Tamil News | Online Tamil News |
- தமிழகம் முழுவதும் பதிவான ஓட்டு சதவீதம் 73: ஆரம்பம் முதல் மக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்
- வாரணாசி தொகுதியில் மோடி வேட்பு மனு தாக்கல்: லட்சக்கணக்கானோருடன் பிரமாண்ட ஊர்வலம்
- பா.ஜ.,வினர் ரொம்ப தான் அடிக்கிறாங்க...! அலறுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
- ஓட்டளிக்க தடுமாறிய விஜயகாந்த்: உதவிக்கரம் நீட்டிய பிரேமலதா
- ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத ஐ.டி., நிறுவனங்களுக்கு பூட்டு: 5,000 ஊழியர்கள் வெளியேற்றம்
- மோடி அலை இல்லை என்கிறார் மன்மோகன்
- ரூ.10 லட்சத்தை தொலைத்த சோனியா
- 'லோக்பால்' நியமனங்களில் அவசரம் காட்ட மாட்டோம்: மத்திய அரசு
- மத்திய சென்னை மாதிரி ஓட்டு சாவடிக்கு அமோக வரவேற்பு
| தமிழகம் முழுவதும் பதிவான ஓட்டு சதவீதம் 73: ஆரம்பம் முதல் மக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர் Posted: பதினாறாவது லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று, தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்தது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்த தேர்தலில், 73 சதவீதம் பேர், ஓட்டளித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், மாலை 6:00 மணிக்கு முடியும் வரை, மக்கள் மிகுந்த ஆர்வத்துடன், ஓட்டு போட்டனர்.நாட்டின் அடுத்த லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, கடந்த மார்ச் மாதம், தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் ஒன்பது கட்டமாக, ஓட்டுப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஐந்து கட்டத் தேர்தல் முடிந்து ... |
| வாரணாசி தொகுதியில் மோடி வேட்பு மனு தாக்கல்: லட்சக்கணக்கானோருடன் பிரமாண்ட ஊர்வலம் Posted: வாரணாசி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த, உ.பி., யின் வாரணாசி தொகுதியில், மோடியின், வேட்பு மனு தாக்கல், நேற்று இனிதே நடந்தேறியது. லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ, திறந்த வாகனத்தில், மூன்று மணி நேரம் ஊர்வலமாக சென்று, மோடி, வேட்பு மனு தாக்கல் செய்தார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அந்த நாளில் இருந்து இன்று வரை, ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தேர்தல் பிரசாரம் செய்து வரும் மோடி, நேற்று, வாரணாசியில் உணர்ச்சி பெருக்காக காட்சியளித்தார்.காவி நிறத்தில்: ... |
| பா.ஜ.,வினர் ரொம்ப தான் அடிக்கிறாங்க...! அலறுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் Posted: வாரணாசி: ''எதிராக போட்டியிடும் வேட்பாளரை தாக்குவதும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்களை அடிப்பதும் தான், பா.ஜ.,வின் கொள்கையா?'' என, வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.கண்டனத்திற்கு ஆளானார்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயுடன் சில ஆண்டுகள் இருந்த கெஜ்ரிவால், அரசியலில் ஈடுபட விரும்பி, ஹசாரேயின் விருப்பத்திற்கு மாறாக, ஆம் ஆத்மி என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கினார். கடந்த ஆண்டு, டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு அடுத்த இடத்தில் வந்த போதிலும், ஆட்சியை கைப்பற்றிய அக் ... |
| ஓட்டளிக்க தடுமாறிய விஜயகாந்த்: உதவிக்கரம் நீட்டிய பிரேமலதா Posted: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஓட்டளிக்க திணறியதால், அவரது மனைவி பிரேம லதா உதவினார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சில மாதங்களாக கண்ணில் நீர்கசிவு பிரச்னை யால் அவதிப்பட்டு வருகிறார். ஆனால், அதுபோல், எந்த பாதிப்பும் தனக்கு இல்லை என, அவரது தரப்பில் மறுக்கப்பட்டு வருகிறது. பிரசாரத்தின் போதும், விஜயகாந்த், இதை அடிக்கடி சுட்டிக் காட்டினார். சென்னை, சாலிகிராமம் காவேரி மேல் நிலைப் பள்ளி யில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடிக்கு, விஜயகாந்த் ஓட்டளிக்க வந்தார். மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் வந்தனர்.சின்னத்தை ... |
| ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத ஐ.டி., நிறுவனங்களுக்கு பூட்டு: 5,000 ஊழியர்கள் வெளியேற்றம் Posted: சோழிங்கநல்லூர்: தேர்தலை ஒட்டி, பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத ஆறு ஐ.டி., நிறுவனங்களுக்கு பூட்டு போடப்பட்டது. ஊதனால், பணியில் இருந்த, 4,500 ஊழியர்கள் வெளியேற்றப் பட்டதுடன், பணிக்கு வந்த, 10 ஆயிரம் ஊழியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.'லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் நாளன்று, தனியார் நிறுவனங்கள் உட்பட, அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் நேற்று, ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தின. இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திற்கு நேற்று, தொலைபேசி ... |
| மோடி அலை இல்லை என்கிறார் மன்மோகன் Posted: ''நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக கூறுகின்றனர்; என்னை பொறுத்தவரை அப்படி எந்த அலையையும் நான் பார்க்கவில்லை; ஊடகங்கள் தான் இவ்வாறு தொடர்ந்து கூறி வருகின்றன,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.1991 முதல்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், டில்லியில் வசிக்கிறார். எனினும், அவர் அரசியலில் ஈடுபட்ட, 1991 முதல், அசாம் மாநிலத்தில் குடியிருப்பதாக தெரிவித்து வருகிறார். ராஜ்யசபா எம்.பி.,யான அவர், தொடர்ந்து பலமுறை அசாமில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அம்மாநிலத்தின் கவுகாத்தி நகரில் உள்ள திஸ்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், ... |
| Posted: புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா முதலீடு செய்திருந்த, 10 லட்ச ரூபாய்க்கான ரொக்க பத்திரங்கள் காணாமல் போயுள்ளன; அவற்றை எடுத்தவர்கள், ஒப்படைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி.,யின் ரேபரேலி லோக்சபா தேர்தலில் போட்டியிடும் சோனியா, இம்மாதம் 2ல், வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தன்னிடம், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் இருப்பதாக அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள, பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் ரொக்க பத்திரத்தையும் தெரிவித்திருந்தார். அந்த ... |
| 'லோக்பால்' நியமனங்களில் அவசரம் காட்ட மாட்டோம்: மத்திய அரசு Posted: புதுடில்லி: பிரதமர் உட்பட நாட்டின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஊழல் முறைகேடுகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்த, 'லோக்பால்' அமைப்பிற்கு, நிர்வாகிகள் மற்றும் தலைவரை நியமிப்பதில், 'அவசரம் காட்ட மாட்டோம்; தேர்தல் முடிவடைந்த பின் தான் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்' என, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்வுக்குழுவை ஏற்படுத்த தயாரானது. அதில், எதிர்க்கட்சிகளின் கருத்தை கேட்டறியாமல், தாங்களாகவே சிலரை மத்திய அரசு நியமித்தது. அவர்களில் நீதிபதி, கே.டி.தாமஸ். ... |
| மத்திய சென்னை மாதிரி ஓட்டு சாவடிக்கு அமோக வரவேற்பு Posted: சென்னை: தமிழகத்தில், மாதிரி ஓட்டுச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இதில் ஒரு ஓட்டுச்சாவடி, மத்திய சென்னை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 120, 121 ஓட்டுச்சாவடிகளை உள்ளடக்கிய, இந்த மாதிரி ஓட்டுச்சாவடி வளாகம், சென்னை மாநகராட்சியின், ஒன்பதாவது மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.வாக்காளர்களை தேர்தல் திருவிழாவிற்கு அழைக்கும் வாசகங்கள் கொண்ட பேனர், ஓட்டுச்சாவடிக்கு முன் கட்டப்பட்டிருந்தது. திருமணங்களுக்கு தமிழர்கள் பாரம்பரியமாக அமைக்கும், வாழைமரத் தோரணம், ஓட்டுசாவடியின் நுழைவு வாயிலில் கட்டப்பட்டிருந்தது. 'வருக... வருக...' என, வாக்காளர்களை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 25,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |