Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அமிதாப், ரிக்கி பாண்டிங், டெண்டுல்கர் பலன்!

Posted:

பனாஜி: கோவாவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் பலனடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் அமிர்கான், கபில் தேவ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்கூலி, யுவராஜ் சிங் மற்றும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆகியோரும் பலனடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியல். தொண்டு நிறுவனம் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி, கோவா மாநில ஊரக வளர்ச்சி அமைப்பிடமிருந்து பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.மத்திய ...

தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு

Posted:

சென்னை : தமிழகத்தில், 1967ல் பதிவான, 76.59 சதவீத ஓட்டுக்கு அடுத்தபடியாக, தற்போது நடந்த லோக்சபா தேர்தலில் தான், அதிக ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது.அதிக அளவில் பெண்கள்: தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், இம்மாதம், 24ம் தேதி தேர்தல் நடந்தது. 73.67 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஆண்களை விட, பெண்கள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். ஓட்டு போட்டவர்களில், ஆண்கள், 73.49; பெண்கள், 73.85; திருநங்கைகள், 12.72 சதவீதம்.அதிகபட்சமாக, தர்மபுரியில், 81.07 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில், 60.40 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.ஆண்கள் அதிக ...

குளுகுளு இடங்கள் நோக்கி அரசியல்வாதிகள் பயணம்: கொளுத்தும் வெயிலில் தேர்தல் பணியால் சோர்வு

Posted:

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, கொளுத்தும் வெயிலில் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், தேர்தல் முடிவுகள் வர, இன்னும், 18 நாட்கள் இருப்பதால், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் குளுகுளு பிரதேசங்களுக்கு செல்லத் துவங்கி உள்ளனர்.லோக்சபா தேர்தலில், முதல் முறையாக, 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., போட்டியிட்டது. முதலில், பிரதமர் கோஷம் போட்ட அ.தி.மு.க.,வினர், பின்னர் அந்த கோஷத்தை மாற்றி, அ.தி.மு.க., அங்கம் வகிக்கும், மத்திய அரசு அமையவேண்டும் என, பிரசாரம் செய்தனர்.தீவிர பிரசாரம்:மாற்று கட்சிகளிடம் இருந்து இழுக்கப்பட்ட பிரபலங்களும், திரையுலகினரும், ...

துட்டுக்காக கட்சிக்கு 'வேட்டு' வைத்த நிர்வாகிகள்: வந்ததில் பாதியை 'வாரி சுருட்டினர்'

Posted:

அ.தி.மு.க.,வில், ஓட்டுக்காக, கொடுக்கப்பட்ட பணத்தில், 30 சதவீதத்தை கட்சியினர், 'லபக்' செய்து விட்டனர் என்றும், தி.மு.க.,வில் கோடீஸ்வர வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை, சில மாவட்டச் செயலர்கள் சுருட்டிக் கொண்டதோடு, மேலும், பணம் வேண்டும் என, பேரம் பேசி, அது படியாததால், தேர்தல் பணியை புறக்கணித்தனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.நடுநிலை வாக்காளர்களுக்குலோக்சபா தேர்தலில், பணமழை பொழியும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில், அதிகமாக இருந்தது. அதனால், ஓட்டுக்கு துட்டு கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல விதமான ...

இறுதி ஓட்டுப்பதிவு சதவீதம் வெளியிடுவதில் தாமதம் ஏன்?

Posted:

சென்னை: தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலின், இறுதி ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில், காலதாமதம் ஏற்பட்டது. இதற்கு, சதவீதத்தைக் கணக்கிட முறையான ஏற்பாடு செய்யாததே காரணம்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், ஒரே கட்டமாக, இம்மாதம், 24ம் தேதி தேர்தல் நடந்தது.ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அலுவலரும், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை, எஸ்.எம்.எஸ்., மூலம், உயர் அதிகாரிகளுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் தெரிவிக்க, ஏற்பாடு ...

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளாராம்! ஆந்திராவில் மன்மோகன் பிரசாரம்

Posted:

போன்கிர்: ஊழலை ஒழிக்க, என் தலைமையிலான மத்திய அரசு, ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.ஆந்திராவின், 294 சட்டசபை தொகுதிகளுக்கும், 42 லோக்சபா தொகுதிகளுக்கும், இம்மாதம் 30 மற்றும் மே 7ல் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரசுக்கு ஆதரவாக இதுவரை, ஒன்றிரண்டு கூட்டங்களில் மட்டுமே பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், நேற்று ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.நல்கொண்டா மாவட்டத்தின் போன்கிர் என்ற இடத்தில், மன்மோகன் சிங் பேசியதாவது:என் தலைமையிலான, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பல சாதனைகளை புரிந்துள்ளது. ...

மத்தியில் ஆள வாய்ப்பு தாருங்கள்: டாமன், டையூவில் மோடி பிரசாரம்

Posted:

டாமன்: குஜராத் அருகே உள்ள டாமன், டையூ லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, ''மத்தியில் ஆள வாய்ப்பு தர வேண்டும்,'' என கேட்டார்.பிரான்ஸ், போர்ச்சுகல் போன்ற நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த, நம் நாட்டின் சில பகுதிகளுக்கு, யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, போர்ச்சுகல் கட்டுப்பாட்டில், 1987 வரை இருந்த, குஜராத் அருகே உள்ள டாமன், டையூ பகுதிகளுக்கு, யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. டாமன், டையூ லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் ...

சோனியாவின் ரேபரேலி தொகுதியின் நிலை கண்டு காங்.,அதிர்ச்சி: தொகுதி முழுவதும் பா.ஜ.,வின் புயல் பிரசாரம்

Posted:

ரேபரேலி :காங்கிரஸ் தலைவர் சோனியா போட்டியிடும், உ.பி.,யின் ரேபரேலி தொகுதியை, அவர் நான்காவது முறையாக தக்க வைக்க, கடும் சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. 'ரேபரேலி நகரம் வாழ்கிறது; கிராமப்புறங்கள் தேய்கிறது' என, பா.ஜ., தீவிர பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியோ, தொகுதி மக்கள் சோனியாவை 'கை'விடமாட்டார்கள் என, நம்பிக்கையுடன் உள்ளது.சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி.,யின் ரேபரேலி தொகுதி, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான தொகுதி. இங்கு, நான்காவது முறையாக,காங்கிரஸ் தலைவர் சோனியா ...

பா.ஜ., கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் இடங்கள் 317 : மூன்றாவது அணிக்கு ஆதரவளிக்க காங்., தயார்

Posted:

'ஒன்பது கட்டங்களாக நடைபெறும், 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு சாதகமாக அமையும்; அந்த கூட்டணி, 317 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்கும்' என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்க உதவுவது என்ற முடிவுக்கு, காங்கிரஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது.நாட்டின், 16வது லோக்சபாவுக்கான, எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இம்மாதம் 7 முதல், மே 12 வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை, இம்மாதம் 7, 9, 10, 12, 17 மற்றும் 24ம் தேதிகளில், ஆறு கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடைபெற்று ...

மின் உற்பத்தி அதிகரித்த பின்பும் மின்தடை தொடர்கிறது: தேவையை சமாளிக்க மின் வாரியம் திணறல்

Posted:

தமிழக முதல்வர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் முதன்முறையாக நேற்று அதிகபட்சமாக, 3,870 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மின் உற்பத்தி அதிகரித்து உள்ள போதிலும், மின் தேவை அதை விட அதிகமாக உள்ளதால், மின்வெட்டும் தொடர்கிறது.தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி நிறுவு திறன், 10,364 மெகாவாட். இதில், தூத்துக்குடியில், 1,050, மேட்டூரில், 840, வட சென்னையில், 630, எண்ணூரில், 450 என, அனல் மின் நிலையங்களில் மட்டும் 2,970 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.மேலும், கட்டுமானப் பணி முடிந்து மின் வாரியத்திடம் ...

எனக்கு எதுவுமே தெரியாது என்கிறார் சிதம்பரம் : தயாளு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் விவகாரம்

Posted:

"ராஜா, கனிமொழி, தயாளு ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்திருக்கும் விவகாரம் பற்றி, எனக்கு எதுவும் தெரியாது. தவிர, புலனாய்வு செய்வது குறித்தெல்லாம், அதிகாரிகள் என்னிடம் விவாதிப்பதும் இல்லை, என, காங்கிரசை சேர்ந்த, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.பண பரிமாற்றம் : தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி தயாளு, அவர் மகள் கனிமொழி மற்றும் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் மீது, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™