Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்

Posted: 30 Apr 2014 03:18 PM PDT

சிவப்பாக உயரமாக மீசை வசுக்காமல் - தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனதில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது. வயது இருபத்தி இரண்டு. பெண்குழந்தை . வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஜாதகம், பூர்வீகம், குலம், கோத்திரம், பதவி, சம்பளம் -- இத்யாதி . இந்த முயற்சிகளும் அதன் பின்னிருந்த பரிவும் கவலையும் அவளுக்கு ஒரு விதத்தில் பிடித்துத் தானிருந்தது. என்றாலும், இது சம்பந்தமாக அவளுடைய இளம் மனதிலும், சில அபிப்பிராயங்களும், கொள்கைகளும் இருக்கக் ...

காடன் கண்டது - பிரமிள்

Posted: 30 Apr 2014 03:14 PM PDT

எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு. பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும் இட்டிலி சோடாக் கடையும் தாண்டினா, ரஸ்தா நேரோட்டம் போட்டு, எருமை புரள்ற சேத்துப் பள்ளத்திலே விளுந்து, அக்கரை ஏறும்போது ரெண்டு தடமாகும். ஒண்ணுக்கு இன்னும் பேர் ரஸ்தா. அதே மாதிரி கல்லிலும் புல்லிலும் கால்பட்டுத் தேய்ஞ்ச இன்னொண்ணு பேரில்லாத காட்டுத்தடம். வெய்யிலில் எருமைப்பள்ளம் தண்ணி வத்தி, களி காறைகட்டிப் பொளந்து கெடக்கும். ஊரெல்லாம் களிமண்ணு. கூடவே பாறைக் கல்லுத் தரையுமுண்டு. மரமில்லாம ...

தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்

Posted: 30 Apr 2014 03:10 PM PDT

முதன் முதலாய் ஒரு பெண், அக்கினிச்சட்டி ஏந்தி ஆடுகிற சம்பவம் அந்த ஊரில் நடந்தது. பள்ளத் தெருவில் நடந்தது. அப்போதுதான் கல்யாணமாகி வந்த ஒரு பெண் அக்கினிச் சட்டி ஏந்துவது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. மங்கலப் புடவையின் கசங்கல் கூட இன்னும் மறையவில்லை. காற்றுக்கு அசைகிற அலைகளின் நொறுங்கல்போல் இன்னும் கருங்கல்கள் இருந்தன. பள்ளரும் சக்கிலியரும் ஒட்டரும் இருக்கிற பள்ளக்குடியில் அல்லாமல், வேறெங்கும் இது நடக்காது. பொய்லான் வீட்டுக்குப் புதுமருமகள் வந்திருக்கிறாள் என்ற செவிச் சேதி மட்டும் ...

அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்

Posted: 30 Apr 2014 02:51 PM PDT

மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற 'வேனு'ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் ...

உடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் 14 தவறுகள்!!!

Posted: 30 Apr 2014 12:22 PM PDT

உடலை கட்டமைப்புடன் வைக்க முயலும் போது கண்டிப்பாக தவறுகளில் ஈடுபடக்கூடாது. நல்ல கட்டமைப்புடன் இருக்கும் ஒரே காரணத்திற்காக தான் உடற்பயிற்சிகள் செய்யப்படுகிறது. ஆனால் உடலை அப்படி கட்டமைப்புடன் வைப்பதில் ஈடுபடும் போது பல ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுகின்றனர். இந்த பொதுவான தவறுகளை சுலபமாக தவிர்க்கலாம். ஜிம்களில் ஈடுபடும் சில பயிற்சிகள் பிரத்யோகமாக ஆண்களுக்காகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஜிம்மில் உள்ள எடை பயிற்சி பிரிவுக்கு சென்றால் அங்கே ஆண்களை மட்டுமே அதிகமாக காணலாம். உடல் கட்டமைப்பில் ஆண்கள் செய்யும் ...

ஆம் ஆத்மியின் குரல் !

Posted: 30 Apr 2014 10:26 AM PDT

நடந்து முடிந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியின் குரல் ,லஞ்சம் , ஊழலுக்கு எதிரான குரலா ? அல்லது மாற்றத்திற்கான குரலா ? தெரியவில்லை. மக்களுக்காகப் போராடும் களப்போராளிகள் அதிகம்பேர் பங்குபெற்ற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கிறது. இத்தனை பேரையும் நேரடியாக அரசியலில் பங்கு பெற வைத்தது நிச்சயமாக ஆம் ஆத்மியின் சாதனை தான். ஆம் ஆத்மியின் வேட்பாளர் தேர்வு மிகவும் வெளிப்படையாகவே உள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி சார்பில் 25 வேட்பாளர்கள் என்பது ஆச்சரியம் தான். வெளியில் மதசார்பற்றவர்கள் போல் காட்டிக் கொண்டு ...

சிங்கம் பற்றிய தவல்கள்

Posted: 30 Apr 2014 10:25 AM PDT

# ஆண் சிங்கத்தின் சராசரி எடை 180 கிலோ. பெண் சிங்கத்தின் எடை 130 கிலோ. # சிங்கம் மணிக்கு சராசரியாக 50 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓடும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சிங்கங்களால் தூரத்தைக் கடக்கமுடியும். நீண்ட தூரத்தை ஒரே சமயத்தில் கடக்கும் அளவுக்கு திறன் கிடையாது. # சிங்கம் 36 அடி பாயும். # ஆப்ரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சிங்கங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. # சிங்கம் தனியா (சிங்கிளா) வரும் என்று சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ...

விதவை

Posted: 30 Apr 2014 10:23 AM PDT

துணைக்கரம் இன்றி துன்பத்தில் திளைக்கும் தனிமரம் பொட்டு இழப்பு வண்ண சேலை துறப்பு மங்கள காலங்களில் புறக்கணிப்பு விழாக்காலமாகட்டும் ,விருந்துக்காலம் ஆகட்டும் சட்டமன்ற அமளியாய் எதிர் கட்சி வெளி நடப்பாய் நி வெளியேற்றம் . இளமைக்கால இழப்பெனில் உனக்கு எத்தனை இடர்பாடு உன்னுயிர் தந்து உனதருமை குழவி காப்பாய் உன்னருமை அறியா அடுத்த வீ ட்டுக்காரன் உதவுவதாய் உத்தரவு இன்றி உட்புக நினைப்பான் ஐயோ பாவம் என்பார் அவள் அருகில் உள்ளபொழுதில் அகன்றதும் அவள் செய்த பாவம் என்போர் ...

தாதா சாகேப் பால்கே பிறந்த தினம்: பிப். 30- 1870

Posted: 30 Apr 2014 10:23 AM PDT

தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். இவர் நாசிக்கில் 1870-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந்தேி பிறந்தார். 1885-ம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார். இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ...

ஹிட்லர் இறந்த தினம்: ஏப்.30- 1945

Posted: 30 Apr 2014 10:22 AM PDT

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934--ம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945--ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. ...

எம் தினம் இத்தினம் மே தினம்!!

Posted: 30 Apr 2014 09:47 AM PDT

தினம் பல அதில் சில சிறந்திட மனம் பல கொண்டாடிட மே அது தனித்திட தொழிலாளர் மகிழ்ந்திட வந்தது முதல் தினம்!! தொழில் பல செய்திடும் உண்மையாய் உழைத்திடும் உழைப்பாளர் தினமிது!! சிறு தொழில் பெருந் தொழில் செய்திடும் எல்லாருமாய் ஒற்றுமையாய் ஊர்வலமாய் சென்றிடும் ஓர் தினம்!! கவலை மறந்திட இத்தினம் வந்திட பெருமையாய் எங்கள் தினம் என்றுரைத்து சிரித்து மகிழ்ந்திடும் ஓர் தினம்! சர்வதேசம் சேர்ந்திருந்து பண்டிகையாய் எங்கள் தினம் கொண்டாடும் ஓர் தினம் இம் மேதினம்!! ஜவ்ஹர் (இத்தினம் ...

இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் அருமை....

Posted: 30 Apr 2014 01:33 AM PDT

[noguest] http://myegy.com/programs/

http://myegy.to/b/Programs/all/new [/noguest]


இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் அருமை....

கூகிள் குரோம்யில் பார்ப்பதால் அரபிக் இல் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து பார்க்க முடிகின்றது

அன்னை

Posted: 29 Apr 2014 11:56 PM PDT

நான் புவித்தெழுவதற்கு பூமியைத் தொடுவதற்கு விளை நிலமாய் உமது கருவறையில் ஆதியில் பத்து மாதம் . எனக்காக ஒவ்வாத உணவை ஒதுக்கி உறங்காது கண்விழித்து கருவறையில் நீ நடத்திய முதற்பாடம் அம்மா அன்பின் பிறப்பிடம் கருணையின் உறைவிடம் பாசத்தில் நிறைகுன்றா நிறைக்குடம் . உணவூட்டும் தருணத்தில் உயரத்தில் அம்புலியை அழைத்தாய் உமது கரங்களில் பதித்தாய் நான் தவழ்வதை கண்டு தரணியெங்கும் ஆனந்த பறையடித்தாய் மழலை மொழிதனில் அம்மா என்றழைத்த கணம் உள்ளம் பூத்திருப்பாய் உச்சம் குளிர்ந்திருப்பாய் ...

ஆங்கில இலக்கணம் -எளிய தமிழில்

Posted: 29 Apr 2014 09:22 PM PDT

ஆங்கில இலக்கணம் எளிய தமிழில் மென்நூல் தறவிறக்கம் செய்ய http://www.ziddu.com/download/4444611/eegarai tamilzhan-easy-english.pdf.html

எனது ராஜ்ஜியத்தில்

Posted: 29 Apr 2014 08:09 PM PDT

உமது வசிப்பு எனக்கான ராஜ்ஜியத்தில் உமது வசிப்பு எவ்வளவு சுதந்திரமாகவும் இருக்கலாம் எனக்கான ராஜ்ஜியத்தில் உமது புலன்கள் எமக்கான வற்றை மட்டுமே கண்ணுறும் வரை செயற்படுத்தும் வரை மிகவும் சுதந்திரமானது உமது வசிப்பு எனது ராஜ்ஜியத்திற்குள் உன் கண்களால் என்னை மட்டும் பார் உன் செவிகளால் என் புகழை மட்டும் கேள் என் குரல்கொண்டு என் பெருமை மட்டும் பாடு-பேசு உனது இருப்பு மிகவும் மிகவும் சுதந்திர மானதாய் இருக்கும் உன் கண்கள் காண்பது என் புறத்தை என்றால் குருடாக்கப்படும் செவிகள் ...

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Posted: 29 Apr 2014 07:23 PM PDT

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு ஹாங்காங் பறந்துள்ளார். லோக்சபா தேர்தலுக்காக சூடு பறக்க தமிழகம் முழுவதும் சுற்றி வந்த தலைவர்கள் தற்போது ஆளாளுக்கு ஒரு பக்கமாக கிளம்பிப் போய்க் கொண்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு எஸ்டேட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார். ஆனால் அவருக்கு முன்பாக நேற்று நள்ளிரவே ஹாங்காங் கிளம்பிப் போய் விட்டார் ஸ்டாலின். லோக்சபா தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரிக்குச் சரியாக பிரசாரம் செய்தவர் ஸ்டாலின். முதல்வர் ஜெயலலிதா தனது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™