ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர்: கோவைக்கு பெருமை சேர்த்த முருகானந்தம்
- மற்றவர்களை கட்டுப்படுத்த முடியாது; சகோதரர் விஷயத்தில் மன்மோகன் விளக்கம்
- பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
- எண்ணெய் குளியலின் நன்மைகள்!
- சூரியனை பற்றி ஆராய ஆதித்யா செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் ஏவப்படும்
- ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு
- கணித மேதை ராமானுசன் மறைந்த தினம்: ஏப்ரல் 26, 1920
- இந்தியா
- ஆப்கனில் கடும் மழை : வெள்ளத்தில் சிக்கி 101 பேர் பலி
- பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை
- இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் அருமை....
- இந்தியாவைத் தீர்மானிக்கும் 25 பேர்!
- கணக்கு - Mathematica - Things that are Learned
- 30 வகை பிரியாணி
- ஆங்கில இலக்கணம் -எளிய தமிழில்
- மனதை கவரும் வண்ணப்பறவைகள்
- நாம் சிரிக்கும் நாளே திருநாள்!
- ஈகரையின் சிறப்புக் கவிஞர் கவியருவி ம. ரமேஷ் வாழ்த்தலாம் வாங்க
- படித்ததில் பிடித்தது :) - இதையுமா வீடியோ எடுப்பர் ??????????
- ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்?
- கோடையை சமாளிக்க 10 வழிகள்!
- முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
- ஆசனங்களில் அசத்தும் அதிசயப் பாட்டி!
- வி.ஐ.பி.க்களின் வாக்குப்பதிவு - புகைப்படத் தொகுப்பு
- இனி என்ன நடக்கும் இலங்கையில்?
- கோடை கவிதைகள் {சென்ரியு }
- 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- முடி வளர சித்த மருத்துவம்
- எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்
- வாக்கு எண்ணிக்கை மே 16: முதல் ரவுண்டு முடிவுகள் காலை 9 மணிக்கு தெரியும்
- சிவகங்கை: சட்டப் பேரவைத் தொகுதிவாரியாக வாக்களித்தோர் விவரம்
- மாயமான மலேசிய விமானப் பயணிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் : தூதரகங்களை மூடியது சீனா
- காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
- ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள்
- KLIA2 கட்டுப்பாட்டுக் கோபுரம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது
| சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர்: கோவைக்கு பெருமை சேர்த்த முருகானந்தம் Posted: 26 Apr 2014 03:27 PM PDT பெண்களே வெளியே சொல்ல கூச்சப்படும் ஒரு விசயத்தில், ஒரு ஆணாக, பெண்களுக்கான 'சானிடரி நாப்கினை' மலிவு விலையில் தயாரித்து, அடிமட்ட ஏழை பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார், கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர். இதனால் இவர், உலகின் செல்வாக்குமிக்க 100௦ நபர்களில் ஒருவராக அமெரிக்காவின், 'டைம்ஸ்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் 29ம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் விருது பெறவுள்ளார். சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100௦௦ பேரில், இந்தியாவிலிருந்து நரேந்திரமோடி, ... |
| மற்றவர்களை கட்டுப்படுத்த முடியாது; சகோதரர் விஷயத்தில் மன்மோகன் விளக்கம் Posted: 26 Apr 2014 03:14 PM PDT புதுடில்லி: எனது சகோதரர் பா.ஜ.,வில் இணைந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனால், மற்றவர்களை நான் கட்டுப்படுத்த முடியாது,' என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறி உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, நேற்று மோடி முன்னிலையில் பா.ஜ., கட்சியில் இணைந்தார். இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'எனது சகோதரர் மன்மோகன்சிங் சிறந்த நிர்வாகி, ஆனால், அவரால் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்ய முடியவில்லை. அவர் திறம்பட செயல்பட அவரின் கட்சி அவருக்கு ஒத்துழைக்கவில்லை,' என்று ... |
| பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Posted: 26 Apr 2014 03:07 PM PDT பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்? தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ... |
| Posted: 26 Apr 2014 12:22 PM PDT 'துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கா பாரேன்...' என்று சொல்வதற்கேற்ப, அந்தக் காலத்தில் பார்க்கும் அத்தனை பெண்களுமே மாசு மரு இல்லாத பொலிவுடன் பளிச்சென இருப்பார்கள். தினமும் தலைக் குளியல், வாரம் தவறாமல் எண்ணெய்க் குளியல் என குளத்தில் முங்கிக் குளிக்கும் சுகமே அலாதிதான். ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும், எண்ணெய் இல்லாத தலைதான் தெரிகிறது. 'தலைவலி வரும்... ஜலதோஷம் பிடிக்கும்... முகத்தில் எண்ணெய் வடியும்... தலைமுடியை அலசுவதே கஷ்டம்...'' என்று எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகின்றனர் இன்றைய ... |
| சூரியனை பற்றி ஆராய ஆதித்யா செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் ஏவப்படும் Posted: 26 Apr 2014 12:18 PM PDT திங்கள்சந்தை: திங்கள்சந்தை அருகே இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொன் விழா 3 நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது: கடந்த ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலன் மங்கல்யான் வரும் செப்டம்பர் மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் இறங்கி அங்குள்ள தட்ப வெப்பங்களை ஆராய்ந்து புவிக்கு தகவல் அனுப்ப உள்ளது. மேலும் வெகு விரைவில் சூரியனை பற்றி ஆராய 'ஆதித்யா' என்ற செயற்கைக்கோளை அனுப்ப இருக்கிறோம். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ... |
| ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு Posted: 26 Apr 2014 12:15 PM PDT இன்று பிற்பகல் சுபாங் ஆகாயப் படை விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா வந்து இறங்கிய கணம் முதல், ஹாலிவுட் பட பாணியில் பாதுகாப்பு காட்சிகள் மலேசியாவிலும் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 ஆண்டுகளுக்குப் பின்னர் மலேசியாவிற்கு வருகை தரும் அமெரிக்கா அதிபரான ஒபாமாவின் வருகையை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை மலேசிய காவல்துறையும் அமெரிக்கா பாதுகாப்பு அதிகாரிகளும் ஏற்படுத்தியுள்ளனர். தலைநகரெங்கும் அடிக்கடி வாகனப் போக்குவரத்துகள் நிறுத்தி வைக்கப்படும் என்றாலும் நீண்ட ... |
| கணித மேதை ராமானுசன் மறைந்த தினம்: ஏப்ரல் 26, 1920 Posted: 26 Apr 2014 11:51 AM PDT கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள் .அப்படி ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன் .அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர் ;மிக இளம் வயதிலேயே தவறி இருந்தார் .ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில் தான் பள்ளிகல்வி .பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது ,கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர் .பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்ன பொழுது ;பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்ட ... |
| Posted: 26 Apr 2014 11:05 AM PDT இந்திய அரசியல் இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய தேசிய கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ... |
| ஆப்கனில் கடும் மழை : வெள்ளத்தில் சிக்கி 101 பேர் பலி Posted: 26 Apr 2014 09:55 AM PDT காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். வடக்கு மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள 4 பிராந்தியங்களில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அங்கு மழை வெள்ளத்தில் இதுவரை 101 பேர் பலியானார்கள். மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து, உணவு இன்றி தவித்து வருகின்றனர். வடக்கு பிராந்தியமான ஜாவ்ஸ்ஜானில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகிய 55 பேரின் ... |
| Posted: 26 Apr 2014 08:36 AM PDT மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் நாடகத்தை எழுதியவர் பேராசிரியர். பெ. சுந்தரம்பிள்ளை. இவர் இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் 1855ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் பெருமாள் பிள்ளை, தாயார் மாடத்தி அம்மாள். சைவ நெறி போற்றும் குடும்பத்தில் பிறந்த சுந்தரம்பிள்ளை இளமையிலேயே தேவார திருவாசகங்களில் தேர்ச்சி பெற்றவராய் விளங்கினார். இவரது ஞானாசிரியர் கோடக நல்லூர் சுந்தரசுவாமிகள் ஆவார். வாழ்க்கையும் பணிகளும் 1877ஆம் ஆண்டு ... |
| இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் அருமை.... Posted: 26 Apr 2014 08:19 AM PDT [noguest] http://myegy.com/programs/ http://myegy.to/b/Programs/all/new [/noguest] இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் அருமை.... கூகிள் குரோம்யில் பார்ப்பதால் அரபிக் இல் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து பார்க்க முடிகின்றது |
| இந்தியாவைத் தீர்மானிக்கும் 25 பேர்! Posted: 26 Apr 2014 07:21 AM PDT நுங்ரா, காலாகாலி, மாராமாரி, கந்தாகோல், விஷம் - இந்த ஐந்தும் வங்காளி வார்த்தைகள். இந்தியா வின் அரசியலை, தேர்தல்களை ஆய்வு செய்ய வந்த நார்வே மானுடவியல் ஆய்வாளர் ஒருவர் மேற்கு வங்கக் கிராமத்துக்குப் போனபோது, ஒரு கிராமவாசி இந்த ஐந்து வார்த்தைகளையும் சொல்லியிருக்கிறார். 'அரசியல் என்றாலே அழுக்கு (நுங்ரா), அரசியல்வாதிகள் தவறுகளை ஊக்குவிப்பவர்கள் (காலாகாலி), தேவை இல்லாமல் சண்டை போடுபவர்கள் (மாராமாரி), பிரச்னைகளை வளர்ப்பவர்கள் (கந்தாகோல்). மொத்தத்தில் அவர்கள் சமூகத்தின் 'விஷம்' போன்றவர்கள்' என்றாராம் ... |
| கணக்கு - Mathematica - Things that are Learned Posted: 26 Apr 2014 07:13 AM PDT கிரேக்கச் சொல்லான மேத்தமேட்டிக்கா (Mathematica) என்பதற்கு 'கற்றவை (Things that are Learned) 'என்று பொருள். அந்த வார்த்தையில் இருந்துதான் மேத்தமேடிக்ஸ் என்னும் சொல் வந்தது. இத்தாலியர்கள் தங்கள் பிய்யு (பிளஸ்) என்னும் ஒற்றை அகரத்தை லத்தீன் மொழியின் எட் (அண்ட்) என்னும் அகரத்தோடு இணைத்து கூட்டல் குறியைக் கண்டுபிடித்தார்கள். ஐரோப்பிய வணிகர்கள் டையோபாண்ட்ஸ் என்னும் கணித நிபுணர் பயன்படுத்திய ஆலயமணியைப் போன்ற கிரேக்க அடையாளத்தை கழித்தல் குறியாக கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பயன்படுத்தினார்கள். 17-ஆம் ... |
| Posted: 26 Apr 2014 07:07 AM PDT 1. பைனாப்பிள் பிரியாணி [noguest] தேவையானவை: பச்சரிசி - 2 கப், வில்லைகளாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - அரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். சர்க்கரையுடன் ... |
| Posted: 26 Apr 2014 06:33 AM PDT ஆங்கில இலக்கணம் எளிய தமிழில் மென்நூல் தறவிறக்கம் செய்ய http://www.ziddu.com/download/4444611/eegarai tamilzhan-easy-english.pdf.html |
| Posted: 26 Apr 2014 06:14 AM PDT |
| நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Posted: 26 Apr 2014 05:36 AM PDT வெதும்பிப்போன மனதிற்கு வெள்ளையடித்துப் போவதுதான் பண்டிகைகளின் பணி! ஆனால்.... பணமெனும் நீர் உறிஞ்சியே பண்டிகைப் பயிர்கள் வளர்வதால் அதை நட்டுவைத்த பாவத்திற்காய் நடுத்தெருவில் நிற்கிறது நடுத்தர வர்க்கம்! ஆண்டவனுக்குப் படையல் வைக்க அடகுக்கடையில் வளையல் வைக்கும் அவல நிலையில் அவர்கள்! அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால் அடகுக்கடைக்காரர்களுக்கே இங்கு அதிக மகிழ்ச்சி! விழாக்கால வேட்டுச் சத்தங்களின் விரிவான பின்னணியில் ஒன்று சீட்டுக்கடை இருக்கும்! அல்லது சேட்டுக்கடை ... |
| ஈகரையின் சிறப்புக் கவிஞர் கவியருவி ம. ரமேஷ் வாழ்த்தலாம் வாங்க Posted: 26 Apr 2014 05:23 AM PDT நமது ஈகரையின் சிறப்புக் கவிஞராக பொறுப்பேற்றிருக்கும் கவியருவி ம. ரமேஷ் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். இன்னும் பலப் பல கவிகளை படைக்க மனமார்ந்த வாழ்த்துகள் ரமேஷ்.... |
| படித்ததில் பிடித்தது :) - இதையுமா வீடியோ எடுப்பர் ?????????? Posted: 26 Apr 2014 04:55 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Posted: 26 Apr 2014 04:44 AM PDT ஒரு பொருளை நீங்கள் எவ்வளவு தூரம் வரை பார்க்க முடியும் என்பது உங்கள் கண் இருக்கும் உயரத்தைப் பொறுத்ததுதான். எவ்வளவு தூரம் உங்களால் பார்க்க முடியுமோ அதைத்தான் தொடுவானம் என்கிறோம். கடலில் ஒரு படகில் நின்றுகொண்டே செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது வானிலை சாதாரணமாக இருந்தால் உங்களால் ஐந்து கி.மீ. தூரம் வரை பார்க்க முடியும். அதே நேரம் அந்தப் படகில் நீங்கள் உட்கார்ந்துவிட்டால் மூன்று கிலோமீட்டர் தூரம்தான் பார்க்க முடியும். ஒரு கப்பல் உங்களிடம் இருந்து விலகி தொடுவானத்தை நோக்கிச் செல்கிறது ... |
| Posted: 26 Apr 2014 04:36 AM PDT 1. கோடைக் காலங்களில் பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தவும். வெள்ளை நிற மிருதுவான துணிகள் நல்லது. கருப்பு நிறத் துணிகளைத் தவிர்க்கலாம். 2. குளிர்ச்சியான உணவுப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மோர், பழ ரசங்கள், தர்பூசணி, இளநீர் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. 3. வெப்பம் அதிகமாக இருக்கும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி மைதானங்களில் விளையாடுவதைத் தவிர்க்கலாம். 4. கோடையில் சிலருக்கு உடல் சூடு அதிகமாகி, ஆங்காங்கே கொப்பளங்கள் ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் டாக்டரிடம் காட்டி ... |
| முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Posted: 26 Apr 2014 03:49 AM PDT மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதன் பின்னணி என்னவென்று தெரியுமா? கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான். தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் ... |
| ஆசனங்களில் அசத்தும் அதிசயப் பாட்டி! Posted: 26 Apr 2014 03:44 AM PDT நானம்மா பாட்டிக்கு வயது 93. 'உருவத்தைப் பார்த்து வயதைக் கணக்கிடாதே' என்பது நானம்மா பாட்டிக்கு சரியாகப் பொருந்தும். ஆறு அடியை எட்டும் உயரத்தில் ஆரோக்கியமாக வலம் வருகிறார். 50 வகையான யோகாசனங்களை அசாத்தியமாகச் செய்து நம்மை விழி விரியவைக்கிறார். நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ள நானம்மாளை சந்தித்தோம். கோவை கணபதியில் வீடு. தேன் கலந்த தண்ணீர் கொடுத்து உபசரித்தார். தாகத்தில் நாம் செம்பை வாயில் கவிழ்க்க, 'மளமளன்னு குடிக்காத கண்ணு! பொறுமையா சுவைச்சுக் ... |
| வி.ஐ.பி.க்களின் வாக்குப்பதிவு - புகைப்படத் தொகுப்பு Posted: 26 Apr 2014 03:05 AM PDT ![]() |
| Posted: 26 Apr 2014 02:59 AM PDT ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள முக்கியமான 16 தமிழ் அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, உலக நாடுகளிடம் அவை மீதான தடையையும் கோரியிருக்கிறது இலங்கை அரசாங்கம்! [noguest] அத்துடன், இலங்கைக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாக நெடுங்கேணி பகுதியில் கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது. சர்வதேச அழுத்தங்கள் வெறும் பேச்சளவில் உருவானதுமே, இலங்கையில் இருக்கும் நிராயுதபாணி ... |
| Posted: 25 Apr 2014 11:05 PM PDT குளிர்ச்சியாக இருக்கிறது இளநீர் * குண்டு குண்டாக உருண்டு கிடக்கிறது பாதையோரம் தர்பூசணி. * குளிர்சாதன அறையில் அமர்ந்து ஒரு மணி நேரமாய் குடிக்கிறார்கள் தேனீர். * ஹெல்மெட் வழியே வழிகிறது துளித் துளியாய் வியர்வை. * * ஒடி வந்து பஸ் ஏறிய பயணியின் மேல் எரிந்து விழுந்தார் கண்டக்டர். * விசிறிக் கொண்டே விற்கிறான் பனைஒலை விசிறி. |
| 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Posted: 25 Apr 2014 06:34 PM PDT அருவி கவிதை இலக்கிய காலாண்டிதழ் - ஆசிரியர் - காவனூர். ந. சீனிவாசன் நன்றி – அருவி இதழின் ஆசிரியருக்கும் கவிஞர்களுக்கும் அருவியின் இதழ் எண் 20 – ஹைக்கூ சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஹைக்கூக்களில் எனக்குப் பிடித்த மிகச் சிறந்த 100 ஹைக்கூக்களை மட்டும் இப்பகுதியில் தொகுத்திருக்கிறேன். இந்த ஹைக்கூக்களைப் படித்தால் நீங்களும் நிச்சயம் சிறந்த தமிழ் ஹைக்கூ கவிஞராகலாம் என்பது என் திடமான நம்பிக்கை. நீங்களும் மரபு, புது கவிதைகளையும் ஹைக்கூக் கவிதைகளையும் அருவி – க்கு அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சலில் ... |
| Posted: 25 Apr 2014 06:21 PM PDT ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| Posted: 25 Apr 2014 06:16 PM PDT µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| Posted: 25 Apr 2014 06:03 PM PDT வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் ... |
| எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன் Posted: 25 Apr 2014 04:04 PM PDT புதுமைப்பித்தன் எனும் மாபெரும் மனிதன் எழுத்துலகில் தமிழ் நாட்டை மடைமாற்றியவர்.கரடுமுரடான நடையில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் கவிதையை பாரதி திசை திருப்பினான் என்றால்,சிறுகதையின் எல்லைகளை எளியவனின் திசை நோக்கி பரப்பியவர் இந்த திருநெல்வேலி திருமகன்.எள்ளலும் ,சுருட்டு வாசனையும் எப்பொழுதும் மிகுந்து இருந்த மாபெரும் அங்கதக்காரன்.எதை தவறு என பட்டாலும் உரக்க இடித்த எழுத்துலகின் புரியாத ஞானி. இலக்கியம் என்று அவர் எளிய மக்களின் வாழ்வை சொல்வதையே நினைத்தார் .சீலைப்பேன் வாழ்வு போல காதல் கத்தரிக்காய் ... |
| வாக்கு எண்ணிக்கை மே 16: முதல் ரவுண்டு முடிவுகள் காலை 9 மணிக்கு தெரியும் Posted: 25 Apr 2014 04:00 PM PDT சென்னை: தமிழகத்தில் உள்ள 42 மையங்களில் மே 16ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். முதல் ரவுண்டு முடிவு காலை 9 மணிக்கு தெரியவரும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். தமிழகத்தில் 39 நாடாளு மன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. தேர்தல் முடிந்ததும், மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு 42 மையங்களில் பாதுகாப்பாக ... |
| சிவகங்கை: சட்டப் பேரவைத் தொகுதிவாரியாக வாக்களித்தோர் விவரம் Posted: 25 Apr 2014 03:55 PM PDT சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை என 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி என 2 பேரவைத் தொகுதிகளும் உள்ளன. வியாழக்கிழமை 16ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1,685 வாக்குச் சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டிருந்தது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 1,212 வாக்குச் சாவடிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 473 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. தொகுதிவாரியாக மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை, ... |
| மாயமான மலேசிய விமானப் பயணிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் : தூதரகங்களை மூடியது சீனா Posted: 25 Apr 2014 03:49 PM PDT கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட எம்ஹெச்370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒரு மணி நேரத்திற்குள் ராடாரிலிருந்து மாயமாய் மறைந்தது. இன்றுவரை அந்த விமானத்தினையும், அதன் கறுப்புப் பெட்டியையும் தேடும் பணியில் பல உலக நாடுகள் ஆஸ்திரேலியாவின் கீழ் செயல்பட்டு வரும்போதும் இதுவரை தகவல் எதுவும் கிட்டவில்லை. 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த 153 சீனப் பயணிகளின் உறவினர்கள் நேற்று மாலை திடீரென அங்குள்ள மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுடன் ... |
| காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர் Posted: 25 Apr 2014 03:42 PM PDT [noguest] மகன் ஒரு தலையாக காதலித்த மாணவியையும், மாணவியின் தாயையும் நிர்வாணப்படுத்தி தாக்கிய அதிமுக பிரமுகரின் குடும்பத்தினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் கந்தன் (35), லாரி கிளீனர். இவரது மகள் ராதா (16, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். அதே பகுதியை சேர்ந்த பால் கூட்டுறவு சங்க தலைவரும், அதிமுக கிளை செயலாளருமான விஸ்வநாதன் என்பவரின் மகன் சந்தோஷ் (எ) சாமிநாதன் (17). சேலத்தில் உள்ள தனியார் ... |
| ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Posted: 25 Apr 2014 03:34 PM PDT பிரதமர்: அரசாங்கம் ஹுடுட்டை நிராகரித்ததில்லை ஆனால்…… அரசாங்கம் ஹுடுட் சட்டத்தை நிராகரிக்கவில்லை ஆனால், அதைச் செயல்படுத்துமுன்னர் பல விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். ஹுடுட்டை அதன் நோக்கங்கள் சிதைவுறாமல் அமல்படுத்துவதற்குமுன் பல கட்டுப்பாடுகளையும் விவகாரங்களையும் ஆராய்ந்து தீர்வுகாண வேண்டும். "ஹுடுட்டை நிராகரிப்பதற்கும் அதைச் செயல்படுத்தாமலிருப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு", என்று நஜிப் கூறினார். |
| KLIA2 கட்டுப்பாட்டுக் கோபுரம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது Posted: 25 Apr 2014 03:29 PM PDT உலகிலேயே உயர்ந்த கேஎல்ஐஏ 2 கட்டுப்பாட்டுக் கோபுரம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது என்ற இடைக்கால போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் தெரிவித்தார். தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் உலகிலேயே உயர்ந்தது என்ற அந்தஸ்தில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று விட்டது. இத்தகவலை பொது சேவைத் துறையின் தலைமை இயக்குநர் தெரிவித்தார். இதற்கு முன்பு தாய்லாந்தில் தான் மிக உயர்ந்த கோபுரம் இருந்தது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
