ஈகரை தமிழ் களஞ்சியம் |
- bluray தரத்திலான HD படங்கள் பார்க்கலாம் வாருங்கள்!
- அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?
- முதுமை அது கொடுமை!!
- நிலத்தடி நீர்வளம்
- கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை
- பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்
- விகாசம் - சுந்தர ராமசாமி
- ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி
- பிரசாதம் - சுந்தர ராமசாமி
- கதவு - கி.ராஜநாராயணன்
- ஹைக்கூ
- இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் அருமை....
- அஷ்டமி..... நவமி......
- அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் ! கவிஞர் இரா .இரவி
- ஹைக்கூ
- தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா”
- மலர்கள்
- சில ஹைக்கூக்கள்
- உதவி தேவை intel pentium III processor audio டிரைவர்
- தேர்தல் நகைச்சுவை
- புலிவால் பாடல்
- தேர்வறை
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- மின்துண்டிப்பு
- கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)
- தலித் பெண்ணை நிர்வாணமாக்கிய 8 பேருக்கு 18 ஆண்டுகள் சிறை
- சாலை விபத்து தடுப்பும், அவசர சிகிச்சையும்
- வெயில் கால அம்மை நோய்கள்
- பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள்
- உகுயுர் இனக் கதைகள் (சீனா)
- சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்
| bluray தரத்திலான HD படங்கள் பார்க்கலாம் வாருங்கள்! Posted: 28 Apr 2014 03:27 PM PDT இங்கு நான் இணையத்தில் அங்காங்கே காணும் bluray தரத்திலான -படங்களையும் பாட்டுக்களையும் பார்ப்பதற்கான முகவரியைத் தொடர்ந்து தர இருக்கிறேன். இந்த திரைப்படங்களின் தரத்தை 1080p , 720p என்று இருவகையில் தெளிவாகக் காணலாம். அவற்றில் 1080p யில் அதிகமான கணனிகளில் சீராக ஓடாது. புதிய கணனிகளில் சீராக இயங்கும். அப்படி சரியாக ஓடாவிடில் 720p ல் குறைத்துப் பார்க்கவும் 1. எங்கேயும் காதல் http://www.einthusan.com/movies/watch.php?id=196 |
| அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்? Posted: 28 Apr 2014 11:11 AM PDT பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் ... |
| Posted: 28 Apr 2014 10:46 AM PDT தலை முடி கோதி! பாவனை காட்டி! அழகுடை உடுத்தி! அவள் உளம் கவர! பல வேடம் புணைந்து! பரவசம் அடைவேன்! ஆண்மையின் கம்பீரம்! அனைத்துமே என் வசம்! சினேகிதம் பலர் சேர! சிந்தையில் இளமையாய்! உடலிலும் துடிப்பாய்! உலா வருவேன்! கரம் பிடித்த அவளை! கண்ணும் கருத்துமாய்! அவள் உளம் மகிழ! தேனிலா உலா வந்து! தீஞ்சுவை உணவூட்டி! மகிழ்ந்தேன் சுகமாக! வந்தது முதுமை! மறைந்தது இளமை! ஒழிந்தது இனிமை! உடல் ஏற்றது பிணியை! மருந்தே உணவானது! உணவே வெறுப்பானது! தலை முடி நரைத்து! உடல் தசை விழுந்து! அழகினை ... |
| Posted: 28 Apr 2014 10:42 AM PDT எந்த ஒரு நாடு என்றாலும், அங்கு நீர்வளம் இருந்தால்தான், பூமி செழிக்கும். மக்களின் வாழ்வும் வளம் பெறும். பொதுவாக மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வன வளம் அதாவது, அடர்ந்த காடுகள் இருந்தால்தான் அங்கு மழை வளம் பெருகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் மிகுந்த முயற்சிக்கு பிறகு இப்போதுதான் 21 சதவீத வனப்பரப்பு இருக்கிறது. தாமிரபரணி தவிர, வேறு எந்த ஆறும் தமிழ்நாட்டில் உருவெடுக்கவில்லை. அடுத்த மாநிலங்களில் இருந்துதான் ஓடிவருகிறது. அதனால்தான் அடுத்த மாநிலங்களை தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கெஞ்சவேண்டிய ... |
| கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Posted: 28 Apr 2014 10:38 AM PDT பெங்களூர்: கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண்ணை அடித்து கொன்றுவிட்டு கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகளின் கண் முன்னே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. கள்ளத்தொடர்பு தாவணகெரே மாவட்டம் ஹரிகர் தாலுகா கட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணா(வயது 37). இவருடைய மனைவி கீதா(32). இவர்களுக்கு சிவு என்ற மகனும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையில், கீதாவுக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி நாராயணாவுக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதுதொடர்பாக ... |
| பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம் Posted: 28 Apr 2014 10:30 AM PDT முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு. உடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று, பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம், சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய ... |
| Posted: 28 Apr 2014 10:25 AM PDT அம்மா கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். நான் கட்டிலை ஒட்டிக் கீழே படுத்துக்கொண்டிருந்தேன். பிந்தி எழுந்திருப்பதை நானும் அம்மாவும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம். நாங்கள் சிறிது போராடிப் பெற்றிருந்த உரிமை இது. சூரியோதயத்திற்கு முன் குளியலை முடித்து விடும் தர்மத்தை யுகாந்திரங்களாகக் காப்பாற்றி வரும் குடும்பம். நாங்களோ நோயாளிகள். அம்மாவுக்கு ஆஸ்துமா. எனக்கு மூட்டுவலி. இரண்டுமே காலை உபாதைகள் கொண்டவை. sura 12 குதிரை பிடரியை உதறும் மணிச்சத்தம் கேட்டது. வண்டியைப் பூட்டியாயிற்று. அப்படி என்றால் அப்பா ... |
| ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி Posted: 28 Apr 2014 10:22 AM PDT தில்லியிலிருந்த தன் உற்ற சிநேகிதியான அம்புஜம் ஸ்ரீனிவாசனுக்கு வழக்கம்போல் ரத்னாபாய் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினாள். அதன் கடைசிப் பாராவை "அம்பு, இந்தப் பட்டுப்புடவையை நீ பார்த்தால் என் கையிலீருந்து அதைப் பிடுங்கி உன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு, 'எனக்கு, ஐயோ -எனக்கு' என்று குதிப்பாய். சந்தேகமே வேண்டாம். ராதையின் அழகையும் கண்ணனின் வேணுகானத்தையும் குழைத்து இதைப் படைத்திருப்பவனைக் கலைஞன் என்று நான் கூசாமல் அழைப்பேன். வண்ணக் கலவைகளில் இத்தனை கனவுகளைச் சிதறத் தெரிந்தவன் கலைஞன்தான்" என்று முடித்திருந்தாள். ... |
| Posted: 28 Apr 2014 10:19 AM PDT எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான். அன்றிரவுக்குள் அவன் ஐந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும். அப்பொழுதுதான் தலைநிமிர்ந்து முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியும். அவள் சிரிப்பதைப் பார்க்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட முடியும். ஜங்ஷனுக்கு வந்தான். ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு வளைய வளையச் சுற்றிவிட்டு வந்தான். அதே ஜங்ஷன்தான். மெயின் ரஸ்தா ஓரத்தில் ஒரு புருஷனும் மனைவியும் ரஸ்தாவைத் தாண்டுவதற்குப் பத்து நிமிஷமாக இரண்டு பக்கமும் மாறிமாறிப் பார்த்துகொண்டு ... |
| Posted: 28 Apr 2014 10:11 AM PDT கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். 'எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க' என்றான் சீனிவாசன். உடனே "எனக்கொரு டிக்கெட், உனக்கொரு டிக்கெட்" என்று சத்தம் போட்டார்கள். "எந்த ஊருக்கு வேணும்? ஏய் இந்த மாதிரி இடிச்சி தள்ளினா என்ன அர்த்தம்? அப்புறம் நான் விளையாட்டுக்கு வர மாட்டேன்" "இல்லை, இல்லை, இடிச்சி தள்ளலே" "சரி, எந்த ஊருக்கு டிக்கெட் வேணும்?" குழந்தைகள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவன் "திருநெல்வேலிக்கு" ... |
| Posted: 28 Apr 2014 09:42 AM PDT ஜனநாயக ராஜாகள் வாக்களிப்புக்குப் பின் அகதிகள். கோடை தணிக்கும் ஏழைகள் கேழ்வரகு கூழ். பெற்றோரை பிரிக்க குழந்தையை கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை. |
| இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் அருமை.... Posted: 28 Apr 2014 09:37 AM PDT [noguest] http://myegy.com/programs/ http://myegy.to/b/Programs/all/new [/noguest] இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் அருமை.... கூகிள் குரோம்யில் பார்ப்பதால் அரபிக் இல் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து பார்க்க முடிகின்றது |
| Posted: 28 Apr 2014 09:37 AM PDT கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தில் அதே நாளில் எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். இது ஏன்? சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு பழமொழி உண்டு. ஆனால், நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி, நவமியையும், கிருஷ்ணனுக்குரிய அஷ்டமியையும், ராமனுக்குரிய நவமி ஆகிய நான்கு நாட்களும் அஷ்டமி, நவமிக்கு உகந்த நாட்கள். 8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் அஷ்டமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். இவர்களுக்கு அஷ்டமியால் ... |
| அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் ! கவிஞர் இரா .இரவி Posted: 28 Apr 2014 09:11 AM PDT அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் ! கவிஞர் இரா .இரவி மனித நேய மாமணி எம் .பழனியப்பன் .இவருக்கு சிறு வயதில் பார்வை இருந்தது .காயச்சல் வந்து பார்வை பறி போனது. பார்வையின் பலனும் ,பார்வையற்றதால் உள்ள துன்பம் அறிந்த காரணத்தால் .பார்வையற்றவர்களின் துன்பம் போக்க மூன்றாம் பார்வை அறக்கட்டளை மூலம் அகவிழி பார்வையற்றோர் விடுதி மதுரையில் தொடங்கி நடத்தி வருகிறார் . 8 ஆண்டுகள் கடந்து 9 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார் .வருடாவருடம் இரத்தம் வழங்கி இரத்ததான ... |
| Posted: 28 Apr 2014 09:07 AM PDT உயிரோடு இருப்பதாய் ஏமாறும் பறவைகள் காவல் பொம்மை அறுவடைக்குப்பின்னும் கம்பீரம் குறையாமல் காவல் பொம்மை. காத்ததற்கு ஏதுமில்லை கைவிரித்துக்காட்டும் காவல் பொம்மை. பயம் காட்டிச்சிரிக்கிறது பறவைகளை காவல் பொம்மை. |
| தமிழ்நாட்டில் 1.50 கோடி “நோட்டா” Posted: 28 Apr 2014 08:20 AM PDT தமிழ்நாட்டில் 1.50 கோடி "நோட்டா" தேர்தல் திருவிழா நிறைவடைந்த வேளையில் என்னுடைய இந்த தலைப்பு மிகவும் வியப்பாக இருக்கும். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் யாருக்கும் வாக்களிக்காதவர்களுக்காக நோட்டா என்ற ஒன்றை அறிமுகபடுத்தியது .இந்த பட்டனை, எந்த வேட்பாளரையும் விரும்பாத வாக்காளர்கள் வாக்கு சாவடி வரை வந்து இந்த நோட்டா என்ற பட்டனை அழுத்த வேண்டும். இது ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரங்கள் விழும் ஆனால் 1.50 கோடி எப்படி வரும் என்று ஒரு கேள்வி வரும். அதற்கு என்னுடைய விளக்கமும் காரணமும். தேர்தல் ஆணையத்தை ... |
| Posted: 28 Apr 2014 08:16 AM PDT ஓரறிவு வண்டிற்கும் வாயார உணவளிக்கும் அட்சையப்பாத்திரம் முற்காலத்தில் முப்பொழுது அறிய இயங்கா கைகடிகாரம் . உமது பெயரை பிரித்துபார்த்தேன் சூரிய+காந்தி பகலைக் கொணரும் -சூரியன் இருள் மாய்ந்த மாக்களை வாழ் வெளிசம்மாக்கிய -காந்தி உன்பெயர் பொருத்தமானதுதான் . தலையில் பாரம் சுமக்க மறுக்கும் நங்கை அந்திப்பொழுது மலரும் அல்லியே-உன்னை அள்ளி சுமப்பதேனோ ? தாமரை இலை மீது ஓட்ட நிரைப்போல் நி நிலத்தை ஒட்டாது நீரை ஒட்டி உள்ளதால் உன்னை பறிப்போரும்,பழிப்போரும் இலர் . மல்லிகையே ... |
| Posted: 28 Apr 2014 08:11 AM PDT சில ஹைக்கூக்கள் சில ஹைக்கூக்கள் சிந்தித்தாலும், கருத்துகளை சந்திக்க முடிவதில்லை . ரமணியன் |
| உதவி தேவை intel pentium III processor audio டிரைவர் Posted: 28 Apr 2014 07:39 AM PDT intel pentium III processor audio driver வேணும் நண்பர்கள் யாராவது உதவி பண்ணுங்கள் |
| Posted: 28 Apr 2014 07:15 AM PDT தினமலர் தளத்தில் வந்த தேர்தல் பற்றிய நகைச்சுவை படங்கள் இவை , இது போல வேறு பத்திரிகைகளில் வருவதையும் இங்கு பதிவிடுங்கள் நண்பர்களே |
| Posted: 28 Apr 2014 07:13 AM PDT |
| Posted: 28 Apr 2014 07:01 AM PDT முழுவதையும் முறையாக கற்றோன் கல்வியை கசடற கற்றோன் தேர்வறை வசம் கண்ணியமாய் ,பவ்வியமாய் கைக்கடிகாரத்தில் கவனம் கொண்டு சிந்தைக் கருத்தை சீர்வரிசையாய் அடுக்குவான் . அரைகுறைக் கற்றோன் அங்கும் இங்கும் அலைப்பாய்சல் ஒரு மதிப்பெண் அறிய ஒட்டக சிவிங்கியாய் கழுத்து நீட்டம் துண்டு சீட்டு நொட்டியாடும் பறக்கும் படைக்கண்டு உள்ளத்துள் பறையடிக்கும் நெற்றியில் வியர்வை எட்டிப்பார்க்கும் கரம் பட்ட கைக்குட்டை அடிக்கடி முகம் உரசும் உடம்பில் உஷ்ணம் ஏறும் கால் தட தடக்கும் கைகள் தட்டச்சுபுரியும் ... |
| Posted: 28 Apr 2014 06:39 AM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை Posted: 28 Apr 2014 06:38 AM PDT சேலம் மாவட்டம், பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சம்பு (எ) சண்முகம் (46). இவர் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை இரவு 8 மணியளவில் சேலம் அருகேயுள்ள வலசையூரில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தில் நடத்துநராக சண்முகமும், ஓட்டுநராக சிவக்குமாரும் பணியில் இருந்தனர். அந்தப் பேருந்து வீராணம் அருகேயுள்ள சின்னனூர் பகுதியில் வந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 10 பேர் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் சிவக்குமாரை தாக்கினர். பின்னர், அந்தக் ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 28 Apr 2014 06:13 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| Posted: 28 Apr 2014 06:02 AM PDT தலைப்பு செய்திகள் மின்துண்டிப்பு எதிர்கட்சிகாரன் அல்ல..................... ஏமார்ந்தவன் உங்களால் ஏமாற்ற பட்டவன் கற்காலத்தை கண்முன் நிறுத்தும் இருள் . அம்மா சுட்ட இட்டிலிக்கு சட்டினி அரைக்கும் தருணத்தில் பாசக்கயிறால் உயிர் பறிப்பென பாவி பய பிடுங்கி விட்டானென ஒரே புலம்பல் . அம்மா அழகாய் சுட்ட ஆம்பிலட்டை ஆளுக்கொன்று அம்மா அடுக்க ஆசையால் அள்ளிதின்னும் அவ்னொடியே அருகே அமர்ந்த கரம் என் தட்டில் கரம் பதித்து ருசி பார்த்தது மின்களவால். அக்கா அழகு குறிப்பறிய ... |
| கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1) Posted: 28 Apr 2014 05:45 AM PDT 1. மாற வேண்டுமா? (அன்றும்) நீசிரிக்கப் பொன்னிலங்கும் நிர்மலவானம் - இன்று யார்சிரித்துப் பூத்ததிந்த வெண்ணிலவோரம் வாய்விரித்துப் பூக்குமந்தப் பூக்களின் பாரம் - உந்தன் வாழ்க்கை யின்று காணுதடா வானவில்லாகும் காய் பழுத்துத் தூங்குமரம் கண்டிடும் நாளும் - பல காக்கையுடன் குருவிகளும் கலகலப்பாகும் நோய்பிடித்த ஏழையெனும் நீர்பொழி விழிகள் - துயர் நெஞ்சுணர்வில் வேகிவிடும் நேரெதிராயின் தாய் உரைத்து பாடம் சொன்னார் தமிழினி தென்றாய் - பின் தாகத்துக்காய் ஏடுகற்றே தமிழ்ப்பலம் ... |
| தலித் பெண்ணை நிர்வாணமாக்கிய 8 பேருக்கு 18 ஆண்டுகள் சிறை Posted: 28 Apr 2014 02:43 AM PDT உத்தரபிரதேசத்தில் ஒரு தலித் பெண்ணை நிர்வாணமாக்கி மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற 8 பேருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் தவுனாப்பூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு சாதாரண பிரச்சனைக்காக ஒரு தலித் இன பெண் நிர்வாணமாக்கப்பட்டு மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இச்சம்பவம் கடந்த 1994–ம் ஆண்டு அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது இது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது முதலமைச்சராக இருந்த முலாயம்சிங் யாதவ், ... |
| சாலை விபத்து தடுப்பும், அவசர சிகிச்சையும் Posted: 27 Apr 2014 03:17 PM PDT மோட்டார் வாகன சாலை விபத்துகளை தடுப்பதும், அவசர சிகிச்சைகளை பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோபி, எண்டாஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் விழிப்புணர்வு அளித்தார். அவர் கூறியதாவது: விபத்து என்பது யாரும் எதிர்பாராமல் நடக்கும் ஒரு நிகழ்வு, விபத்துக்களை பலவிதமாக பிரிக்கலாம். சாலை விபத்து, நில நடுக்கம், தீ விபத்து, வெள்ள விபத்து, மின்சார விபத்து என்று கூறலாம். மேற்கூறிய விபத்துகளில் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவது சாலை விபத்து. நம் இந்திய நாட்டில் ஒரு மணி ... |
| Posted: 27 Apr 2014 03:15 PM PDT வெயில் காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கத்தால் அம்மை நோய்கள் வருவது கோடை காலத்தில் நிகழும் ஒன்று. வருமுன் காப்பது சிறப்பு என்பதை நினைவில் கொண்டு அதை தடுக்க முயச்சிகள் செய்ய வேண்டும். வியர்க்குரு, பெரியம்மை, விளையாட்டம்மை, மணல்வாரி அம்மை, பூட்டு தாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி இவை அனைத்துமே உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய்களாகும். சருமத்தில் உடலில் அனைத்து பகுதிகளிலும் அம்மை தோன்றினால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே எளிதில் தொத்திக்கொள்ளும் ... |
| பஞ்சாப் தேர்தலில் 56 கோடீஸ்வரர்கள் Posted: 27 Apr 2014 03:13 PM PDT பஞ்சாப் மக்களவை தேர்தலில் கட்சி வேறுபாடின்றி, எல்லாக் கட்சிகளும், கோடீஸ்வரர்களை களத்தில் இறக்கியுள்ளன. மொத்தம் 13 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 56 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக 13 மக்களவை தொகுதிகளிலும் ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தில் நடக்கிறது. கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஆய்வு செய்ததில், 56 கோடீஸ்வரர்கள் ... |
| Posted: 27 Apr 2014 03:11 PM PDT 1. தேவையற்ற முன்னெச்சரிக்கை ஒரு நாள் மிதியாளர் நசிர்தின் அரசரின் மாளிகையைக் கடக்க நேர்ந்தது. அங்கு மாளிகையின் முன்னே கூட்டம் இருப்பதைக் கண்டு அருகே சென்று பார்த்தார். அவர்கள் தீவிரமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆர்வத்துடன் அருகே சென்று பார்த்த போது, அவர்கள் மாளிகையைச் சுற்றியிருக்கும் மதிலை உயரமாக்கிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் போல நசிர்தின், தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டும் என்ற காட்டாயத்தில், தன்னுடைய கருத்தைக் கூற விரும்பினார். அருகே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ... |
| சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம் Posted: 27 Apr 2014 03:09 PM PDT (சீனர்கள் மத்தியில் பிரபலமான மரபு வழிக்கதைகள் நான்கு. அவை வெள்ளை நாக மரபு, மெங் சியான்வ், லியாங் சூ – பட்டாம்பூச்சிக் காதலர்கள், நியூலாங்கும் ஜீன்வ்வும் – இடையனும் நெசவுக்கன்னியும் ஆகும். அவற்றை உங்களுக்கு படிக்கத் தரலாம் என்ற விருப்பத்தில் இதோ கதைகள். குறிப்பு : கதைகள் காலப்போக்கில் திரிந்து பல்வேறு விதமாக சொல்லப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றை இங்கே தந்துள்ளேன். ) 1. மெங்கின் பயணம் வெளியில் ஆட்கள் நடக்கும் சத்தம் கேட்ட வண்ணம், மெங் சியாங் யு நி;ன்றிருந்தாள். அவர்கள் பேரரசரின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |