Tamil News | Online Tamil News |
- தமிழகத்தில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது : அத்வானி, ராகுல் இன்று வருகை
- எகிறும் ஓட்டுப்பதிவு; கலங்கும் தமிழக கட்சிகள்
- நாட்டை கெடுக்கும் அ.தி.மு.க.,- - தி.மு.க., விஜயகாந்த் பகிரங்க குற்றச்சாட்டு
- 'ராகுல் தோற்றால் நாட்டுக்கு நல்லது': அமேதியில் கெஜ்ரிவால் ஆவேசம்
- அழகிரியின் புகாருக்கு கருணாநிதி பதில் கூறுவாரா? ஜெ., கேள்வி
- மக்களை மறந்தவர்களை புறக்கணிக்க தேர்தலை பயன்படுத்துங்கள்: கருணாநிதி
- ஓட்டுக்கு 3000 ரூபாய் அ.தி.மு.க.,கொடுப்பதாக ஸ்டாலின் புகார் : ஓட்டுவேட்டையில் கரன்சிக்கு முக்கியத்துவம்
- அன்று '2 ஜி' ; இன்று 'ஜீஜாஜி' : சத்தீஸ்கரில் மோடி விளாசல்
- மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி களைகட்டுகிறது: பிரசாரத்துக்கு 1 லட்சம் பேர் குவிந்தனர்
- திட்டங்களை கூறி அ.தி.மு.க., - தி.மு.க., தேர்தல் பிரசாரம் : பணப் பட்டுவாடா பார்முலா இத்தடவை பலிக்குமா?
- அணுசக்தி காப்பீடு அமைப்பு : மத்திய அரசு புதிய திட்டம்
- எல்லை மாநிலங்களில் உஷார்: படைகளுக்கு உள்துறை எச்சரிக்கை
| தமிழகத்தில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது : அத்வானி, ராகுல் இன்று வருகை Posted: சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தேர்தல் பிரசாரம் நாளை (22ம் தேதி) மாலை, 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, வேட்பாளர்கள், கடைசி கட்ட பிரசாரத்தில், தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதி களுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும், வரும் 24ம் தேதி, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில், 55 பெண்கள், ஒரு திருநங்கை, 789 ஆண்கள் என, மொத்தம், 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆலந்தூர் சட்டசபை தொகுதியில், இரண்டு பெண்கள் உட்பட, 14 பேர் களத்தில் உள்ளனர். ... |
| எகிறும் ஓட்டுப்பதிவு; கலங்கும் தமிழக கட்சிகள் Posted: லோக்சபா தேர்தலில், இதுவரை நடந்த ஐந்து கட்டத் தேர்தலில், சராசரியாக, 68 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இதன் எதிரொலி, ஆறாம் கட்டமாக தேர்தல் நடக்கும், தமிழகத்திலும் இருக்கும். குறிப்பாக, பலமுனை போட்டி நிலவுவதால், ஓட்டு சதவீதம் இதுவரை நடந்த தேர்தல்களை விட, கூடுதலாக இருக்கும் என, கணிக்கப்படுகிறது.நக்சல்களின் மிரட்டல்நாட்டில் உள்ள, 543 லோக்சபா தொகுதிகளுக்கு, ஒன்பது கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு, ஏப்ரல் 7ம் தேதி துவங்கியது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்துள்ளன. யூனியன் பிரதேசங்கள், கேரளா, அரியானா, டில்லி, ஒடிசா, ... |
| நாட்டை கெடுக்கும் அ.தி.மு.க.,- - தி.மு.க., விஜயகாந்த் பகிரங்க குற்றச்சாட்டு Posted: சென்னை : ''அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் கமிஷன் வாங்கிக்கொண்டு நாட்டை கெடுத்து வருகின்றன. இவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.மத்திய சென்னை வேட்பாளர் ரவீந்திரனை ஆதரித்து அவர் பேசியதாவது:சாலைகள் சேதமடைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அமைச்சர்களின் உறவினர்கள், 25 முதல், 30 சதவீதம் கமிஷன் வாங்கிக் கொள்வதால், சாலைகள் தரமில்லாமல் குண்டும், குழியுமாக உள்ளன. இது தெரிந்து தான், ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் பறக்கிறாரா என்று தெரியவில்லை. சாலையில் பயணித்தால் அவருக்கு ... |
| 'ராகுல் தோற்றால் நாட்டுக்கு நல்லது': அமேதியில் கெஜ்ரிவால் ஆவேசம் Posted: அமேதி : ''காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை தோற்கடியுங்கள்; வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். அப்போது தான், நாட்டுக்கு நல்ல வழி பிறக்கும்,'' என, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாக பேசினார்.மூன்றாவது முறையாக போட்டி:உ.பி., மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அமேதி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில், 'டிவி' நடிகை ஸ்மிருதி இரானியும், ஆம் ஆத்மி சார்பில், அந்த கட்சியின் முக்கிய நிர்வாகியான ... |
| அழகிரியின் புகாருக்கு கருணாநிதி பதில் கூறுவாரா? ஜெ., கேள்வி Posted: சென்னை : ''சேது சமுத்திர திட்டம், கருணாநிதி குடும்பத்திற்கு, அட்சய பாத்திரம். 'இத்திட்டத்தில், என்னென்ன தவறுகள் நடந்துள்ளன; தங்க நாற்கர சாலை திட்டத்தின் மூலம், தஞ்சை தி.மு.க., வேட்பாளர் எவ்வளவு பணத்தை கொள்ளை அடித்தார் என்பதும், தனக்கு தெரியும்' என, அழகிரி சமீபத்தில் பேசி உள்ளார். இதற்கு என்ன பதில் என்பதை, நாட்டு மக்களுக்கு, கருணாநிதி தெரியப்படுத்த வேண்டும்,'' என, சென்னை பிரசாரத்தில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.வட சென்னை, அ.தி.மு.க., வேட்பாளர் வெங்கடேஷ்பாபுவை ஆதரித்து, நேற்று, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:.தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில், 2 ... |
| மக்களை மறந்தவர்களை புறக்கணிக்க தேர்தலை பயன்படுத்துங்கள்: கருணாநிதி Posted: சென்னை: ''வெற்றி பெற்று, அமைச்சர்களாகி மக்களை மறந்தவர்களை புறக்கணிக்க, இந்த தேர்தல் வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.திருவள்ளூர் வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:இந்த கூட்டத்திற்கு வர முடியாத அளவில் உடல் நலிவுற்ற நிலையிலும், என்னை இங்கு அழைத்து வந்துள்ளனர். நான் நலிவுற்றதைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாடு இப்போது நலிவுற்றுள்ளது. நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும். மேலும் மூன்று ஆண்டுக்கு முன் நான் செய்து கொண்ட அறுவை சிகிச்சையின் காரணமாக என்னால் எழுந்து ... |
| Posted: தமிழகத்தில் தேர்தலுக்கு, மூன்று நாட்களே உள்ள நிலையில், மக்களின் ஓட்டுக்களை கைப்பற்ற, பணம், பரிசுப் பொருட்களை கட்சிகள் போட்டி போட்டு வழங்குவதாக தகவல்கள் வௌ?யாகியுள்ளன. இதை மெய்ப்பிக்கும் வகையில், 'ஓட்டுக்கு, 3000 ரூபாய் தர அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அதிர்ச்சி தகவலை வெளுஇயிட்டுள்ளார்.திருச்சி, துறையூரில், தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பேசிய, ஸ்டாலின், ''ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது; மக்களை விலைக்கு வாங்க முடிவு செய்து, ஓட்டுக்கு, 3,000 ரூபாய் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளார். பரிசுப் பொருளாக, காமாட்சி விளக்கு ... |
| அன்று '2 ஜி' ; இன்று 'ஜீஜாஜி' : சத்தீஸ்கரில் மோடி விளாசல் Posted: சர்குஜா : சத்தீஸ்கரில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவையும், மகன் ராகுலையும் கடுமையாக தாக்கிப் பேசினார். ''இதுவரை நீங்கள் '2 ஜி' ஊழல் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்; தற்போது உங்களுக்கு 'ஜீஜாஜி' ஊழலைப் பற்றி சொல்கிறேன் கேளுங்கள்,'' என்றார்.சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜாவில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது: நீங்கள் இதுவரை, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் 'மெகா' ஊழலான, '2 ஜி' யைப் பற்றி கேள்விப்படிருப்பீர்கள். நான் உங்களுக்கு, 'ஜீஜாஜி'யைப் பற்றி ... |
| மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி களைகட்டுகிறது: பிரசாரத்துக்கு 1 லட்சம் பேர் குவிந்தனர் Posted: வாரணாசி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதி, திருவிழா கோலம் பூண்டுள்ளது. பிரசாரத்துக்காக, வெளி மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சம் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.வாரணாசி லோக்சபா தொகுதி, இந்த முறை நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி களம் இறங்கியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி சார்பில், அந்த கட்சி தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார்.வேட்பு மனு தாக்கல்:காங்கிரஸ் கட்சி சார்பில், உள்ளூர் எம்.எல்.ஏ., ... |
| Posted: அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், தங்கள் ஆட்சிக் காலத்தில் செய்த திட்டங்களை எடுத்துக் கூறி, மக்கள் மத்தியில் ஆதரவு தேடும் புதிய சூழ்நிலை, இந்த தேர்தல் களத்தில் காணப்படுகிறது. வழக்கமான பணப் பட்டுவாடா 'பார்முலா'வும், ஆங்காங்கே அரங்கேறத் துவங்கி இருப்பதாக, தலைவர்களின் பிரசாரப் பேச்சில் இருந்து தெரியவந்து உள்ளது. ஆனாலும், தேசிய அளவில் திட்டங்களை யும், சாதனைகளையும் யார் தரப்போகின்றனர்... யார் தந்திருக்கின்றனர் என்பதை எல்லாம், மக்கள் சீர்தூக்கி பார்க்கத் துவங்கி இருப்பதால், 'திருமங்கலம் பார்முலா' என்ற சிறப்பு பணப் பட்டுவாடா திட்டம், இந்த தேர்தலில், அதிக பலனைத் ... |
| அணுசக்தி காப்பீடு அமைப்பு : மத்திய அரசு புதிய திட்டம் Posted: புதுடில்லி: அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை அளிப்பது குறித்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, அணு சக்தி காப்பீடு என்ற புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தற்போது, நம் நாட்டில், 20 அணு உலைகள் உள்ளன. எதிர்காலத்தில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில அணு உலைகள், வெளி நாடுகளின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன.அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை வழங்குவது குறித்த பிரச்னையில், தற்போது, சிக்கல்கள் உள்ளன. நம் நாட்டில் உள்ள, பெரும்பாலான பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள், பெரிய ... |
| எல்லை மாநிலங்களில் உஷார்: படைகளுக்கு உள்துறை எச்சரிக்கை Posted: புதுடில்லி : எல்லையோர மாநிலங்களில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, தொடர்ந்து நான்கு கட்டமாக நடைபெறுவதையொட்டி, "பாதுகாப்பு ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.4 கட்ட தேர்தல் : பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளையொட்டியுள்ள, நம் எல்லையோர மாநிலங்களில், லோக்சபா தேர்தல், வரும் 24 முதல், நான்கு கட்டங்களாக நடக்க உள்ளது.பஞ்சாப், உ.பி., பீகார், ஜம்மு - காஷ்மீர், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மட்டும், 170 தொகுதிகள் உள்ளன. எல்லையோர பகுதிகளை உன்னிப்பாக கண்காணிக்கும்படி, எல்லை பாதுகாப்பு பணியில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 21,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |