Tamil News | Online Tamil News |
- தமிழகத்தை விட குஜராத் தான் வளர்ச்சி பெற்ற மாநிலம்
- தேர்தலால் மின்தேவை 13,000 மெகாவாட்டை எட்டியது
- அரசு விளம்பரத்துக்காக வரி பணத்தை வீணடிப்பதா? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
- ஓட்டுக்கு வாங்கும் நோட்டு; நாட்டுக்கு வைக்கும் வேட்டு!
- ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க., வேட்பாளர் மீது புகார்: ரூ.32 லட்சம் பணத்துடன் சிக்கினார்
- 'காலையிலேயே ஓட்டு போட வேண்டும்': கட்சியினருக்கு விஜயகாந்த் உத்தரவு
- யாருக்கு எத்தனை தொகுதிகள்? தமிழக கட்சிகள் போடும் கணிப்பு
- ஒரே நபரிடம் அதிகாரங்கள் குவிவது தவறு: பிரியங்கா
- வாரணாசியில் மோடி இன்று வேட்பு மனு தாக்கல்: வரவேற்க பா.ஜ.,வினர் விரிவான ஏற்பாடு
- பல முனை போட்டியால் தமிழக கட்சிகள் திக் திக்: இன்று ஓட்டுப்பதிவிற்கு ஏற்பாடுகள் தயார்
| தமிழகத்தை விட குஜராத் தான் வளர்ச்சி பெற்ற மாநிலம் Posted: 'குஜராத்தை விட தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது என்ற, பா.ஜ.,வின் வளர்ச்சி கோஷம் பொய்யானது. அனைத்துத் துறைகளிலும், குஜராத்தை விட, தமிழகம் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக, தமிழக வளர்ச்சியின் புள்ளி விவரங்களை வெளியிட்டார். மத்திய திட்ட கமிஷனின் புள்ளி விவரங்கள் இவை என, தான் வெளியிட்ட புள்ளி விவரங்களுக்கும், வலு சேர்த்தார். தமிழக பிரசாரத்தில் முக்கியத்துவம் பெற்ற, புள்ளிவிவர போட்டிக்கு, மோடி பதில் சொல்ல வேண்டும் என்ற, கோரிக்கைகள் எழுந்தன.10 ஆண்டுகளில்: இந்நிலையில், மோடி போட்டியிடும் குஜராத் ... |
| தேர்தலால் மின்தேவை 13,000 மெகாவாட்டை எட்டியது Posted: இன்று நடைபெறும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஓட்டுச்சாவடிகளுக்கு, நேற்று முதல் தடையில்லா மின்சாரம் வழங்கியதால், நேற்றைய தமிழக மின் தேவை, 12,980 மெகாவாட் ஆக அதிகரித்தது. எனினும், 12,270 மெகாவாட் மட்டுமே வினியோகம் செய்ததால், 710 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.இந்நிலையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஓட்டுச்சாவடிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், 60,817 ஓட்டுச்சாவடி உள்ளது. இதில், 17,684 ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.நேற்று காலை முதல், மாநிலம் முழுவதும், ஓட்டுச்சாவடிகளுக்கு ... |
| அரசு விளம்பரத்துக்காக வரி பணத்தை வீணடிப்பதா? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி Posted: புதுடில்லி : அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்கள் என்ற பெயரில், மக்களின் வரிப் பணத்தை, மத்திய, மாநில அரசுகள், வீணடிப்பதை தடுக்கும் வழிமுறைகளை உருவாக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது.தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு:மத்தியிலும், மாநிலங்களிலும், ஆளும் கட்சியாக இருப்பவர்கள், அரசியல் ஆதாயம் அடைவதற்காக, தங்களை விளம்பரப்படுத்தி கொள்கின்றனர். இதற்காக, மக்களின் வரிப் பணத்தை தவறாக பயன்படுத்தி, விளம்பரம் கொடுக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசு ... |
| ஓட்டுக்கு வாங்கும் நோட்டு; நாட்டுக்கு வைக்கும் வேட்டு! Posted: ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரிடம் ஒரு மணி நேரம், அடிமையாக இருக்க வேண்டுமென்றால், எத்தனை பேர் அதற்கு முன் வருவார்கள்? மானமுள்ள மனிதன் எவனும் அதற்கு ஒப்புக் கொள்ளப் போவதில்லை; ஆனால், வெறும் ஐநூறு ரூபாய்க்கு, ஐந்தாண்டுகளுக்கு ஒருவர்க்கு அடிமையாக இருப்பதற்கு பல லட்சம் மக்கள் தயாராகியிருக்கிறார்கள்; தேர்தலில் வாக்களிப்பதற்கு லஞ்சம் வாங்குவதைத்தான் சொல்கிறோம்.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த லோக்சபா தேர்தலில்தான் கொங்கு மண்டலத்தில், கட்டுப்பாடு இல்லாமல் பணப்பட்டுவாடா நடந்துள்ளது; கோவை, நீலகிரி, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் தொகுதிகளில், தேர்தல் ... |
| ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க., வேட்பாளர் மீது புகார்: ரூ.32 லட்சம் பணத்துடன் சிக்கினார் Posted: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. வாக்காளர்களின் ஓட்டுக்களை கவர, அரசியல் கட்சிகள் பல்வேறு முயற்சிகளை கடைசி நேரத்தில் மேற்கொண்டன. தமிழகம் முழுவதும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், நேற்று பணம் பட்டுவாடா செய்ததாக பரபரப்பாக புகார்கள் எழுந்தன.வாக்காளர்களுக்கு, 200 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாய் வரை பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற முயற்சித்து வருவதாக, ஆளுங்கட்சியான அ.தி.மு.க., மீது, தேர்தல் கமிஷனிடம், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.மாநிலம் முழுவதும் புகார் :ஸ்ரீ பெரும்புதூர் ... |
| 'காலையிலேயே ஓட்டு போட வேண்டும்': கட்சியினருக்கு விஜயகாந்த் உத்தரவு Posted: கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காலையிலேயே ஓட்டுப்போட வேண்டும் என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை வழங்கியுள்ளார்.பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க.,விற்கு திருவள்ளூர்(தனி), வடசென்னை, மத்திய சென்னை, சேலம், திருப்பூர், கரூர், நாமக்கல், மதுரை, கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம்(தனி) ஆகிய 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.பிரகாசமாகஇத்தொகுதிகளில் எட்டு தொகுதி கள் தங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், அதிலும், குறிப்பாக, திருப்பூர், சேலம், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய ... |
| யாருக்கு எத்தனை தொகுதிகள்? தமிழக கட்சிகள் போடும் கணிப்பு Posted: ஓட்டு எண்ணிக்கைக்கு, இன்னும் இருபது நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள, தமிழக கட்சிகள், தங்களுக்குள் ஒரு கணக்கு போட்டு, வெற்றிப் புள்ளிகளை கணித்து வைத்துள்ளன.பிரசாரத்திற்கு சென்ற தொகுதிகளில் கிடைத்த வரவேற்பு, கட்சியினரின் கடின உழைப்பு, கூட்டணியின் பலம், மக்கள் பிரச்னைகள் ஆகியவற்றை அலசிப் பார்த்து, இந்தந்த தொகுதிகள், தங்களுக்கு சாதகம் என, இக்கட்சிகள் ஒவ்வொன்றும் கூறுகின்றன.அ.தி.மு.க., எதிர்பார்ப்பு:அந்த வரிசையில், ஆளுங்கட்சி, அதிக வெற்றியை எதிர்பார்க்கிறது. மூன்றாண்டு ஆட்சியில் கொடுத்த இலவசங்கள், கை கொடுக்கும் என்ற ... |
| ஒரே நபரிடம் அதிகாரங்கள் குவிவது தவறு: பிரியங்கா Posted: ரேபரேலி : ''நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரங்களும் ஒரே நபரின் கைகளுக்கு செல்ல அனுமதிக்காதீர்; மக்கள் கைகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டுமானால், எங்க அம்மாவுக்கு ஓட்டுப் போடுங்கள்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, ரேபரேலி லோக்சபா தொகுதியில் நேற்று பிரசாரம் செய்தார்.'மக்களை நம்பியுள்ளோம்':உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ரேபரேலி லோக்சபா தொகுதியில், வரும் 30ல், தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் தலைவர் சோனியா போட்டியிடுகிறார். பிரசாரம் தீவிரமடைந்துள்ள ... |
| வாரணாசியில் மோடி இன்று வேட்பு மனு தாக்கல்: வரவேற்க பா.ஜ.,வினர் விரிவான ஏற்பாடு Posted: வாரணாசி : உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி லோக்சபா தொகுதியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவரை வரவேற்க, உ.பி., மாநில பா.ஜ.,வினர் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மோடியை எதிர்த்து போட்டியிடும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.பகீரத பிரயத்தனம் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவின் ஆட்சி நடக்கும் உ.பி.,யில், நாட்டிலேயே அதிகமாக, 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்குள்ள, இந்துக்களின் புனித நகரமான காசி அமைந்துள்ள வாரணாசி தொகுதியில், பா.ஜ., ... |
| பல முனை போட்டியால் தமிழக கட்சிகள் திக் திக்: இன்று ஓட்டுப்பதிவிற்கு ஏற்பாடுகள் தயார் Posted: பதினாறாவது லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு துவங்கி, மாலை, 6:00 மணி வரை நடக்கும் ஓட்டுப்பதிவுக்கு, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இதுவரை இல்லாத பல முனைப் போட்டியின் காரணமாக, ஓட்டுப்பதிவும், மக்கள் தீர்ப்பும் எப்படி இருக்குமோ என்ற, 'திக் திக்' பரபரப்பு, தமிழக கட்சிகள் மத்தியில் காணப்படுகிறது.எந்த தேர்தலிலும் இல்லாத புதிய காட்சிகள் இந்த தேர்தலில் தான் அரங்கேறின. தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்கள் - ஆம் ஆத்மி என, ஆறு அணிகள் களத்தில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 24,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |