Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஏப்ரல் 30ம் தேதியை மறக்க மாட்டேன்: மோடி

Posted:

திருப்பதி: முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்ட இந்த நாளை(ஏப்ரல் 30) மறக்க மாட்டேன் என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது: என் மீது வழக்குப்பதிவு செய்வதில் காங்கிரஸ் காட்டிய தீவிரம், தோல்வியடையப்போகிறோம் என்பதை காங்கிரஸ் உணர்ந்து, அதிர்ச்சியடைந்திருப்பதை காட்டுகிறது. தனது வாழ்நாளில் டீ விற்றவர் சவால் விட்டுள்ளார் என கவலை கொண்டுள்ளது. நான் எந்த வித குற்றமும் செய்யவில்லை. பா.ஜ.,வின் தேர்தல் சின்னமான தாமரை இலையை காட்டினேன். எனது வாழ்நாளில் எந்த வழக்கும்பதிவு செய்யப்பட்டதில்லை. ...

வெயில் கொடுமை தாங்க முடியலை: சிறையில் சகாரா அதிபர் ராய் கதறல்

Posted:

புதுடில்லி: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சகாரா நிதி நிறுவன அதிபர் சுப்ரதா ராய், டில்லியில், வெயில் கடுமையாக இருப்பதால், விரைவில் ஜாமின் அளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.அரசியல் செல்வாக்கு: சகாரா நிதி நிறுவனத்தின் அதிபர் சுப்ரதா ராய்; அரசியல்வாதிகளிடம் செல்வாக்கு பெற்றவர். இவரின் நிறுவனம், சட்ட விரோதமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டி, மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மார்ச் மாதம், இவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, டில்லி திகார் ...

சி.டி.எஸ்., திட்டத்திற்கு மாறாத காசோலை வைத்திருந்தால் சிக்கல்

Posted:

காசோலை பயன்பாட்டில், ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள, சி.டி.எஸ்., என்ற புதிய நடைமுறை, இன்று முதல் தீவிரமாக கடைபிடிக்கப்பட உள்ளது. இதனால், சி.டி.எஸ்., திட்டத்திற்கு மாறாத காசோலைகளை, வங்கி களில் செலுத்தினால், பண பரிவர்த்தனைக்கு, அதிக நாட்கள் காத்திருக்க வேண்டும்.பழைய காசோலை திட்டத்தின் படி, பொது மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் காசோலையில், தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண், வங்கியின் பெயர், சின்னம், குறியீட்டு எண் போன்றவை வங்கிக்கு வங்கி மாறுபடும். காசோலையின் நீள, அகலத்தில் கூட, மாற்றம் இருக்கும். காசோலைகளை வங்கியில் செலுத்தும் போது, வங்கி ஊழியர் மூலம், ...

பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தால் அமெரிக்கா அணுகுமுறை மாறும்

Posted:

புதுடில்லி:புதுடில்லி: மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைத்தால், அமெரிக்கா அணுகுமுறை மாறும் என அந்நாடு கூறியுள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, ஸ்டீபன் சோகேன் கூறியதாவது:பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கொள்கைகளை பார்க்கும்போது, லோக்சபா தேர்தலுக்கு பின், இந்தியாவில் பெரிய அளவில் மாற்றம் வரும் என, தெரிகிறது. குறிப்பாக, இந்தியாவின் பொருளாதாரத்தில், மோடி, மாற்றத்தை ஏற்படுத்தலாம். அந்த நாட்டின் வெளியுறவு கொள்கையிலும், அது, எதிரொலிக்கலாம்.மோடி தலைமையிலான ஆட்சி அமைவதில், சில இடையூறு இருந்தாலும், சாதகமான ...

சென்னை, பெங்களூரில் குண்டு வைக்க சதி?இலங்கையில் இருந்து வந்தவர் கைது:பாகிஸ்தான் உளவு அமைப்பு உடந்தை

Posted:

சென்னை: சென்னையில் ஊடுருவிய, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் உளவாளியை, தமிழக, 'க்யூ' பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு, சுற்றி வளைத்தனர். இவன், இலங்கையை சேர்ந்தவன்.அவன் சேகரித்து அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகத்தை, குண்டு வைத்து தகர்க்கும், ஐ.எஸ்.ஐ.,யின் நாசவேலை திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.'லோக்சபா தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும்' என, மத்திய உளவுப்பிரிவு போலீசார், தமிழக உளவுப்பிரிவு, தீவிரவாதிகளை கண்காணிக்கும், 'க்யூ' ...

சிறுவாணி குடிநீருக்கு சிக்கல்; கேரள அரசு திடீர் நெருக்கடி

Posted:

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையில், நீர் உறிஞ்சு கிணற்றில், நிரந்தர நீர் இருப்புக்கு கீழுள்ள அனுமதியற்ற குழாயை அடைக்கப்போவதாக கேரள அரசு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், கோவைக்கு கிடைக்கும் சிறுவாணி குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சிமலையில், கேரள வனப்பகுதியில், 22.6 சதுர கி.மீ., பரப்பில் உள்ளது சிறுவாணி அணை. இது, 650 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. அணையினுள் உள்ள நீர்உறிஞ்சு கிணற்றில், 15 மீட்டர் உயரத்திற்கு மொத்தம் நான்கு வால்வுகள் உள்ளன. இந்த வால்வுகள் வழியாக தண்ணீர் வெளியேறி, சாடிவயலுக்கு வருகிறது. அங்கிருந்து ...

'ஆமாம்... அந்த பெண்ணை 'லவ்' பண்றேன்!': 67 வயதில் திக்விஜய் சிங் அதிரடி அறிவிப்பு

Posted:

புதுடில்லி: காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், 'டிவி' சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளரான, அம்ரிதா ராயுடன், தனக்கு உறவு உள்ளதாக, வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவர், திக்விஜய் சிங், 67. மத்திய பிரதேச மாநில முதல்வராகவும், பதவி வகித்த அனுபவம் உள்ளவர். இவரின் மனைவி ஆஷா, 58, புற்றுநோய் பாதிப்பு காரணமாக, கடந்தாண்டு காலமானார்.இணையங்களில் செய்தி: சமீப காலமாகவே, பிரபல 'டிவி'யின் நிகழ்ச்சி தொகுப்பாளரான, அம்ரிதா ராயுக்கும், திக்விஜய் சிங்கிற்கும் உறவு உள்ளதாக, இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. இத்தனை நாட்களாக, ...

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? பிரதமருக்கு மோடி கேள்வி

Posted:

காந்திநகர்: ''காங்., கட்சியினருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான், பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், தேர்தலில் போட்டியிடாமல், பயந்து ஒதுங்கி விட்டனர்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி கூறினார். குஜராத் மாநிலம், காந்திநகரில், அம்மாநில முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காங்., கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கு, தோல்வி பயம் வந்து விட்டது. அதனால், தேர்தலில் நிற்காமல், தங்களை பாதுகாத்து கொள்வதற்காக, ஓட்டம் பிடிக்கின்றனர். இவர்களில் ஒரு சிலர், ...

ராஜா, கனிமொழி மீதான வழக்கில் சி.பி.ஐ., கோர்ட் நாளை உத்தரவு

Posted:

புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் மீது, அமலாக்க துறை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பாக, நாளை, முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தெரிவித்துள்ளது.தனியார் நிறுவனங்களுக்கு, '2ஜி' ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்தது. அப்போது, தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் தொலை தொடர்பு துறை அதிகாரிகள், தொலை ...

ராகுல் ரொம்ப நல்லவரு: பிரியங்கா

Posted:

அமேதி: ராகுலின் அரசியல் கொள்கை, வெளிப்படையானது என பிரியங்கா பேசினார்.உ.பி., மாநிலம், அமேதி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். ராகுலுக்கு ஆதரவாக, அவரின் சகோதரி பிரியங்கா, நேற்று, பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: ராகுலின் அரசியல் கொள்கை, வெளிப்படையானது. எந்தவிதமான ஒளிவு மறைவும், அவரிடம் இல்லை. அனைத்து தரப்பினரையும், சமமாகக் கருதுகிறார். அனைவரும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே, ராகுலின் விருப்பம். இந்த தொகுதியில் போட்டியிடும் பல வேட்பாளர்கள், உங்களை தேடி வரலாம். வாக்குறுதி என்ற ...

தாமரை சின்னத்தை காட்டிய மோடி: குஜராத் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு

Posted:

காந்திநகர்: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஓட்டளித்த பின், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, தாமரை சின்னத்தை தூக்கி காண்பித்ததால், சர்ச்சை எழுந்துள்ளது. பேட்டி: குஜராத் மாநிலம், காந்திநகர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி போட்டியிடுகிறார். நேற்று, இங்கு தேர்தல் நடந்தது. பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடிக்கு, இந்த தொகுதியில் தான், ஓட்டு உள்ளது. இதையடுத்து, காந்திநகரில் உள்ள ஓட்டுச் சாவடியில், ஓட்டுப் போடுவதற்காக, அவர் வந்தார். ஓட்டளித்தபின், அரசியல் கட்சி தலைவர்கள், ...

தேர்தலில் 'உள்குத்து' வேலை செய்தது யார் யார்? மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிக்கிறது தி.மு.க.,

Posted:

லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக, 'உள்குத்து' வேலைகளில் ஈடுபட்ட, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரியின் ஆதரவாளர்கள் உட்பட, அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு துவங்கி உள்ளது. இதனால், தி.மு.க., நிர்வாகிகள் பலருக்கு, 'கிலி' ஏற்பட்டு உள்ளது.லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக பணியாற்றிய, மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, அழகிரியின் ஆதரவாளர்கள், 10 பேர், சமீபத்தில் நீக்கப்பட்டனர். அழகிரி, சென்னையில் இருந்த போது, இந்த நீக்க அறிவிப்பு வெளியானதும், அவர் உடனே மதுரை புறப்பட்டு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™