Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கணிணியில் Play Staion 1 கேம்ஸ் விளையாடுவது எப்படி

Posted: 29 Apr 2014 01:13 PM PDT

நன்பர்களே எனது கணிணியில் Play Staion1 கேம்ஸ் எப்படி விளையாடுவது என்று தெரிந்தவர்கள் உதவுங்கள்.

முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்

Posted: 29 Apr 2014 11:43 AM PDT

கிராமத்துக்கே அவர்களின் பெயர் மறந்துவிட்டது. பெரிய கோனார் என்பதும் சின்னக் கோனார் என்பதுமே அவர்களின் பெயராகி நிலவுகிறது. சின்னக் கோனாரின் அண்ணன் என்பதனால் பெரியவருக்கு மதிப்பு. பெரிய கோனார் மதிப்போடு வாழ்ந்திருந்த காலமெல்லாம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. அந்த வாழ்வின் எஞ்சிய பகுதியை வீட்டுக்குப் பின்னாலுள்ள முந்திரித் தோப்பின் நடுவே அமைந்த தனிக்குடிசையில் வாழ்ந்து கழித்துjk1 விடுவது என்ற தீர்மானத்தில் ஏகாந்த வாசம் புரிகிறார் பெரியவர். சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும், கைத்தடியின் 'டக் டக்'கென்ற ...

ஒரு வயசு

Posted: 29 Apr 2014 10:46 AM PDT

அது அதுக்கு வேணும் ஒரு வயசு துள்ளி குதிக்க ஆர்பரிக்க அமா்க்களம் செய்ய ஓடி ஆட ஒரு வயசு படிக்க பிடிக்க நடிக்கத்தேவை வேறொரு வயசு காதல் செய்ய கல்யாணம் பண்ண கூடிக் களிக்க குழந்தை கொஞ்ச கொஞ்சம் கூட வேணும் வயசு முன்பே கிடைக்கும் சிலருக்கு கிடைத்தாலும் என்னமா ஆட்டம் ஏற்புடையதாகாது வயசுக்கு முன்னோ வயசுக்கு பின்னோ நடப்பது ஏற்பன்று காதல் இருபதில் சொன்னால் நகைப்பு அறுபதில் சொன்னால் வியப்பு. இருந்தும் சொல்வர் அது அதுக்கு வேணும் ஒரு வயசு.

குருபீடம் – ஜெயகாந்தன்

Posted: 29 Apr 2014 10:32 AM PDT

அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள். அவன் ஜெயிலிருந்து வந்திருப்பதாகச் சில பேர் பேசிக்கொண்டார்கள். அjayakanthan_1_050408வன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றப்பட்டவனென்றும் சிலர் சொன்னார்கள். ஆனால், இப்போது அவன் நோயாளியோ ...

எண்ணம் தவிர

Posted: 29 Apr 2014 10:26 AM PDT

இது/அது
யாருடையது
என்னுடையது
இல்லை
என்னுடையதாய் இருக்கலாம்
இல்லை
அவருடையது
இல்லை
அவருடையதாய் இருக்கலாம்.

இல்லை இல்லை
என்னுடையதும்
அவருடையதுமாய்
இருக்கலாம்
இல்லை
அவருடையதும்
என்னுடை்யதுமாய்
இருக்கலாம்.

எதுவுமில்லை
யாருடையதுமில்லை
அவரவருடையதாய்
என்னும்
எண்ணம் தவிர.

இணையதள பிரசாரத்தில் சாதனை படைத்தது அ.தி.மு.க!

Posted: 29 Apr 2014 09:36 AM PDT

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் இணையதள பிரசாரத்தில் அ.தி.மு.க. சாதனை புரிந்து அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. திராவிடக் கட்சிகளில் ஒன்றான தி.மு.க., கடந்த செப்டம்பர் மாதம் முதன்முறையாக இணையதள அணி என்ற அமைப்பை தொடங்கியது. அதன்பிறகு, அதேபோன்ற அணியை அ.தி.மு.க.வும் தொடங்கியது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளும் இணையதளம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டன.அந்த வகையில், இணையதளம் மூலம் பிரசாரம் மேற்கொண்ட அ.தி.மு.க., மற்ற கட்சிகளை பின்னுக்கு ...

கன்னட சாமியாரின் காம லீலைகள்: தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் தலைமறைவு

Posted: 29 Apr 2014 09:33 AM PDT

கர்நாடக சாமியாரான தேவி ஸ்ரீ ராமசாமி பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது. அந்த வீடியோவை எடுத்தது அவரின் சீடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னை தானே விளம்பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி ஸ்ரீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ...

பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு

Posted: 29 Apr 2014 09:31 AM PDT

ஜார்க்கண்டில் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர் அக்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் 12க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான அந்த பெண், தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தங்களது வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த அந்த கும்பல் அவரது கணவரை கட்டிப்போட்டதுடன், மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை 12க்கும் மேற்பட்ட ...

என் தந்தையே....!

Posted: 29 Apr 2014 09:04 AM PDT

அடிக்கடி இருமுகின்ற எண்ணச் சிதறல்களிலே சிந்துகிறது சந்தோசம் சளிக் கீற்றுக்களாய் துப்புகிறேன் ஒரு சில தூர்ந்துபோன நினைவுகளை அப்பாவித் தனத்துடன் அண்ணார்ந்து பார்த்த முதல் அழகோவியம் அது தான் தந்தை முகம் இதுவரை என்னுள் மாறாத புது யுகம் என் தந்தையின் சுவாசப் புற்களில் மேய்ந்த மந்தை நான் அவரின் காந்தப் பார்வையில் கவரப்பட்ட மனித ஆணி நான் இப் புவியினில் துருப்பிடியா வண்ணம் என்னை புதைத்துவிட்டு மறு உலகம் சென்ற மதிப்புக்குரிய மாமனிதர் அவர் கறுந் தாடிக்குள் இழையோடிப் போன வெண் ...

மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு

Posted: 29 Apr 2014 08:45 AM PDT

மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு. மலேசிய இந்தியர்கள் அதிருப்தி.

மலேசியாவிலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு விசா வழங்கும் உரிமத்தை இந்திய தூதரகம் ஐவிஎஸ் குளோவல் சர்விஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இந்தியாவிற்கு செல்லும் விசாவிற்கு 10 விரல் கைரேகை பதிவுமுறையை நேற்று முதல் இந்நிறுவனம் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தக் கைரேகைப் பதிவு முறை மலேசிய இந்தியர்கள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மை!

Posted: 29 Apr 2014 08:29 AM PDT

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், ...

பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் கல்விக் கட்டண விவரத்தை எழுதி வைக்க வேண்டும்

Posted: 29 Apr 2014 08:28 AM PDT

ஈரோடு: அரசின் கல்வி கட்டண விவரப் பட்டியலை, பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசினர் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு குறித்த தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பேசியதாவது: "அரசின் கல்வி கட்டண விபரப்பட்டியல் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை பள்ளி நிர்வாகங்கள், பொதுமக்கள் பார்வையில் படுமாறு ...

மாம்பழம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு!

Posted: 29 Apr 2014 08:26 AM PDT

வறட்சி காரணமாக, முன்பருவ ரகங்களான செந்தூரா, இமாம் பசந்த் மாம்பழங்களின் உற்பத்தி குறைந்ததால், வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில், மாம்பழம் உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில், மா சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, சீரான மழை இல்லாததால், வறட்சி ஏற்பட்டு, மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக, ஏப்ரல் துவக்கத்தில், முன்பருவ ரக மாம்பழம் விற்பனைக்கு வந்துவிடும். தற்போது, சொட்டு நீர் பாசனம் மூலம் ...

ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!'

Posted: 29 Apr 2014 08:25 AM PDT

அன்றைய குறள் நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ௌன்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. 'மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால், 'நாணம்' என்று சொல்லப்படும், நற்பண்பு நிற்காமல் ஓடி விடும்' என்பது, இக்குறளின் கருத்து. இன்றைய குரல் ''ஒரு நாளைக்கு என் கூலி, 150 ரூபா. ஒரு குவார்ட்டரு, 82 ரூபா. இரண்டு வாட்டர் பாக்கெட், 12 ரூபா. ஒரு சிப்ஸ் பாக்கெட், 5 ரூபா. ஒரு சிகரெட், 6 ரூபா. மீதி, 45 ரூபாயை வீட்டுக்கு குடுத்துடுவேன். அதுல இருந்து, ஒரு பைசா எடுக்க ...

இணையத்தில் இணையும் இதயங்கள்

Posted: 29 Apr 2014 05:34 AM PDT

விடையோடு விளையாடி வினாத் தேடும் உலகினிலே இணைய இடையோடு இழையோடும் இளசுகள் நாம். பேஸ் புக்கின் முகத்தினையூம் பேயறைந்து போய் பார்க்கையிலே லைக்குகளும் கொமன்ட்ஸ்களும் லைபோடு கலந்துவிடும் கூகிளின் இதயத்தினுள் கூவூகின்ற தேடல்களில் ஆடுகின்ற மயில்களாய் ஆர்ப்பரிக்கும் நண்;பர்கள் நாம். வட்ஸ்அப்பில் வழுக்கி விழுந்து வட்டங்களாய் முடிவூமின்றி சட்டங்கள் பல வந்தும் சதுரங்களாய் வாழ்கின்றௌம். வைபரின் மூளையிலே வைப்பிலிட்ட நம் பெயரை நானிலமும் நிலைத்துவிட நாளாந்தம் நனைகின்றௌம். ஸ்கைப்பின் ...

மே தினம் "டாஸ்மாக்' விடுமுறை : ரூ.650 கோடி வருவாய் இழப்பு

Posted: 29 Apr 2014 05:22 AM PDT

மே தினத்தை முன்னிட்டு, வரும் வியாழக்கிழமை, "டாஸ்மாக்' மதுபான கடைகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில், இதுவரை, எட்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், 650 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வரும், மே 1ம் தேதி, மே தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அன்று, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. "மே தினத்தன்று, டாஸ்மாக் கடை; பார், எப்.எல்., 2 உரிமம் பெற்ற கிளப்; "எப்.எல்., 3' உரிமம் பெற்ற ஓட்டல் சார்ந்த பார்களும் மூடப்பட வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, ...

கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள்

Posted: 29 Apr 2014 04:10 AM PDT

வெயில்காலங்களில் காற்றுக் காக கதவைத் திறந்து வைத்துக் கொண்டும், மொட்டை மாடியிலும் தூங்குபவர்களின் வீட்டை குறிவைத்து திருடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த திருடர்களிடம் இருந்து உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள போலீஸார் சில ஆலோச னைகளை வழங்கியுள்ளனர். கத்திரி வெயில் தொடங்கு வதற்கு முன்பே சென்னையில் வெயிலின் தாக்கம் 108 டிகிரியை கடந்து விட்டது. இதனால் வீட்டில் ஏசி வசதி இல்லாதவர்களில் சிலர் காற்றுக்காக வாசல் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கு கின்றனர். மேலும் சிலர் மொட்டை மாடிகளுக்கு சென்று ...

2014ம் ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் பட்டியல்

Posted: 29 Apr 2014 02:08 AM PDT

2014ம் ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விருதுகளின் பட்டியல்! சிறந்த படம்: பாஹ் மில்கா பாஹ் சிறந்த இயக்குநர்: ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா (பாஹ் மில்கா பாஹ்) சிறந்த நடிகர்: ஃபர்ஹான் அக்தர் (பாஹ் மில்கா பாஹ்) சிறந்த நடிகை: தீபிகா படுகோனே (சென்னை எக்ஸ்பிரஸ்) சிறந்த எண்டெர்டெய்னர்: தீபிகா படுகோனே சிறந்த புதுமுக நடிகர்: தனுஷ் (ராஞ்சனா) சிறந்த புதுமுக நடிகை: வாணி கபூர் (சுத்தேசி ரொமேண்ஸ்) சிறந்த துணை நடிகர்: ஆதித்யா ராஜ் கபூர் ...

பெட்ரோலுக்கு விடையளிக்கும் நேரம் நெருங்கி விட்டது: 20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’ அறிமுகம்

Posted: 29 Apr 2014 02:05 AM PDT

புதுடெல்லி, ஜன.31- ஜப்பானின் பிரபல எலெக்ட்ரிக் (மின்சார சக்தி) பைக் தயாரிப்பு நிறுவனமான 'டெர்ரா மோட்டார்ஸ்' மின்சக்தியின் மூலம் இயங்கும் 1000 சி.சி. ஆற்றல் கொண்ட நவீனரக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'கிவாமி' என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் பைக், 'லித்தியம் இயான்' பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. 6 மணி நேரத்துக்கு இந்த பேட்டரியை 'ரீ-சார்ஜ்' செய்வதன் மூலம், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகம் வரை, தொடர்ந்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு தங்குதடை இன்றி செல்ல முடியும். கடந்த ...

கோடைக்குக் குளிர்ச்சி தரும் பானங்கள்

Posted: 29 Apr 2014 01:43 AM PDT

தக்காளி ஜூஸ் : தக்காளி, இஞ்சி இரண்டையும் மிக்சியிலிட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, வடிகட்டி எலுமிச்சைச் சாறு, சர்க்கரை அல்லது குளுகோஸ் சேர்த்து அருந்தலாம். உடலை இளைக்கச் செய்யும், குளிர்ச்சியும்கூட. நெல்லிக்காய் ஜூஸ்: பெருநெல்லிக்காயை சீவி, கொட்டை நீக்கி மிக்சியிலிட்டு நீர்விட்டு அரைத்து, வடிகட்டி அதனுடன் தேன் அல்லது இளநீர் கலந்து அருந்தலாம். இரும்புச்சத்து மிக்கது. குடல் புண், கண் நோய், நீரிழிவு வராமல் காக்கும் பானம் இது. பாகற்காய் ஜூஸ்: பாகற்காயை வில்லைகளாக நறுக்கி விதை ...

பிரயாணம் - அசோகமித்திரன்

Posted: 29 Apr 2014 01:22 AM PDT

மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின் கண்கள் பொறுக்க முடியாத வலியினால் இடுங்கியிருந்தன. அவரைப் படுக்க வைத்து நான் இழுத்து வந்த நீளப் பலகை நனைந்திருந்தது. ஒரே எட்டில் அவரிடம் சென்றேன். "இனிமேலும் முடியாது" என்றார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வெள்ளைக் கீறல் கூட இல்லை. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்துகிடந்த மலைச்சாரலைச் சிறுசிறு மேகங்கள் அணைத்தபடி இருந்தன. நாங்கள் நடந்து வந்த மலை விளிம்பு அந்த இடத்தில் செங்குத்தாகப் பல நூறு ...

பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ ; பெரும் சேதம் ஏதும் இல்லை

Posted: 29 Apr 2014 01:21 AM PDT

புதுடில்லி: டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தெற்கு பிளாக் கேட் எண் 5 பகுதியில் பிரதமர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள கீழ்தளத்தில் திடீர் புகை எழுந்தது. உடடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து தீயணைப்பு துறை இயக்குனர் ஏ.கே.சர்மா கூறுகையில், அலுவலக கீழ்தளத்தில் தீ பற்றியதாக தகவல் கிடைத்ததும் 7 தீயணைப்பு வாகனங்கள் உடனே வரப்பட்டன. சில நிமிடங்களில் தீயை அணைத்து விட்டோம். ...

EEGARAI FLASH NEWS

Posted: 28 Apr 2014 10:17 PM PDT

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி



வேர்க்கடலை...!! { கவிதைகள் }

Posted: 28 Apr 2014 09:22 PM PDT

கடுகு சிரிக்கிறது...!!.
*
1 எவருக்கேனும் உதவுகிறது
மரத்தடியின் நிழல்.

2. சந்தோஷமாய்ச் சிரித்தாள்
கணவன் சொன்ன ரகசியம் கேட்.டு….!

3. பூரிக்கட்டையில் சப்பாத்தி
தேய்த்துப் பழகுகிறது குழந்தை.

4. சமையல் அறையில்
கடுகு சிரிக்கிறது.

5. வைத்த இடத்திலேயே இருக்கிறது
தேடியப் பொருள்.
****

ந.க.துறைவன் புதுக் கவிதைகள்

Posted: 28 Apr 2014 08:14 PM PDT

பெரும் தயக்கம்{புதுக் கவிதை} * ஊரிலிருந்து வந்தவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. நீங்க யாரென்று கேட்டதற்கு உறவினர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர்களுக்குச் சொந்த மென்று விவரமாய்ச் சொன்னார். என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டேன். தேடி வந்தச் செய்தியைச் சொன்னார். * ஊர்காரர் என்றாலும் அறிமுகமில்லாதவர்க்கு எப்படி உதவி செய்வ தென்று பெரும் தயக்கம். சரி பார்க்கலாம் என்றேன். "கொஞ்சம் பார்த்து செய்யுங்க" என்று கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார். மறு முனையிலிருந்து போன் வந்தது. "நம்ம ...

ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை

Posted: 28 Apr 2014 07:20 PM PDT

ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை முதலில் ஓரின ஈர்ப்பு என்பது என்ன என்று பார்ப்போம். இதற்கு மரபியலை துழாவினால் துல்லியமாக ஜீன்கள் அகப்படலாம். இரட்டையராகப் பிறந்தவர்களை கணக்கில் கொண்டு இதை நிரூபிக்கவே செய்யலாம். இரட்டையர்களில், ஐடென்டிகல் ட்வின்ஸ் (Identical twins), ஃப்ராடெர்னல் ட்வின்ஸ் (fraternal twins) என்பார்கள். ஐடென்டிகல் ட்வின்ஸ் என்பவர்கள் நூறு சதம் ஒரே மரபியல் கொண்ட இரட்டையர்கள். ஃப்ராடெர்னல் ட்வின்ஸ் என்பவர்கள் ஐம்பது சதம். இதில் ஐடென்டிகல் ட்வின்ஸில் ஒருவர் ...

வேலன்:-பிடிஎப் எரேசர் -PDF ERASER

Posted: 28 Apr 2014 06:41 PM PDT

பிடிஎப் பைல்களை நாம் பயன்படுத்துகையில் அதில் உள்ள புகைப்படங்களை எளிதில் நீக்கவும்.சேர்க்கவும். வார்த்தைகளை சேர்க்கவும் நீக்கவும். பிடிஎப் பக்கங்களை எடிட் செய்திடவும்.இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உ ங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் புகைப்படங்களை நீக்க சேர்கக விரும்பும் பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும். இதில் மேற்புறம் நிறைய டேப்புகள் கொடுத்திருப்பார்கள். ...

காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்

Posted: 28 Apr 2014 05:06 PM PDT

அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம் இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது. ashokam "ஹோல்டான்! ஹோல்டான்!" என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். கைப்பெட்டி அவ்வளவு உபாதைப் படுத்தவில்லை. ஆனால் தோளிலிருந்து தொங்கிய கான்வாஸ் பைதான் பயங்கரமாக அங்குமிங்கும் ஆடி, அவனை நிலை தடுமாற வைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பையில் ஓர் அலுமினியத் தம்ளரை ஓர் ஓரத்தில் இடுக்கியிருந்தான். அது அவன் விலா எலும்பைத் தாக்கியவண்ணம் இருந்தது. பை பையாக இல்லாமல், ஓர் உருளை ...

புலிக்கலைஞன்-அசோகமித்திரன்

Posted: 28 Apr 2014 05:02 PM PDT

பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ஆரம்பிக்கும் நேரமும் பதினொன்றாக இருந்திருக்கிறது. பதினொரு மணி காரியாலயத்திற்கு வீட்டில் பத்தரை பத்தே முக்காலுக்குச் சாப்பிட உட்கார்ந்து காரியாலயத்திற்குப் பதினொன்றரைக்கு வந்து சேர்ந்து, உடனே ஒரு மணிக்கு டிபன் சாப்பிடப் போவது அசாத்தியமாக இருந்திருக்கிறது. அதனால்தான் காண்டீனில் எப்போதும் இரண்டு மணிக்குத்தான் நிஜமான கூட்டம் இருக்கும். இப்போது காலை பதினொரு மணி ...

ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்

Posted: 28 Apr 2014 05:01 PM PDT

என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகின்றேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வது கூடப் பிசகு. சுமார் 15 (கதை, குறுநாவல், கவிதை) பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13க்கு ஒரு விதச் சன்மானமும் கிடைக்கவில்லை. 14வது கதைக்கு வந்த செக்கைக் கமிஷன் குறைத்துக் கையில் கிடைத்தது 4 ரூ. 25 பைசா. nagulan5 நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவள் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் ஒரு தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் ...

பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

Posted: 28 Apr 2014 04:59 PM PDT

நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க ...

அழகர் விழாவுக்கு 1000 வயது!

Posted: 28 Apr 2014 04:54 PM PDT

"அழகர் மலை', சங்க இலக்கியம் முதல் இன்றைய அறிஞர் பெருமக்கள் வரை இதன் சிறப்பை பலவாறாகப் பெருமைபட பாடி வைத்துள்ளனர். மதுரைக்கு வடக்கே 21.கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த அழகர்மலை. இங்குள்ள கோயிலின் பெயராலேயே இவ்வூர், "அழகர்கோவில்' என அழைக்கப்படுவது தனித்துவமிக்கது. அந்த மலை கடல் மட்டத்திலிருந்து 900 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 16,838 ஏக்கர் பரப்பளவில், பசுமை மிக்க சோலைகளாய் விரிந்து, ஆண்டு முழுவதும் ரம்யமாய் காட்சியளிக்கிறது. சங்க இலக்கியமான பரிபாடலில் இளம் பெருவழுதி, இத்தலத்தை " இருங்குன்றம்' ...

தேவகோட்டை ஸ்ரீரெங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம்

Posted: 28 Apr 2014 04:51 PM PDT

தேவகோட்டை ஸ்ரீரெங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தேவகோட்டை வெள்ளையன் ஊரணி மேல்கரையில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் ஏப்.19 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஓவ்வொரு நாளும் சிறப்புப் பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சியில் திங்கள்கிழமை காலை ஸ்ரீரெங்கநாத பெருமாள் ...

தமிழக நகரங்களின் வெயில் அளவு

Posted: 28 Apr 2014 04:49 PM PDT

திருச்சியில் 107 டிகிரி வெயில்; 10 இடங்களில் வெயில் சதம் தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் சனிக்கிழமை (ஏப். 26) 107 டிகிரி வெயில் பதிவானது. இதே போல சென்னை, கோவை, தருமபுரி, பரமத்தி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்), வேலூர் ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. சனிக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி பாரன்ஹீட்டில்): திருச்சி 107 வேலூர், 106 சேலம் 106 பரமத்தி (கரூர்) 105 தருமபுரி 104 மதுரை 104 திருப்பத்தூர் 104 பாளையங்கோட்டை 103 கோவை ...

கடும் வெயில்: உருகியது வாக்குப்பதிவு இயந்திர அறையின் "சீல்'

Posted: 28 Apr 2014 04:47 PM PDT

கடலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு வைக்கப்பட்டிருந்த சீல், சுட்டெரிக்கும் வெயிலால் உருகியது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலை கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 3 அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கல்லூரியின் 2-ஆவது தளத்தில் உள்ள அறைகளில் திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. ...

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மீதான தடையை நீக்கியது

Posted: 28 Apr 2014 04:43 PM PDT

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்குவதாக இந்திய உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் அந்தவழக்கின் அரச வழக்கறிஞரான பவானி சிங்கின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவரால் அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்று அவர் சார்பில் தொடுக்கப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரல் ...

புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891

Posted: 28 Apr 2014 04:02 PM PDT

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் ...

ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்த தினம்: ஏப்.29- 1848

Posted: 28 Apr 2014 03:40 PM PDT

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா- நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார். ராஜா ...

இளம் வயதில் கர்ப்பிணியான மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தாய் கைது

Posted: 28 Apr 2014 03:37 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டம், முட்கல் கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம் பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்று, அவளது நகைகளை திருடிச் சென்று விட்டதாக அந்த பெண்ணின் தாயார் சில தினங்களுக்கு முன்னர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறவே, சந்தேகப்பட்ட போலீசார் புகார் அளித்த பெண்ணிடம் 'உரிய' முறையில் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் வாக்குமூலம் அளித்த அந்த பெண், தனது மகள் 4 மாத கர்ப்பமாக இருந்ததாகவும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™