Daily Thanthi |
- வாழ்நாள் சாதனையாளர் விருது
- முதல்-அமைச்சர் ஜெயலலிதா
- தி.மு.க. தலைவர் கருணாநிதி
- கார்கில் போரின்போது ‘‘பாகிஸ்தான் வெளியேற உத்தரவிட்டது, அமெரிக்காதான்’’ முன்னாள் தூதர் தகவல்
- ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ராகு–கேது சிறப்பு பூஜை செய்யும் பக்தர்களுக்கு மேல்துண்டு, ரவிக்கை, லட்டு, வடை பிரசாதம் ரத்து; நிர்வாக அதிகாரி அதிரடி நடவடிக்கை
- குவைத்தில் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொலை
- அசாமில் தீ விபத்து முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது வீடு எரிந்து நாசம்
- "மோடியிடம் சலுகை எதையும் பெறவில்லை" ராகுல் குற்றச்சாட்டுக்கு தொழில் அதிபர் அதானி பதில்
- சோனியாகாந்தி செல்ல இருந்த ஹெலிகாப்டரில் கோளாறு; காரில் புறப்பட்டு சென்றார்
| Posted: 27 Apr 2014 11:58 AM PDT |
| Posted: 27 Apr 2014 11:46 AM PDT |
| Posted: 27 Apr 2014 11:43 AM PDT |
| கார்கில் போரின்போது ‘‘பாகிஸ்தான் வெளியேற உத்தரவிட்டது, அமெரிக்காதான்’’ முன்னாள் தூதர் தகவல் Posted: 27 Apr 2014 11:24 AM PDT இஸ்லாமாபாத், கார்கில் போர் பற்றிய ஆலோசனை கூட்டம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. அதில், கார்கில் போரின்போது அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய ரியாஸ் கோகரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:– கார்கில் போர் தவிர்த்திருக்க கூடியதுதான். அச்சமயத்தில், என்னை அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் அழைத்தனர். 'இந்தியா, பைத்தியம் போல சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் ஆக்கிரமித்த இடங்களில் இருந்து தயவுசெய்து உடனடியாக வெளியேறுங்கள்' என்று அவர்கள் கூறினர். அதனால்தான், பாகிஸ்தான் படைகள் வெளியேறின. பாகிஸ்தானால், ஒரு நம்பகமான விவரிப்பை அளிக்க இயலாததுதான், பாகிஸ்தான் இழைத்த மிகப்பெரிய தவறு. அதனால் நாங்கள் பொறுப்பற்ற நாடாக பார்க்கப்பட்டோம். இவ்வாறு அவர் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி Posted: 27 Apr 2014 11:17 AM PDT ஷார்ஜா, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 17வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர்களான பிஞ்ச் (44), தவான் (7) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வார்னர் (0), ராகுல் (25) மற்றும் வேணுகோபால் ராவ் (13) ஆகிய ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சமி (23) மற்றும் சர்மா (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 146 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மித் (66) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பிரெண்டன் மெக்கல்லம் (40), ரெய்னா (14), பிளெஸ்சிஸ் (0) மற்றும் ரவீந்திர ஜடேஜா (6) ரன்களுடன் ஆட்டமிழந்தனர். தோனி (13) மற்றும் மன்ஹாஸ் (3) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 19.3 ஓவர்களில் 146 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. image: category:News Group Category: |
| Posted: 27 Apr 2014 10:20 AM PDT ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ராகு–கேது சிறப்பு பூஜை (ரூ.1500, ரூ.2500 டிக்கெட்) செய்யும் பக்தர்களுக்கு மேல்துண்டு, ரவிக்கை, லட்டு, வடை பிரசாதம் வழங்குவது ரத்து செய்யப்பட்டது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. இதுகுறித்த விவரம் வருமாறு:– சிறப்பு ராகு–கேது பூஜை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் சிறப்பு ராகு–கேது பூஜையில் 1500 ரூபாய் டிக்கெட், 2500 ரூபாய் டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஒரு மேல்துண்டு, ரவிக்கை, லட்டு, வடை பிரசாதம் ஆகியவைகள் வழங்கப்பட்டது. ராகு–கேது பூஜை செய்தபிறகு மேல்துண்டு, ரவிக்கை ஆகியவற்றை பக்தர்கள் சிலர் அதே இடத்திலேயே விட்டு செல்கின்றனர். ஒருசிலர் கோவில் வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் வீசி செல்கின்றனர். ஒரு சிலர் கோவில் உண்டியலில் போட்டு விடுகின்றனர். இதை கவனித்த கோவில் நிர்வாக அதிகாரி ராமச்சந்திராரெட்டி கோவில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:– கோவில் ஐதீகம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பிரசித்தி பெற்ற வாயு தலம் என்பதால், தினமும் ராகு–கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடந்து வருகிறது. நிவாரண பூஜை செய்யும் பக்தர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் தீர்த்தமும், ஞானபிரசுனாம்பிகை தாயாரின் குங்குமத்தையும் தவிர வேறு எதையும் கொண்டு செல்லக்கூடாது என்பது ஐதீகம். எனவே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் தினமும் 300 ரூபாய், 700 ரூபாய், 1500 ரூபாய், 2500 ரூபாய் டிக்கெட் மூலம் பூஜைகள் பலவிதமாக நடந்து வருகிறது. அதில் 1500, 2500 ரூபாய் டிக்கெட் சிறப்பு பூஜையில் மாதம் ஒன்றுக்கு சுமார் 12 ஆயிரம் பூஜைகள் நடக்கிறது. உடனடியாக அமலுக்கு வந்தது நிவாரண பூஜை செய்யும் பக்தர்களுக்கு மேல்துண்டு, ரவிக்கை, லட்டு, வடை பிரசாதம் ஆகியவைகள் வழங்குவதால், ஒரு பூஜைக்கு ரூ.107 செலவாகிறது. மேல்துண்டு, ரவிக்கை ஆகியவற்றை பக்தர்கள் குப்பை தொட்டியில் வீசி விட்டு செல்வதால் கோவிலுக்கு நஷ்டமும், வியாபாரிகளுக்கு லாபமும் ஏற்படுகிறது. ஆகையால், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் 1500, 2500 ரூபாய் டிக்கெட்டில் சிறப்பு ராகு–கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்யும் பக்தர்களுக்கு இன்றிலிருந்து (திங்கட்கிழமை) மேல்துண்டு, ரவிக்கை, லட்டு, வடை பிரசாதம் வழங்குவது ரத்து செய்யப்படுகிறது. இதனால், வருடத்துக்கு ரூ.1 கோடியே 54 லட்சம் மீதமாகும் வாய்ப்புள்ளது. 300 ரூபாய், 700 ரூபாய், 1500 ரூபாய், 2500 ரூபாய் டிக்கெட் மூலம் ஒரே மாதிரியாக ராகு–கேது பூஜை நடைபெறும். அதில் எந்தவித வித்யாசமும் இருக்காது. இவ்வாறு கோவில் அதிகாரி கூறினார். image: category:Tagging:News Group Category: |
| குவைத்தில் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொலை Posted: 27 Apr 2014 09:45 AM PDT கோழிக்கோடு, குவைத்தில் வேலை செய்து வந்த, கேரளாவை சேர்ந்த 2 பேர் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– கேரள தொழிலாளர்கள் கேரளாவை சேர்ந்த பலர் சவுதி அரேபியா, குவைத், பக்ரைன் போன்ற அரபு நாடுகளில் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். கோழிக்கோடு மாவட்டம் காந்தி ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் சாரங்கதன்(வயது 55). இதுபோல் மலப்புரம் மாவட்டம் மூர்கந்து ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் நவுசத்(25). இவர்கள் இருவரும் குவைத்தில் உள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அந்த நிறுவனம், அங்குள்ள சிறு கடைகளுக்கு காய்கறி, மளிகை பொருட்களை மொத்த விலையில் சப்ளை செய்து வந்தது. அந்த கடைகளுக்கு சென்று பொருட்களுக்கான பணம் வசூலிப்பது சாரங்கதன் மற்றும் நவுசத் ஆகியோரின் வேலையாகும். 2 பேர் சுட்டுக்கொலை இந்த நிலையில் சம்பவத்தன்று சாரங்கதன் மற்றும் நவுசத் ஆகியோர் அங்குள்ள ஒரு கடையில் பணம் வசூலிக்க காரில் சென்றனர். காரை கடையின் அருகே நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று 11 ஆயிரம் தினார் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம்) வசூல் செய்து விட்டு காருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த 2 பேர் அவர்களை வழிமறித்தனர். பின்னர் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சாரங்கதன் மற்றும் நவுசத்தை சரமாரியாக சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டுகள் நெஞ்சில் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே சாரங்கதன் மற்றும் நவுசத் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். பின்னர் சாரங்கதன் மற்றும் நவுசத்தின் கையில் இருந்த பணத்தை பறித்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர். இதுகுறித்து குவைத் அரசு, கேரளாவில் உள்ள சாரங்கதன், நவுசத் குடும்பத்தினர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தது. இந்த சம்பவம் குறித்து குவைத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். image: category:Tagging:News Group Category: |
| அசாமில் தீ விபத்து முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது வீடு எரிந்து நாசம் Posted: 27 Apr 2014 09:18 AM PDT கவுகாத்தி, அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள லக்தொகியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் பழைய வீடு உள்ளது. 100 ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்ட அந்த வீட்டில் தற்போது யாரும் வசிக்கவில்லை. அந்த வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பகல் தீ பிடித்தது. அந்த தீ 'மளமள'வென பரவி பக்கத்து வீடுகளிலும் பற்றி எரிந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் வீடும் தப்பவில்லை. தகவல் கிடைத்து தீயணைப்பு வாகனங்கள் சென்று போராடியும் பக்ருதீன் அலி அகமதுவின் வீடு முழுமையாக எரிந்து நாசமானது. மேலும் பல வீடுகளும் எரிந்து சாம்பலாயின. image: category:News Group Category: |
| "மோடியிடம் சலுகை எதையும் பெறவில்லை" ராகுல் குற்றச்சாட்டுக்கு தொழில் அதிபர் அதானி பதில் Posted: 27 Apr 2014 08:43 AM PDT புதுடெல்லி பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தொழில் அதிபர் அதானிக்கு மலிவு விலையில் நிலம் வழங்கி சலுகை காட்டியதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது பிரசாரத்தில் குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானியிடம் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர், 'நரேந்திரமோடி அரசிடம் இருந்து சிறப்பான வகையில் சலுகை எதையும் பெறவில்லை. உள்கட்டுமான திட்டங்களுக்காக 1993ம் ஆண்டில் இருந்து தரிசு நிலங்களைத்தான் நாங்கள் கையகப்படுத்தி இருக்கிறோம்' என பதில் அளித்தார். அவர் மேலும் கூறுகையில், "விவசாயிகளிடமிருந்து ஒரு ஏக்கர் நிலம் கூட வாங்கவில்லை. யாரும் செல்லாத நிலையில், குட்ச் பகுதியில் பாலைவனம் போன்ற தரிசு நிலத்தைத்தான் நாங்கள் வாங்கினோம். அது விவசாய சாகுபடிக்கு ஏற்ற நிலம் அல்ல" என்றார். 1993-ம் ஆண்டு சிமன்பாய் பட்டேல் ஆட்சிக்காலத்தில் ஒரு சதுர மீட்டர் நிலம் 10 பைசாவுக்கும், தொடர்ந்து கேசுபாய் பட்டேல் காலத்தில் ரூ.1-க்கும், சங்கர் சிங் வகேலா பதவிகாலத்தில் ரூ.1.50-க்கும், மோடி ஆட்சிக்காலத்தில் ரூ.15-க்கும் நிலம் கையகப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார். image: News Group Category: |
| சோனியாகாந்தி செல்ல இருந்த ஹெலிகாப்டரில் கோளாறு; காரில் புறப்பட்டு சென்றார் Posted: 27 Apr 2014 08:31 AM PDT ஐதராபாத் தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி தேர்தல் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து மேடக் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று பிரசார கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கடைசி நேரத்தில் தெரியவந்தது. இதனால் சோனியாகாந்தி ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்துவிட்டு கார் மூலம் மேடக் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். image: News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


