Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கடன் வசூல் சட்ட நடவடிக்கை : வங்கிகளுக்கு அமைச்சகம் உத்தரவு

Posted:

புதுடில்லி : 'வாங்கிய கடனை, வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் உள்ளவர்கள், முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும், மத்திய நிதி அமைச்சகம் கடும் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பொதுத்துறை வங்கிகளில், வராக்கடன் பெரும் சுமையாக இருக்கிறது. ஒவ்வொரு வங்கியும், வராக்கடன்களை வசூலிக்கவும், வராக்கடன்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வங்கிகளின் வராக்கடன் நிலைமையை, மத்திய நிதி அமைச்சகம் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. கடன்களை வாங்கியவர்கள், போலியான ...

தேர்தல் அதிகாரி மீது ஸ்டாலின் பாய்ச்சல்

Posted:

""தேர்தல் நடத்தும் அதிகாரியே, தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடந்தது என, கூறக்கூடாது; மக்கள் தான் கூற வேண்டும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தன் குடும்பத்தினருடன் நேற்று அதிகாலை, "கேத்தே பசிபிக்' விமானத்தில், ஹாங்காங் புறப்பட்டு சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:"2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் தொடர்பாக, புதிய குற்றப்பத்திரிகையை, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது மற்றும் குற்றப்பத்திரிகையில், கருணாநிதியின் மனைவி, தயாளு பெயர் ...

மோடி தொகுதியில் கடுமையாக மோதும் காங்.,: வதோதராவில் இருந்து ஜி.வி.ரமேஷ்குமார்

Posted:

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வதோதராவில், அனல்பறக்கும் பிரசாரம், இன்று (ஏப்., 28) நிறைவடைகிறது. மோடிக்கு நெருக்கடி அளிக்க, இரு நாட்களாக காங்கிரசார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இந்த கோடையில் அனல் காற்று வீசும், இந்தியாவின் மேற்கு பகுதி நகரான வதோதராவில், நேற்று அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு நிகராக, கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.பிரதமர் வேட்பாளர் போட்டியிடுவதால், நாடு முழுவதும் கவனிக்கும் தொகுதியாக வதோதரா மாறி விட்டது. வதோதராவில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, காங்., சார்பில் ...

மோடியிடம் எந்த சலுகையும் நான் பெறவில்லை : எதிர்க்கட்சிகளால் தூற்றப்படும் அதானி தகவல்

Posted:

புதுடில்லி:""மோடியிடமோ அல்லது அவர் அரசிடமிருந்தே, சட்டவிரோதமாக எந்த சிறப்பு சலுகைகளையும் பெற்றதில்லை. நான் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்கவில்லை. மாறாக, பாழாக கிடந்த நிலத்தை பண்படுத்திஉள்ளேன்,'' என, "அதானி' குழுமங்களின் தலைவர், கவுதம் அதானி கூறினார்.16 வயதிலேயே...:குஜராத்தின், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் கவுதம். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி, 16 வயதிலேயே தொழில்களில் இறங்கினார். வைரம், பிளாஸ்டிக் என, பல தொழில்களை மேற்கொண்ட அவர், படிப்படியாக உயர்ந்து, நாட்டின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக ...

"டிமிக்கி' கொடுத்த நிர்வாகிகள் யார் யார்? : கருணாநிதி, ஸ்டாலினிடம் வேட்பாளர்கள் புகார்

Posted:

லோக்சபா தேர்தலின் போது, சரியாக பணியாற்றாத, கொடுத்த பணத்தை தேர்தல் பணிக்கு செலவிடாமல், ஸ்வாகா செய்த, மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்து, தி.மு.க., தலைவர், கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினிடம், வேட்பாளர்கள் சிலர், அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியானதும், இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலுக்காக, மூன்று கட்டமாக, சாலை மார்க்கமாக, 8,000 கி.மீ., தூரத்திற்கு மேல், வாகனம் மூலம் பயணித்து, ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 37 இடங்களில் நடந்த ...

நாட்டுக்கு அப்பழுக்கற்ற நல்ல நீதிபதிகள் தேவை: புதிய தலைமை நீதிபதி லோதா விருப்பம்

Posted:

புதுடில்லி:நாட்டின் உயரிய நீதிமன்றமான, சுப்ரீம் கோர்ட்டின், 41வது தலைமை நீதிபதியாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, ஆர்.எம்.லோதா 64, நேற்று பொறுப்பேற்றார்; இந்த பதவியில் அவர், ஐந்து மாதங்கள் தொடர்வார். அவர், ""அப்பழுக்கற்ற நீதிபதிகளே நாட்டுக்கு தேவை; இன்னும், ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் இந்திய நீதித்துறை சிறப்பான இடத்தை அடையும்,'' என, நம்பிக்கை தெரிவித்தார்.நீதிபதி சதாசிவம் ஓய்வு:சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம், 65, நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். முன்னதாக, அடுத்த, தலைமை நீதிபதி பதவிக்கு அவர், மூத்த ...

போட்டி போட்டு பொய் கூறுகின்றனர் : சோனியா, ராகுல் மீது மோடி பாய்ச்சல்

Posted:

பதேபூர்:""ஒரு டீக்கடைக்காரன், நம்மை எதிர்க்கிறானே என்ற கோபத்தில், காங்., தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும், போட்டி போட்டு பொய் சொல்லி வருகின்றனர்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி சாடினார்.கோபம்:உத்தர பிரதேசத்தின், பதேபூர் நகரில், நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், மோடி பேசியதாவது:அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் கேள்வி கேட்க முடியாமல் இருந்த தங்களை, இந்த டீக்கடைக்காரன் கேள்வி கேட்கிறானே என்ற கோபத்தில், சோனியாவும், ராகுலும் என்னை பலவாறாக தூற்றுகின்றனர்; போட்டி போட்டு பொய் சொல்கின்றனர். "குஜராத்தில், ...

மம்தா, மாயாவதி, ஜெயலலிதா ஆதரவு எதற்கு? தே.ஜ., கூட்டணி மிக பலமானது என்கிறார் மோடி

Posted:

புதுடில்லி:''மத்தியில், பா.ஜ., தலைமையில் அமைய உள்ள அரசுக்கு, மம்தா, மாயாவதி, ஜெயலலிதா போன்ற தலைவர்களின் ஆதரவு தேவைப்படாது; எங்கள் கூட்டணி கட்சிகள், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறினார். இதன் மூலம், தேர்தலுக்குப் பிறகு, பிற கட்சிகளின் ஆதரவை, பா.ஜ., பெற தேவைஇருக்காது என்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், தீவிர பிரசாரம் செய்து வரும் மோடியின் சமீபகால பேச்சு மற்றும் பேட்டிகள், 'அடுத்த பிரதமர் மோடி தான்' ...

"காமன்வெல்த்' விளையாட்டு ஊழல் : சிறப்பு கோர்ட்டில் தினமும் விசாரணை

Posted:

புதுடில்லி: "காமன்வெல்த்' விளையாட்டுப் போட்டியில் நடந்த ஊழலில் தொடர்புடைய, காங்., - எம்.பி., மற்றும் ஒன்பது பேர் மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சிறப்பு கோர்ட்டில் அன்றாடம் நடைபெற உள்ளது. டில்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு, நேரம் மற்றும் முடிவுகளை அறிவிக்கும் கருவியை நிறுவ வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில், ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், அரசுக்கு, 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. போட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர், சுரேஷ் ...

காங்கிரசை டி.ஆர்.எஸ். ஏமாற்றியுள்ளது:சோனியா தாக்கு

Posted:

சேவல்லா:''தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது; அக்கட்சி காங்கிரசை ஏமாற்றியுள்ளது,'' என்று, காங்., தலைவர் சோனியா கடுமையாக விமர்சித்தார்.தெலுங்கானா பகுதியில், ரங்கா ரெட்டி மாவட்டத்தில், தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், காங்., தலைவர் சோனியா பேசியதாவது:டி.ஆர்.எஸ்., என்ற தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. காங்கிரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. அக்கட்சிக்கு, தெலுங்கானா வளர்ச்சியில் நம்பிக்கையில்லை. அதிகாரத்தில் மட்டுமே குறியாக உள்ளது.அக்கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது. ...

"லோக்பால்' நிர்வாகிகள்: தகவல் அளிக்க அரசு மறுப்பு

Posted:

புதுடில்லி:"லோக்பால்' அமைப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த தகவலை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என, மத்திய அரசு மறுத்துள்ளது.பிரதமர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களின் ஊழல் முறைகேடுகளையும் விசாரிக்க வகை செய்யும், லோக்பால் அமைப்பிற்கு, தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிக்க, சில மாதங்களுக்கு முன், மத்திய அரசு தீவிரமாக இருந்தது. அந்த அமைப்பின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழு, பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டது.இந்நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அந்தப் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™