Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கூட்டுக்குடிநீர்த் திட்டங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது: ஸ்டாலின் புகார்

Posted: 20 Apr 2014 01:12 PM PDT

கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது

Posted: 20 Apr 2014 01:10 PM PDT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் உச்சக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குக்கு பணம் கொடுத்தால் மக்கள் அதற்கு அடிமையாக மாட்டார்கள்: வைகோ

Posted: 20 Apr 2014 01:07 PM PDT

வாக்குக்கு பணம் கொடுத்தால் மக்கள் அதற்கு அடிமையாக மாட்டார்கள் என தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ, சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது தெரிவித்தார்.

"ஊழல் செய்வதில்தான் காங்கிரஸ் சாதனை புரிந்துள்ளது'

Posted: 20 Apr 2014 01:03 PM PDT

அனைத்துத் துறைகளிலும் ஊழல் புரிவதில் தான், மத்திய காங்கிரஸ் அரசு சாதனை புரிந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

"காங்கிரஸ், பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்'

Posted: 20 Apr 2014 01:02 PM PDT

அதிமுக, திமுக கட்சிகள் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என சுப. உதயகுமார் தெரிவித்தார்.

மோடியை எதிர்த்து போட்டியிடும் "பின்லேடன்'

Posted: 20 Apr 2014 12:52 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து "ஒசாமா பின்லேடன்' போன்று தோற்றம் கொண்ட மெராஜ் காலித் நூர் என்பவர் போட்டியிட உள்ளார்.

நிதி விவரங்களை தெரிவிக்காத கட்சிகளுக்கு வரிச்சலுகையை ரத்து செய்ய கோரிக்கை

Posted: 20 Apr 2014 12:51 PM PDT

நிதி மற்றும் நன்கொடை பெற்ற விவரங்களைத் தெரிவிக்காத 10 அரசியல் கட்சிகளின் வரிச் சலுகைகளை ரத்து செய்யுமாறு மத்திய நேரடிகள் வரிகள் வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மிலிந்த் தேவ்ராவுக்கு வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு

Posted: 20 Apr 2014 12:50 PM PDT

பிரபல வர்த்தக நிறுவனமான கோத்ரெஜ் மற்றும் தனியார் வங்கிகளான ஹெச்டிஎஃப்சி, கோட்டக் மஹிந்திரா ஆகியவை தெற்கு மும்பையில் போட்டியிடும் தொலைத் தொடர்பு இணை அமைச்சரும், அத்தொகுதி எம்.பி.யுமான மிலிந்த் தேவ்ராவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

சோனியா, ராகுல் பிரசாரம் திடீர் ரத்து

Posted: 20 Apr 2014 12:49 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உடல் நலக்குறைவு காரணமாக தனது மகாராஷ்டிர மாநில பிரசாரப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்தார்.

ஏப்ரல் 24 வரை டி.வி. பார்க்காதீர்கள்: மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் காங்கிரஸ்!

Posted: 20 Apr 2014 12:48 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவின் தேர்தல் விளம்பரங்களைப் பார்க்காமல் இருப்பதற்காக, வரும் 24ஆம் தேதி வரை டிவி பார்க்க வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிரஞ்சீவி: வரமா? சாபமா?

Posted: 20 Apr 2014 12:47 PM PDT

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுவதால், அவரது வரவு காங்கிரஸூக்கு சாதகமாக இருக்குமா, அல்லது பாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிகார், ராஜஸ்தானில் இன்று மறுவாக்குப்பதிவு

Posted: 20 Apr 2014 12:47 PM PDT

பிகாரில் 25 வாக்குச்சாவடிகளிலும், ராஜஸ்தானில் 4 வாக்குச்சாவடிகளிலும் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு: கிலானி மீது வழக்கு

Posted: 20 Apr 2014 12:43 PM PDT

மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்ததாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி மீது காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜாம்பவான்களின் பலப் பரிட்சை

Posted: 20 Apr 2014 12:42 PM PDT

பல களம் கண்ட பழுத்த தலைவர் ஒருபுறம்; போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவர் இன்னொருபுறம் என இரண்டு ஜாம்பவான்களின் மோதலைக் கண்டு வருகிறது அமிருதசரஸ் தேர்தல் களம்.

அமேதியில் கேஜரிவாலை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Apr 2014 12:40 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கிரிராஜ் சிங், நிதின் கட்கரி மீது வழக்கு

Posted: 20 Apr 2014 12:31 PM PDT

"பசு மாடுகளை வளர்ப்பவர்கள் மீது மத்திய அரசு வரி விதிக்கிறது. ஆனால், மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்பவர்களுக்கு மத்திய அரசு மானியம் அளித்துள்ளது' என்று கூறியது குறித்து, பிகார் பாஜக தலைவர் கிரிராஜ் சிங் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்: கிரிராஜ் சிங் பேச்சில் உடன்பாடில்லை: பாஜக

Posted: 20 Apr 2014 12:31 PM PDT

"மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்' என்று பிகார் மாநில பாஜக தலைவர் கிரிராஜ் சிங் கூறியதில் தனக்கு உடன்பாடில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

அத்வானி, ஜஸ்வந்த் சிங்கைப் போல் வாஜ்பாயையும் ஓரங்கட்டியிருப்பார் மோடி: ராகுல் தாக்கு

Posted: 20 Apr 2014 12:30 PM PDT

"பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் இன்னும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தால், அத்வானி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரைப் போன்று அவரையும் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி ஓரங்கட்டி இருப்பார்' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வருவோம்: முலாயம் சிங்

Posted: 20 Apr 2014 12:29 PM PDT

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறினார்.

தேர்தல் விதி மீறல்: ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

Posted: 20 Apr 2014 12:28 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பத்திரிகையாளர்களைச் சந்தித்ததாக யோகா குரு ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

"தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி வெற்றி பெறும்'

Posted: 20 Apr 2014 12:28 PM PDT

மக்களவைத் தேர்தலில் தெலங்கானா தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்று அப்பகுதி பாஜக தலைவர் ஜி.கிஷண்ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எல்லைப்புற மாநிலங்களில் தேர்தல்: கண்காணிப்பை அதிகரிக்க அறிவுறுத்தல்

Posted: 20 Apr 2014 12:27 PM PDT

மக்களவைத் தேர்தலின் அடுத்த 4 கட்ட வாக்குப்பதிவுகள் எல்லைப்புறத்திலுள்ள மாநிலங்களில் நடைபெற இருப்பதால், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாள நாடுகளுடனான எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு பாதுகாப்புப் படையினரை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாஜகவின் தூதராக கிலானியை சந்திக்கவில்லை: சஞ்சய் சராஃப்

Posted: 20 Apr 2014 12:26 PM PDT

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானியை தாம் சந்தித்ததாகவும், ஆனால் பாஜகவின் தூதராகச் செல்லவில்லை என்றும் லோக் ஜனசக்தி கட்சியின் இளைஞர் அணித் தலைவரான சஞ்சய் சராஃப் தெரிவித்துள்ளார்.

ஆஸம் கான் மீதான தடையை நீக்காததற்கு கண்டனம்: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராட்டம்

Posted: 20 Apr 2014 12:25 PM PDT

சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கானின் பிரசாரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காததைக் கண்டித்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொகுதியை கவனிக்க முடியாத ராகுலால் நாட்டை எப்படி ஆள முடியும்? மோடி கேள்வி

Posted: 20 Apr 2014 12:25 PM PDT

அமேதி தொகுதியை கவனிக்க முடியாத காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியால், நாட்டை எப்படி ஆட்சி செய்ய முடியும்? என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பியுள்ளார்.

இலக்கியச் சங்கமம்

Posted: 20 Apr 2014 12:21 PM PDT

பேராசிரியர் வித்துவான் எச்.வேங்கடராமன் 94 ஆம் அகவை பிறந்த நன்னாள் நினைவேட்டு அறிமுக விழா.

மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்

Posted: 20 Apr 2014 12:20 PM PDT

மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல் - த.ஜீவானந்தம்; பக்.156; ரூ.100; சுருதி வெளியீட்டகம், 123, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை-11.

மரியா மாண்டிசோரியின் குழந்தைமை ரகசியம்

Posted: 20 Apr 2014 12:19 PM PDT

மரியா மாண்டிசோரியின் குழந்தைமை ரகசியம் - தமிழில்: சி.ந.வைத்தீஸ்வரன், பக்.320; ரூ.200; முல்லை பதிப்பகம், சென்னை 40; )044-2616 1196.

சென்னைக்கு மிக அருகில்

Posted: 20 Apr 2014 12:19 PM PDT

சென்னைக்கு மிக அருகில் - விஸ்வபாரதி; பக்.128; ரூ.100; காவ்யா, சென்னை-24; )044- 2372 6882.

கம்பனில் சங்க இலக்கியம்

Posted: 20 Apr 2014 12:18 PM PDT

கம்பனில் சங்க இலக்கியம் - ம.பெ.சீனிவாசன்; பக். 304; ரூ.200; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-17; )0452-2345971.

நரேந்திர மோடி - நேர்மையும், நிர்வாகத் திறமையும்

Posted: 20 Apr 2014 12:18 PM PDT

நரேந்திர மோடி - நேர்மையும், நிர்வாகத் திறமையும் - சந்திரமெளலி; பக். 168; ரூ.150; அல்லயன்ஸ் கம்பெனி, ப.எண் 244, பு.எண் 64, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4.

குலசேகரத்தில் போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம்

Posted: 20 Apr 2014 12:17 PM PDT

குலசேகரத்தில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வரப்பெற்றோம்

Posted: 20 Apr 2014 12:17 PM PDT

ஒரு சாமானியனின் நினைவுகள் - க.இராசாராம்; பக்.480; ரூ.250; நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; )044- 4399 3029.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாக்கு சேகரிப்பு

Posted: 20 Apr 2014 12:17 PM PDT

பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து,  அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

ஊழல் செய்வதில் காங்கிரஸ்-பாஜக இடையே போட்டி

Posted: 20 Apr 2014 12:16 PM PDT

காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஊழல் புரிவதில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன; இவர்களால் ஊழலை ஒழிக்க முடியாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி.

தோல்வி பயத்தால் பாஜக தனிநபர் விமர்சனத்தை தொடங்கி உள்ளது

Posted: 20 Apr 2014 12:16 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தோல்வி பயத்தால் பாஜக வேட்பாளர், தனிநபர் விமர்சனத்தைத் தொடங்கி உள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் குற்றம்சாட்டினார்.

நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதில் முக்கிய பங்காற்றிய பொறியாளர் மறைவு

Posted: 20 Apr 2014 12:16 PM PDT

நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க பொறியாளர் ஜான் சி ஹூபோல்ட், தனது 95-ஆவது வயதில் காலமானார்.

கன்னியாகுமரியில் மீனவர்களிடையே மோதல்: ஒருவர் காயம்; பதற்றம்

Posted: 20 Apr 2014 12:16 PM PDT

கன்னியாகுமரியில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

குளச்சலில் வீட்டின் கதவைத் திறந்து நகை, பணம் திருட்டு

Posted: 20 Apr 2014 12:16 PM PDT

குளச்சலில் பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து, பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓட்டுக்கு பணம் அளிப்பதைத் தடுக்க 55 கண்காணிப்புக் குழுக்கள்

Posted: 20 Apr 2014 12:16 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க 55 புதிய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரியும் ஆட்சியருமான எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் யூதர்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரம்: பிரதமர் கண்டனம்

Posted: 20 Apr 2014 12:16 PM PDT

உக்ரைனில் யூதர்களின் விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும் அல்லது அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற துண்டுப் பிரசுரங்களை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மக்களிடம் விநியோகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீனவக் கிராமங்களில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

Posted: 20 Apr 2014 12:15 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை மீனவக் கிராமங்களில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அதிமுக மீனவரணி நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காங்கிரûஸ பார்த்து பாஜகவுக்கு அச்சம்

Posted: 20 Apr 2014 12:15 PM PDT

காங்கிரஸ் கட்சியைப் பார்த்து பாஜக பயப்படுகிறது. அதனால்தான் அக்கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்றார் கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி.

தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு 2 கம்பெனி தொழில் பாதுகாப்புப் படையினர் வருகை

Posted: 20 Apr 2014 12:15 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவில் வந்தனர்.

எகிப்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 2 போலீஸ் அதிகாரிகள் சாவு

Posted: 20 Apr 2014 12:15 PM PDT

எகிப்தில் ஞாயிற்றுக்கிழமையன்று பாதுகாப்புப் படையினரின் ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

தக்கலையில் தேமுதிகவினர் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பு

Posted: 20 Apr 2014 12:15 PM PDT

தக்கலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தேமுதிகவினர் கடை கடையாக சென்று வாக்கு சேகரித்தனர்.

அதிமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படையினர் சோதனை

Posted: 20 Apr 2014 12:14 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர்.

பத்மநாபபுரம் தொகுதியில் இளைஞர் காங்கிரஸார் பிரசாரம்

Posted: 20 Apr 2014 12:14 PM PDT

பத்மநாபபுரம் தொகுதிக்குள்பட்ட ஓட்டலிவிளை, பூவன்கோடு, மேக்காமண்டபம், சித்தரங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸார்

தென் கொரிய படகு விபத்து: பலி எண்ணிக்கை 58-ஆக உயர்வு

Posted: 20 Apr 2014 12:14 PM PDT

தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

திமுக வேட்பாளரைஆதரிக்க முடிவு: எஸ்றா சற்குணம்

Posted: 20 Apr 2014 12:14 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க அனைத்து கிறிஸ்தவ திருச்சபை ஆயர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் பிரமுகர் காருக்கு தீ வைப்பு: போலீஸார் விசாரணை

Posted: 20 Apr 2014 12:13 PM PDT

: சுசீந்திரம் அருகே சனிக்கிழமை இரவு காங்கிரஸ் பிரமுகரின் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் காரின் பின் பகுதி சேதமடைந்தது.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து கோவில்பட்டியில் பிரசாரம்

Posted: 20 Apr 2014 12:13 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து கோவில்பட்டியில் அதிமுகவினர், பசும்பொன் தேசிய கழகம் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிலிப்பின்ஸ்: கடத்தப்பட்ட பொறியாளர் விடுவிப்பு

Posted: 20 Apr 2014 12:12 PM PDT

பிலிப்பின்ஸில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பொறியாளர் 53 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

திருச்செந்தூரில் திமுக கூட்டணி ஆலோசனைக்  கூட்டம்

Posted: 20 Apr 2014 12:12 PM PDT

திருச்செந்தூரில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எட்டயபுரம் அருகே மகாவீரர் ஜயந்தி

Posted: 20 Apr 2014 12:12 PM PDT

எட்டயபுரம் அருகே கசவன்குன்று கிராமம் சமுதாய நலக்கூடத்தில் மகாவீரர் ஜயந்தி  நடைபெற்றது.

பாகிஸ்தானில் லாரி-பஸ் மோதி விபத்து: 42 பேர் சாவு

Posted: 20 Apr 2014 12:12 PM PDT

பாகிஸ்தானில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரு பெண், சிறுவன் உள்பட 42 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

ஈஸ்டர் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Posted: 20 Apr 2014 12:12 PM PDT

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவு கிறிஸ்து உயிர்த்தெழுந்த சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முஸ்லிம் லீக் பிரசாரம்

Posted: 20 Apr 2014 12:12 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பெ.ஜெகனை ஆதரித்து முஸ்லிம் லீக் கட்சியினர் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.

நாசரேத்தில்  விஜிலா சத்யானந்த் பிரசாரம்

Posted: 20 Apr 2014 12:11 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து விஜிலா சத் யானந்த் எம்.பி. நாசரேத் காமராஜ் பேருந்து நிலையம் அருகில் வாக்கு

கருங்குளம் பகுதியில் திமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 20 Apr 2014 12:11 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி  திமுக வேட்பாளர் பெ.ஜெகன் கருங்குளம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

திருச்செந்தூரில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

Posted: 20 Apr 2014 12:11 PM PDT

திருச்செந்தூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, நகர அதிமுகவினர் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர்.

கோவில்பட்டி கல்லூரி ஆண்டு விழா

Posted: 20 Apr 2014 12:11 PM PDT

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் 48 ஆவது ஆண்டு விழா  நடைபெற்றது. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு செயலர் கே.செல்வராஜ் தலைமை வகித்தார்.

தூத்துக்குடியில் பெண்ணிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு

Posted: 20 Apr 2014 12:10 PM PDT

தூத்துக்குடியில் பெண்ணிடம் 10 பவுன் நகைகளை சனிக்கிழமை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

 எட்டப்ப மன்னர் குறித்த கருணாநிதியின் கருத்து விளாத்திகுளம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 20 Apr 2014 12:10 PM PDT

திமுக பொதுக்கூட்டத்தில் எட்டப்ப மன்னரை தரம் தாழ்த்திப் பேசியதாகக் கூறி, திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து விளாத்திகுளம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரம் பகுதியில் நீர்நிலைகளைத் தூர்வார நடவடிக்கை

Posted: 20 Apr 2014 12:10 PM PDT

ஓட்டப்பிடாரம் தொகுதியிலுள்ள அனைத்து குளம், குட்டை மற்றும் பாசனக் கால்வாய்களையும் தூர்வாரி விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெற  வழிவகை செய்யப்படும் என்று மதிமுக

குலசை கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா தொடக்கம்

Posted: 20 Apr 2014 12:09 PM PDT

குலசேகரன்பட்டினம் அருள்மிகு வீரமனோகரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஏப்.22) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வாகனம் மோதி பெண் சாவு

Posted: 20 Apr 2014 12:09 PM PDT

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனம் மோதி அடையாளம் தெரியாத பெண் இறந்தார்.

அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

Posted: 20 Apr 2014 12:09 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, உடன்குடி பகுதியில் சனிக்கிழமை வாக்குசேகரித்தார்.

மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம்:திருச்செந்தூர் வியாபாரிகள் சங்கம் முடிவு

Posted: 20 Apr 2014 12:09 PM PDT

அடிப்படை வசதிகள் செய்து தராத திருச்செந்தூர் பேரூராட்சியைக் கண்டித்து, மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கல் குவாரியில்தவறி விழுந்த இளைஞர் சாவு

Posted: 20 Apr 2014 12:09 PM PDT

கயத்தாறு அருகே சனிக்கிழமை கல் குவாரியில் தவறி விழுந்த இளைஞர் இறந்தார். கயத்தாறையடுத்த அகிலாண்டபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மகாராஜன் மகன்

கடலோரக் கிராமங்களில் உதயகுமார் பிரசாரம்

Posted: 20 Apr 2014 12:08 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கடலோரக் கிராமங்களில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், கன்னியாகுமரி ஆம் ஆத்மி வேட்பாளருமான சுப.  உதயகுமார் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பார்வர்டு பிளாக் பிரசார பொதுக்கூட்டம்

Posted: 20 Apr 2014 12:08 PM PDT

ஸ்ரீவைகுண்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

Posted: 20 Apr 2014 12:07 PM PDT

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் மோடிதான் பிரதமர்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

Posted: 20 Apr 2014 12:00 PM PDT

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிதான் பிரதமராக பதவியேற்பார் என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஒன்றின் மேல் ஒன்றாக மெட்ரோ ரயில் பாலங்கள்

Posted: 20 Apr 2014 12:00 PM PDT

தில்லி கர்கர்டூமா மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரயில்வே பாலத்தின் மேல்பகுதியில் ரயில்வே பாலம் அமைத்து தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) அரிதான சாதனை நிகழ்த்தியுள்ளது. மெட்ரோ மூன்றாம் கட்டப் பணியில் இது போன்று மேலும் சில பாலங்கள்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம்

Posted: 20 Apr 2014 12:00 PM PDT

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள், புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் உள்பட சுமார் ஆயிரம் பேர் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாலை விபத்தில் ஊனமுற்ற இளைஞருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 20 Apr 2014 12:00 PM PDT

பின்னோக்கி வந்த லாரி மோதி உடல் ஊனமுற்ற இளைஞருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டை லாரிக்கு காப்பீடு செய்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குமாறு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து வழக்கு விவரம் வருமாறு:

வாடகை தாய்மார்கள் நடைப்பயணம்

Posted: 20 Apr 2014 11:59 AM PDT

வாடகைத் தாயாக செயல்படும் பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை வலியுறுத்தி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனர்.

வாகன திருட்டு கும்பலில் இருவர் கைது: 10 கார்கள் மீட்பு

Posted: 20 Apr 2014 11:59 AM PDT

வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த கும்பலைச் சேர்ந்த இருவரை தில்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் 10 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை

தொழிலதிபரை கொல்ல முயன்ற வழக்கு:இளைஞருக்கு கடுங்காவல் சிறை

Posted: 20 Apr 2014 11:59 AM PDT

தொழிலதிபரை சுட்டுக் கொல்ல முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு நான்கரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்தர் மோகன் சோப்ரா. செங்கல் சூளை அதிபர

நவீனமயமாகிறது வாகன நிறுத்த மையங்கள்

Posted: 20 Apr 2014 11:58 AM PDT

புது தில்லியிலுள்ள நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன நிறுத்த மையங்கள் விரைவில் நவீனமயமாக்கப்படும் என்று என்டிஎம்சி (புது தில்லி முனிசிபல் கவுன்சில்) திட்டமிட்டுவருகிறது. வாகன நிறுத்த மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க இம் முடிவு

மெட்ரோ ரயில் நிலையத்தில் தலைமைக் காவலர் தற்கொலை முயற்சி

Posted: 20 Apr 2014 11:58 AM PDT

தில்லி குதுப்மினார் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்ய முயன்ற தலைமைக் காவலர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

விவாதப் பொருளானது மேயர் பதவிக் காலம்!

Posted: 20 Apr 2014 11:58 AM PDT

தில்லியில் உள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு தில்லி ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மேயர் தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் மேயர் பதவிக் காலம் குறித்த விவாதம் எழுந்துள்ளது.

"லோக்பால் உறுப்பினர்கள் நியமன நடவடிக்கையை நிறுத்த வேண்டும்'

Posted: 20 Apr 2014 11:58 AM PDT

லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்கள் நியமனத்துக்கான நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.

மழலையர் காப்பகத்தில் தீ:2 குழந்தைகள் உயிருடன் மீட்பு

Posted: 20 Apr 2014 11:58 AM PDT

தில்லி ரோஹிணியில் உள்ள மழலையர் பகல்நேர காப்பகம் ஒன்றில் சனிக்கிழமை பிற்பகலில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் அதன் பெண் உரிமையாளர் பலத்த காயமடைந்தார். காப்பகத்தில் இருந்த இரு குழந்தைகளை போலீஸார் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

பெண் பயணிகளிடம் சோதனை நடத்த 200 புதிய "பூத்'கள்

Posted: 20 Apr 2014 11:57 AM PDT

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண் பயணிகளிடம் சோதனை மேற்கொள்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 200 சாவடிகள் (பூத்கள்) அமைக்கப்பட உள்ளன. முதல்

குலாலர் சங்க மாணிக்க விழா

Posted: 20 Apr 2014 11:57 AM PDT

 தில்லி தமிழ் குலாலர் சங்க 40-ஆவது ஆண்டு மாணிக்க விழா ஞாயிற்றுக்கிழமை தில்லி தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் நடைபெற்றது.

குன்றத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 20 Apr 2014 11:56 AM PDT

குன்றத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.என்.ராமசந்திரன் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நுண்தேர்தல் பார்வையாளர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 20 Apr 2014 11:56 AM PDT

கல்பாக்கத்தை அடுத்த அணுபுரத்தில் நுண்தேர்தல் பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூர் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கைது

Posted: 20 Apr 2014 11:56 AM PDT

வேலூர் மாவட்ட பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

Posted: 20 Apr 2014 11:56 AM PDT

காஞ்சிபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வாலாஜாபாத்தில் 2 வீடுகளில் நகைகள் திருட்டு

Posted: 20 Apr 2014 11:55 AM PDT

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் இரண்டு வீடுகளில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.

வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் மல்லை சத்யா வாக்கு சேகரிப்பு

Posted: 20 Apr 2014 11:55 AM PDT

வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் பாஜக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

Posted: 20 Apr 2014 11:55 AM PDT

மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 26ஆவது பட்டமளிப்பு விழா, அடிகளார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மணல் திருட்டு: 3 லாரிகள், 2 ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல்

Posted: 20 Apr 2014 11:55 AM PDT

செங்கல்பட்டை அடுத்த நெடுங்குன்றம், வீராங்குப்பம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மணல் எடுத்ததாக 3 லாரிகள் மற்றும் 2 ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மத்தியில் அங்கம் வகித்த திமுகவால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை

Posted: 20 Apr 2014 11:54 AM PDT

காங்கிரஸின் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுகவால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் குற்றம்சாட்டினார்.

கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் சாவு

Posted: 20 Apr 2014 11:54 AM PDT

: திருவள்ளூர் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரியில் சந்திப்பு விழா:ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 20 Apr 2014 11:54 AM PDT

பொன்னேரியில் கரிகிருஷ்ண பெருமாளும், அகத்தீஸ்வரரும் சந்திக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரயில் மோதி 2 பேர் சாவு

Posted: 20 Apr 2014 11:53 AM PDT

பொன்னேரி அருகே ரயிலில் அடிபட்டு 2 பேர் உயிரிழந்தனர். பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சந்திப்பு திருவிழா நடைபெற்றது.

திருவள்ளூர் நகராட்சியில் திமுகவினர் பைக் பிரசார பேரணி

Posted: 20 Apr 2014 11:53 AM PDT

திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட திருவள்ளூர் நகராட்சியில் திமுகவினர், விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை ஆதரித்து வெள்ளிக்கிழமை தீவிர பைக் பிரச்சார பேரணி நடத்தினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™