Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்

Posted: 27 Apr 2014 03:03 PM PDT

(சீனர்கள் மத்தியில் பிரபலமான மரபு வழிக்கதைகள் நான்கு. அவை வெள்ளை நாக மரபு, மெங் சியான்வ், லியாங் சூ – பட்டாம்பூச்சிக் காதலர்கள், நியூலாங்கும் ஜீன்வ்வும் – இடையனும் நெசவுக்கன்னியும் ஆகும். அவற்றை உங்களுக்கு படிக்கத் தரலாம் என்ற விருப்பத்தில் இதோ கதைகள். குறிப்பு : கதைகள் காலப்போக்கில் திரிந்து பல்வேறு விதமாக சொல்லப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றை இங்கே தந்துள்ளேன். ) ஜெஜியாங் மாநிலத்தின் சாங்யூ நகரம். அந்நகரத்தின் செல்வந்தர்களில் ஒருவர் சூ. சூ குடும்பத்தினர் நகரின் முக்கிய பிரமுகர்களுக்கு ...

கன்னிமை - கி. ராஜநாராயணன்

Posted: 27 Apr 2014 02:50 PM PDT

சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள். 'பெண்ணடி'யில்லை என்று என் தாய் அவளைத் தத்து எடுத்துத் தன் மகளாக்கிக் கொண்டாள். அம்மாவைவிட எங்களுக்குத்தான் சந்தோஷம் ரொம்ப. இப்படி ஒரு அருமைச் சகோதரி யாருக்குக் கிடைப்பாள்? அழகிலும் சரி, புத்திசாலித்தனத்திலும் சரி அவளுக்கு நிகர் அவளேதான். அவள் 'மனுஷி'யாகி எங்கள் வீட்டில் கன்னிகாத்த அந்த நாட்கள் எங்கள் குடும்பத்துக்கே பொன் நாட்கள். வேலைக்காரர்களுக்குக்கூட ...

கோமதி – கி.ராஜநாராயணன்

Posted: 27 Apr 2014 02:44 PM PDT

கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன் பிறந்த ஏழும் அசல் பெண்கள். இவனுக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடைபோட்டு பூ வைத்துக் கொள்வதிலும், வளை அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை. உருவம் ஆணாக இருந்தாலும், இயல்பு அச்சு அசல் பெண்ணாகவே வளர்ந்து வந்தான். நீட்டி, நீட்டி தலை அசைத்துப் பேசுவது அவனுக்கு குழந்தையாக இருக்கும்போதுதான் பொருத்தமாக இருந்தது. பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக விளையாடப் போவான்.ஆண்களோடு விளையாடவேண்டியது ...

இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி

Posted: 27 Apr 2014 02:35 PM PDT

வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல் போனதுதான். சிற்சில வருஷங்களில், வேலை கிடைக்கும் காலத்தில் கிராமத்துக்கு நாலைந்து விதவைகள் இதேபோல் துணியில்லாமல் வீட்டை அடைத்துக் கொண்டு அரைப்பட்டினியோ, முழுப் பட்டினியோku ar.sized கிடப்பது சகஜம் ...

அன்பளிப்பு - கு. அழகிரிசாமி

Posted: 27 Apr 2014 02:33 PM PDT

மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதானே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும் போது மணி இரண்டிருக்கும். எவ்வளவு காலதாமதமாகித் தூங்கப் போனாலும், தூக்கம் வருவதற்கு மேற்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது எனக்கு ஆகும். எனவே இரண்டரைக்குத்தான் தூங்க ஆரம்பித்திருப்பேன். சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, முதுகில் நாலைந்து கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட, அவற்றால் ஏற்பட்ட ஓசை மிகப் பெரியதாக இருந்தது. தூக்கம் கலைந்து ...

ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி

Posted: 27 Apr 2014 02:30 PM PDT

எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத் தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக்கொண்டும் லேசாக யோசனை செய்தாள். அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்றப் பிள்ளைகள். ku.alakirisamy அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் ...

அசத்திய அரசு மருத்துவர்கள்!

Posted: 27 Apr 2014 02:24 PM PDT

அரசு மருத்துவமனை என்றவுடன், அசுத்தம், அக்கறையின்மை, ஆள்பற்றாக்குறை, இடநெருக்கடி, போதிய மருத்துவ வசதியின்மை என்பதே நம் மனதில் முதலில் நினைவுக்கு வரும். எதையும் இலவசமாய் தந்தால், அதன் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இது தவறான எண்ணம் என்கிறார்கள் அரசு மருத்துவமனை ஊழியர்கள். "ஆட்சி செய்வது எந்த கட்சியாக இருந்தாலும், எத்தனை சலுகைகள் தந்தாலும், எங்கள் கடமையில் நாங்கள் எந்த மாற்றமுமின்றி நிறைவாகத்தான் செய்துவருகிறோம். அதிலும், உயிரைக் காக்கும் மருத்துவத் ...

கானல் நீராகிப்போன கட்டாய இலவசக் கல்வி

Posted: 27 Apr 2014 02:21 PM PDT

கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின் கீழ் நிரப்ப வேண்டிய 25% இடங்களுக்கான மனு கொடுக்க வேண்டிய தேதியை நீட்டி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குப் பல மாதங்களுக்கு முன்பாகவே பல தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளிலுள்ள மழலையர் மற்றும் ஒன்றாம் வகுப்புக்கான இடங்களை நிரப்பிவிட்டன. அப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு அனுமதி மனு வாங்குவதற்காகப் பெற்றோர்கள் இரவு முழுதும் நடைபாதையில் தங்கியதை நாளிதழ்கள் புகைப்படமெடுத்து வெளியிட்டன. மழலையர் வகுப்புகளுக்கான கல்விக் ...

வாயை மூடி பேசவும் - திரை விமர்சனம்

Posted: 27 Apr 2014 02:18 PM PDT

பேச்சுதான் படத்தின் மையம். மனதை விட்டுப் பேசுங்கள், மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுங்கள். எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் – இதுதான் படத்தின் ஆதாரமான செய்தி. இந்தச் செய்தியைத் துளிக்கூட சீரியஸ் தன்மையோ வன்முறையோ இல்லாமல் அழகான மலைப் பிரதேசத்தின் பின்னணியில் மெல்லிய சாரலாய்த் தெளித்தி ருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். பேச வேண்டியதைப் பேசாமல் போனால் என்ன ஆகும்? தேவையே இல்லாமல் பேசினால் என்ன ஆகும்? சுத்தமாகப் பேசாமல் இருந்தால் என்ன நடக்கும்? - சில துணைக் கதைகளின் உதவியோடு இதையெல்லாம் ...

உலகச் செய்திகள்!

Posted: 27 Apr 2014 02:16 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

அக்ஷய திருதி கைகொடுக்குமா? நகை வியாபாரிகள் எதிர்பார்ப்பு

Posted: 27 Apr 2014 02:07 PM PDT

ஈரோடு: வறட்சி, தேர்தல் கமிஷன் கெடுபிடியால், தங்கத்தின் விலை குறைந்தும், விற்பனை உயராத நிலையில், அக்ஷய திருதியை கைகொடுக்கும், என, நகை வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமே பெரிய நகைக்கடைகள், பத்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தன. கடந்த, ஐந்தாண்டுகளில், சிறிய நகரங்களிலும், பெரும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால், நடுத்தர மற்றும் சிறு நகை விற்பனையாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் வர்த்தகம், கடும் வறட்சி, மின் வெட்டால் தொழில் நசிவு போன்ற பல்வேறு காரணங்களால், ...

பாயசம் – தி.ஜானகிராமன்

Posted: 27 Apr 2014 01:33 PM PDT

சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார். கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப் பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக்கொண்டார். "நன்னா முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழுந்துண்டுதான் போடேன் நாலு தடவை. உனக்கு இருக்கிற பலம் யாருக்கு இருக்கு? நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண்டம் பூர்ண ஆயுசா? சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட்ப்ரஷரா, மண்டைக் கிறுகிறுப்பா உனக்கு?" என்று யாரோ சொல்வது போலிருந்தது. யாரும் சொல்லவில்லை. ...

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள்: ஏப்ரல் 28, 1942

Posted: 27 Apr 2014 01:31 PM PDT

தமிழ் தாத்தா என எல்லோராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ் நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் வேங்கட சுப்பையர்- சரசுவதி அம்மாள். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட ...

ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிறந்த தினம்: ஏப்ரல் 28, 1937

Posted: 27 Apr 2014 01:30 PM PDT

ஈராக் நாட்டின் முன்னாள் அதிபரான சதாம் உசேன் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968-ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கிய பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராக பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுத படைகளுக்கு இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார். அதிபராக பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தினார். ஈரான்-ஈராக் ...

பஞ்சத்து ஆண்டி - தி. ஜானகிராமன்

Posted: 27 Apr 2014 01:27 PM PDT

அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: "எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க... ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை... எழுந்திருக்க மாட்டிஙக்?... இன்னிக்கிப் புரட்டாசி சனிக்கிழமை." இரைச்சல் அதிர அதிரக் கேட்டது. நன்னையனுக்குத் தன்னைப் பார்த்துத்தான் இவ்வளவு சத்தமும் என்று நிச்சயம் வந்தது. கண்ணைப் பிட்டுக்கொண்டான். ஒட்டுத் திண்ணையில்thija ஓர் அடுக்கை வைத்துச் சாணத் தண்ணீர் ...

ஞானப்பால் – ந.பிச்சமூர்த்தி

Posted: 27 Apr 2014 01:22 PM PDT

லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளைநினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே தனக்கு அதிருஷ்டம்தான் என்ற நினைப்பு அவன் நெஞ்சில் தடித்தே இருந்தது. 'அ'னா 'ஆ'வன்னா தெரியாத கரிக்கட்டைக்குப் பதினைந்து ரூபாய் சம்பளமும், சாப்பாடும், தினம் ஆறுபேருக்குச் சாப்பாடு போட்டுச் சமாளிக்கும் அதிகாரமும் எல்லாருக்கும் இலேசில் கிடைத்துவிடுமா என்ன? பிள்ளை குட்டி இருந்திருந்தாலாவது துரதிர்ஷ்டத்தைப் பற்றி நினைக்க வேண்டி இருக்கும்; சத்திரத்து முதலியாரை ...

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Posted: 27 Apr 2014 01:15 PM PDT

இளநீர் நுங்கு தேங்காய்ப் பால் சர்பத் என்னென்ன தேவை? வழுக்கையாக உள்ள இளநீர் - 1, இளம் நுங்கு - 1/2 கப், தேங்காய்ப் பால் - அரை கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? இளநீரை உடைத்து, அதன் வழுக்கை, நுங்கு, வெல்லம், தேங்காய்ப் பால் எல்லாம் சேர்த்து அடிக்கவும். சுவையான இளநீர் சர்பத் ரெடி! * இதை அருந்துவதால் பருக்கள் வராது. இளமைத் தோற்றத்தோடு முகம் பொலிவு பெறும்.

செய்யுள் முதல் கண்ணதாசன் வரை

Posted: 27 Apr 2014 01:08 PM PDT

செய்யுள்களும் சிக்கல்களும் செய்யுள்களையும் காவியங்களையும் மொழிபெயர்க்க முடியும் என்ற விவாதம் மிகவும் பழமையானது. எவ்வளவுதான் உண்மையாகவும், சாதுர்யமாகவும் மொழிபெயர்த்தாலும், செய்யுளின் ஜீவனைக் கொண்டு வர முடியாது என்று எட்னா செயிண்ட் வின்சன் மிலே என்பவர் குறிப்பிடுகிறார். செய்யுள் என்பது மொழிபெயர்க்கக்கூடியதுதான் என்று ஜான்சன், போப், ஹொரேஸ் ஆகியோர் கருதுகின்றனர். செய்யுளை வேறு மொழிக்குக் கொண்டு போவது என்பது அநேகமாக இயலாத ஒன்றாகும் என்கிறார் டிரைடன் என்ற அறிஞர். கால்களை சங்கிலியால் பிணைத்துக் ...

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

Posted: 27 Apr 2014 12:59 PM PDT

சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தன் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே என மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்களும், மூன்று தீவிரவாதிகளும் பலியாகினர். பலியான ராணுவ அதிகாரிகளில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். 31 வயதான அவரது பெயர் மேஜர் முகுந்த் ...

இராசராச சோழனின் ஏகாதிபத்தியம்

Posted: 27 Apr 2014 12:57 PM PDT

சங்கராச்சாரியாரின் அத்வைத சித்தாந்தம் ஒரு தத்துவ ஏகாதிபத்தியம் அல்லவா? உலக மெல்லாம் தனக்கு மட்டுமே என்பது சங்க காலம் தொடங்கி மன்னர்களின் நோக்கமாக இருந் திருக்கிறது. " தென்கடல் வளாகம் பொதுமையின்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர் " என்று சங்க இலக்கியம் மன்னர்களின் ஏகாதிபத்திய உணர்வைக்குறிப்பிடுகிறது. " அகிலமெலாம் கட்டி ஆளினும் கடல் மீது ஆணை செல்லவே நினைப்பார்" என்று பட்டினத்தாரும் பாடுவார். இராசராசனின் மெய்க்கீர்த்தியின் ( மெய்க் கீர்த்தி = மன்னர்களின் புகழ்ப்பாட்டு முன்னுரை) முதல் ...

நட்சத்திரக் குழந்தைகள் – பி.எஸ்.ராமையா

Posted: 27 Apr 2014 12:54 PM PDT

'அப்பா நட்சத்திரங்களுக்குக் கூட அப்பா உண்டோ?' 'உண்டு அம்மா!' 'அவர் யார் அப்பா?' 'சுவாமி.' 'சுவாமியா? அப்பா! அவர் கூட உன்னைப்போலத்தானே இருப்பார்? நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பா கூட அழகாத்தானே இருப்பார்?' 'ஆமாம் அம்மா! சுவாமியினுடைய அழகைப் போல வேறு யாருக்கும் அழகு இல்லை.' 'சுவாமி கூட உன்னைப் போல நல்லவர்தானே?' 'ஆமாம்' 'ஆமாம். எனக்குக்கூடத் தெரியறது. சுவாமி ரொம்ப…. ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சின்னு அவ்வளவு நன்னாயிருக்கே. அவா அப்பா எப்படி இருப்பார்!' 'அவர் ...

மீனாட்சியம்மன் கோவிலில் இதெல்லாம் விஷேசம்

Posted: 27 Apr 2014 12:52 PM PDT

சிவ தலங்களில் 16 மிக முக்கியமானவை. அவற்றுள் சிதம்பரம், காசி, திருக்காளத்தி மற்றும் திருவாலவாய் ஆகிய 4 தலங்கள் குறிப்பிடத்தக்கவை. 'திருவாலவாய் மதுரை மாநகரின் பெயர்களுள் ஒன்று. இந்தப் பெயர் கேட்ட மாத்திரத்திலேயே இறவாய் பேரின்பநிலை கிடைக்கும். வாழும் காலத்திலேயே வீடு பேறு-சிவன் முக்தி தரும் தலம் என்பதால் சிவன் முக்திபுரம் எனும் பெயரும் இதற்கு உண்டு. மேலும் இத்தலத்திற்கு சிவராஜதானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ...

கனகாம்பரம் – கு.ப.ராஜகோபாலன்

Posted: 27 Apr 2014 12:51 PM PDT

1 'மணி!' வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம். 'எங்கேயோ வெளிலே போயிருக்கா. நீங்க யாரு?' மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரலில் கேட்டான். ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டுவிட்டது. மணியும் அவனும் கலாசாலையில் சேர்ந்து படித்தவர்கள். மணியின் மனைவியைப் பற்றி அவனுக்கு அதிகமாகத் தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. புதுக்குடித்தனம் நடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. ...

விடியுமா? – கு.ப.ராஜகோபாலன்

Posted: 27 Apr 2014 12:49 PM PDT

தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. 'சிவராமையர் – டேஞ்சரஸ்-' என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது. என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள். ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் ...

திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி !

Posted: 27 Apr 2014 09:52 AM PDT

திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி ! பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை ! பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் ! மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் ! மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் ! வாழ்வின் அர்த்தம் விளக்கிடும் அற்புத நூல் ! வசந்தம் அடையும் ரகசியம் கூறும் நூல் ! தாய் பசித்திருந்தாலும் தவறு செய்யாதே எனும் நூல் ! தரணிக்கு அறநெறி விளக்கிய அறிவு விளக்கு நூல் !. தமிழென்ற சொல்லின்றி பெருமை சேர்த்த நூல் ! தீங்கிழைத்த தீயவருக்கும் ...

ஜாதகம் வேண்டி

Posted: 27 Apr 2014 09:37 AM PDT

1. பெயர்
எம்.வடிவேல்

2. பிறந்த தேதி சரியான நேரம்.
21.01.1983 - 07.00 am

3. பிறந்த ஊர்.
olaipatti - krishnagiri (tamilnadu - india)
4. தேவைப்படும் மொழி : / தமிழ்/

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.
vadivelnr@yahoo.com

பாய்ந்தது பணநாயகம்.. வெல்லுமா ஜனநாயகம்..?

Posted: 27 Apr 2014 09:28 AM PDT

ஜனநாயகத்தையே பணநாயகம் ஆக்கிவிட்டார்கள். வாக்குப்பதிவுக்கு முந்தைய இரண்டு தினங்களும் தண்ணீராய் பாய்ந்தது பணம். இதனை ஆங்காங்கே தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கைப்பற்றினாலும், பல இடங்களில் அவர்களால் தடுக்க முடியவில்லை. இந்தப் பணப் பட்டுவாடாவை தனித்தனிக் குழுவாக அமைத்து செயல்படுத்தினார்கள். ''50 சதவிகிதம் பேருக்குக் கொடுத்துவிட்டோம், வெற்றி எங்களுக்குத்தான்'' என்று பணம் கொடுத்த தரப்பு சொல்லி பதறவைக்கிறது. கடந்த 21, 22 தேதிகளில் நடந்த பணநாயகக் கூத்துக்கள்தான் இங்கே! பணப் பட்டுவாடா எப்படி நடக்கிறது? தமிழகம் ...

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Posted: 27 Apr 2014 09:20 AM PDT

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு ஹாங்காங் பறந்துள்ளார். லோக்சபா தேர்தலுக்காக சூடு பறக்க தமிழகம் முழுவதும் சுற்றி வந்த தலைவர்கள் தற்போது ஆளாளுக்கு ஒரு பக்கமாக கிளம்பிப் போய்க் கொண்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு எஸ்டேட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார். ஆனால் அவருக்கு முன்பாக நேற்று நள்ளிரவே ஹாங்காங் கிளம்பிப் போய் விட்டார் ஸ்டாலின். லோக்சபா தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரிக்குச் சரியாக பிரசாரம் செய்தவர் ஸ்டாலின். முதல்வர் ஜெயலலிதா தனது ...

மாரடைப்புக்கான இயல்பில்லாத சில அறிகுறிகள்!

Posted: 27 Apr 2014 09:16 AM PDT

பல பேருக்கு மாரடைப்பு/நெஞ்சு வலி ஏற்படுவதற்கு முன்பு நெஞ்சின் நடுப்பகுதியில் அல்லது மார்பெலும்பின் பின்புறத்தில் மிகுந்த வலியை உண்டாக்கும். பொதுவாகவே நெஞ்சு வலிக்கான அறிகுறிகளை விநோதமாக அனுப்பும் நம் உடல். அதனால் அது நெஞ்சு வலி தானா என்று சம்பந்தப்பட்டவரால் கண்டுப்பிடிப்பது கடினமானதாகிவிடும். டோபிவாலா நேஷனல் மருத்துவ கல்லூரி மற்றும் BYL நாயர் சாரிட்டபில் மருத்துவமனையின் கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர் அஜய் சௌரசியா கூறுகையில், "பொதுவாக நெஞ்சுவலி தொடர்பான வழியை ரெஸ்டோஸ்டேர்னல் என்று அழைப்போம். ...

மே 2 - அட்சய திரிதியை :)

Posted: 27 Apr 2014 09:10 AM PDT

அட்சய திரிதியை அன்று, ஏதாவது மதிப்புள்ள பொருள் வாங்க வேண்டும் என்று சொல்வர்; இது, வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்ட விஷயம் அல்ல! தங்கம் வாங்க வேண்டுமானால், பெரும் தொகை வேண்டும்; பெரும் தொகை கையில் இருக்க வேண்டுமானால், கடும் உழைப்பு இருக்க வேண்டும். ஆக, இது உழைப்பின் பெருமையை வெளிப்படுத்தும் விழா. கீதையில் கண்ணன் கூறுகிறான்... 'முயற்சியுடையவன், வேலையை விருப்பத்துடன் செய்கிறவன், எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறவன்... இவர்களைத் தேடி, மகாலட்சுமி வந்தடைகிறாள்...' என்கிறார் பகவான். உழைப்பை ...

எதிரிகள் ஏவுகணையை நடுவானில் மறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 27 Apr 2014 09:06 AM PDT

பலசூர்: ஒடிஷாவின் வீலர் தீவில் புதிய ரக ஏவுகணையை இந்தியா இன்று காலை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இன்று காலை 9.06 மணிக்கு புதிய ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை எதிரி நாட்டு ஏவுகணை மற்றும் விமானங்களை நடுவானில் மறித்து தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது. ராணுவத்திற்கான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை தயாரிக்கும் டிஆர்டிஓவின் செய்தித் தொடர்பாளர் ரவி குமார் குப்தா கூறுகையில், ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. அது தனது இலக்கை ...

சாதனையாளர் ஆனார், சாதாரண மனிதர் !

Posted: 27 Apr 2014 08:59 AM PDT

சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர்: கோவைக்கு பெருமை சேர்த்த முருகானந்தம்: சாதனையாளர் ஆனார், சாதாரண மனிதர் ! பெண்களே வெளியே சொல்ல கூச்சப்படும் ஒரு விசயத்தில், ஒரு ஆணாக, பெண்களுக்கான 'சானிடரி நாப்கினை' மலிவு விலையில் தயாரித்து, அடிமட்ட ஏழை பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார், கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர். இதனால் இவர், உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் ஒருவராக அமெரிக்காவின், 'டைம்ஸ்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் 29ம் தேதி, அமெரிக்க ...

குவர்னிகா: போரில் எழும் ஓலம்

Posted: 27 Apr 2014 08:56 AM PDT

1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, ஒரு திங்கள் கிழமையின் பிற்பகல் பொழுது, ஸ்பெயினின் வட எல்லைக்கருகில் உள்ள குவர்னிகா என்னும் சிறிய நகரம் உழைத்துக் களைத்துப் போயிருந்தது. ஏனெனில் அன்று அந்த நகரத்தின் சந்தை கூடும் தினம். கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு ஒரே இடத்தில் கூடுவார்கள். அதனால் காலையிலிருந்து ஜனநெரிசலும், வியாபாரக் கூச்சலுமாக இருந்த நகரம் சற்றே ஆசுவாசம் கண்டிருந்தது. சற்றும் எதிர்பார்த்திராத அந்த வேளையில், சரியாக 4:30 மணிக்கு, மேகங்களுக்கு இடையில் மேகமாக இருந்து திடீரென ...

இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன்

Posted: 27 Apr 2014 08:50 AM PDT

வாழ்க்கையில் இலக்கியத்திற்கு ஸ்தானம் என்ன? இதற்கு இரண்டுவிதமான பதில்கள் இருக்கின்றன. இரண்டும் பாதி உண்மைகள். இலக்கியம் ஒரு மகத்தான பொழுதுபோக்கு, மோகனமான கனவு என்பது ஒரு கொள்கை. வாழ்க்கையின் இரகசியத்தையறிந்து, வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் கோருவது இலக்கியம் என்பது மற்றொரு கட்சி. இலக்கியம் மனிதனது மோகனமான கனவு, ஆனால் பயன்றற கனவு என்று கொண்டு விடுவது சரித்திரத்திற்குப் பொருந்தாத கூற்று. இலக்கியம் பிறக்கிறது. புதிய விழிப்பும் மக்களிடையே பிறக்கிற. பிரஞ்சுப் புரட்சியே இதற்கு ஆதாரம். புதிய 'உதய ...

தேர்தலில் பணபலத்தைத் தடுக்க பிரவீண்குமாருக்கு ராமதாஸ் 10 யோசனைகள்

Posted: 27 Apr 2014 08:47 AM PDT

தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் 10 அம்ச யோசனைகளை வழங்கியுள்ளார். இது தொடர்பாக தேவையான புதிய சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்தின் வழியாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வலியுறுத்தி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள 10 யோசனைகள் வருமாறு: 1) தேர்தல்களில் போட்டியிடும் ...

பிரபஞ்ச கானம் – மௌனி

Posted: 27 Apr 2014 08:43 AM PDT

அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது. அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை ...

அழியாச்சுடர் – மெளனி

Posted: 27 Apr 2014 08:41 AM PDT

வழக்கமாகக் காலையில் அவனைப் பார்க்கப் போவது போல நான் அன்று செல்லவில்லை. உதயத்திலிருந்தே உக்கிரமாக வெய்யில் அடித்தது. தெளிவுற விளங்காத ஒருவித அலுப்பு மேலிட்டதனால் நான் வீட்டை விட்டே வெளிக்கிளம்பவில்லை. மாலையில் சென்று அவனைப் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி, மிக உஷ்ணமான அன்று பகலை, என் வீட்டிலேயே கழித்தேன். நேற்று முன்தினம் இது நிகழ்ந்தது. மாலை நாலரை மணி சுமாருக்கு நான் அவன் வீட்டை அடைந்தேன். அவன் என் பாலிய சிநேகிதன். நான் சென்றபோது, தன் வீட்டின் முன் அறையில், அவன் வழக்கம்போல் ஒரு நாற்காலியில் ...

செல்லம்மாள் – புதுமைப்பித்தன்

Posted: 27 Apr 2014 08:39 AM PDT

செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள். நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து ...

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்

Posted: 27 Apr 2014 08:34 AM PDT

மேலகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள் 'பிராட்வே 'யும் 'எஸ்பிளனேடு 'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். டிராமில் ஏறிச் சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்து விட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் ...

காஞ்சனை - புதுமைபித்தன்

Posted: 27 Apr 2014 08:30 AM PDT

அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; ...

நூறு சிறந்த சிறுகதைகள் - கிடைத்தால் பதியவும்

Posted: 27 Apr 2014 08:19 AM PDT

நூறு சிறந்த சிறுகதைகளை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் வரிசைப்படுத்தியுள்ளார். அவை கிடைக்குமானால் யாராவது பதியவும். படிக்க வசதியாக இருக்கும். 1. காஞ்சனை – புதுமைபித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன் 3. செல்லம்மாள் – புதுமைபித்தன் 4. அழியாச்சுடர் -மௌனி 5. பிரபஞ்ச கானம் - மௌனி 6. விடியுமா - கு.ப.ரா 7. கனகாம்பரம் -கு.ப.ரா 8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா 9. ஞானப்பால் – பிச்சமூர்த்தி 10. பஞ்சத்து ஆண்டி – தி.ஜானகிராமன் 11. பாயசம் – தி.ஜானகிராமன் 12. ராஜா வந்திருக்கிறார் ...

தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு

Posted: 27 Apr 2014 08:17 AM PDT

சென்னை : தமிழகத்தில், 1967ல் பதிவான, 76.59 சதவீத ஓட்டுக்கு அடுத்தபடியாக, தற்போது நடந்த லோக்சபா தேர்தலில் தான், அதிக ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது. அதிக அளவில் பெண்கள் தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், இம்மாதம், 24ம் தேதி தேர்தல் நடந்தது. 73.67 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஆண்களை விட, பெண்கள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். ஓட்டு போட்டவர்களில், ஆண்கள், 73.49; பெண்கள், 73.85; திருநங்கைகள், 12.72 சதவீதம். அதிகபட்சமாக, தர்மபுரியில், 81.07 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக ...

4000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் இமயத்திற்கு பாரட்டுக்கள்.

Posted: 27 Apr 2014 08:10 AM PDT



4000 பதிவுகளைக் கடந்துள்ள ஐயா திரு [tag]T.N.Balasubramanian[/tag] அவர்களுக்கு பாராட்டுக்கள்.

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி….

Posted: 27 Apr 2014 08:08 AM PDT

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் ...

வறுமை

Posted: 27 Apr 2014 07:53 AM PDT

இங்கு வறுமைக்கு
நிறம் இருக்கிறதா எனத்தெரியவில்லை;

ஆனால்,

நிச்சயம்
கடை இருக்கிறது.

"அம்மா உணவகம்"

இப்படியும் சில மனிதர்கள்!!

Posted: 27 Apr 2014 07:24 AM PDT

புத்தி பல கூறிடுவார்! புதுமை பல செய்திடுவார்! புனை கதையும் யாத்திடுவார்! பொதுப் பணி என்றழைத்தால்! புற முதுகு காட்டிடுவார்!! சீர் திருத்தம் பேசிடுவார்! சினமின்றிக் கனிந்திடுவார்! சிரம் தாழ்த்தியும் பணிந்திடுவார்! தொண்டுக்காய் பணமென்றால்! சீ..என்று விரட்டிடுவார்!! இன் சொல் பேசிடுவார்! இனங்கிப் பல உரைத்திடுவார்! இகழ்வதையும் வெறுத்திடுவார்! இல்லார்க்கு உதவி என்றால்! ஏரெடுத்தும் பார்க்கமாட்டார்!! வௌ்ளை உடை உடுத்திடுவார்! விளம்பரங்கள் தேடிடுவார்! வளம் பலவும் ...

அர்த்தநாரி...!! { சென்ரியு }

Posted: 27 Apr 2014 06:29 AM PDT

சக்தி சிவனுக்குள்
சிவன் சக்திக்குள்
எல்லாமே அணுவுக்குள்…!.
*

*
மாம்பழம் கையில் வைத்து
பால் குடிக்கிறது
அழுகிற குழந்தை.
*
" நெருங்கி வராதே " என்று
வண்ணத்துப்பூச்சிக்கு
கையசைக்கிறது மலர்கள்.
*
மனம் குளிர்ந்ததோ?
மௌனமாய் சிரிக்கிறான்
அபிஷேகப் பிரியன் சிவன்.
*
சிறகை உதிர்த்துப் போனது
அடையாளத்திற்காக
இணையைத் தேடிய பறவை.
***


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™