Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மோடி, சோனியா தொகுதிகளில் வெற்றி யாருக்கு?ஓய்ந்தது பிரசாரம்; நாளை ஓட்டுப்பதிவு

Posted:

புதுடில்லி : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் போட்டியிடும், வதோதரா லோக்சபா தொகுதி அடங்கியுள்ள குஜராத், தெலுங்கானா மாநில பிரிவினைக்குப் பிறகு, முதல் தேர்தலை சந்திக்கும் ஆந்திரா, உ.பி.,யில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ரேபரேலி தொகுதி உட்பட, ஏழு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. மோடி, சோனியா தொகுதிகளில் வெற்றி பெறுவது யார் என்ற ஆவலை, இந்த தேர்தல் இப்போதே ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பதவிகாலம், ...

குஜராத் பிரசாரத்தில் ராகுல் மீது மோடி பாய்ச்சல்: 'ஒரு மாதிரியான நபர்' என விமர்சனம்

Posted:

காந்தி நகர்: ''காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, குஜராத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அவர், ஒரு மாதிரியான நபர்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வ ருமான நரேந்திர மோடி, கடுமை யாக விமர்சித்தார். இதேபோல், காஷ்மீர் பண்டிட்டுகள் விஷயத்தில், மத்திய அமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான, பரூக் அப்துல்லாவையும், மோடி, கடுமையாக தாக்கி பேசினார்.அரைகுறையாக...:குஜராத் மாநிலம், கெரலு என்ற இடத்தில், நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், ...

சோனியா மருமகன் முறைகேடு: 'சிடி'வெளியிட்டது பா.ஜ.,

Posted:

புதுடில்லி : பா.ஜ.,வின், 'குஜராத் வளர்ச்சி' பிரசாரத்தை கிண்டல் செய்து வரும் காங்கிரஸ் தலைவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் முறைகேடுகளை, 'மருமகனின் வளர்ச்சி' என்ற பெயரில், 'சிடி'யாக ெவளியிட்டுள்ள பா.ஜ., சோனியா குடும்பத்தினருக்கு, 13 கேள்விகளையும் எழுப்பியுள்ளது.மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் - காங்கிரஸ் தலைவர் சோனியா தம்பதிக்கு, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், 43, மற்றும் பிரியங்கா, 42 என, இரண்டு வாரிசுகள். இதில், ராகுலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.காதல் திருமணம்:பிரியங்கா, 1997ல், ...

மிரட்டிய ஜெ.,: மிரண்ட அமைச்சர்கள்: 'பிரஷர்' எகிறி அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி

Posted:

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்தாலும், தமிழக அமைச்சர்களுக்கு என்னவோ, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் தான், நிம்மதி கிடைக்கும் என, தெரிகிறது. தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.,வுக்கு பாதகமாக அமைந்தால், சில அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்களின் பதவி பறிபோகும் என்ற, அச்சமே இதற்கு காரணம்.கட்சியின் பொதுச்செயலரான, ஜெயலலிதா, இப்படி பதவி பறிப்பு மிரட்டலை, மறைமுகமாக விடுத்துள்ளதால், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் என, சிலருக்கு, ரத்தக் கொதிப்பு அதிகரித்துள்ளதாகவும், அதனால் தான் அடுத்தடுத்து, மருத்துவமனையில் ...

மே 1ல் உயர்கிறது ஆம்னி பஸ் கட்டணம்

Posted:

பெங்களூருவில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும், ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில், பிற நகரங்களுக்கு இடையிலான கட்டண உயர்வு, வரும் 1ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது.அரசு அனுமதி:தமிழகத்தில், மாநில அரசு அனுமதியுடன், 810, மத்திய அரசு அனுமதி பெற்று, 263 பஸ்கள் என, 1,073 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களின் வசதிகளுக்கு ஏற்ப, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது.தற்போது, கோடை விடுமுறை என்பதால், ஆம்னி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதை பயன்படுத்தி பஸ் உரிமையாளர்கள், கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். ...

செங்கோட்டை தாக்குதல் வழக்கு குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் தடை

Posted:

புதுடில்லி : டில்லி செங்கோட்டையில், தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான, 'லஷ்கர்' அமைப்பைச் சேர்ந்த ஆரீப்புக்கு, துாக்கு தண்டனையை நிறைவேற்ற, சுப்ரீம் கோர்ட், தடை விதித்துள்ளது.கடந்த 2000ல், டில்லி செங்கோட்டை பகுதிக்குள் புகுந்த, இரண்டு பயங்கரவாதிகள், அங்கு இருந்தோர் மீது, கண்மூடித் தனமாக, துப்பாக்கியால் சுட்டு, தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு பாதுகாப்பு படையினர் உட்பட, மூன்று பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இருவரும், தப்பி ஓடினர்.இந்த வழக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய நபரான, முகமது ஆரீப், ...

தமிழகத்தில் மறு ஓட்டுப்பதிவு இல்லை: பிரவீன்குமார் தகவல்

Posted:

சென்னை : ''தமிழகத்தில் மறு ஓட்டுப்பதிவு கோரி, தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைக்கவில்லை. எனவே, எந்த தொகுதியிலும், மறு ஓட்டுப்பதிவு நடக்க வாய்ப்பில்லை,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார்.தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும், 17 நாட்கள் உள்ள நிலையில், பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகத்தில், 42 ஓட்டு எண்ணிக்கை மையங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ...

செல்வகணபதி பதவி தப்புமா?

Posted:

ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வகணபதியின், எம்.பி.,பதவியை பறிப்பது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது.சுடுகாட்டு கொட்டகை அமைப்பதில், ஊழல் செய்த குற்றத்திற்காக, தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வகணபதிக்கு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை சமீபத்தில் விதிக்கப்பட்டது.இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்ததால், தீர்ப்பு வெளியானதும், தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜினாமா கடிதத்தை, ராஜ்யசபா தலைவருக்கு அனுப்பி விட்டதாகவும் தெரிவித்தார்.ஆனால், அந்த கடிதம் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டதோடு ...

மின் பற்றாக்குறை அதிகரிப்பு : பல மணி நேரம் மின் தடை

Posted:

கடந்த, மூன்று தினங்களாக, மின் பற்றாக்குறை, சராசரியாக, 1,200 மெகா வாட்டை தாண்டியுள்ளது. எனவே, சென்னை உட்பட, பல இடங்களில், அதிக நேரம், மின் தடை செய்யப்படுகிறது.தமிழகத்தில், மின் தேவை, நாள்தோறும், சராசரியாக, 12 ஆயிரம் மெகா வாட்; மின் உற்பத்தி, 11 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க, மின் தடை செய்யப்படுகிறது.கோடை காலமான, மே முதல் ஜூலை வரை, மின் தேவை, 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் மெகா வாட்டாக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.ஆனால், அதற்கு முன்னதாகவே, கடந்த, இரு மாதங்களாக, கடுமையான வெயில்; அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் போன்ற காரணங்களால், மின் தேவை, ...

காங்., வேட்பாளரை "கலாய்த்த' என்.டி.திவாரி

Posted:

லக்னோ: "கஜினி' என்ற தமிழ் மற்றும் இந்தி படத்தின் கதாநாயகனுக்கு, அவ்வப்போது தன் சுயநினைவு வருவது போல், "செக்ஸ்' புகழ், என்.டி.திவாரி, 88, தன்னை சந்தித்த, உ.பி., காங்கிரஸ் பெண் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் கிண்டலடித்தார்."கஜினி ஸ்டைல்' : தலையில் ஏற்பட்ட பாதிப்பால், கஜினி பட நாயகனுக்கு நினைவு மறைந்து விடும். இதனால், அவர் ஞாபகமாக வைத்துக் கொள்ள வேண்டிய எண்கள் மற்றும் பெயர்களை, தன் உடலில் எழுதி வைத்திருப்பார். இதை, "கஜினி ஸ்டைல்' என, வட மாநிலங்களில் கிண்டலாக கூறுகின்றனர்.உ.பி., முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான, என்.டி.திவாரியும் இது ...

தவறான தகவல் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு கிடுக்கிப்பிடி

Posted:

புதுடில்லி: "வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, "அபிடவிட்'டில், தவறான தகவல் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக, பொதுமக்கள், நேரடியாக கோர்ட்டில் வழக்கு தொடரலாம்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்தல் கமிஷன், மேலும் கூறியுள்ளதாவது: வேட்பாளர்கள், தங்கள் அபிடவிட்டில், சொத்து மற்றும் தங்களின் விவரங்கள், குற்றப் பின்னணி ஆகியவை குறித்து, பொய் தகவல் அல்லது தவறான தகவல்களை தெரிவித்தால், பொதுமக்கள், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளை அணுகி, அது தொடர்பாக, புகார் அளிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த நடைமுறையில் ...

6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மோடி வெற்றி : வதோதராவில் பா.ஜ.,வினர் இலக்கு நிர்ணயித்து பிரசாரம்

Posted:

வதோதரா: குஜராத்தின் வதோதரா லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, 6 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க, அந்த தொகுதி, பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், இது வரை நடந்த தேர்தலில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான, அனில் பாசுவின் சாதனையை முறியடிக்க, பா.ஜ., வியூகம் வகுத்து செயல்படுகிறது. இரண்டு தொகுதி : குஜராத் முதல்வரான, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தின் வதோதரா லோக்சபா தொகுதியிலும், உத்தர பிரதேசத்தின் வாரணாசி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™