Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பிரம்மோற்ஸவம் நாளை தொடக்கம் சோளிங்கர் மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
- ஆட்சியரிடம் சத்துணவு ஊழியர்கள் மனு
- குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை
- குடிநீர் லாரியை சிறைபிடித்த 30 பேர் மீது வழக்கு
- மூவர் ஜாமீன் கோரிய வழக்கு: சிறைக்கு 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்க உத்தரவு
- மே 3 மின் தடை
- பார் சங்க நிர்வாகிகள் தேர்வு
- தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பிலால் மாலிக் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு
- ராஜீவ் கொலை கைதிகளுடன் வழக்குரைஞர் ஆலோசனை
- பள்ளியில் ஐம்பெரும் விழா
- தையல் தொழிலாளர்கள் முன்னேற்றசங்க செங்கம் கிளை நிர்வாகிகள் தேர்வு
- செங்கம் அருகே குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
- ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நூதன முறையில் நகைகள் மோசடி
- கலைக் கல்லூரியில் விழா
- திருவண்ணாமலையில் சாதுக்கள் ஆர்ப்பாட்டம்
- குடிநீர் கசிவு, சாலை சீரமைக்கப்படுமா?
- குடிநீர் லாரியை சிறைபிடித்த 30 பேர் மீது வழக்குப் பதிவு
- இளைஞரின் கழுத்தை அறுத்ததாக ஆசிரியர் கைது
- திருக்குறள் போட்டி
- படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வருண பகவான் பூஜை
- "நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் விரும்பும் இலக்கை எளிதில் அடையலாம்
- தூய லூர்து அன்னை திருவிழா குறித்த அனைத்துக் கட்சி கூட்டம்
- அருணாசலேஸ்வரர் கோவில் சித்திரை வசந்த 10 நாள் உற்ஸவம் மே 3-ல் தொடக்கம்
- செந்துறை அருகே நிலத் தகராறில்பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது வழக்கு
- கணவரைக் காணவில்லை என மனைவி புகார்
- குடிபோதையில் தகராறில் ஈடுபட்டோர் மீது போலீஸார் தடியடி
- சமூக அறிவியலை களத்தில் பயின்ற மாணவர்கள்!
- வழக்கின் தன்மையை புரிந்து கொண்டு வழக்காட வேண்டும்
- பெண் தற்கொலை: கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை
- 2-ம் திருமணம் செய்தவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு
- பணி நிறைவு பாராட்டு விழா
- "இனிமையும், மென்மையும் உடையது இசை'
- அதிராம்பட்டினத்தில் மலேரியா விழிப்புணர்வு முகாம்
- நவோதயா வித்யாலயாவில் சேர விண்ணப்பிக்கலாம்
- இளைஞர் சாவில் மர்மம்; மீண்டும் பிரேத பரிசோதனை
- ஓய்வுபெற்ற அரசு ஊழியர்வீட்டில் திருட முயன்ற இளைஞர் கைது
- "மோடி சிறந்த பிரதமர் வேட்பாளர் அல்ல'
- கரூரில் குழந்தைஉழைப்பு எதிர்ப்பு பிரசார பயணம்
- பள்ளிகளில் சமையலர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
- பாலவிடுதி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
- அரசு விலை நிர்ணயிக்கக் கோரி மறியல்
- இளைஞரைக் கொன்ற 3 பேருக்கு ஆயுள் சிறை
- ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மாம்பழங்கள் பறிமுதல்
- ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பண்ணசாமி கரகம் பாலித்தல் நிகழ்ச்சி
- ஜயங்கொண்டத்தில்தூக்கிட்டு பெண் தற்கொலை
- மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை: அகிலேஷ் யாதவ்
- மே தினம்: டாஸ்மாக்கடைகளுக்கு இன்று விடுமுறை
- சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு
- மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
- அரியலூர் அருகேமனைவியைதாக்கிய கணவர் கைது
- அரசு விலை நிர்ணயிக்கக் கோரி மறியல்
- வரதட்சிணை கொடுமை: கணவர் மீது புகார்
- வாக்களிப்பதை கட்டாயமாக்கினால் வரவேற்பேன்: அத்வானி
- இசைப் பள்ளியில் மே 2 முதல் கோடைகால பயிற்சி
- பெரம்பலூர் அருகே மே 15-ம் தேதி மீன் வளர்ப்பு பயிற்சி
- தேசிய நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்படுமா?
- "எதிர்கால சமுதாயத்தை வடிவமைப்பது ஆசிரியர்கள்தான்'
- வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- பேலஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மே தின விழா
- பெண்ணைக் காணவில்லையென புகார்வ்
- இளைஞரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு
- கட்டட பொறியாளர்கள் சங்க ஐம்பெரும் விழா
- மாநகராட்சி குப்பைக் கிடங்கில் திடீர் தீ!
- கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க வலியுறுத்தல்
- சிறப்பு ரயில் ரத்து : பயணிகள் அதிருப்தி
- பள்ளி தீ விபத்து வழக்கு ஒரு மாதம் ஒத்திவைப்பு
- ஆறு, வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தல்
- உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல்
- தேர்தலில் வாக்களித்த மோடியின் மனைவி
- திருத்தோணிபுரம் வாய்க்காலை கடந்து செல்ல பாலம் அமைக்க வேண்டும்
- இலவச கணினி பயிற்சிக்குவிண்ணப்பிக்கலாம்
- திருவாரூர், மன்னார்குடியில் மழை
- டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
- மதுபானம் விற்ற15 பேர் கைது
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- தெலங்கானாவில் 72% வாக்குப்பதிவு
- மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைக்கும் அரசியல் கட்சிகள்
- முக்தியடைந்தார் நான்குனேரி வானமாமலை ஜீயர்
- என்.ஐ. பல்கலைக்கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு
- தக்கலை மாமேதை ஷெய்கு பீர்முஹம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டுப் பெருவிழா
- விளையாட்டு விடுதிகளில் தங்கி படிக்க நாகர்கோவிலில் நாளை தேர்வு போட்டிகள்
- கருங்கல்லில் வியாபாரிகள் சங்கக் கூட்டம்
- அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: இளைஞர் கைது
- நாகர்கோவில், களியக்காவிளையில் மழை
- கோடையை முன்னிட்டுகுமரி மாவட்டத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?
- திரிவேணி சங்கமத்தில் 8 மணி நேரம் சூரிய நமஸ்காரம்
- ரப்பர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு
- கேரளத்துக்கு மணல் கடத்த முயற்சி: மினி லாரி பறிமுதல்
- நித்திரவிளையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
- குமரி மாவட்டத்தில் இன்று மே தின கொடியேற்றம்
- கிராம உதவியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
- செய்துங்கநல்லூர் திருவரங்கச்செல்வி அம்பாள் கோயில் கொடை விழா
- கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தூத்துக்குடி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவராக ஜோசப் செங்குட்டுவன் மீண்டும் தேர்வு
- தீ விபத்து தடுப்பு பயிற்சி முகாம்
- தூத்துக்குடியில் இன்று மே தின பொதுக்கூட்டங்கள்
- பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
| பிரம்மோற்ஸவம் நாளை தொடக்கம் சோளிங்கர் மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு Posted: 30 Apr 2014 01:18 PM PDT சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமி கோயில் பிரம்மோற்ஸவம் வெள்ளிக்கிழமை (மே 2ம் தேதி) தொடங்கி 17ம் தேதி வரை நடக்கிறது. |
| ஆட்சியரிடம் சத்துணவு ஊழியர்கள் மனு Posted: 30 Apr 2014 01:18 PM PDT கடந்த 24ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தை வழங்கக் கோரி மாவட்ட |
| குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 30 Apr 2014 01:18 PM PDT குடியாத்தம் நகராட்சிக்கு உள்பட்ட 5வது வார்டை சேர்ந்த மக்கள் குடிநீர் வழங்கக்கோரி புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். |
| குடிநீர் லாரியை சிறைபிடித்த 30 பேர் மீது வழக்கு Posted: 30 Apr 2014 01:17 PM PDT ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு பாலாறு அருகே தனியார் தோப்பிலிருந்து தினமும் லாரியில் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்வதால் அப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக |
| மூவர் ஜாமீன் கோரிய வழக்கு: சிறைக்கு 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்க உத்தரவு Posted: 30 Apr 2014 01:17 PM PDT மணல் கடத்தல் வழக்கில் கைதான மூவர் ஜாமீனில் வெளி வருவதற்கு வேலூர் மத்தியச் சிறைக்கு மூவரும் தலா 6 ஆயிரம் லிட்டர் தண்ணீரை வழங்க வேண்டும் என வேலூர் நீதித்துறை நடுவர் நீதி |
| Posted: 30 Apr 2014 01:17 PM PDT குடியாத்தம் கோட்டத்துக்கு உள்பட்ட பாக்கம், பரதராமி, செதுக்கரை துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வரும் சனிக்கிழமை (மே 3) காலை |
| Posted: 30 Apr 2014 01:16 PM PDT வேலூர் பார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் தலைவராக டி.ரவி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். |
| தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 30 Apr 2014 01:16 PM PDT தேர்தல் பணியில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களுக்கு எவ்வித ஊதியமும் வழங்காததைக் கண்டித்து வேலூர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் |
| பிலால் மாலிக் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு Posted: 30 Apr 2014 01:16 PM PDT வேலூர் மத்தியச் சிறையில் உள்ள தீவிரவாதி பிலால் மாலிக் மீது பாகாயம் காவல் நிலைய போலீஸார் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| ராஜீவ் கொலை கைதிகளுடன் வழக்குரைஞர் ஆலோசனை Posted: 30 Apr 2014 01:16 PM PDT வேலூர் மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை வழக்குரைஞர் சந்திரசேகரன் புதன்கிழமை சந்தித்தார். |
| Posted: 30 Apr 2014 01:15 PM PDT ஆரணி நகரம், ஆரணிப்பாளையம், தர்மராஜா கோயில் அருகே உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தையல் தொழிலாளர்கள் முன்னேற்றசங்க செங்கம் கிளை நிர்வாகிகள் தேர்வு Posted: 30 Apr 2014 01:15 PM PDT தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்க திருவண்ணாமலை மாவட்டக் கிளை நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளராக |
| செங்கம் அருகே குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல் Posted: 30 Apr 2014 01:15 PM PDT செங்கம் அருகே குடிநீர் முறையாக வழங்கக்கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் செய்தனர். செங்கம் ஊராட்சிக்கு உள்பட்ட அந்தனூர் கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது. |
| ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நூதன முறையில் நகைகள் மோசடி Posted: 30 Apr 2014 01:14 PM PDT திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் இருந்து நூதன முறையில் இரண்டரை பவுன் நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 30 Apr 2014 01:14 PM PDT செய்யாறை அடுத்த அனக்காவூர் விஸ்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மலர்களுக்கு மொட்டுகள் தொடுக்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| திருவண்ணாமலையில் சாதுக்கள் ஆர்ப்பாட்டம் Posted: 30 Apr 2014 01:14 PM PDT திருவண்ணாமலையில் தங்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி கோவில் குருக்களைக் கண்டித்து, சாதுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| குடிநீர் கசிவு, சாலை சீரமைக்கப்படுமா? Posted: 30 Apr 2014 01:14 PM PDT தண்டராம்பட்டை அடுத்த கீழ்வணக்கம்பாடி சாலை ஆரம்ப துணை சுகாதார நிலையம் எதிரே சாத்தனூர் அணையிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கீழ்சிறுப்பாக்கம் வரை செல்கின் |
| குடிநீர் லாரியை சிறைபிடித்த 30 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 30 Apr 2014 01:13 PM PDT ஆற்காட்டை அடுத்த பூட்டுத்தாக்கு பாலாறு அருகே தனியார் தோப்பிலிருந்து தினமும் லாரியில் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு தண்ணீர் எடுத்து செல்வதால் அப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதாகக் கூறி அரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் இளவழகன் தலைமை |
| இளைஞரின் கழுத்தை அறுத்ததாக ஆசிரியர் கைது Posted: 30 Apr 2014 01:13 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராஜாபாபு (29). இவர் சந்தவாசலை அடுத்த நாரயணமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ள |
| Posted: 30 Apr 2014 01:13 PM PDT வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திருக்குறள் விநாடி வினா போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வருண பகவான் பூஜை Posted: 30 Apr 2014 01:13 PM PDT போளூரை அடுத்த படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் கோவிலில் திங்கள் முதல் புதன் வரை 3 நாள் மழைவேண்டி வருண |
| "நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் விரும்பும் இலக்கை எளிதில் அடையலாம் Posted: 30 Apr 2014 01:12 PM PDT நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் நாம் விரும்பும் இலக்கை எளிதில் அடையலாம் என்று கல்லூரி மாணவ-மாணவியருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணன் அறிவுரை வழங்கினார். |
| தூய லூர்து அன்னை திருவிழா குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் Posted: 30 Apr 2014 01:12 PM PDT சேத்துப்பட்டில் மிகவும் பழமை வாய்ந்த தூய லூர்து அன்னை திருத்தலம் (சர்ச்) உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்தாண்டும் விழா |
| அருணாசலேஸ்வரர் கோவில் சித்திரை வசந்த 10 நாள் உற்ஸவம் மே 3-ல் தொடக்கம் Posted: 30 Apr 2014 01:12 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் சித்திரை வசந்த 10 நாள் உற்ஸவம் சனிக்கிழமை (மே 3) தொடங்குகிறது. |
| செந்துறை அருகே நிலத் தகராறில்பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது வழக்கு Posted: 30 Apr 2014 01:04 PM PDT நிலத்தகராறில் பெண்ணைத் தாக்கியதாக 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் |
| கணவரைக் காணவில்லை என மனைவி புகார் Posted: 30 Apr 2014 01:04 PM PDT பெரம்பலூர் அருகே கணவரைக் காணவில்லை என மங்கலமேடு காவல் நிலையத்தில் மனைவி புதன்கிழமை புகார் அளித்தார். |
| குடிபோதையில் தகராறில் ஈடுபட்டோர் மீது போலீஸார் தடியடி Posted: 30 Apr 2014 01:03 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் சாலையோரத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நபர்கள் மீது அரும்பாவூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு தடியடி நடத்தினர். |
| சமூக அறிவியலை களத்தில் பயின்ற மாணவர்கள்! Posted: 30 Apr 2014 01:03 PM PDT திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் 182 மாணவர்கள், தங்களது வெளிக்காற்று உள்ளே வரட்டும் என்ற 7 நாள் தலைமைத்துவப் பயிலரங்கின் பகுதியாக ஒரு கிராமத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர். |
| வழக்கின் தன்மையை புரிந்து கொண்டு வழக்காட வேண்டும் Posted: 30 Apr 2014 01:03 PM PDT வழக்கின் தன்மையைப் புரிந்து கொண்டு இளம் வழக்குரைஞர்கள் வழக்காட வேண்டும் என்றார் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.வி.ஆர். தீனதயாளன். |
| பெண் தற்கொலை: கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை Posted: 30 Apr 2014 01:02 PM PDT பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர் மற்றும் மாமியாருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, தஞ்சாவூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| 2-ம் திருமணம் செய்தவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு Posted: 30 Apr 2014 01:02 PM PDT முதல் மனைவி இருக்கும்போது வேறு பெண்ணை 2-ம் திருமணம் செய்து கொண்ட கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். |
| Posted: 30 Apr 2014 01:02 PM PDT பேராவூரணியை அடுத்த கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ப. வெள்ளைச்சாமிக்கு பணிநிறைவுப் பாராட்டு விழா பேராவூரணியில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பாக அண்மையில் நடைபெற்றது. |
| "இனிமையும், மென்மையும் உடையது இசை' Posted: 30 Apr 2014 01:01 PM PDT இசை என்பது இனிமையும், மென்மையும் உடைய கலையாகும் என்றார் கும்பகோணம் நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர். |
| அதிராம்பட்டினத்தில் மலேரியா விழிப்புணர்வு முகாம் Posted: 30 Apr 2014 01:01 PM PDT அதிராம்பட்டினத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆ. |
| நவோதயா வித்யாலயாவில் சேர விண்ணப்பிக்கலாம் Posted: 30 Apr 2014 01:01 PM PDT காரைக்கால் நவோதயா வித்யாலயாவில் 9-ம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களில் சேர நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். |
| இளைஞர் சாவில் மர்மம்; மீண்டும் பிரேத பரிசோதனை Posted: 30 Apr 2014 01:00 PM PDT குடவாசல் அருகே இளைஞர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர் புகார் தெரிவித்ததால், அவரது சடலம் புதன்கிழமை தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. |
| ஓய்வுபெற்ற அரசு ஊழியர்வீட்டில் திருட முயன்ற இளைஞர் கைது Posted: 30 Apr 2014 01:00 PM PDT கரூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் திருட முயன்ற இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| "மோடி சிறந்த பிரதமர் வேட்பாளர் அல்ல' Posted: 30 Apr 2014 01:00 PM PDT "நாட்டின் பிரதமர் பதவிக்கு பாஜக அறிவித்துள்ள நரேந்திர மோடி சிறந்த வேட்பாளர் அல்ல' என்று நோபல் பரிசு வென்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் கருத்து தெரிவித்துள்ளார். |
| கரூரில் குழந்தைஉழைப்பு எதிர்ப்பு பிரசார பயணம் Posted: 30 Apr 2014 01:00 PM PDT கரூரில் குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசாரம் செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. |
| பள்ளிகளில் சமையலர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் Posted: 30 Apr 2014 12:59 PM PDT ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| பாலவிடுதி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் Posted: 30 Apr 2014 12:59 PM PDT கரூர் மாவட்டம், பாலவிடுதி அருகே குடிநீர் கேட்டு புதன்கிழமை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| அரசு விலை நிர்ணயிக்கக் கோரி மறியல் Posted: 30 Apr 2014 12:59 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருளுக்கு அரசே விலை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| இளைஞரைக் கொன்ற 3 பேருக்கு ஆயுள் சிறை Posted: 30 Apr 2014 12:59 PM PDT திருச்சி வாழவந்தான்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. |
| ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மாம்பழங்கள் பறிமுதல் Posted: 30 Apr 2014 12:58 PM PDT திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்த ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள மாம்பழங்களை புதன்கிழமை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினர் அவற்றை அழித்தனர். |
| ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பண்ணசாமி கரகம் பாலித்தல் நிகழ்ச்சி Posted: 30 Apr 2014 12:58 PM PDT திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியம் பழைய கோட்டை கிராமம் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பண்ணசாமி திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பூஞ்சோலையில் இருந்து கரகம் |
| ஜயங்கொண்டத்தில்தூக்கிட்டு பெண் தற்கொலை Posted: 30 Apr 2014 12:58 PM PDT ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார். |
| மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை: அகிலேஷ் யாதவ் Posted: 30 Apr 2014 12:57 PM PDT மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். |
| மே தினம்: டாஸ்மாக்கடைகளுக்கு இன்று விடுமுறை Posted: 30 Apr 2014 12:57 PM PDT மே தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு வியாழக்கிழமை (மே 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு Posted: 30 Apr 2014 12:57 PM PDT சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான எ. சரவணவேல்ராஜ் புதன்கிழமை பார்வையிட்டார். |
| மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி Posted: 30 Apr 2014 12:57 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
| அரியலூர் அருகேமனைவியைதாக்கிய கணவர் கைது Posted: 30 Apr 2014 12:56 PM PDT அரியலூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை தாக்கியதாக கணவர் உள்ளிட்ட 2 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| அரசு விலை நிர்ணயிக்கக் கோரி மறியல் Posted: 30 Apr 2014 12:56 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருளுக்கு அரசே விலை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| வரதட்சிணை கொடுமை: கணவர் மீது புகார் Posted: 30 Apr 2014 12:56 PM PDT அரியலூரில் மின்சார வாரிய ஊழியரை வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி வடக்குத் தெருவைச் |
| வாக்களிப்பதை கட்டாயமாக்கினால் வரவேற்பேன்: அத்வானி Posted: 30 Apr 2014 12:56 PM PDT தேர்தல்களில் அனைத்து வாக்காளர்களும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்ற நடைமுறையை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக அமல்படுத்தினால் நிச்சயம் வரவேற்பேன் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி கூறினார். |
| இசைப் பள்ளியில் மே 2 முதல் கோடைகால பயிற்சி Posted: 30 Apr 2014 12:55 PM PDT பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் மே 2 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து இசைப் பள்ளி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| பெரம்பலூர் அருகே மே 15-ம் தேதி மீன் வளர்ப்பு பயிற்சி Posted: 30 Apr 2014 12:55 PM PDT பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மே 15-ம் தேதி மீன் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. |
| தேசிய நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்படுமா? Posted: 30 Apr 2014 12:55 PM PDT திருச்சி - புதுக்கோட்டை - காரைக்குடி அகலப்படுத்தப்பட்ட இருவழிச் சாலையில் வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மரங்களுக்கு பதில் புதிய மரங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நட வேண்டும் என பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். |
| "எதிர்கால சமுதாயத்தை வடிவமைப்பது ஆசிரியர்கள்தான்' Posted: 30 Apr 2014 12:55 PM PDT நாட்டின் எதிர்கால சமுதாயத்தை வடிவமைப்பது ஆசிரியர்கள்தான் என்றார் கேரளா மாநிலம், கோட்டயம் மகாத்மாகாந்தி பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.பி. சுரேஷ். |
| வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 30 Apr 2014 12:54 PM PDT பொன்னமராவதியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| பேலஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மே தின விழா Posted: 30 Apr 2014 12:54 PM PDT புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மே தின விழா சிறைக் காவலர் சமுதாயக்கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| பெண்ணைக் காணவில்லையென புகார்வ் Posted: 30 Apr 2014 12:54 PM PDT புதுக்கோட்டை அருகே பெண்ணைக் காணவில்லை என அவரது தந்தை செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். |
| இளைஞரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு Posted: 30 Apr 2014 12:53 PM PDT தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட வந்த இளைஞரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் உத்தரவிட்டார். |
| கட்டட பொறியாளர்கள் சங்க ஐம்பெரும் விழா Posted: 30 Apr 2014 12:53 PM PDT பேராவூரணி கட்டடப் பொறியாளர்கள் சங்க ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கக்கொடி ஏற்றுதல், மரம் நடுவிழா, மண்டலம் 111 -ன் தலைவர், செயலர், இதழ் ஆசிரியர் |
| மாநகராட்சி குப்பைக் கிடங்கில் திடீர் தீ! Posted: 30 Apr 2014 12:53 PM PDT தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ 3 மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு அணைக்கப்பட்டது. |
| கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க வலியுறுத்தல் Posted: 30 Apr 2014 12:53 PM PDT தஞ்சாவூரிலிருந்து கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர்-திருச்சி ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது |
| சிறப்பு ரயில் ரத்து : பயணிகள் அதிருப்தி Posted: 30 Apr 2014 12:52 PM PDT தஞ்சாவூர் - மயிலாடுதுறை - தஞ்சாவூர் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயில் சேவை புதன்கிழமையுடன் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். |
| பள்ளி தீ விபத்து வழக்கு ஒரு மாதம் ஒத்திவைப்பு Posted: 30 Apr 2014 12:52 PM PDT கோடைவிடுமுறையால் கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு விசாரணை வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| ஆறு, வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தல் Posted: 30 Apr 2014 12:52 PM PDT ஆறு, வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என ஏஐடியுசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளன. |
| உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல் Posted: 30 Apr 2014 12:52 PM PDT நாகை மாவட்டம், திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி, வியாழக்கிழமை அதிகாலை நிறைவடைந்தது. |
| தேர்தலில் வாக்களித்த மோடியின் மனைவி Posted: 30 Apr 2014 12:51 PM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் குஜராத் மாநிலம் மஹேசானாவில் புதன்கிழமை வாக்களித்தார். |
| திருத்தோணிபுரம் வாய்க்காலை கடந்து செல்ல பாலம் அமைக்க வேண்டும் Posted: 30 Apr 2014 12:51 PM PDT சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருத்தோணிபுரம் வாய்க்காலை கடந்து செல்ல சிறுபாலம் கட்டிதர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். |
| இலவச கணினி பயிற்சிக்குவிண்ணப்பிக்கலாம் Posted: 30 Apr 2014 12:51 PM PDT நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச அடிப்படை கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. |
| திருவாரூர், மன்னார்குடியில் மழை Posted: 30 Apr 2014 12:51 PM PDT திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் புதன்கிழமை திடீரென மழைப் பெய்து கோடை வெயில் தாக்கத்தில் தவித்த மக்களை மகிழ்ச்சியடைய வைத்தது. |
| டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை Posted: 30 Apr 2014 12:50 PM PDT தொழிலாளர் தினமான மே 1-ம் தேதியை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் |
| வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 30 Apr 2014 12:50 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். |
| Posted: 30 Apr 2014 12:50 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். |
| Posted: 30 Apr 2014 12:49 PM PDT |
| Posted: 30 Apr 2014 12:49 PM PDT |
| தெலங்கானாவில் 72% வாக்குப்பதிவு Posted: 30 Apr 2014 12:48 PM PDT ஆந்திரத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்தில் முதன்முறையாக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. எந்தவித அசம்பாவித சம்பவங்களுமின்றி, தேர்தல் மிகவும் அமைதியுடன் நடந்து முடிந்துள்ளது. |
| மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைக்கும் அரசியல் கட்சிகள் Posted: 30 Apr 2014 12:47 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 27சதவீத முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு? என்ற தீவிரமான போட்டியில் முக்கிய அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. |
| முக்தியடைந்தார் நான்குனேரி வானமாமலை ஜீயர் Posted: 30 Apr 2014 12:28 PM PDT உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நான்குனேரி வானமாமலை ஜீயர் மடத்தின் ஜீயர் சுவாமி செவ்வாய்க்கிழமை மாலை முக்தியடைந்தார். இதையடுத்து புதிய ஜீயராக அந்த மடத்தைச் சேர்ந்த நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். |
| என்.ஐ. பல்கலைக்கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு Posted: 30 Apr 2014 12:28 PM PDT குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை ஆங்கிலத் துறை சார்பில் சர்வதேச ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இலக்கிய பேச்சாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்றார். |
| தக்கலை மாமேதை ஷெய்கு பீர்முஹம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டுப் பெருவிழா Posted: 30 Apr 2014 12:28 PM PDT தக்கலை மெய்ஞ்ஞான மாமேதை ஷெய்கு பீர்முஹம்மது சாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டுப் பெருவிழா புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது |
| விளையாட்டு விடுதிகளில் தங்கி படிக்க நாகர்கோவிலில் நாளை தேர்வு போட்டிகள் Posted: 30 Apr 2014 12:28 PM PDT விளையாட்டு விடுதிகளில் தங்கி படிக்க, குமரி மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வெள்ளிக்கிழமை (மே 2) நாகர்கோவிலில் நடைபெறுகிறது. |
| கருங்கல்லில் வியாபாரிகள் சங்கக் கூட்டம் Posted: 30 Apr 2014 12:27 PM PDT கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் தலைவர் சோபனம் தலைமை வகித்தார். செயலர் துரைராஜ், துணைத் தலைவர் அஜித்குமார் முன்னிலை வகித்தனர். |
| அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: இளைஞர் கைது Posted: 30 Apr 2014 12:27 PM PDT குளச்சலில் அரசுப் பேருந்து மீது கல்வீசியதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர். நாகர்கோவிலிலிருந்து முள்ளூர்துறைக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. |
| நாகர்கோவில், களியக்காவிளையில் மழை Posted: 30 Apr 2014 12:27 PM PDT நாகர்கோவில் மற்றும் களியக்காவிளையில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. கடந்த ஒரு மாதமாக குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இந்நிலையில் கடந்த |
| கோடையை முன்னிட்டுகுமரி மாவட்டத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? Posted: 30 Apr 2014 12:27 PM PDT கோடையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| திரிவேணி சங்கமத்தில் 8 மணி நேரம் சூரிய நமஸ்காரம் Posted: 30 Apr 2014 12:26 PM PDT கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் ஆந்திரத்தைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா தொழிலாளி புதன்கிழமை வெறுங்கண்ணால் 8 மணி நேரம் சூரிய நமஸ்காரம் செய்தார். |
| ரப்பர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு Posted: 30 Apr 2014 12:26 PM PDT குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பிற பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| கேரளத்துக்கு மணல் கடத்த முயற்சி: மினி லாரி பறிமுதல் Posted: 30 Apr 2014 12:26 PM PDT கேரளத்துக்கு மணல் கடத்திச் செல்ல முயன்றதாக மினி லாரியை பளுகல் போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல்செய்தனர். |
| நித்திரவிளையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான எஸ்.ஐ. பணியிடை நீக்கம் Posted: 30 Apr 2014 12:26 PM PDT லஞ்சம் வாங்கியதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட எஸ்.ஐ. தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். |
| குமரி மாவட்டத்தில் இன்று மே தின கொடியேற்றம் Posted: 30 Apr 2014 12:25 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை மே தின விழா கொடியேற்றம் நடைபெறுகின்றன. இது குறித்து சிஐடியூ தோட்டத் தொழிலாளர் |
| கிராம உதவியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் Posted: 30 Apr 2014 12:25 PM PDT தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளை சார்பில் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. |
| செய்துங்கநல்லூர் திருவரங்கச்செல்வி அம்பாள் கோயில் கொடை விழா Posted: 30 Apr 2014 12:25 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் அருள்மிகு திருவரங்கச்செல்வி அம்பாள் கோயில் கொடைவிழா திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்றது. |
| கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 30 Apr 2014 12:24 PM PDT தேர்தல் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டதையடுத்து, கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தூத்துக்குடி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவராக ஜோசப் செங்குட்டுவன் மீண்டும் தேர்வு Posted: 30 Apr 2014 12:24 PM PDT தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற வழக்குரைஞர் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று ஜோசப் செங்குட்டுவன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். |
| தீ விபத்து தடுப்பு பயிற்சி முகாம் Posted: 30 Apr 2014 12:24 PM PDT கோவில்பட்டி தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தீ விபத்து தடுப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் இன்று மே தின பொதுக்கூட்டங்கள் Posted: 30 Apr 2014 12:23 PM PDT தொழிலாளர் தினத்தையொட்டி தூத்துக்குடியில் அதிமுக மற்றும் திமுக சார்பில் வியாழக்கிழமை (மே 1) பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. |
| பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா Posted: 30 Apr 2014 12:23 PM PDT தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கருங்குளம் வட்டாரம் சார்பில் பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா முறப்பநாட்டில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |