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். ஆனால், 10 ஓவர்கள் முடியும் முன்னரே ரோஹித் 24 ரன்களுக்கும், ரஹானே 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ...

மீனாட்சி அம்மன் கோயிலும் அரிய தகவல்களும்!

Posted: 04 Apr 2014 08:36 AM PDT

மீனாட்ஷி அம்மன் கோயிலும் அரிய தகவல்களும்           கோயில் அமைப்பு 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் 8 கோபுரங்களையும், 2 விமானங்களையும் கொண்டுள்ளது. இத்திருக் கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடி யும் உடையது. மேலும் ஒரு ஏக்கர் பரப் பளவில் கோயில் வளாகத்தில் பொற்றாமரைக்குளமும் அமையப்பெற்றுள்ளது. கோபுரங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 10 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 1559ஆம் ஆண்டு கட்டப்பட்ட தெற்கு கோபுரம் 170 அடி உயரத்தில் உயரமான கோபுரமாக திகழ்கிறது. ...

கோடையைச் சமாளிக்க...

Posted: 04 Apr 2014 07:41 AM PDT

* மோரில் லெசிதீன் எனும் ஒருவகை சத்து இருக்கிறது. இச்சத்து கல்லீரல், சிறுகுடல் முதலியவற்றைப் பலப்படுத்தும். * மூளைச்சூடு உள்ளவர்கள், ரத்தநாளத் துடிப்பு உள்ளவர்கள் மோரை அதிகமாகப் பருக வேண்டும். * வெயிலில் அலையும் சிலருக்கு வியர்வை மற்றும் சிறுநீர் போன்றவை சரியாகப் பிரியாது. இதனால் கீல்பிடிப்பு நோய் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் கோடைகாலம் முடியும்வரை தினமும் மோர் குடித்தால் நோய் விலகும். *பசு மோருடன் தோல் நீக்கிய இஞ்சியைத் துண்டு துண்டுகளாக வெட்டிப்போட்டு அதனுடன் எலுமிச்சம்பழ ரசத்தையும் ...

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Posted: 04 Apr 2014 07:17 AM PDT


1.தாளம் போட்டு சிரித்தது
தாத்தாவின் தொந்தியைத் தட்டி
மடியில் உட்கார்ந்தக் குழந்தை.

2.மருத்துவர் கொடுத்த மருந்தால்
அழிந்தது
குழந்தை வயிற்றில் பூச்சிகள்.

3.தங்கச் சங்கலி பறித்தவன்
நம்பிக்கைத் தகர்ந்துப் போனது
கிடைத்ததோ கவரிங் நகை.

4.வலது கைமணிக் கட்டில்
கலர் கலராய்
கோயிலில் வாங்கியக் கயிறுகள்.

"எல் நினோ'வை எதிர்கொள்வோம்!

Posted: 04 Apr 2014 06:59 AM PDT

பொதுவாகவே இந்தியாவில் நமக்கு அரசியலைக் கடந்து, உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொருளாதாரத்தையும், ஏனைய நடைமுறை நிகழ்வுகளையும் எதிர்கொள்ளும் பக்குவம் இன்னும் வந்தபாடில்லை. நமது நிர்வாக இயந்திரமும் சரி, அரசியல் நிகழ்வுகளின்போது, ஏனைய பிரச்னைகளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இயங்குவது வழக்கமாகிவிட்டது. நாடாளுமன்றமோ, சட்டப்பேரவையோ கூடும் நேரங்களில் தலைமைச் செயலகங்களில் அன்றாட அலுவல்கள் பாதிக்கப்படுவது இதற்கு எடுத்துக்காட்டு. ஆசிய நாடுகள், அதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகள் ஒரு மிகப்பெரிய சவாலை ...

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

Posted: 04 Apr 2014 06:38 AM PDT

1. அறம் செய விரும்பு 2. ஆறுவது சினம் 3. இயல்வது கரவேல் 4. ஈவது விலக்கேல் 5. உடையது விளம்பேல் 6. ஊக்கமது கைவிடேல் 7. எண் எழுத்து இகழேல் 8. ஏற்பது இகழ்ச்சி 9. ஐயம் இட்டு உண் 10. ஒப்புரவு ஒழுகு 11. ஓதுவது ஒழியேல் 12. ஒளவியம் பேசேல் 13. அகம் சுருக்கேல் 14. கண்டொன்று சொல்லேல் 15. ஙப் போல் வளை 16. சனி நீராடு 17. ஞயம்பட உரை 18. இடம்பட வீடு எடேல் 19. இணக்கம் அறிந்து இணங்கு 20. தந்தை தாய்ப் பேண் 21. நன்றி மறவேல் 22. பருவத்தே பயிர் செய் 23. மண் பறித்து உண்ணேல் ...

போலியோ இல்லா உலகு தேவை

Posted: 04 Apr 2014 06:31 AM PDT

"இந்தியா உள்ளிட்ட 11 தென் கிழக்காசிய நாடுகளில் 'போலியோ' எனப்படும் இளம்பிள்ளைவாத நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது" என்று 'உலக சுகாதார நிறுவனம்' சான்றளித்திருக்கிறது. கோடிக் கணக்கான குழந்தைகளைப் பாதிப்புக்குள்ளாக்கிவந்த இந்த நோய், இப்போது கட்டுப்பட்டிருக்கிறது என்பது சற்றே ஆறுதலைத் தந்தாலும், இது மீண்டும் வராது என்ற நிலைமையை ஏற்படுத்தியே தீர வேண்டும். ஏனென்றால், பக்கத்து நாட்டில் இந்த நோய் இருந்தால் இது மீண்டும் பரவக்கூடிய தன்மை படைத்தது. பாகிஸ்தானில் 'போலியோ' இன்னமும் முற்றாக ஒழியவில்லை என்பதால், ...

காயங்கள்!

Posted: 04 Apr 2014 05:47 AM PDT

தீபக் என்று ஒருவர், தன்னைப் பார்க்க காத்திருப்பதாக, ஆபிஸ் பாய் சொல்லவும், குழப்பமானாள் அர்ச்சனா. அவளுக்கு அந்த பெயரில் எவரையும் தெரியாது. யோசித்துக் கொண்டே, விசிட்டர் அறைக்குள் நுழைந்தாள். ''ஹலோ மேடம்... என் பேர் தீபக். நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது; ஆனா, உங்கள எனக்கு நல்லாவே தெரியும். வர்ற சண்டே, உங்கள பொண்ணு பாக்கறதுக்காக வரப்போற சூர்யாவோட பிரண்ட்,'' என்று, அவன் சொல்லவும், மேலும் குழப்பமானாள். 'ஞாயிற்றுக்கிழமை பொண்ணு பாக்க வர்றாங்க என்ற விஷயத்தையே காலையில தானே அப்பா சொன்னாரு... மாப்பிள்ள ...

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 04 Apr 2014 05:27 AM PDT

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

ஸ்டாலின்... சாதிப்பாரா... சறுக்குவாரா?

Posted: 04 Apr 2014 03:45 AM PDT

16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தான் கலந்துகொண்ட முதல் பிரசாரக் கூட்டத்தில் கருணாநிதி பேசிய பேச்சு இது... ''நான் அரசியலுக்கு வந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது எனக்கு வயது 90 என்றால், இன்னும் எத்தனை ஆண்டு காலம் வாழப்போகிறேன் என்ற கவலை இல்லை. ஆனால், மிச்சம் இருக்கிற இந்த ஆண்டுகளில் என்ன செய்தேன் என்பதுதான் முக்கியம். அவற்றைச் செய்துவிட்டுத்தான் நான் கண்ணை மூடுவேன்; அதுவரையில் காரியம் ஆற்றுவேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெரிய தலைவர்கள் வழிவந்த நான், அவர்களுடைய ...

சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ்

Posted: 04 Apr 2014 01:37 AM PDT

'ஒரு சர்க்கரையில்லாத காபி கொடுங்க', 'ஸ்வீட்... சின்ன பீஸ் போதும்' - பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே உச்சரித்து வந்த வார்த்தைகள் இவை. ஆனால், இன்றைய இளைஞர்களும் ஹோட்டல், பார்ட்டி, பங்ஷன்களில் தித்திப்பு உணவுகளை அதிகம் தவிர்க்க... இப்போது தனியாக சர்க்கரை இல்லாத டீ கேன்களை விருந்துகளில் வைப்பது சகஜமாகிவிட்டது. காரணம், 'கசப்பான' சர்க்கரை நோய்தான். மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சர்க்கரை நோய் பற்றிய பயத்திலேயே பலரும் வாழ்கின்றனர். சர்க்கரையைக் கட்டுப்படுத்த வழி தேடி, கடைசியில் 'அறுகம்புல் ...

கோணம்!

Posted: 04 Apr 2014 01:05 AM PDT

பூஜை அறையில், கிரகப்பிரவேச பத்திரிகைகளை வைத்து, பூஜை செய்த பின், சுதா தன் கணவன் வாசுவிடம், ''என்னங்க, மொத பத்திரிகைய, உங்க அக்கா வீட்டுக்கும், அடுத்து எங்க அப்பா, அம்மாவுக்கும் கொடுத்துட்டு, அப்புறம் மத்தவங்களுக்கு கொடுக்கலாம்,'' என்றாள். 'சுதா சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கக்கூடியவ. அவளுடைய கட்டளைக்கு மாறாக, மொத பத்திரிகைய, வேறு ஒருத்தருக்கு கொடுக்க, முடிவு செய்துள்ள விஷயத்தை, முன்கூட்டியே சொன்னா அவளுக்கு, 'முணுக்'குன்னு கோபம் வந்துரும். அப்புறம் பத்திரிகை கொடுக்க, கூட வர மறுத்துடுவா. ...

நன்றி மறப்பது நன்றன்று!

Posted: 04 Apr 2014 01:01 AM PDT

மனிதர்களாய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சூழ்நிலையில், அறிந்தோ, அறியாமலோ பாவங்களை செய்து விடுகின்றனர். அத்தகைய பாவங்களின் தன்மைக்கு ஏற்ப, சாஸ்திரங்கள், சில பரிகாரங் களை பரிந்துரை செய்கிறது. ஆனால், பரிகாரமே இல்லாத பாவம் ஒன்று உள்ளது. அது தான், செய்நன்றி மறத்தல்! இப்பாவத்தை செய்வோருக்கு மட்டும், எந்த சாஸ்திரத்திலும் பரிகாரம் இல்லை. அதனால் தான் நம் முன்னோர்கள், இத்தகைய கொடிய பாவத்தை, இளைய தலைமுறையினர் செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில், 'உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை!' என்றனர். இதை, வலியுறுத்தும் ...

MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!

Posted: 04 Apr 2014 12:47 AM PDT

MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். உலக நாடுகள் அதிர்ச்சி! மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்து வந்தன. இந்த தீவு இந்திய ...

“யேய்ய்ய்ய்... கேப்டன் பாட்டு போடு!”

Posted: 04 Apr 2014 12:39 AM PDT

இந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், 'டாக் ஆஃப் டமில்நாட்'... ஆங் விஜயகாந்த்! தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் பிரசாரப் பேச்சுக்களை அத்தனை பேரும் ரசிக்கிறார்கள். சிலர் சீரியஸாக... சிலர் செம காமெடியாக! பிரசாரத்துக்கு இடையிடையே தன் தொண்டர்களுடன் மல்லுக்கட்டுவது, கூட்டணிக் கட்சித் தொண்டர்களை அதட்டுவது என, விஜயகாந்த் விளிக்கும் 'மக்களேளளள'வோடு மக்களாக நின்று கவனித்ததில் இருந்து இங்கே... விழுப்புரம் நகராட்சி பேருந்து நிலைய வாசல்தான் அன்றைய தினத்தின் முதல் பிரசார பாயின்ட். விஜயகாந்த் ஸ்பாட்டுக்கு ...

பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு

Posted: 04 Apr 2014 12:37 AM PDT

சென்னை, 03 ஏப்ரல், 2014 பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் பொதுத் தேர்தல் 2014 தேர்தல் கையேடு சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. திரு. க.மா. ரவிந்திரன், கூடுதல் தலைமை இயக்குநர், பத்திரிகைத் தகவல் அலுவலகம், தமிழ் பிரதியை வெளியிட்டார். இதன் முதல் பிரதியை தமிழக இணை தலைமை தேர்தல் அலுவலர் திரு. ஏ. சிவஞானம் பெற்றுக்கொண்டார். பத்திரிகைத் தகவல் அலுவலகம் பொது தேர்தல் 2014- தேர்தல் கையேட்டை தொகுத்துள்ளது. இந்த குறிப்பேடு பொது தேர்தல் பற்றிய விரிவான தகவல்களை கொண்டுள்ளது. இதன் ஆங்கில பதிப்பு தில்லியிலுள்ள ...

“ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆரே எதிரிதான்!” ப.சிதம்பரம் பன்ச்

Posted: 04 Apr 2014 12:36 AM PDT

கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த ப.சிதம்பரம், சமீபமாக மிக முதிர்ந்த அரசியல் தியாகி போல பேசுகிறார். இந்தியா முழுக்க அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் மீது விமர்சனக் கணைகளைப் பாய்ச்சிக்கொண்டிருக்க, சிவகங்கைத் தொகுதியில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்காக கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பதில் பரபரப்பாக இருக்கிறார் ப.சி. டெல்லிக்குக் கிளம்பிச் செல்வதற்கு முன் ஒரு ஞாயிறு பகலில் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் இருந்து... ''கடந்த 10 ...

திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை

Posted: 04 Apr 2014 12:30 AM PDT

நள்ளிரவில் நெடுஞ்சாலையில் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் எல்லாம் அந்த ஊரில் தார்பாய் முருகன் என்பவனின் அட்டகாசம் தாங்காமல் வேறு பாதையில் செல்கின்றன. காரணம் லாரி போய் கொண்டு இருக்கும் போதே, சத்தமின்றி அதன் பின்னால் ஏறி அதிலிருந்து சரக்குகளையெல்லாம் திருடிவிடும் ஆற்றல் கொண்டவன். ஒரு சிறிய வாகனத்தில் தன் சகாக்களுடன் சேர்ந்து லாரிகளில் கொள்ளையடித்து, அதை தனது முதலாளியிடம் கொடுத்து விடுவதைத் தவிர தார்பாய் முருகனுக்கு, காசு பணம் மீது அந்தளவிற்கு ஈடுபாடு இல்லை. இப்படியாக கரடு ...

ந.க.துறைவனின் சிறுவர் பாடல்.

Posted: 04 Apr 2014 12:01 AM PDT

* நகரங்கள் * கோயில் நகரம் மதுரை. மாங்கனி நகரம் சேலம். முத்து நகரம் தூத்துக் குடி . பஞ்சாலை நகரம். கோiவை. பட்டு நகரம் காஞ்சி . பின்னலாடை நகரம் திருப்பூர் . பூக்கள் நகரம் உதகை. நெற் களஞ்சிய நகரம் தஞ்சாவூர் . அல்வா நகரம் திருநெல்வேலி . வெயில் நகரம் வேலூர் . நகரின் பெயரை மனனம் செய்து மனதில் நன்குப் பதிப்பீரே மதிப்பெண் நன்று பெறுவீரே…!

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Posted: 03 Apr 2014 11:41 PM PDT

பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன்

ஆரோக்கியத்துக்கு ரூட்... பீட்ரூட்!

Posted: 03 Apr 2014 09:39 PM PDT

ஆரோக்கியத்துக்கு ரூட்... பீட்ரூட்! '''பீட்ரூட் சாப்பிடு செல்லம்... ரத்தம் உடம்பில் ஊறும்' என்று குழந்தைகளுக்கு சொல்லிச் சொல்லி ஊட்டுவோம். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, உடலில் புதிய ரத்த அணுக்கள் உருவாகத் துணைபுரிகிறது. அந்தக் காலத்தில் ரோமானியர்கள் காய்ச்சல், மலச்சிக்கல், புண், தோல் பிரச்னைகள் ஆகியவற்றைச் சரிப்படுத்த, பீட்ரூட்டைப் பயன்படுத்தினர். ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, வீக்கங்களைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பலன்கள் கொண்டது பீட்ரூட் . ...

“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்!

Posted: 03 Apr 2014 09:36 PM PDT

காலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், 'ஜே ஜே' என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி! ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர். உடற்பயிற்சி, டயட் கட்டுப்பாடு ...

பிராணாயாமம் உடல் வளர்க்க... உயிர் வளர்க்க!

Posted: 03 Apr 2014 09:21 PM PDT

இன்றைய அவசர யுகத்தில், மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். சுற்றுப்புறக் காற்றும் சுத்தமாக இல்லை. மாசு படிந்த காற்றை சுவாசிப்பதன் விளைவு, சுவாசப் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், சளி, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி... போன்ற பல்வேறு நோய்களும் வரிசைகட்டி நம்மை வாட்டுகின்றன. 'தியானம், பிராணாயாமம், யோகா செய்தாலேபோதும்; நோய் எதுவும் நெருங்காது' என்று ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவதும், பிராணாயாமப் பயிற்சி எப்படிச் செய்வது என்பது பற்றி கூகுளில் ...

அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)

Posted: 03 Apr 2014 09:10 PM PDT

1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? - 108 - -------------------------------------------- - 2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்... - காரைக்காலம்மையார் - ----------------------------------------- - 3."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்...... - அப்பர்(திருநாவுக்கரசர்) - -------------------------------------------- - 4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்.. - ஆணவம் (ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்) முயலகன் - --------------------------------------------- - 5. ...

தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம்

Posted: 03 Apr 2014 05:18 PM PDT

புதிய கட்டுப்பாடு விதித்துள்ள #தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அதிமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார். நாமக்கல் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியது: தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ் கட்சி. இந்தத் துரோகத்திற்கு உறுதுணையாக இருந்து, தமிழர் நலனில் அக்கறை செலுத்தாமல் இருந்த கட்சி #தி.மு.க. #காங்கிரஸ், தி.மு.க-வின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள். இந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™