Tamil News | Online Tamil News |
- ஜெர்மனி வங்கியில் பணம்: 18 இந்தியர்கள் பட்டியல் தாக்கல்
- தொழிற்சாலைகளுக்கு மீண்டும் 40 சதவீத மின்வெட்டு?கடும் மின் பற்றாக்குறையால் அரசு முடிவு
- காங்கிரஸ் ஏமாற்றுக்காரர்களின் கட்சி: தேர்தல் பிரசாரத்தில் மோடி கடும் தாக்கு
- தமிழகத்தில் அதல பாதாளத்திற்கு போனது நிலத்தடி நீர்: 1,300 அடிவரை ஆழ்துளை அமைக்கும் அவலம்
- வறட்சியின் பிடியில் மீண்டும் சிக்கியது தமிழகம்
- மோடிக்கு அமலாக்க துறை நற்சான்று : காங்கிரசின் புகார் புஸ்வாணம் ஆனது
- காங் - பா.ஜ., ரகசிய உடன்பாடு அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
- தேர்தல் பிரசாரத்தில் 'கலக்குகிறார்' பிரியங்கா: ராகுலை ஓரங்கட்டி பதவி தட்டிச் செல்ல வாய்ப்பு
- பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி: பல்வேறு வழக்குகளால் கையைப்பிசைகிறது கல்வித்துறை
| ஜெர்மனி வங்கியில் பணம்: 18 இந்தியர்கள் பட்டியல் தாக்கல் Posted: \புதுடில்லி: வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக, ஜெர்மனி வங்கியில் பணம் போட்டுள்ள, இந்தியர்கள் 18 பேரின் கணக்கு விவரத்தை, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.'வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் முடக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண்டும்' எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின் போது, வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முதலீடு செய்துள்ள, இந்தியர்கள் பற்றிய விவரத்தை அளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு ... |
| தொழிற்சாலைகளுக்கு மீண்டும் 40 சதவீத மின்வெட்டு?கடும் மின் பற்றாக்குறையால் அரசு முடிவு Posted: தமிழகத்தில், மீண்டும் கடும் மின் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, தொழிற்சாலைகளுக்கு, மீண்டும், 40 சதவீத மின் தடையை அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில், ஒரு மணி நேரம் வரை, மின் தடை நேரம் குறைய வாய்ப்புள்ளது.தமிழகத்தில், வணிக பயன்பாடு, 30 லட்சம்; தொழிற்சாலை, 5.60 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். நாள்தோறும், மொத்த மின் பயன்பாட்டில், இவற்றின் பங்கு, 20 சதவீதம். அதாவது, 2,000 - 2,400 மெகாவாட்.கடந்த, 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவுகிறது. வெளிமாநில மின் கொள்முதல், கட்டுப்பாடு, மின் தடை மூலம் மின் பற்றாக்குறை ஈடு ... |
| காங்கிரஸ் ஏமாற்றுக்காரர்களின் கட்சி: தேர்தல் பிரசாரத்தில் மோடி கடும் தாக்கு Posted: பலாம்பூர் : ''ஏமாற்றுக்காரர்களின் கட்சி, காங்கிரஸ். அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில், மக்களை ஏமாற்றும் விஷயங்கள் தான், இடம் பெற்றுள்ளன,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.இமாச்சல் பிரதேச மாநிலத்தில், முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் உள்ள, 8 லோக்சபா தொகுதி களில், 4 தொகுதிகளுக்கு, ஏற்கனவே தேர்தல் முடிந்து விட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு, வரும் 7ல், தேர்தல் நடக்கிறது.துரோகம்:இங்கு போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நேற்று பிரசாரம் ... |
| தமிழகத்தில் அதல பாதாளத்திற்கு போனது நிலத்தடி நீர்: 1,300 அடிவரை ஆழ்துளை அமைக்கும் அவலம் Posted: தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க உரிய அக்கறை காட்டாததால், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. தண்ணீருக்காக, 1,200 - 1,300 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.'மழை இந்த வருஷமும் ஏமாத்திடுச்சே... தண்ணிக்கு அல்லாட வேண்டியது தான்...' என்ற வார்த்தையை, பருவமழை பொய்க்கும் போதெல்லாம், தமிழக மக்கள் கூறுவது வழக்கம். மழை பெய்யவில்லை என, வருத்தப்படுவதில் தவறில்லை. ஆனால், கொட்டிய மழைநீரையும் சேமிக்காமல், வீணடித்துவிட்டு, 'வருண பகவான் ஏமாத்திட்டாரு' என, குறைகூறுவது சரியல்ல.கட்டமைப்பு வசதிகள்: ... |
| வறட்சியின் பிடியில் மீண்டும் சிக்கியது தமிழகம் Posted: தமிழகம், மீண்டும் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. எனவே, நிவாரணத்தை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின், நிவாரணம் கேட்டு போராட்டத்தில் இறங்க, விவசாய சங்கங்கள் திட்டமிட்டு உள்ளன.தமிழகத்தை, 2012ல், வடகிழக்கு பருவமழை ஏமாற்றியது. நீர் நிலைகள் நிரம்பாததால், குடிநீர் மற்றும் விவசாய சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. சம்பா சாகுபடிக்கு தேவையான உதவிகளை, அரசு செய்த போதும், தண்ணீர் தட்டுப்பாடால் பயிர்கள் கருகின. இதையடுத்து, சென்னையை தவிர்த்து, மீதமுள்ள, 31 மாவட்டங்கள், வறட்சியால் ... |
| மோடிக்கு அமலாக்க துறை நற்சான்று : காங்கிரசின் புகார் புஸ்வாணம் ஆனது Posted: மும்பை : 'பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடிக்கும், ஹவாலா மோசடி குற்றவாளி அப்ரோஸ் பட்டாவுக்கும், நேரடியாகவோ அல்லது மறைமுகவோ, எந்தவித தொடர்பும் இல்லை' என, மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.காங்., கட்சித் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவின், நிலபேர மோசடிகள் குறித்த 'சிடி'யை, பா.ஜ.,வினர், சமீபத்தில் வெளியிட்டனர்.அதற்கு பதிலடியாக, ஹவாலா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, அப்ரோஸ் பட்டாவுடன், மோடி இருப்பது போன்ற ஒரு புகைப்படம் அடங்கிய, 'சிடி'யை, காங்., வெளியிட்டது.இதுகுறித்து, அமலாக்க இயக்குனரகத்தின் உயர் அதிகாரி, ஒருவர் கூறியதாவது: ... |
| காங் - பா.ஜ., ரகசிய உடன்பாடு அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு Posted: வாரணாசி : ''நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதிகளிலும், சோனியா போட்டியிடும் தொகுதியிலும், சோனியா - மோடி பிரசராம் செய்யாமல் தவிர்ப்பது ஏன்?'' என, ஆம் ஆத்மி கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட, ஆம் ஆத்மி கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தலுக்கு முன் காங்கிரசும், பா.ஜ.,வும் ரகசிய உடன்பாடு செய்து, இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் தாக்கி கொள்வது போல் விமர்சித்து கொள்கின்றனர். ஆனால், பின்னணியில் ரகசியமாக செயல்படுகின்றனர். 'நான் அடிக்கிற மாதிரி ... |
| தேர்தல் பிரசாரத்தில் 'கலக்குகிறார்' பிரியங்கா: ராகுலை ஓரங்கட்டி பதவி தட்டிச் செல்ல வாய்ப்பு Posted: ரேபரேலி: ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில், சில நாட்களாக, அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடும் பிரியங்கா, தன் சகோதரர் ராகுலை, ஓரம் கட்டியுள்ளார். அவர் பிரசாரம், மக்களிடம் எடுபடுவதால், தேர்தல் முடிந்ததும், காங்கிரசில் பிரியங்காவுக்கு முக்கிய பதவி கொடுக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.சூறாவளி பிரசாரம்சில மாதங்களுக்கு முன், டில்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணை தலைவர் ராகுலும், தீவிர பிரசாரம் செய்தனர். இதில், நான்கு மாநிலங்களில், காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்தது. இதற்கு ... |
| Posted: பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது. ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.சிக்கல்கடந்த ஆண்டு மத்தியில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 30,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |