Tamil News | Online Tamil News |
- தேசிய பூங்காக்கள் அருகே சுரங்கம் தோண்ட தடை
- ஜெகதீஷ் டைட்லருக்கு வக்காலத்து வாங்குவதா? காங்., அலுவலகம் முன் சீக்கியர்கள் போராட்டம்
- ரேஷன் கடைகளில் பண வினியோகம்?
- காங்.,- அ.தி.மு.க.,- தி.மு.க.,வை துரத்தி அடிப்பீர்களா?ஜெ., பாணியில் விஜயகாந்த் பிரசாரம்
- கூட்டணிக்குள் எழுந்தது திடீர் குழப்பம்: சரத் பவார் நடவடிக்கையால் சர்ச்சை
- பெரியாறு அணை பிரச்னையில் துரோகம்: தேனியில் ஸ்டாலின் கோபம்
- 'மோடி பிரதமரானால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு'
- பா.ஜ., கூட்டணி புதிய சாதனை படைக்கும்: வேலூரில் அத்வானி திட்டவட்டம்
- சட்டசபை தேர்தலிலும் காங்., தனித்து போட்டி: ராமநாதபுரத்தில் ராகுல் உறுதி
- நல்லெண்ண அடிப்டையில் கையெழுத்து போட்டோம்: 'மீத்தேன்' திட்டம் குறித்து கருணாநிதி விளக்கம்
- மோடி அல்ல; லேடி தான்: சென்னையில் ஜெ., ஆவேசம்
- அரசியலில் கிரிமினல்களை ஒழிக்க மோடி சூளுரை: பா.ஜ.,வினர் மீது கூட நடவடிக்கை என அறிவிப்பு
- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் விற்ற 'சரக்கு': இன்று முதல் 3 நாட்களுக்கு கடை கிடையாது
| தேசிய பூங்காக்கள் அருகே சுரங்கம் தோண்ட தடை Posted: புதுடில்லி: 'தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றை சுற்றி, 1 கி.மீ., பரப்பளவுக்குள், சுரங்கத் தொழில் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.கோவாவில், இரும்புத் தாது வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலில், முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுரங்கத் தொழில் நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. ஓராண்டுக்கும் மேலாக, இந்த தடை நீடித்தது. இதுகுறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள், பட்நாயக், நிஜார், கலிபுல்லா ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நேற்று ... |
| ஜெகதீஷ் டைட்லருக்கு வக்காலத்து வாங்குவதா? காங்., அலுவலகம் முன் சீக்கியர்கள் போராட்டம் Posted: புதுடில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு குறித்து, சர்ச்சைக்குரிய வகையில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கருத்து தெரிவித்ததை எதிர்த்து, டில்லியில் உள்ள காங்., தலைமை அலுவலகம் முன், ஏராளமான சீக்கியர்கள், நேற்று போராட்டம் நடத்தினர்.கடந்த, 1984ல், அப்போது பிரதமராக இருந்த இந்திரா, தன், சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து, டில்லியில், சீக்கியர்களுக்கு எதிராக, பெரும் கலவரம் வெடித்தது. ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை தூண்டி விட்டதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் உள்ளிட்டோர் மீது, குற்றம் ... |
| Posted: லோக்சபா தேர்தலை ஒட்டி, வீடுகளில், பணம் வினியோகம் செய்வதில் சிக்கல் உள்ளதால், ரேஷன் கடைகள் மூலம், பணம் வினியோகிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில், 33,520 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் போன்ற மற்ற உணவு பொருட்கள், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.வரும் 24ம் தேதி, தமிழகத்தில், ஒரே கட்டமாக, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம், இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.பல ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில், ஐந்து முனை போட்டி நிலவுவதால், வீடுகளில், பணம் வினியோகம் ... |
| காங்.,- அ.தி.மு.க.,- தி.மு.க.,வை துரத்தி அடிப்பீர்களா?ஜெ., பாணியில் விஜயகாந்த் பிரசாரம் Posted: திருவள்ளூர்: காங்.,- அ.தி.மு.க.,- தி.மு.க., கட்சிகளை, நாட்டை விட்டு துரத்த வேண்டும். இதை செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா? என ஜெ., பாணியில், திருவள்ளூரில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.இத்தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் யுவராஜை ஆதரித்து, அவர் பேசியதாவது:காங்., ஆட்சியில், பல ஊழல்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் மணல் கொள்ளை நடக்கிறது. தமிழகத்தை, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி, மாறி கொள்ளையடித்து வருகின்றன. அவர்களை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். மாற்றம் வேண்டுமென்றால், மாற்றி நீங்கள் ஓட்டு போடவேண்டும்.இந்த நாட்டிற்கு துரோகம் செய்யும், காங்.,- அ.தி.மு.க.,- தி.மு.க., ... |
| கூட்டணிக்குள் எழுந்தது திடீர் குழப்பம்: சரத் பவார் நடவடிக்கையால் சர்ச்சை Posted: மும்பை: மகாராஷ்டிராவில், ராகுல் பங்கேற்ற பிரசார கூட்டத்தை, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் புறக்கணித்ததால், காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மகாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசைச் சேர்ந்த பிரித்விராஜ் சவான், முதல்வராகவும், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த, அஜீத் பவார், துணை முதல்வராகவும் உள்ளனர். இரு கட்சிகளும், 15 ஆண்டுகளாக, ஒரே கூட்டணியில் உள்ளன. இந்த லோக்சபா தேர்தலிலும், இரு கட்சிகளும் இணைந்தே தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில், இங்குள்ள ரய்காட் மாவட்டத்தில், காங்., - தேசியவாத காங்., வேட்பாளர்களை ... |
| பெரியாறு அணை பிரச்னையில் துரோகம்: தேனியில் ஸ்டாலின் கோபம் Posted: தேனி : ''முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், ஜெயலலிதா எல்லா துரோகங்களையும் செய்து விட்டு, தி.மு.க., மீது பழி சுமத்துகிறார்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.தவறான தகவல்தேனியில் நடந்த பிரசார கூட்டத்தில், வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை ஆதரித்து, அவர் பேசியதாவது:தேனியில் பேசிய ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், தவறான பல தகவல்களை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம், 152 அடியில் இருந்து, 136 அடியாக குறைக்கப்பட்டது. மத்தியில் நரசிம்ம ராவ் ஆட்சியில் இருந்த போது, அவருடன் நல்லுறவு ... |
| 'மோடி பிரதமரானால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு' Posted: வாரணாசி: ''பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பிரதமர் ஆனால் தான், இந்த நாட்டின் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பர்,'' என, உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் பிரபலமாக உள்ள, 'குவாமி ஏக்தா தளம்' என்ற அரசியல் கட்சியின் தலைவரும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா முக்தார் அன்சாரியின், மூத்த சகோதரருமான அப்சல் அன்சாரி தெரிவித்துள்ளார்.முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி உட்பட பல கட்சிகளில் இருந்தவர், முக்தார் அன்சாரி. தாதாவாக வலம் வந்த அவர், சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரின் மூத்த சகோதரர் அப்சல் அன்சாரி; தன் சகோதரரின் கட்சியான குவாமி ஏக்தா தளத்தை ... |
| பா.ஜ., கூட்டணி புதிய சாதனை படைக்கும்: வேலூரில் அத்வானி திட்டவட்டம் Posted: "தமிழகத்தில், தி.மு.க., -- அ.தி.மு.க., போட்டியிடுவது என்பது மட்டும், முன் நடந்தது. இத்தேர்தலில், அடிப்படையே மாறிவிட்டது. தற்போது, பா.ஜ., -- தி.மு.க., -- அ.தி.மு.க., இடையே போட்டி என்றாகி விட்டது. வானவில்லின் வண்ணம் போல உள்ள, பா.ஜ., கூட்டணி, புதிய சாதனை படைக்கப்போகிறது," என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறினார்.வேலூர் தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், வேலூர் அடுத்த முள்ளிப்பாளையம் மாங்காய் மண்டி மைதானத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி பேசியதாவது:நாட்டின் முதல் லோக்சபா ... |
| சட்டசபை தேர்தலிலும் காங்., தனித்து போட்டி: ராமநாதபுரத்தில் ராகுல் உறுதி Posted: ராமநாதபுரம்: ''அடுத்த தமிழக சட்டசபை தேர்தலிலும், காங்., தனித்து போட்டியிடும். அப்போது, மக்கள் விரும்பும் வகையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்,'' என காங்., துணைத் தலைவர் ராகுல் ராமநாதபுரத்தில் பேசினார்.ராமநாதபுரம் காங்., வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, ராகுல் பேசியதாவது:இது, மீனவர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால், அவர்கள் பிரச்னையை முதலில் பேச விரும்புகிறேன். மும்பையில் உள்ள மீனவர்களை நான் சந்தித்த போது, 'விவசாயத்திற்கு தனி அமைச்சகம் இருப்பது போல, மீனவர்களுக்கும் தனி அமைச்சர் வேண்டும்' என கேட்டுக் கொண்டனர்; அதை காங்., தேர்தல் அறிக்கையில் ... |
| நல்லெண்ண அடிப்டையில் கையெழுத்து போட்டோம்: 'மீத்தேன்' திட்டம் குறித்து கருணாநிதி விளக்கம் Posted: சென்னை: நிலக்கரி படுகை, 'மீத்தேன்' திட்டத்திற்கான அனுமதியை, மத்திய அரசிடம், முதல்வர் ஜெயலலிதா பெற்றுள்ளாரா...' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:தஞ்சாவூரில், மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு, தி.மு.க., ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக, தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பேசி வருகிறார்.தி.மு.க., ஆட்சியில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறுகின்றனர். அந்த ஒப்பந்தம், நல்லெண்ணத்தின் அடிப்படையில், அதனால் தமிழகம் பயன்பெறும் என கருதி, கையெழுத்திடப்பட்டது. அத்திட்டத்தின் விளைவாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தமிழக ... |
| மோடி அல்ல; லேடி தான்: சென்னையில் ஜெ., ஆவேசம் Posted: சென்னை : ''அனைத்து துறைகளிலும், மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத் முதல்வர் மோடி அல்ல; தமிழகத்தின் இந்த லேடி தான்,'' என, சென்னையில் நேற்று, தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.உண்மையான வளர்ச்சி எது?தென் சென்னை, அ.தி.மு.க., வேட்பாளர், ஜெயவர்த்தனை ஆதரித்து, தி.நகரில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:ஒரு மாநிலம் வளர்ச்சி பெற்று இருக்கிறதா; அந்த வளர்ச்சி, ஏழை எளிய நடுத்தர மக்களை சென்றடைந்து இருக்கிறதா; ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சி பெற்று இருக்கின்றனரா என்பதை தெளிவுப்படுத்தும் கண்ணாடியாக விளங்குபவை, ... |
| அரசியலில் கிரிமினல்களை ஒழிக்க மோடி சூளுரை: பா.ஜ.,வினர் மீது கூட நடவடிக்கை என அறிவிப்பு Posted: ஹர்தோய்: ''நான் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் வேலையாக, எம்.பி.,க்கள் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன என்பதை கண்டறிந்து, அந்த வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க, சுப்ரீம் கோர்ட்டை கேட்டுக் கொள்வேன். பா.ஜ.,வாக இருந்தாலும், பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும், விட மாட்டேன்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறினார்.தீவிர பிரசாரம்இம்மாதம் 7ல் துவங்கி, அடுத்த மாதம் 12 வரை நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்காக, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, ... |
| தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் விற்ற 'சரக்கு': இன்று முதல் 3 நாட்களுக்கு கடை கிடையாது Posted: தேர்தலையொட்டி, 'டாஸ்மாக்' கடைகளுக்கு, இன்று முதல், மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று தமிழகம் முழுவதும், 100 கோடி ரூபாய் அளவுக்கு, மதுபானங்கள் விற்பனையாகின.டாஸ்மாக் கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.தேர்தலை ஒட்டி, இன்று முதல், நாளை மறுதினம் வரை, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, நேற்று டாஸ்மாக் கடைகளில், 'குடி'மகன்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 100 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபானங்கள் விற்பனையாகின. டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு நாள் விடுமுறைக்கு, 100, 120 கோடி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 22,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |