ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வாக்கை பதிவு செய்தேன்
- வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்
- ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி
- உதவி தேவை intel pentium III processor audio டிரைவர்
- தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம்
- மக்களவைத் தேர்தல்: என்ன சொன்னார்கள் தமிழகத் தலைவர்கள்?
- வினை விதைத்தவன் வினை அறுப்பான்!!
- அசுரர்கள் ஜாக்கிரதை
- முள் - சிறுகதை
- சொந்தக் கால் - சிறுகதை - மேலாண்மை பொன்னுச்சாமி
- மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் தருகின்றனவா?
- தமிழ் திரைப்படம் குறித்த தகவல் உதவி தேவை.
- யாருக்கு எத்தனை தொகுதிகள்? தமிழக கட்சிகள் போடும் கணிப்பு
- உயிர் பதுமைகள் { குழந்தைகள் சார்ந்த கட்டுரை }
- உயிர் வியூகம் !-சுபா- சிறுகதை
- என்னைப் பற்றி அறியலாமே!
- தொழிலதிபராக சில ஆலோசனைகள்
- ஒரு சுதந்திர தேசத்தின் காதல் கதை ! .சுதேசமித்திரன்- சிறுகதை
- காதலற்றவனும் காதலுற்றவளும்! பாரதி தம்பி- சிறுகதை
- கால் சென்டர் காதலி வரலொட்டி ரெங்கசாமி
- இரவல் தொட்டில் - அனுராதா ரமணன்
- தட்சணின் 26-வது மரணம்! -தாமிரா
- தாயாரம்மா - ஆர்னிகா நாசர்
- அவள் பெயர் தமிழச்சி -ராஜேஷ்குமார் -சிறுகதை
- அப்படித்தான் 'அது' எனக்குக் கிடைத்தது! - புஷ்பா தங்கதுரை
- வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?
- ந.க.துறைவன் ஹைபுன் கவிதை
- விமான பயணத்தில் மொபைல், லேப்டாப்களை இனி சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை
| Posted: 24 Apr 2014 02:16 PM PDT வாக்கை பதிவு செய்தேன் குடிமகனின் தலையாய கடமையாம் வாக்களித்தல் . நானும் எனது மனைவியும் எங்கள் வாக்கை பதிவு செய்து விட்டு வந்தோம் . [வாக்கை பதிவு செய்ய , காலை walk ஐ தியாகம் செய்தோம் ] ரமணியன் |
| வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார் Posted: 24 Apr 2014 02:11 PM PDT வாரணாசி: ஆன்மிக பாரம்பரியம் போற்றும் வாரணாசி தொகுதியில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று காலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்நகரில் குவிந்தனர். மோடிக்கு கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பி வரவேற்பு அளித்தனர். வாரணாசி நகரம் முழுவதும் காவி மயமாக காட்சியளிக்கிறது. முன்னதாக மதன் மோகன் மாளவிகா, சர்தார் வல்லபாய் பட்டேல், அம்பேத்கர் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். மோடியின் மனுவை ஓய்வுபெற்ற நீதிபதி, பாடகர், மீனவர், நெசவாளர் ஆகியோர் ... |
| ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Posted: 24 Apr 2014 02:10 PM PDT அரியலூர் மாவட்டம் கருவுடைசேரியில் மக்கள் ஒட்டு மொத்தமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அங்கு உள்ள வாக்கு சாவடியில் மதியம் 1 மணி வரை ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. அரியலூர் ஒன்றியம் மேல கருப்பூர் ஊராட்சியில் கருவுடைசேரி கிராமம் உள்ளது. இங்கு ஆண் வாக்காளர்கள் 475 பேரும், பெண் வாக்காளர்கள் 460 பேரும் மொத்தம் 935 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊரில் உள்ள புறம்போக்கு நிலம் 4 ஏக்கரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தனது குடும்பத்தினர் பெயரில் பட்டா போட்டு விட்டதாகவும் அதனை மீட்டு ... |
| உதவி தேவை intel pentium III processor audio டிரைவர் Posted: 24 Apr 2014 02:05 PM PDT intel pentium III processor audio driver வேணும் நண்பர்கள் யாராவது உதவி பண்ணுங்கள் |
| தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் Posted: 24 Apr 2014 11:06 AM PDT தொகுதி காலை 9 மணி காலை 11 மணி மதியம் 1 மணி மதியம் 3 மணி மாலை 5 மணி இறுதி நிலவரம் திருவள்ளூர் (தனி) 10% 34.4% 44% 58% வட சென்னை 12.62% 27.4% 41% 50.4% தென் சென்னை 10% 26.3% 39.5% 49.3% மத்திய சென்னை 11% 25.4% 35% 48.55% ஸ்ரீபெரும்புதூர் 11% 30.6% 41% 53% காஞ்சிபுரம் (தனி) 15% 36.4% 44% 59.3% அரக்கோணம் 8% 37.8% 47% 64% வேலூர் 16.05% 34.3% 51.5% 59.8% கிருஷ்ணகிரி 8.67% 38.9% 45.4% 62% தருமபுரி 9% 42.9% 51.4% 71.2% திருவண்ணாமலை 15% 39.1% 52% 64% ஆரணி 14.2% ... |
| மக்களவைத் தேர்தல்: என்ன சொன்னார்கள் தமிழகத் தலைவர்கள்? Posted: 24 Apr 2014 10:08 AM PDT மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசியதன் தொகுப்பு. தமிழக முதல்வர் ஜெயலலிதா: "நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடியும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் முடிவு வரும் வரை வேறு எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை" திமுக தலைவர் கருணாநிதி: "இந்தத் தேர்தல் திமுக அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ... |
| வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! Posted: 24 Apr 2014 09:15 AM PDT நெருப்பாய் கொதிக்குது மணலு! நினைத்தே உருகுது மனது! வாடியே சாகுது பயிரு! வரண்டே வெடிக்குது கிணறு! வெந்தே புழுங்குது மலரு! வெடித்தே பறக்குது அனலு! வானம் பார்க்குது பூமி! வனமும் வாடுது மழை நாடி! உயிர்கள் தவிக்குது நீரின்றி! உணர்வே இல்லை நாவரண்டு! நோய்கள் பலவேற்குது உடலு! நளிந்தே போகுது எம் மனது! கோடை கொடுமை பெரிது! கோமகன் நிலையோ சிறிது! உழவன் பாடோ பெரும் பாடு! உணவுக்கே பெரும் கூப்பாடு! வானம் செய்த கொடுமையிது! வளமே அழியும் செயலுமிது! இயற்கை ஏனோ கோபிக்கிது! இவனின் ... |
| Posted: 24 Apr 2014 08:39 AM PDT அகிலம் முழுக்க ஆண்கள் மட்டுமாய் அரைநாழி கூட கடத்த இயலாது அப்படி இருந்தும் உண்மை புரிந்தும் அன்பால் ஆள்தற்குரிய பெண்ணை அடக்கி ஆள துடிப்பவர் தாம் அனேகம் பேர் உண்டு ஆங்காங்கே அறியாப் பருவக் குழந்தை முதல் அரிவை தெரிவை பேரிளம்பெண் வரை அனைத்தும் பெண்ணென பாகுபாடின்றி அசுரனாய் வந்து அழித்துச் செல்கிறான் அவனும் பெண்வயிற்றில் பிறந்தது மறந்து அவளை போகப் பொருளாய் கண்டு அக்குழந்தையின் துயரம் கவனமில்லாது அத்தள்ளாத வயதும் பொருட்படுத்தாது அவர்களைக் கசக்க மனம்எப்படி வந்தது அன்னைவளர்த்திருக்கவாய்ப்பில்லையோ அக்காள்தங்கையெனஉறவுமில்லையோ அடிபணிய ... |
| Posted: 24 Apr 2014 08:25 AM PDT அருந்ததிக்கு, அத்தனை நேரம் இருந்த குதூகலம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்தது. அம்மா சொன்னதைக் கேட்காமல் இந்த இரவில் தனியாகப் பயணிக்க நினைத்தது தவறோ? வீட்டில் தங்கிவிட்டு நாளை பகலில் கிளம்பியிருக்க வேண்டுமோ? ''சொன்னாக் கேளுடி, நாளைக்குப் போகலாம். காலம் ரொம்பக் கெட்டுக்கெடக்கு. உன் வீட்டுக்காரர்கிட்ட வேணும்னா நான் பேசறேன்.'' ''ம்மா... நான் என்ன சின்னக் குழந்தையா? சின்ன வயசுலதான் 'அங்க போகாத, இங்க போகாத, இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேரு'னு அதிகாரம் பண்ணிட்டே இருப்ப... இப்பவுமா? எனக்கும் கல்யாணம் ... |
| சொந்தக் கால் - சிறுகதை - மேலாண்மை பொன்னுச்சாமி Posted: 24 Apr 2014 08:22 AM PDT ன்றையொன்று நெருக்கிக் கொண்டும் உரசித் தள்ளிக் கொண்டும், மந்தையாக வருகிற செம்மறி ஆடுகளை, பட்டிக்குள் பத்தியனுப்பினான் செல்லாண்டி. கைக் கம்பால் அதன் முதுகுகளில் செல்லத்தட்டுகள் தட்டுகிறான். பட்டிக்குள் நெட்டித்தள்ளி மூங்கில் தப்பைக் கதவைச் சாத்தி, கொண்டியை மாட்டுகிறான். குப்புறக் கவிழ்ந்துகிடந்த கூடையைத் தூக்கித் திறந்தவுடன், உள்ளுக்குள் அடைப்பட்டுக்கிடந்த இளங்குட்டிகள் ஆவல் பறப்பும் ஆசைப் பரபரப்புமாகத் தெறித்தோடின. தத்தம் தாய் ஆடுகளைத் தேடிக் கனைத்தன. தாய் ஆடுகளும் குட்டிகளைத் தேடிக் கத்துகின்றன. ... |
| மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் தருகின்றனவா? Posted: 24 Apr 2014 08:18 AM PDT மருத்து தயாரிப்பு நிறுவங்களுக்கும், அந்த மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கும் இடையிலான உறவில் பெருமளவு முறைகேடுகள் நடப்பதாக அமெரிக்காவில் சர்ச்சை எழுந்திருக்கிறது. உலக அளவில் கணிசமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் அமெரிக்காவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையில் ஆரோக்கியமற்ற தொடர்புகள் நிலவுவதாக அமெரிக்காவின் அரச மட்டத்தில் பல ஆண்டுகளாகவே கவலைகள் எழுந்து வந்திருக்கின்றன. ஆரம்ப காலத்தில் இலவச மருந்துகளை மருத்துவர்களுக்கு ... |
| தமிழ் திரைப்படம் குறித்த தகவல் உதவி தேவை. Posted: 24 Apr 2014 08:13 AM PDT Hi ennakku oru padaththin detail vendum. Antha padam 1980 - 1990 kkul vanthirukka vendum. Actor Arjun nadiththadhu endru ninaikkiren. Puthayalai thedi selvargal. C owboy padam pol irukkum. padaththin peyar THANGA NAGAM . Mudinthal udhavungalen. (Padathin peyar athuthan endru naikkiren) |
| யாருக்கு எத்தனை தொகுதிகள்? தமிழக கட்சிகள் போடும் கணிப்பு Posted: 24 Apr 2014 07:59 AM PDT ஓட்டு எண்ணிக்கைக்கு, இன்னும் இருபது நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள, தமிழக கட்சிகள், தங்களுக்குள் ஒரு கணக்கு போட்டு, வெற்றிப் புள்ளிகளை கணித்து வைத்துள்ளன. பிரசாரத்திற்கு சென்ற தொகுதிகளில் கிடைத்த வரவேற்பு, கட்சியினரின் கடின உழைப்பு, கூட்டணியின் பலம், மக்கள் பிரச்னைகள் ஆகியவற்றை அலசிப் பார்த்து, இந்தந்த தொகுதிகள், தங்களுக்கு சாதகம் என, இக்கட்சிகள் ஒவ்வொன்றும் கூறுகின்றன. அ.தி.மு.க., எதிர்பார்ப்பு: அந்த வரிசையில், ஆளுங்கட்சி, அதிக வெற்றியை எதிர்பார்க்கிறது. மூன்றாண்டு ஆட்சியில் ... |
| உயிர் பதுமைகள் { குழந்தைகள் சார்ந்த கட்டுரை } Posted: 24 Apr 2014 05:06 AM PDT * உயிர்ப் பதுமைகள் . * குழந்தைகள் நம் உயிர்த்துளியில் உதித்த உன்னதப் பிறப்புகள். பஞ்சபூதங்களின் உயிர்ப் பதுமைகள். பேசும் சித்திரங்கள். பெற்றவரகளின் வாரிசாகத் திகழும் வருங்காலச் சந்ததிகள். குழந்தைகளைக் கொஞ்சாதவர்கள், மழலைச் சொல் கேளாதவர்கள். சேட்டைகளை ரசிக்காதவர்கள் எவரேனுமுண்டோ? அய்யன் வள்ளுவன் எத்தனை அழகாக மழலைகளின் இனிய சொற்களைத் தன் குறுகிய வரிகளில் இயம்புகிறார் பாருங்கள். குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் {குறள் 66 } பெற்றக் குழந்தைகளின் மழலைச் சொற்கள் ... |
| Posted: 24 Apr 2014 03:42 AM PDT கேப்டன் ராம்குமாரின் கால்கள் இரண்டும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. கைகளை விலங்குகள் கோத்திருந்தன. அவன் மீது செம்மண் தூசு அடர்ந்து இருந்தது. திறந்த ஜீப்பின் வெளியே வானில் பறவைகள் சுதந்திரமாகப் பறந்தன. யுக காலத்துக்குக் குலுங்கி, பயணம் செய்து முடிவாக ஜீப், ஒரு நிறுத்தத்துக்கு வந்தது. அது ஒரு மாபெரும் இரும்புக் கூடாரம்போல் தெரிந்தது. வாசலில் சொற்பமான காவலர்கள் எதையோ தின்றுகொண்டு அசுவாரஸ்யமாக, இரும்பு கேட்களைத் திறந்துவிட்டார்கள். எல்லாவற்றையும் ராம்குமார் சிதையாத ஒற்றைக் கண்ணால்தான் பார்க்க ... |
| Posted: 24 Apr 2014 03:24 AM PDT பெயர்:மு.ஹ.ஜவ்ஹர் சொந்த ஊர்:இலங்கை,கிண்ணியா (திருகோணமலை மாவட்டம்) ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:தேடல் மூலம் பொழுதுபோக்கு:கண்டதையும் கற்பது பிடித்ததை ஏற்று நடப்படு தொழில்: எழுதுவினைஞர் மேலும் என்னைப் பற்றி:சமூக சேவை செய்வது தொண்டுசெய்வோருக்கு கை கொடுப்பது |
| Posted: 24 Apr 2014 12:20 AM PDT முழுப் பரீட்சை விடுமுறைவிட்ட கோடைக் காலத்தில், ஊருக்குத் தெற்கே உள்ள சந்தையில், முழங்கால் அளவுக்கு மேல் மேடிட்டு இருந்த விற்பனை மால் ஒன்றில் நான், ஆனந்தன், ரவி, வடிவேல் நால்வரும் இருந்தபோது முருகன் வந்தார். 40 வயதுக்கு மேல் ஆகியிருந்த முருகனுக்கு இரண்டு காரணங்களால் நீர்மூழ்கி என்று பெயர். கிணறுகளில் விழுந்துவிட்ட ஸ்பேனர் முதல் பிணம் வரை எடுத்து வந்து மேலே போடுகிற, 'தம்' கட்டுகிற சூரத்தனத்தால் அந்தப் பெயர். முருகனை ஊரில் போதையில் இல்லாத நிலையில் பார்த்தவர்கள் குறைவு என்பதாலும் அதே பெயருக்கு ... |
| ஒரு சுதந்திர தேசத்தின் காதல் கதை ! .சுதேசமித்திரன்- சிறுகதை Posted: 24 Apr 2014 12:02 AM PDT . வழி எல்லாம் புலம்பிக்கொண்டே வந்தான் குமார். அவனது கார் முன்னைப் போல மைலேஜ் தருவது இல்லையாம்; துவரம் பருப்பு 100 ரூபாய்க்கு விற்கிறதாம்; இந்த மாதிரி பல பிரச்னைகள். ஆனால், அவை அனைத்துமே கார் மெக்கானிக்கும் பாரதப் பிரதமரும் தீர்த்துவைக்கக்கூடிய பிரச்னைகளாகவே இருந்ததால், அந்த இரண்டு வேலைக்குமே லாயக்கு இல்லாத தான் என்ன செய்ய முடியும் என்பது பாரத் துக்குப் புரியவில்லை. அதிலும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் மூழ்கி, ஒரு பர்சனல் லோனில் மிச்சம் இருக்கும் கேவலம் 25 ஆயிரத்துக்கு அரெஸ்ட் வாரன்ட் ... |
| காதலற்றவனும் காதலுற்றவளும்! பாரதி தம்பி- சிறுகதை Posted: 24 Apr 2014 12:00 AM PDT கலையரசன்... ஒரு காதல் காமன்மேன். என்னை மாதிரி எவனாவது சிக்கினால் ஆவேச அறிவுரைகள் வழங்கித் தாளிப்பான். பன்னெடுங்காலமாய் இந்தப் பன்னாடை வழங்கி வரும் காதல் உபதேசம் தற்சமயம் பட்டு நூல்காரத் தெருவின் அறையைத் தாண்டி, தஞ்சாவூரின் வீதிகளில் வழிந்துகொண்டு இருக்கிறது. "மச்சான், அது எப்படி ஒரு மனுஷனுக்குக் காதல் வராம இருக்கும்? மண்வாசனை இல்ல, மண்வாசனை... அது இந்தப் பூமிலதான்டா இருக்குது. ஆனா, அதை வெளிய கொண்டுவர வானத்துலேர்ந்து மழை வர வேண்டியிருக்கு. அந்த மாதிரிதான் மச்சான் லவ்வும். நல்லா யோசிச்சுப்பாரு. ... |
| கால் சென்டர் காதலி வரலொட்டி ரெங்கசாமி Posted: 23 Apr 2014 11:58 PM PDT 'இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்... இதுதான் எங்கள் உலகம்' என்ற கவிஞரின் சொற்களை மெய்ப்படுத்துவதாக அந்த கால் சென்டர் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. மணி இரவு 11.45. பெங்களூரு நகருக்குச் சற்று வெளியே அந்தக் குட்டி வளாகத்தில் ஆண்களும் பெண்களுமாக 680 பேர் ஒரே சமயத்தில் அமெரிக்கர்களுடன் தொலைபேசிக்கொண்டு இருந்தனர். அமெரிக்கர்கள் விழித்திருக்கும்போது விழித்திருப்பது, இந்திய மொழிகளின் தாக்கம் இல்லாமல் அவர்களைப்போலவே ஆங்கிலம் பேசுவது, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அப்பா-அம்மா சூட்டிய பெயர்களை ... |
| இரவல் தொட்டில் - அனுராதா ரமணன் Posted: 23 Apr 2014 11:48 PM PDT இன்னும் அன்னம் வரவில்லை. வாசல் இரும்புக் கிராதியின் சத்தம் கேட்கும்போது எல்லாம் விசுவம் எட்டிப் பார்த்து ஏமாந்தான். அப்பா இடை ரேழியில் இருந்து செருமினார்... ''இன்னும் அவ வரல்லே போல இருக்கே?'' ''வந்துடுவா.'' அதற்கு மேலும் அங்கே நிற்கச் சக்தி அற்றவனாகக் கூடத்துக்கு வந்தான். ஊஞ்சல் பலகையில் ஒரு காலை மடித்து, ஒரு காலைத் தொங்கவிட்டபடி, குறுக்குவாட்டில் அமர்ந்து, ஒற்றையாய் பல்லாங்குழி ஆடிக்கொண்டு இருந்த அம்மா இவனை நிமிர்ந்து பார்த்து, ''ஒரே ஊர்லேயே பிறந்த வீடு இருந்தா, இதான் தொந்தரவு! ... |
| தட்சணின் 26-வது மரணம்! -தாமிரா Posted: 23 Apr 2014 11:31 PM PDT தட்சணின் 26-வது மரணம்! தாமிரா - நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு 'என் மரணம் இந்தச் சமூகத்துக்கான பேரிழப்பு. இந்தச் சமூகம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். வேறு என்ன சொல்வது?' என்கிற வாசகத்தோடு தனது 26-வது தற்கொலைக் கடிதத்தை எழுதி முடித்தான் தட்சணாமூர்த்தி. இந்தச் சமூகத்தின் மீது கருணை காட்டி இத்தனை காலம் வாழ்ந்தது போதும் என்கிற சலிப்பு மட்டுமே அவனிடம் மிஞ்சி இருந்தது. தான் அமர்ந்திருந்த பீட்ஸா கார்னரில் சுற்றிலும் இருந்த மனிதர்களைப் பார்த்தான். எல்லோரும் ஏதோ ஒன்றைப் பேசிச் ... |
| Posted: 23 Apr 2014 11:30 PM PDT சொர்ணசேரி வானொலி நிலையம். இயக்குநர் மைதிலியின் எதிரில் அமர்ந்திருந்தான் நிகழ்ச்சித் தயாரிப்பாளன் ராஜகீர்த்தி. "மிஸ்டர் கீர்த்தி! அகில இந்திய வானொலி நாடக விழாவில் ஒரு சிறப்பான நாடகத்தைத் தயாரிச்சு வழங்கணும். ஸ்கிரிப்ட் ஏதாவது ரெடியா இருக்கா?" கீர்த்தி உதடு பிதுக்கினான். "பொதுவாகவே வானொலிக்கு நாடகங்கள் எழுதுற வங்க எண்ணிக்கை ரொம்பக் குறைஞ்சுபோச்சு மேடம். என்கிட்ட 20-க்கும் மேற் பட்ட ஸ்கிரிப்ட்கள் இருக்கு. பெரும்பாலானவை டாகுமென்ட்டரி தரம். பிரசார நெடி அதிகம். நாடக அம்சமே இல்லை." "இப்படிச் ... |
| அவள் பெயர் தமிழச்சி -ராஜேஷ்குமார் -சிறுகதை Posted: 23 Apr 2014 11:27 PM PDT ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரம், அந்த ராத்திரி 10 மணி வேளையில் மின்மினிப் பூச்சிகளின் கூட்டம் போல் தெரிய, கயல்விழி அதைப் பார்த்தபடி அசையாமல் நின்றாள். ஏதோ ஒரு ஸ்டில் போட்ட மாதிரி தெரியும் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருப்பதில் அவளுக்கு என்றைக்குமே அலுப்பு ஏற்பட்டது இல்லை. ஆனால், இன்றைக்கு அந்தக் காட்சியை அவளுடைய கண்கள் பார்த்துக்கொண்டு இருந்தாலும், மனத் திரையில் ஒட்டாமல் வழுக்கிவழுக்கி விழுந்துகொண்டு இருந்தது. உடம்புக்குள் ரத்தம் ஓடுவதற்குப் பதிலாக வெந்நீர் ஓடுவது ... |
| அப்படித்தான் 'அது' எனக்குக் கிடைத்தது! - புஷ்பா தங்கதுரை Posted: 23 Apr 2014 11:25 PM PDT - கோவிண்ட்! என்றார் மேனேஜர். - யெஸ் சார்! என்றேன். - நாலு மணிக்கு ஏர்போர்ட் போகணும். - யெஸ் சார்! - குணரத்னம் வர்றார். அடிஷனல் ஜாயின்ட் செக்ரெட்டரி! ஃபைனான்ஸ் மினிஸ்ட்ரி! பெரிய புள்ளி! - யெஸ் சார்! - நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கறார். - யெஸ் சார்! - 'ஏ' கிளாஸ் வசதி கொடுக்கணும்! வால்யூம் குறைத்து - யெஸ் சார்! என்றேன். - என்ன, சுருதி இறங்குது? - சார்! என்னைக் கொஞ்சம் பாருங்க! பார்த்தார். அரை செகண்ட் அதிர்ச்சி. - இன்னும் நீ குளிக்கலையா? - இல்லை சார்! இப்பதான் ... |
| வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன? Posted: 23 Apr 2014 10:22 PM PDT மக்களை வாக்களிக்கஉற்சாகப்படுத்த இவ்வாரான நடவடிக்கைகளை எடுக்கலாம்! 1.வாக்களிக்காமல் இருப்பது தண்டணைக்குரிய குற்றம் என சட்டம் வகுத்து வாக்களியாதோரை தண்டித்தல். 2.வாக்களிக்கும் அன்றே வாக்களிக்கும் இடத்தில் வைத்து வாக்காளர்களுக்கு கொடுப்பனவு (பணமாக)ஒன்றை வழங்குதல். 3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்) 4.வாக்களிப்பதற்கான அச்சத்தைப் போக்க பின்தங்கிய நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் செயலமர்வுகளை நடத்தி அச்சத்தைப் போக்க விளக்கமளித்தல். 5.வாக்களிக்காமல் ... |
| Posted: 23 Apr 2014 08:15 PM PDT இந்திய தேசத்தில் நீதி நெறிக் குறியீடாகவும் காந்தீயத் தத்துவத்தின் சிறப்பு நிலை அறக் கோட்பாடாகவும் விளங்கியது அந்த உருவப் பொம்மைகள். அப்பொம்மைகளைக் குழந்தைகளாலும் சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அனைத்து தரப்பு மதவாதிகளாலும் விரும்பி ஏற்று ரசிக்கபட்டது. அந்த உருவப் பொம்மைகள். இன்று எங்கும் காண்பது அரிதாகி இருக்கிறது. அது என்ன பொம்மைகள்?. பார்க்காதே பேசாதே கேட்காதே என்று தத்துவம் போதித்தது மூன்று குரங்கு பொம்மைகள். . |
| விமான பயணத்தில் மொபைல், லேப்டாப்களை இனி சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை Posted: 23 Apr 2014 06:53 PM PDT பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்-டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை. எனவே விமான பயணத்தின் போது இனி பயணிகள் தங்கள் மொபைல், லேப்டாப்களை ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் விமான பயணத்தின் போது ஈ மெயில் டைப் செய்து கொள்ள முடியும். பின்னர் தரையிறங்கிய உடன் அதை யாருக்கு வேண்டுமானாலும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
owboy padam pol irukkum. padaththin peyar THANGA NAGAM . Mudinthal udhavungalen. (Padathin peyar athuthan endru naikkiren)