Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆட்டோவில் கடத்தி கழுத்து அறுக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண்ணின் கண்ணீர் கதை

Posted: 21 Apr 2014 02:16 PM PDT

சென்னையை சேர்ந்த பெண்ணை ஆட்டோவில் கடத்தி கொலை செய்ய முயன்ற கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை கண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மீஞ்சூர் அருகே உள்ள எண்ணூர் துறைமுகம் அருகே முட்புதர்கள் நிறைந்த பகுதியில் ஒரு பெண்ணை 4 பேர் கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை கண்டதும் அந்த பெண்ணை விட்டு விட்டு 4 பேரும் ஆட்டோவில் ஏறிச்சென்று விட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், கழுத்து அறுக்கப்பட்ட ...

ஆல்கஹால் பவுடர்: இனி குடிக்க வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்

Posted: 21 Apr 2014 02:11 PM PDT

திரவமாக மட்டுமன்றி, உணவிலும் கலந்து சாப்பிடக்கூடிய ஆல்கஹால் பவுடர் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட உள்ளது. மதுபானங்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இதுவரை அவை திரவ நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இனி அது பவுடர் ஆகவும் கிடைக்கவுள்ளது. 'பால்கஹால்' என்று பெயரிப்பட்டுள்ள இந்த ஆல்கஹாலை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டுமுதல் விற்பனையைத் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆல்கஹால் பவுடர் ரூ.600, ரூ.900, ...

வேகமாக பரவும் மர்ம நோய் - MERS - Middle East respiratory syndrome

Posted: 21 Apr 2014 02:06 PM PDT

சவுதி அரேபியா மற்றும் யுனைடெட் அராப் எமிரேட்ஸ் பகுதிகளில் 'மெர்ஸ்' என்னும் தொற்றுக்கு இதுவரை இரண்டு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 20 பேர் பாதிப்படைதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளில் இந்த நோய் முதலில் காணப்பட்டதால் இதற்கு மெர்ஸ் (MERS - Middle East respiratory syndrome ) என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கானவர்கள் பலியாக காரணமாக இருந்த 'சார்ஸ்' கிருமியை விட ஆபத்தானதாக கருதப்படுகிறது. ...

கடும் வறட்சி: தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள்

Posted: 21 Apr 2014 02:00 PM PDT

ஈரோடு வன மண்டலத்தில் உள்ள வனப்பகுதியில் மழையில்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கிறது. ஈரோடு வனமண்டலத்திற்கு உட்பட்டது அந்தியூர், பர்கூர், கடம்பூர், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி வனப்பகுதி. இதில் சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் பகுதி புலிகள் காப்பகமாக திகழ்கிறது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கழுதைபுலி, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகிறது.   இந்த வனப்பகுதியில் பருவமழை ...

அறுந்துபோன காதை ஒட்டவைத்த அட்டைபூச்சிகள்

Posted: 21 Apr 2014 01:55 PM PDT

அமெரிக்காவில் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் அறுந்த காதை ஒட்டவைப்பதற்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அட்டைபூச்சிகளும் பங்கேற்றன. அமெரிக்காவில் ரோத்தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் காது நாய்கடித்ததால் முற்றிலும் அறுந்தது. எனவே, அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்டிக்சர்ஜரி முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவைசிகிச்சை செய்தபின்னர், தையல் போட்ட பகுதிக்கு ரத்தஓட்டம் செல்லவில்லை. எனவே, அங்கு மெல்லிய ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது. ...

விளம்பரங்களில் விஜய் முகம் மறைப்பு - தேர்தல் கமிஷன் கறார்

Posted: 21 Apr 2014 01:51 PM PDT

விளம்பரங்களில் உள்ள விஜய்யின் முகத்தை மறைக்கும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதால் கோவை மாநகரில் வைக்கப்பட்டிருந்த நகைக்கடை ஒன்றின் அனைத்து விளம்பரப்பலகைகளிலும் விஜய்யின் முகம் மட்டும் மறைக்கப்பட்டது. தேர்தல் கமிஷனின் பல நடவடிக்கைகள் சபாஷ் போட வைக்கின்றன. அதேநேரம் சில நடவடிக்கைகளைப் பார்த்தால் தேவையா இதெல்லாம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. விஜய் கோவையில் நரேந்திர மோடியை சந்தித்தைத் தொடர்ந்து, விஜய்யின் பாஜக ஆதரவு வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய வந்தது. அதன் காரணமாக விஜய் இடம்பெறும் விளம்பரப்பலகையில் ...

தாய்ப்பால் கொடுக்கும் அன்னையருக்கு..

Posted: 21 Apr 2014 01:48 PM PDT

உலகிலேயே குழந்தைகளுக்கு ஏற்ற, சத்தான, கலப்படம் இல்லாத சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால் தான். அதை புகட்டும் அன்னையர், தங்களை, சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து வகையான உயிர் சத்துக்களும் உள்ளன. தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர், சத்தான உணவுகளை சாப்பிடுவதுடன், அதிகப் புரத உணவுகள், பயறு வகைகள், பால், முட்டை, ...

உலகச் செய்திகள்!

Posted: 21 Apr 2014 01:42 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

இருட்டில் மாணவி பலாத்காரம்: குற்றவாளியை கண்டுபிடிக்க 500 பேருக்கு மரபணு சோதனை!

Posted: 21 Apr 2014 01:35 PM PDT

பாரிஸ்: இருட்டில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதால் குற்றவாளியை கண்டுபிடிக்க மாணவர்கள் உள்பட 500 பேருக்கு மரபணு சோதனை நடத்தப்படுகிறது. பிரான்சின் முக்கிய நகரான லா ரோசில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவி, பள்ளிக் கழிவறையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். கழிவறையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால் பலாத்காரம் செய்தவரை அந்த மாணவியால் அடையாளம் காணமுடியவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவி மற்றும் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். ...

ஹார்ட் ப்ளீட் வைரஸ் எச்சரிக்கை!

Posted: 21 Apr 2014 01:30 PM PDT

இந்திய இணைய வெளியில், ஹார்ட் ப்ளீட் (Heartbleed) என்னும் மோசமான வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, இணையப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இந்திய வல்லுநர்கள் Computer Emergency Response Team of India (CERTIn) எச்சரித்துள்ளனர். இது உலக அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பல கோடிக்கான பயனாளர்களின் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண்கள் மற்றும் பல தனிநபர் தகவல்களைத் திருடி, குறிப்பிட்டவர்களுக்கு அனுப்புகிறது. இணையத்தில் தகவல்கள் அனுப்பப்படுகையில், அது சுருக்கப்பட்டு அனுப்பப்பட்டு, பின்னர் ...

டாஸ்மாக் மதுபான விற்பனை ஒரே நாளில் ரூ.150 கோடி

Posted: 21 Apr 2014 01:18 PM PDT

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கியுள்ளனர். இதனால் நேற்று ஒரேநாளில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ. 150 கோடியை எட்டியது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குபதிவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக மதுபான கடைகளுக்கும், பார்களுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் களத்தில் உள்ள அரசியல் ...

இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு

Posted: 21 Apr 2014 01:03 PM PDT

சென்னை: இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; தமிழகத்தின் இந்த லேடி என தென்சென்னை அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். தென் சென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெ., பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அ.தி.மு.க., வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பொய்ப்பிரசாரம் செய்கிறது. காங்கிரசுக்கு ஆதரவான போக்கை தி.மு.க., கொண்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க., தமிழகத்துக்காக ...

மான் கராத்தே படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் மீது புகார்

Posted: 21 Apr 2014 01:00 PM PDT

மான் கராத்தே படம் தொடர்பாக, நடிகர் சிவகார்த்திகேயன் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மான் கராத்தே படம் சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:– நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில், மாநில அளவிலான போட்டிகளிலும் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் பல பரிசுகளை பெற்றுள்ளேன். தற்போது குத்துச்சண்டை பயிற்சி ...

ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர்: ரோட்டில் வீசிய கொடூரம்

Posted: 21 Apr 2014 12:00 PM PDT

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் ஓடும் பேருந்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் சிங்குரவ்லி மாவட்டத்தில் மாவட்ட தலைநகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நல்கதானி கிராமத்தில் ரோட்டோரம் ரத்தம் காயங்களுடன் கிடந்த 14 வயது சிறுமியை கிராமத்தை சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கபட்டது பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. பதை பதைக்க வைக்கும் இந்த ...

"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!

Posted: 21 Apr 2014 11:58 AM PDT

பாவ்நகர்: குஜராத் மாநிலத்தில் பாவ்நகரில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வீட்டை முஸ்லிம்கள் வாங்க விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் தொகாடியா தடை விதித்துள்ளதுடன் முஸ்லிம்கள் வீட்டை காலி செய்யவும் கெடு விதித்திருப்பதாக வெளியான செய்திகளால் அங்கு பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகானி சர்க்கிள் என்ற பகுதியில் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார். ஆனால் முஸ்லிம்கள் இப்படி சொத்துகள் வாங்குவதை ஹிந்து தீவிரவாத அமைப்புகளான ராம் தர்பார்ஸ், ...

என் கனவு

Posted: 21 Apr 2014 11:31 AM PDT

தமிழகத்தில் பிற மொழி கலப்பின்றி செந்தமிழில் பேசக்கண்டேன் மதுக்கடைகள் அனைத்தும் மூடக்கண்டேன் நியாய விலைகடையில் பொருள்கள் எடை நிறைவாய் போடக்கண்டேன் படித்த இளைஞர் அனைவரும் அரசுப்பணியில் அமரக்கண்டேன் படித்த பாமரரும் அரசாட்சி புரியக்கண்டேன் தனியார் பள்ளிகள் குறைந்த கட்டணத்தில் நடத்தக்கண்டேன் கையூட்டு பெறா அரசு அலுவலகம் அமைதியாய் இயங்க கண்டேன் முதியோர் இல்லம் அனைத்தும் அறவே மூடக்கண்டேன் சாதியே இல்லா சமுதாயம் கண்டேன் மதமே இல்லா மாநிலம் கண்டேன் கைபேசி இல்லா மக்கள் கண்டேன் ...

ஜனநாயக வியாபாரி !

Posted: 21 Apr 2014 11:10 AM PDT

மன்னிக்கணும் நண்பர்களே! எல்லோரும் இதை பார்க்கணும் என்றுதான் இப்படி போட்டேன் .......................இது ரொம்ப அருமையாக இருந்ததால், தனி பதிவாக போட்டேன் தேர்தல் நேரத்தில் பல அரசியல்வாதிகள் ஒட்டு எனும் ஜனநாயகத்தையே பணநாயகத்திற்கு விலை பேசிவரும் நேரத்தில் சென்னை அயனாவரம் பகுதி கோழி வியாபாரி ஒருவர் ஒட்டுப்போட்டவர்கள் அதற்கான அடையாள மையை காண்பித்து அன்றைய தினம் கிலோவிற்கு இருபது ரூபாய் தள்ளுபடி செய்து விளம்பரம் செய்துள்ளார்.

ஒரு ஜனநாயக கடமை ........ அதை தவறாது நிறைவேற்றுங்கள் !

Posted: 21 Apr 2014 09:01 AM PDT

ஒரு ஜனநாயக கடமை ........................அதை தவறாது நிறைவேற்றுங்கள் ! நான் இங்கே போட்டு விட்டேன் நீங்களும் தவறாமல் போடுங்கள் நண்பர்களே !          இது சென்னை போக்குவரத்து போலீசாரால் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டில் வழக்கமாக கார் சீட் பெல்டை அணியவும்,ஹெல்மெட் போடவும் என்பது போன்ற வாசகங்கள்தான் இடம்பெறும் இப்போது தேர்தல் தேதியை நினைவு படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.எல்லாம் ஒரு ஜனநாயக கடமைதான்

தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

Posted: 21 Apr 2014 08:31 AM PDT

தொப்பையை குறைக்கும் வொர்க் அவுட்ஸ் 'டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில், எல்லாமே கைக்கு எட்டும் தூரத்தில் கிடைத்துவிடுவதால், வியர்வை சிந்தும் உடல் உழைப்பு குறைவாகிவருகிறது. விளைவு உடல் பருமன், தொப்பை. உரிய பயிற்சிகளும், ஒழுங்கான உணவுப் பழக்கமும் இருந்தால் தொப்பையை முழுமையாகக் குறைக்க முடியும். வயிற்றை உள்ளிழுத்துச் செய்யக்கூடிய எளிய பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது, தொப்பை வயிறும் ஒட்டிப்போகும்' என்கிறார் 'பிங்க் ஃபிட்னெஸ் சென்டர்' உடற்பயிற்சியாளர் செண்பகாதேவி. அப்ஸ் கர்ல் (Abs curl) தரையில் ...

சுகப்பிரசவம் சாத்தியமே!

Posted: 21 Apr 2014 07:30 AM PDT

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை, கூடியமட்டும் சிசேரியன் மூலம் பிள்ளை பெறும் நிலைமையைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான். மொத்த குழந்தைப் பிறப்பில் 10% முதல் 15% க்குமேல் சிசேரியன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடாது என்றுதான் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால் இந்தியாவில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை 24% ஆக இருக்கிறது. இதற்கு காரணம் பெண்கள் வலியில்லாமல் குழந்தை பெறவும், குழந்தையின் ஜாதகம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் சிசேரியன் செய்து கொள்ளவும் ...

ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்!

Posted: 21 Apr 2014 07:25 AM PDT

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 16ஆவது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உற்சாகமாக வரிசையில் நின்று வாக்களிக்கும் காட்சி மகிழ்ச்சியளிக்கிறது. அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப்போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜனநாயகத்திற்கான விழிப்புணர்வும் நம்முடைய நாட்டில் ஏற்பட்டது. இன்றைய சூழலில் அரசியல் என்பது முதல் போட்டு கொள்ளை லாபம் பார்க்கும் ஒரு வியாபாரம் போலவே மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். மகாத்மாகாந்தி, ...

கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!

Posted: 21 Apr 2014 06:42 AM PDT

கண்ணுதற்கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள் இருவர் . இருவரில் ஒருவர் திருமால் மற்றொருவர் திண்ணன் எனும் கண்ணப்பர் திருமால் சலந்தரனைக் கொன்ற சக்கரப் படையை பெறும்பொருட்டு திருவீழிமிழலை சென்று நீராடி திருநீறும் கண்டிகையும் பூண்டு ஆயிரம் மலர்களால் நாள்தோறும் ஆயிரம் நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்து அன்புடன் வழிபட்டு வந்தார் அவருடைய அன்பை உலகுக்கு எடுத்துக் காட்டுமாறு எண்ணிய சிவபெருமான் ஒருநாள் திருமால் ஆயிரம் மலர் எடுத்து அர்ச்சித்து வரும் போது ஒரு மலர் குறையுமாறு செய்து விட்டார் உடனே திருமால் மலரைப்பிய்த்து ...

ஊர் செழிக்க, செய்யவேண்டிய தொண்டுகள்!

Posted: 21 Apr 2014 06:19 AM PDT

சிவத்தொண்டு என நம் சான்றோர்கள் சிலவற்றை வகுத்து வைத்துள்ளார்கள் 1. இறை அடியார்களாகிய நாயன்மார் குரு பூசை நடத்துவது 2. ஆலய உழவாரப்பணி செய்வது 3. ஆலய வழிபாட்டுக்கு மலர் கொடுப்பது தொடுப்பது ஆலய நந்தவனம் பராமரிப்பு 4. திருமுறைகளை ஒதுவது அவற்றை பயிற்றுவிப்பது 5. பெரியபுராணத்தை மக்களிடம் சேர்த்து அடியார்களின் பெருமைகளை கூறுதல் 6. ஐந்தெழுத்தின் மகத்துவம் பற்றிக் கூறி செபிக்க சொல்வது 7. தீப ஒளி இல்லாமல் இருக்கும் ஆலயங்களில் விளக்கேற்றுவது , அடியார்களை அப்பணிக்கு தூண்டுவது ...

நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை!

Posted: 21 Apr 2014 06:04 AM PDT

நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை! நம் வீட்டுக் கொல்லையிலும் சுற்றுப்புறத்திலும் கிடைக்கும், எளிய இலைகளை வைத்தே பல நோய்களைக் குணமாக்கும் முறைகளை நம் முன்னோர்கள் தெரிந்துவைத்திருந்தனர். அப்படி நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சில மூலிகை இலைகள், அதன் மருத்துவக் குணங்கள், பயன்கள் பற்றி சென்னை சித்த மருத்துவர் செல்வசண்முகம் விளக்கமாகக் கூறினார். மா, வேப்பிலை, வெற்றிலை, துளசி ஆகியவற்றின் பலன்களைச் சொன்ன டாக்டர், 'இவற்றை ஆரோக்கியமானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்துவரின் ...

தாண்டக வேந்தரின் தனித்த கொடை!

Posted: 21 Apr 2014 06:02 AM PDT

பக்தி இயக்கத் தோற்றமானது அக்கால மக்கட் சமூகத்தின் வாழ்நிலையில் மட்டுமன்றி இலக்கிய வகைமைகளுக்குள்ளும் பல புது மாற்றங்களை ஏற்படுத்தியது. அப்பக்தி இயக்கத்தின் தோற்றத்திற்கும் பரவலுக்கும் இசையைத் துணையாகக்கொண்டு பல்வேறு அருள்மொழிகளைப் பதிகங்களாகப் பாடியவர்கள் தேவார ஆசிரியர்கள். அவர்களுள் ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் யாப்பில் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அம்முயற்சிகள் யாவும் தமிழுக்கு அளிக்கப்பட்ட யாப்புக் கொடைகளாக உள்ளன. திருநாவுக்கரசரைப் பொறுத்தவரையில் அவர் தாண்டக வேந்தர் என்றும், ...

eegarai yil thamiz thattachu vasathi

Posted: 21 Apr 2014 03:36 AM PDT

eegarayin puthya pathivugal thattachu seiya " Branah virtual Tamil key board payanpaduthum vasathiyai erpaduthinaal migavum payanai enpondroar peruvaargal avanam seiveergalaa?

கோடை கவிதைகள் {சென்ரியு }

Posted: 21 Apr 2014 02:30 AM PDT

குளிர்ச்சியாக இருக்கிறது இளநீர் * குண்டு குண்டாக உருண்டு கிடக்கிறது பாதையோரம் தர்பூசணி. * குளிர்சாதன அறையில் அமர்ந்து ஒரு மணி நேரமாய் குடிக்கிறார்கள் தேனீர். * ஹெல்மெட் வழியே வழிகிறது துளித் துளியாய் வியர்வை. * * ஒடி வந்து பஸ் ஏறிய பயணியின் மேல் எரிந்து விழுந்தார் கண்டக்டர். * விசிறிக் கொண்டே விற்கிறான் பனைஒலை விசிறி.

சொல் புதிது தேடுவோம் வாருங்கள்...

Posted: 21 Apr 2014 02:20 AM PDT

நமக்கு எப்போதும் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. எல்லோரிடமும் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் யாரிடமாவது சொல்லாமல் இருக்க முடிவதில்லை. தாய் மொழியில் சொல்லுவதில் தனிச் சுகம் உண்டு. ""காணி நிலம் வேண்டும்'' என்று கேட்ட பாரதியார், ""தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்'' என்றும் சொல்லி இருக்கிறார். சொல் வேண்டும்... வேறொரு சொல்லால் வீழ்த்தமுடியாத சொல் வேண்டும். சொல் சண்டை போடும், வெற்றி பெறும். "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து'' என்ற வள்ளுவருக்குக் ...

இலக்கணக் காதல்

Posted: 21 Apr 2014 02:19 AM PDT

தோட்டத்தில் மலர்ந்த மலர்களில் செங்காந்தள் -நீ கண்களில் வார்த்த காதல் கைப்படா கானல் நீராய் ............. உமது இதழ் பேசும் வார்த்தைகள் பொருளில்லா இரட்டைக் கிளவியாய் காதலின் அறிகுறிகள் அடுக்குத்தொடராய் எமக்கு அணி சேர்த்தாலும் அனுமதி மறுத்த வார்த்தைகள் உள்ளத்தினுள் வாட்டம் ஒருபொருள்பன்மொழியாய் எமது காதலை எத்தனை முறை இசைத்தாலும் ஒன்றோழிப்பொதுச் சொல்லாயாய் காதலை மறைத்து நட்பென்னும் நங்கூரமிட்டாய் போர்வன்முறை கொண்ட புறத்திணை வேண்டாம் அன்பை நாடும் ,அகிம்சை பேணும் அகத்திணை ...

சிவலிங்கத்துக்குப் பதிலாகத் தூணை வணங்குகிறார்கள்!

Posted: 21 Apr 2014 12:17 AM PDT

இறைவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்பது பழமொழி. ஆனால், உண்மையிலேயே இறைவன் தூணில் உறைந்துள்ள அதிசய ஆலயம் மலை மாவட்டமான நீலகிரியில் உள்ளது. சிவாலயம் என்றால், அங்கு வழிபாட்டுக்குச் சிவலிங்கம் இருக்கும். ஆனால், நாட்டிலேயே நீலகிரியிலுள்ள இந்த சிவாலயத்தில் மட்டும்தான் சிவலிங்கத்துக்குப் பதிலாக தூணை வணங்குகின்றனர். அதுவும், இந்தத் தூணை நேருக்கு நேர் பார்க்கக் கூடாது. ஓரத்தில் நின்றே வணங்க வேண்டும். வருடத்தில் பங்குனி மாதம் 23ஆம் தேதியன்று ஒருநாள் மட்டும் இரவு நேரத்தில் சுமார் ஒரு ...

புதிய தமிழ் நூல்களுக்குப் பரிசு!

Posted: 21 Apr 2014 12:14 AM PDT

மணிமேகலை மன்றம்: புதிய தமிழ் நூல்களுக்குப் பரிசு ராஜபாளையம் மணிமேகலை மன்றம் சார்பில் புதிய தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது. சிறுகதை, நாவல், கவிதை (மரபு-புது) சிறுவர் இலக்கியம், இலக்கிய ஆய்வு, மொழியாக்கம், அறிவியல் உள்ளிட்ட தலைப்புகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த முதல் பதிப்பு நூல்கள் மூன்று படிகள் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ரூ.5000 பரிசாக வழங்கப்படும். படைப்பாளிகள் சுருக்க வாழ்க்கை குறிப்பு, முகவரி, கைபேசி எண், தன் முகவரியிட்ட இரண்டு அஞ்சல் அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதிக்குள் ...

வேலன்:-மெக்கானிக்கல் கால்குலெட்டர்.

Posted: 20 Apr 2014 06:53 PM PDT

மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து பிரிவினருக்கும் தேவையான கால்குலேட்டராக இந்த மெக்கானிக்கல் கால்குலேட்டர் உள்ளது. 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதன் மேல்புறம் உள்ள டேப்பில் File.Edit.Machning.Precision.Math.Conversions.Views .Tools என நிறைய வசதிகளை உள்ளடக்கிய டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.இதில் உள்ள மெஷினிங் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஒரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™