ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழக தேர்தல் தகவல்கள்!
- வாக்களிப்பதால் எந்தப் பலனும் இல்லையா?
- அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!
- வில்லியம் சேக்ஷ்மியர் இறந்த தினம்: ஏப்.23- 1616
- ஏக்கம்
- இலக்கணக் காதல்
- அதிகாலைப்பொழுது
- தேர்வறை
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!
- கோடை கவிதைகள் {சென்ரியு }
- வாக்குப்பதிவு - 4 வகைகளில் கண்காணிக்கும் தேர்தல் கமிஷன்!
- வாக்குப்பதிவை இணையத்தில் மக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு
- விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?
- தமிழகத்தின் முதல் வாக்காளர் - தீபா!
- உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23
- தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
- வாக்களிக்க தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள 12 ஆவணங்கள்!
- ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல
- யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்
- ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?
- ஈகரை உறவுகளின் WhatsApp
- ஓட்டு போடுவது எப்படி?
- 500 மில்லியன் பயனாளர்களை தாண்டியது வாட்ஸ் அப்!
- உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!
- என் கவிதை நூல்
- ஏப்ரல் 23: உலக புத்தக தினம் - சிறப்பு பகிர்வு...
- ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் ,,தயார் செய்துள்ளார் தமிழர் கே.ஆர். ஸ்ரீதர்....
- சென்னை சூப்பர் கிங்சுக்கு டோனி ஒருவரே தலைவர்: டுபெலிசிஸ்
- என் கனவு
- ந.க.துறைவன் புதுக் கவிதைகள்
- கவிதையில் யாப்பு
- 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
- 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி
- சகுந்தலா தேவி
- பாமரர் தேவாரம்
| Posted: 23 Apr 2014 01:28 PM PDT * தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 1/2 கோடி * தமிழகத்தில் 28,224 கட்டிடங்களில் 60,818 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. * மிகப்பெரிய தொகுதி ஸ்ரீபெரும்புதூர். இங்கு 18 1/2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். * மிகச்சிறிய தொகுதி நாகப்பட்டினம். இங்கு 11.8 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். * மொத்தம் 1.19லட்சம் மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. * 2.93 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். * 844 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். * பெண் வேட்பாளர்கள் 55 பேர். * ... |
| வாக்களிப்பதால் எந்தப் பலனும் இல்லையா? Posted: 23 Apr 2014 01:25 PM PDT இன்றைய தேர்தல் அரசியல் சூழலில் 'நாட்டின் பொருளாதார வளர்ச்சி'யை எப்படி உயர்த்துவது என்பது முக்கியப் பொது விவாதப் பொருளாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது அவ்வளவு ஒன்றும் எளிய காரியம் இல்லை. வேகமான பொருளாதார வளர்ச்சியை அடையச் சரியான அரசியல், பொருளாதார நிறுவன அமைப்பு முறைகள் இருக்க வேண்டும் என்று ஒருசாராரும், கல்வி, சுகாதாரம் முக்கியம் என்று வேறு சிலரும் வாதிடலாம். சட்டத்தின்படி சரியான ஆட்சி முறை, வளர்ச்சிக்கு முக்கியம் என்பதும் அதில் குறிப்பாக 'ஜனநாயகம்' முக்கியம் என்றும் கூறுவதும் ... |
| அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா! Posted: 23 Apr 2014 01:21 PM PDT 'அங்க ஓட்டுக்கு ஆயிரம் ரூபா கொடுக்குறாங்களாம்; மலை மேல மூவாயிரம் ரூபாயாம்....!' கடந்த 3 நாட்களாக, கோவை, நீலகிரி, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் தொகுதிகளில், திரும்பிய திசையெல்லாம் இதே பேச்சாகத்தான் இருக்கிறது; புகார்களில் பல்வேறு வித்தியாசங்கள் இருந்தாலும், கொடுப்பவர்கள் வெவ்வேறாக இருந்தாலும், அத்தனை பேரும் புகார் கூறுவது, ஆளும்கட்சியின் மீதுதான். கொங்கு மண்டலம், அ.தி.மு.க.,வின் கோட்டை என்று அடிக்கடி மார் தட்டிக்கொள்ளும் அக்கட்சியினருக்கு, இந்த தேர்தலில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ... |
| வில்லியம் சேக்ஷ்மியர் இறந்த தினம்: ஏப்.23- 1616 Posted: 23 Apr 2014 12:18 PM PDT வில்லியம் சேக்சுபியர் (26 ஏப்ரல் 1564- 23 ஏப்ரல் 1616)[a] ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ... |
| Posted: 23 Apr 2014 12:16 PM PDT உன்னுள் உறவு என்னுள் சுகம் உன்நினைவு என்னுள் இரணம் உமது உருவு கண்டு உள்ளம் உறங்காது உருண்டேன் ,புரண்டேன் உயிரற்ற தலையணையும் உதறி தள்ளியது உன்னைப் போல் மென்மையாய் . உறக்கம் தொலைத்தேன் உன் உணர்வை தொலைக்காது . உமது கரம் உரச காயமானது மனம் காமமானது அகம் மருந்திட வேண்டாம் பெண்ணே ! உமது கரம் கொடு காயம் மாயமாகும் . நீரோடையாய் எனது மனம் இரு விழிகளில் சிக்கி உன்பின்னால் ஓட்டம் உமது கரம் பட்ட ஆடையை கசக்க மறுக்கிறது மனம் கைரேகை களவு போய்விடுமென்று . நீ புவிந்தெழுந்த நாள்தனில் ... |
| Posted: 23 Apr 2014 12:14 PM PDT தோட்டத்தில் மலர்ந்த மலர்களில் செங்காந்தள் -நீ கண்களில் வார்த்த காதல் கைப்படா கானல் நீராய் ............. உமது இதழ் பேசும் வார்த்தைகள் பொருளில்லா இரட்டைக் கிளவியாய் காதலின் அறிகுறிகள் அடுக்குத்தொடராய் எமக்கு அணி சேர்த்தாலும் அனுமதி மறுத்த வார்த்தைகள் உள்ளத்தினுள் வாட்டம் ஒருபொருள்பன்மொழியாய் எமது காதலை எத்தனை முறை இசைத்தாலும் ஒன்றோழிப்பொதுச் சொல்லாயாய் காதலை மறைத்து நட்பென்னும் நங்கூரமிட்டாய் போர்வன்முறை கொண்ட புறத்திணை வேண்டாம் அன்பை நாடும் ,அகிம்சை பேணும் அகத்திணை ... |
| Posted: 23 Apr 2014 12:12 PM PDT பகலவன் பட்டொளி பொன்னிற பந்தாய் குளந்தனில் பசுமை புல்நுனியில் ஆயுள் கால நீடிப்பாய் அச்சமோடு விற்றிருக்கும் பனி . ஆழ்ந்து உறங்கும் புட்கள் ஆரவாரமாய் கண்விழிப்பு . இதழ் விரி மலரை இன்பத்துடன் நாடும் வண்டு . தூக்கத்திற்கு துக்கமாய் ஆதிகாலை செவிபாயும் ஆலயமணி . இடைவளைந்து இல்ல முற்றத்தில் கோலமிடும் மங்கை இன்பச்சிரிப்போடு முதுகில் பாரமேந்தி பயிலகம் செல்லும் குழந்தை . இருளில் மின்னிய தெரு ஓரவிளக்குகள் அணைக்க ஆளின்றி மங்கிய நிலையில் . உணவளிக்கும் உயரிய பணிக்காய் உடலாடையின்றி ஏர்கலப்பை ... |
| Posted: 23 Apr 2014 12:10 PM PDT முழுவதையும் முறையாக கற்றோன் கல்வியை கசடற கற்றோன் தேர்வறை வசம் கண்ணியமாய் ,பவ்வியமாய் கைக்கடிகாரத்தில் கவனம் கொண்டு சிந்தைக் கருத்தை சீர்வரிசையாய் அடுக்குவான் . அரைகுறைக் கற்றோன் அங்கும் இங்கும் அலைப்பாய்சல் ஒரு மதிப்பெண் அறிய ஒட்டக சிவிங்கியாய் கழுத்து நீட்டம் துண்டு சீட்டு நொட்டியாடும் பறக்கும் படைக்கண்டு உள்ளத்துள் பறையடிக்கும் நெற்றியில் வியர்வை எட்டிப்பார்க்கும் கரம் பட்ட கைக்குட்டை அடிக்கடி முகம் உரசும் உடம்பில் உஷ்ணம் ஏறும் கால் தட தடக்கும் கைகள் தட்டச்சுபுரியும் ... |
| Posted: 23 Apr 2014 12:10 PM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை! Posted: 23 Apr 2014 12:07 PM PDT பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூர் குளக்கரையில் சேவல் சண்டை போட்டி நடந்தது. - அப்போது போட்டியில் கலந்து கொண்ட சேவல் ஒன்று துள்ளிக்குதித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த.வ.உ.சி.நகரைச் சேர்ந்த சசிக்குமார் மீது விழுந்தது. இதில் சேவலின் காலில் கட்டியிருந்த கத்தி சசிக்குமாரின் தொடைப்பகுதியில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. - இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சசிக்குமார் பரிதாபமாக ... |
| Posted: 23 Apr 2014 12:05 PM PDT குளிர்ச்சியாக இருக்கிறது இளநீர் * குண்டு குண்டாக உருண்டு கிடக்கிறது பாதையோரம் தர்பூசணி. * குளிர்சாதன அறையில் அமர்ந்து ஒரு மணி நேரமாய் குடிக்கிறார்கள் தேனீர். * ஹெல்மெட் வழியே வழிகிறது துளித் துளியாய் வியர்வை. * * ஒடி வந்து பஸ் ஏறிய பயணியின் மேல் எரிந்து விழுந்தார் கண்டக்டர். * விசிறிக் கொண்டே விற்கிறான் பனைஒலை விசிறி. |
| வாக்குப்பதிவு - 4 வகைகளில் கண்காணிக்கும் தேர்தல் கமிஷன்! Posted: 23 Apr 2014 12:00 PM PDT தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்களில் வரக்கூடாது. இந்த எல்லைப்பகுதிக்குள் குடித்துவிட்டு தகராறு செய்தால், குற்ற வழக்கு தொடரப்படும். வாக்குச்சாவடிகளுக்கு 23-ந்தேதி (இன்று) மாலையில் ஓட்டு எந்திரங்கள் கொண்டு செல்லப்படும். மலைப்பகுதிகளின் மேல் தூரமாக உள்ள வாக்குச்சாவடிகளுக்கு முன்னதாகவே அவை கொண்டு செல்லப்படும். வாக்குப்பதிவு அன்று ஏதாவது வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் ... |
| வாக்குப்பதிவை இணையத்தில் மக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு Posted: 23 Apr 2014 11:53 AM PDT சென்னை: தமிழகத்தில் நாளை 39 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவை இணையத்தில் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17 ஆயிரத்து 684 வாக்கு சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு இணையத்தில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை வீடியோவில் ... |
| விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி? Posted: 23 Apr 2014 11:38 AM PDT 16-வது மக்களவைத் தேர்தலில் தமிழகம் நாளைய தினம் தனது ஜனநாயக கடமையை ஆற்ற இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்களின் கள நிலவரத்தைத் தெரிந்துகொள்வோம்: பொன்.ராதாகிருஷ்ணன்: கன்னியாகுமரி தொகுதியில் இவருக்கும் காங்கிரஸ் வேட் பாளர் வசந்தகுமாருக்கும் பலமான போட்டி. பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் எனப் பிரகடனம் செய்யப் படுவதாலும், மோடி அலை வீசுவதாலும் நம்பிக்கையுடன் முன்னணியில் நிற்கிறார் பொன்னார். |
| தமிழகத்தின் முதல் வாக்காளர் - தீபா! Posted: 23 Apr 2014 11:20 AM PDT இந்தியாவின் 16–வது நாடாளுமன்றத்தை நிர்ணயிக்க போகிற தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி முதல் தொகுதி என்ற பெருமையை தக்க வைத்து உள்ளது. மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்டக்கிய திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியானது தமிழ்நாட்டின் முதல் பாராளுமன்ற தொகுதி ஆகும். இந்த திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியிலும் கும்மிடிப்பூண்டி முதல் சட்டமன்ற தொகுதி என்ற சிறப்பை பெற்று உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் முதல் வாக்காளர் ... |
| உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Posted: 23 Apr 2014 11:10 AM PDT உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995-ம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. பாரிஸ் ... |
| தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு! Posted: 23 Apr 2014 11:07 AM PDT தமிழகத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 16 ஆயிரம் காவல்துறையினரும், காவல்துறை அல்லாத 27 ஆயிரம் பேரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமுள்ள 60 ஆயிரத்து 818 வாக்குச்சாவடிகளில் 34 ஆயிரத்து 209 காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 26 ஆயிரத்து 609 பேரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதுதவிர பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 5 ஆயிரம் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான ... |
| வாக்களிக்க தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள 12 ஆவணங்கள்! Posted: 23 Apr 2014 11:04 AM PDT தேர்தலில் வாக்களிக்க அடையாளச் சான்றாக 12 வகையான ஆவணங்களை தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. இந்த ஆவணங்களின் அசல் பிரதியை எடுத்துச் சென்று வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தலாம். அந்த ஆவணங்களின் விவரங்கள்: 1. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை. 2. பாஸ்போர்ட் 3. வாகன ஓட்டுநர் உரிமம். 4. மத்திய-மாநில அரசுகள்-பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டைகள். 5. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படம் ஒட்டப்பட்ட சேமிப்புக் கணக்குப் புத்தகம். 6. வருமான ... |
| Posted: 23 Apr 2014 10:26 AM PDT போடுவோமையா ஓட்டு வேட்பாளரைப் பாத்து நேத்து குடுத்த பெரிய நோட்டை கேட்டு... நம்மக்கிட்டயிருந்து எடுத்துது நம்மக்கிட்டயே வந்து சேருது... மொகம் சுழிக்காமல் யாரு குடுத்தாலும் வாங்கிக்கடீ... கோட்டர் குடுத்தாலும் வாங்கிக்கடீ ஒண்ணுக்கு ரண்டா வித்திடலாம்… கருப்புப் பணம் கொஞ்சம் அவங்க கணக்குல குறையும்டீ… இதே பொழப்புதான் உங்களுக்கு! ஏன்டீ நீ மட்டும் கூட்டத்துக்குக் கூட்டம் போனீயே… சரி விடுங்க - ரண்டு மூனு மாசம் குடும்பத்த ஓட்டிடலாம் ஓட்டால!!! "பணம் கொடுக்கறதும் தப்பாம் வாங்கறதும் ... |
| யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள் Posted: 23 Apr 2014 10:15 AM PDT அனைத்து துறைகளிலும், மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத் முதல்வர் மோடி அல்ல; தமிழகத்தின் இந்த லேடி தான்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். வளர்ச்சி பாதையில், குஜராத்தை விட, தமிழகமே முன்னேறி செல்வதாக, சில புள்ளி விவரங்களையும், அவர் அளித்தார்.ஆனால், தமிழகத்தை விட, குஜராத்தில் தான் சிறந்த நிர்வாகம் இருப்பதாகவும், அதனை ஒவ்வொரு அரசு துறையின் செயல்பாட்டின் மூலம், இங்கு வசிப்பவர்கள் நேரடியாக உணர்ந்துள்ளதாகவும் குஜராத்தில் வசிக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, ... |
| ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Posted: 23 Apr 2014 09:02 AM PDT மக்களின் நலன் வேண்டியே தேர்தல்கள் வந்து போகின்றன. ஆனால் அது இறுதியில் தேர்தலில் நிற்கும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்குமே சார்பாக அமைந்து விடுகின்றன. பாவம் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் இவ்வாறு ஏமாந்த போதும் அடுத்த தேர்தலில் இதனை மறந்து தீவிரமடைந்து தனது கட்சிக்காகவும் தான் சார்ந்த வேட்பாளருக்காகவும் உழைக்கின்றனர். இந்நிலைக்குக் காரணணம் மனித இயல்பா? அறியாமையா? |
| Posted: 23 Apr 2014 05:32 AM PDT நாம் அனைவரும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகிறோம். ஈகரை உறவுகள் விரும்பினால் அவர்களின் வாட்ஸ் அப் எண்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்! எனது வாட்ஸ் அப் தொடர்பு எண்: [noguest] 60186644132 [/noguest] ஈகரை உறுப்பினர்கள் அல்லாதோர் உங்கள் பதிவைப் பார்க்கக் கூடாது என்றால் கீழ்கண்டவாறு உங்கள் பதிவுகளைப் பதிவிடுங்கள்! Code:[noguest] இதற்கு இடையில் உங்கள் தகவலை எழுதிப் பதிவிட்டால் ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் பதிவைப் பார்க்க முடியும்! [/noguest] அல்லது Code:[code] ... |
| Posted: 23 Apr 2014 05:13 AM PDT சென்னை : ஓட்டு போடுவது எப்படி என, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.அதன் விவரம்: *தேர்தல் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும், 'பூத் சிலிப்'பில், வேட்பாளரின் ஓட்டுச் சாவடி எண், ஓட்டு போடும் மையம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை, தேர்தல் கமிஷன், இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். *ஓட்டு போடும் மையத்திற்கு செல்லும் போது, ஏதாவது ஒரு அடையாள அட்டையையும், பூத் சிலிப்பையும் கொண்டு செல்ல மறக்கக் கூடாது. *ஓட்டுச் சாவடிகளுக்கு, மொபைல் போன் எடுத்து செல்வதை தவிர்க்க ... |
| 500 மில்லியன் பயனாளர்களை தாண்டியது வாட்ஸ் அப்! Posted: 23 Apr 2014 05:07 AM PDT புதுடெல்லி, ஏப்ரல் 23 – வாட்ஸ் அப் என்னும் செல்பேசி "அப்ளிகேஷன்" புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதன் பயனாளர்கள் இப்போது 500 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஜான் கோம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளாவது, உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். உலகம் முழுவது அரை பில்லியன் மக்கள் இப்போது வாட்ஸ் அப் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களாக பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ் அப்பின் வளர்ச்சி சிறப்பாக ... |
| உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்! Posted: 23 Apr 2014 04:40 AM PDT விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் . GT-P3100 ROM: Sungsonic™ HD |
| Posted: 23 Apr 2014 04:07 AM PDT ஈகரை உறவுகளின் அன்பில் முகிழ்த்த வாழ்த்துகளுடன் விரைவில் என் கவிதை நூல் வெளியாக உள்ளது. ![]() |
| ஏப்ரல் 23: உலக புத்தக தினம் - சிறப்பு பகிர்வு... Posted: 23 Apr 2014 03:05 AM PDT இன்றைக்கு உலக புத்தக தினம் .ஷேக்ஸ்பியரின் நினைவாக இந்நாளை அப்படி அனுசரிக்கிறோம் .புத்தகங்கள் உலக வரலாற்றை ஏகத்துக்கும் புரட்டி போட்டிருக்கின்றன . அங்கிள் டாம்ஸ் கேபின் நூல் தான் அடிமைகளின் வலிகளை அமெரிக்க உணர்ந்து தன் மனசாட்சியை மறுபரிசோதனை செய்து கொள்ளும் உள்நாட்டு போருக்கு விதையானது . காமன் சென்ஸ் நூல் தான் அமெரிக்க விடுதலைப்போரை வீறு கொண்டு எழச்செய்த காரணி . அது நாற்பத்தி எட்டு பக்க நூல் ! நோபல் பரிசு பெற்ற ஹெமிங்க்வேயின் புகழ் பெற்ற கிழவனும்,கடலும் நூல் நூறு பக்கங்களுக்குள் தான். பெண்ணியப்பார்வையை ... |
| ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் ,,தயார் செய்துள்ளார் தமிழர் கே.ஆர். ஸ்ரீதர்.... Posted: 23 Apr 2014 02:48 AM PDT தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு தயவு செய்து படித்துவிட்டு ஷேர் பண்ணவும் ..! கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.... இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்.... திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் ... |
| சென்னை சூப்பர் கிங்சுக்கு டோனி ஒருவரே தலைவர்: டுபெலிசிஸ் Posted: 23 Apr 2014 12:24 AM PDT ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்சில் மட்டுமே 4 சர்வதேச கேப்டன்கள் உள்ளனர். இந்திய அணியின் கேப்டனான மகேந்திரசிங் டோனி சென்னை சூப்பர் கிங்சின் கேப்டனாக இருக்கிறார். அணியில் மேக்குல்லம் நியூசிலாந்து அணிக்கும், டுபெலிசிஸ் தென் ஆப்பிரிக்கா அணிக்கும், பிராவோ வெஸ்ட்இண்டீஸ் அணிக்கும் கேப்டனாக இருக்கிறார்கள். பிராவோ தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் சென்னை அணிக்கு டோனி ஒருவரே தலைவர் என்று தென் ஆப்பிரிக்காவை ... |
| Posted: 22 Apr 2014 10:41 PM PDT தமிழகத்தில் பிற மொழி கலப்பின்றி செந்தமிழில் பேசக்கண்டேன் மதுக்கடைகள் அனைத்தும் மூடக்கண்டேன் நியாய விலைகடையில் பொருள்கள் எடை நிறைவாய் போடக்கண்டேன் படித்த இளைஞர் அனைவரும் அரசுப்பணியில் அமரக்கண்டேன் படித்த பாமரரும் அரசாட்சி புரியக்கண்டேன் தனியார் பள்ளிகள் குறைந்த கட்டணத்தில் நடத்தக்கண்டேன் கையூட்டு பெறா அரசு அலுவலகம் அமைதியாய் இயங்க கண்டேன் முதியோர் இல்லம் அனைத்தும் அறவே மூடக்கண்டேன் சாதியே இல்லா சமுதாயம் கண்டேன் மதமே இல்லா மாநிலம் கண்டேன் கைபேசி இல்லா மக்கள் கண்டேன் ... |
| Posted: 22 Apr 2014 08:45 PM PDT பெரும் தயக்கம்{புதுக் கவிதை} * ஊரிலிருந்து வந்தவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. நீங்க யாரென்று கேட்டதற்கு உறவினர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர்களுக்குச் சொந்த மென்று விவரமாய்ச் சொன்னார். என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டேன். தேடி வந்தச் செய்தியைச் சொன்னார். * ஊர்காரர் என்றாலும் அறிமுகமில்லாதவர்க்கு எப்படி உதவி செய்வ தென்று பெரும் தயக்கம். சரி பார்க்கலாம் என்றேன். "கொஞ்சம் பார்த்து செய்யுங்க" என்று கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார். மறு முனையிலிருந்து போன் வந்தது. "நம்ம ... |
| Posted: 22 Apr 2014 08:38 PM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Posted: 22 Apr 2014 07:01 PM PDT அருவி கவிதை இலக்கிய காலாண்டிதழ் - ஆசிரியர் - காவனூர். ந. சீனிவாசன் நன்றி – அருவி இதழின் ஆசிரியருக்கும் கவிஞர்களுக்கும் அருவியின் இதழ் எண் 20 – ஹைக்கூ சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஹைக்கூக்களில் எனக்குப் பிடித்த மிகச் சிறந்த 100 ஹைக்கூக்களை மட்டும் இப்பகுதியில் தொகுத்திருக்கிறேன். இந்த ஹைக்கூக்களைப் படித்தால் நீங்களும் நிச்சயம் சிறந்த தமிழ் ஹைக்கூ கவிஞராகலாம் என்பது என் திடமான நம்பிக்கை. நீங்களும் மரபு, புது கவிதைகளையும் ஹைக்கூக் கவிதைகளையும் அருவி – க்கு அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சலில் ... |
| 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி Posted: 22 Apr 2014 06:54 PM PDT சென்னை: "செய்வீங்களா, செய்வீங்களா" என்று நான் கேட்க மாட்டேன். "செய்வீர்களா", தயவு செய்து செய்வீர்களா" என்று வாக்காளர்களை சென்னையில் பிரசார பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டி கேட்டுக் கொண்டார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சென்னை அண்ணா நகர் எம்.எம்.டி.ஏ. காலனியில் நேற்றிரவு நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கருணாநிதி பேசியதாவது: நேற்றைக்கு எனக்கு உடல்நலமில்லை. வீட்டிலே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ... |
| Posted: 22 Apr 2014 06:50 PM PDT Shakuntala Devi சகுந்தலா தேவி அவர்கள், ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, உலக சாதனை புத்தகமாகக் கருதப்படும், "கின்னஸ் புத்தகத்தில்" இடம்பிடித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: ... |
| Posted: 22 Apr 2014 06:19 PM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
