ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ebay ல் கையடக்கத் தொலைபேசி வாங்க உதவி தேவை.
- தெனாலிராமன் - சிரிப்பா? சிந்தனையா?
- உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?
- உலர் அன்னாசி பழமும் இரத்த உற்பத்தியும்!
- முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள்
- ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை
- தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு
- சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!
- கங்கையை காப்போம்!
- இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926
- கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964
- தொழில்நுட்பக் கோளாறு: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்
- 30 வகை கொழுக்கட்டை
- 30 வகை ‘COOL’ ரெசிபி
- தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்
- மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள்
- காபிரியேல் கார்ஸியா மார்க்வெஸ்
- எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன்
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- திண்டுக்கல் பிரியாணி ருசி ரகசியம்
- மோடம் பற்றிய தகவல் வேண்டும்
- பேஸ்புக்கால் குறையும் அழகு!
- யானை வருது ஓரம்போ...!!{ புதுக்கவிதை}
- அறியாமை போக்கு!
- தேர்தல் 'தமாசு'
- நாத்திக ஆத்திக நல்லிணக்கம்
- நாடு முழுவதும் பயணம் செய்யும் 2.1 லட்சம் பாதுகாப்பு படையினர்
| ebay ல் கையடக்கத் தொலைபேசி வாங்க உதவி தேவை. Posted: 20 Apr 2014 02:40 PM PDT வணக்கம் தோழர்களே, நான் இலங்கையில் வசிக்கின்றேன். abay ஒரு பொருள் வாங்கினால் அது இலங்கைக்கு வரும்போது மேலதிகமாக சுங்கவரி வசூலிக்கப்படுமா. குறிப்பாக கையடக்கத் தொலைபேசிக்கு. |
| தெனாலிராமன் - சிரிப்பா? சிந்தனையா? Posted: 20 Apr 2014 02:34 PM PDT மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை நகைச்சுவையோடு கலந்து கொடுப்பதில் திறமைவாய்ந்தவர் என்ற பெயரை தன் முதல் படமான போட்டாப்போட்டி படத்தில் நிரூபித்தவர் இயக்குனர் யுவராஜ் தயாளன். வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த தெனாலிராமன் என்ற கதாப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கலகலப்பாகவும் அதேநேரத்தில் ஒரு சமூக பொறுப்புணர்ச்சியோடும் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது, வடிவேலு இரட்டைவேடங்களில் அசத்தியிருக்கும் 'தெனாலிராமன்'. தன்னை சுற்றி இருப்பவர்களை சொல்வதைக்கேட்டு அதிகம் சிந்திக்கத் தெரியாத ஒரு மன்னன், ... |
| உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது? Posted: 20 Apr 2014 02:24 PM PDT நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான பிரச்சாரம், ஊடகங்கள், ஊழல்கள் என்று காங்கிரசிற்கு எதிராக நிறைய சென்று கொண்டிருக்கும் வேளையில், வெளியில் தனிக்கட்சியாக அதிக இடங்களில் நாங்களே வெல்வோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் மேடைதோறும் முழங்கி வந்தாலும் உட்கட்சித் தலைகள் வேறு விதமாக நினைக்கிறதாம். குறைந்த பட்சம் 120 இடங்களையாவது வெல்லவேண்டும் என்ற அடிப்படையில்தான் இப்போது வேலை நடந்து வருகிறதாம், அதற்கேற்றவாறான தொகுதிகளில்தான் கட்சித் தலைமை மும்முரம் காட்டி வருவதாக வட இந்திய செய்தி ஊடகங்கள் கூறுகின்றன. முதல் ... |
| உலர் அன்னாசி பழமும் இரத்த உற்பத்தியும்! Posted: 20 Apr 2014 02:21 PM PDT உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது. முதலில் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காயவைத்து உலார்ந்த நிலையில் உள்ள அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும். தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு ... |
| முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள் Posted: 20 Apr 2014 02:20 PM PDT நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கிய முதலாம் உலகப் போர் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுத்தது. போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன. பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நாப்கின்கள், பேப்பர் கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டங்கள், ஸிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள், புறவூதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை முதலாம் உலகப் போரின் விளைவாய் உருவான முக்கிய ... |
| ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Posted: 20 Apr 2014 02:18 PM PDT ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும் என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் எச்சரித்தார். ஆந்திராவில் வரும் 30 ஆம் தேதியும், அடுத்த மாதம் 7 ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளன. தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட ஹைதராபாத் வந்த தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம்கானுக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் பிரச்சாரம் செய்ய தடை விதித்த தேர்தல் ஆணையம், ... |
| தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு Posted: 20 Apr 2014 02:17 PM PDT தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் மதுவிற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. சித்திரை 1 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது. வரும் 22 ஆம் தேதி முதல் 3 நாட்கள் டாஸ்மார்க் கடைகள் மற்றும் ஹோட்டல் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் திருவிழா காலங்களில் விற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களில் ரூ.57 கோடி முதல் ... |
| சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! Posted: 20 Apr 2014 02:13 PM PDT அஞ்சையும் அடக்கி ஆற்ற லுடையனாய அநேக காலம் வஞ்ச மிள் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு வெஞ்சின முகங்க ளாகி விசையரு பாயுங்கங்கை செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே - திருஞானசம்பந்தர் பொருள் அகப்பகையாகிய ஐம்புலன்களையும் அடக்கி, ஆற்றல் கொண்டவனாக பல ஆண்டுகள் தூய தவமியற்றிய பகீரதனுக்காக, பன்முகங்களுடனும் அடங்காத ஆரவாரத்துடனும் விரைந்து வந்த கங்கையை, திருச்சேறை வாழ் செந்நெறிச் செல்வனார், தன் செஞ் சடையில் ஏற்று அருள் புரிந்தார்! கங்கைக்குத்தான் எத்தனை பெயர்கள்? பகீரதன் ... |
| Posted: 20 Apr 2014 02:05 PM PDT ''கங்கையைப் பார்த்துக்கொண்டிருப்பதே மகத்தான ஞானத் தவம். அதன் புண்ணிய வரலாற்றில், பாரதத்தின் பண்டைய கலாசாரத்தையும், நாகரிகப் பெருமைகளையும், ஆன்மிகப் பண்பு களையும் அறியலாம். அதன் ஓட்டத்தில் புராதன நிகழ்ச்சிகளையும், புராணக் காட்சிகளையும் காணலாம். கங்கையின் தூய நீரில், மகரிஷிகளின் தூய உள்ளங்களைத் தரிசிக்கலாம். அதன் ஆழத்தில், ஞானிகளின் சலனமற்ற மன நிலையை உணரலாம். அதன் வேகத்தில், கவிஞனின் கற்பனாசக்தியை அளவிடலாம். அதன் சலசலப்பில், கலைஞனின் இதயத் துடிப்பைக் கேட்கலாம்! கண்காணா இடத்தில் பிறந்து, ... |
| இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926 Posted: 20 Apr 2014 01:50 PM PDT எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். இவர் ஐக்கிய நாடுகள் உள்பிட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வெறு பெயர்களின் ஆட்சிப் பெயர்களை கொண்டிருந்தாலும், ஐக்கிய நாடுகளிலேயே லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பொதுநலவாயத்தின் தலைவரும் இவரே. இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநரும் ஆவார். 62 ஆண்டுகளாக ... |
| கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964 Posted: 20 Apr 2014 01:48 PM PDT புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழனி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் ... |
| தொழில்நுட்பக் கோளாறு: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம் Posted: 20 Apr 2014 01:44 PM PDT மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 'எம்.எச்.192' என்ற மலேசிய பயணிகள் விமானம் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்தும் 'கியர்' செயலிழந்ததால் தொடர்ந்து நான்கு மணி நேரமாக வானத்தில் வட்டமிட்டபடி சுற்றிக்கொண்டிருந்தது. போயிங் 737 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் வலது பக்க 'லேண்டிங் கியர்' திடீரென செயலிழந்ததால் தரையிறங்க முடியாமல் தவித்து வந்தது. மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பெங்களூருக்கு 166 பயணிகளுடன் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்திலேயே ... |
| Posted: 20 Apr 2014 01:16 PM PDT புரோட்டீன் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், சோயா பீன்ஸ் - அரை கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தண்ணீர் - ஒன்றரை கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சோயா பீன்ஸை ஊற வைத்து, ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும். கடாயில் ... |
| Posted: 20 Apr 2014 01:04 PM PDT லிச்சி - கார்ன் - வெள்ளரி சாலட் தேவையானவை: லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 6, ஸ்வீட் கார்ன் (வேகவைத்தது) - கால் கப், வெள்ளரித் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: லிச்சி பழத்தை துண்டுகளாக நறுக்கவும். வேகவைத்த கார்ன் முத்துக்கள், லிச்சி பழத் துண்டுகள், நறுக்கிய வெள்ளரித் துண்டு களை ஒரு பாத்திரத்தில் போடவும். அதனுடன் சர்க்கரை, உப்பு, தேன், மிளகுத்தூள் ... |
| தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் Posted: 20 Apr 2014 12:52 PM PDT நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 845 வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு தன்னார்வக் குழு அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் ஜனநாயகத் தேர்தல் சீர்திருத்தம் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் தேசியத் தேர்தல் கண்காணிப்பு குழு தமிழக வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, சொத்து மதிப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது. அந்த அமைப்பின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் சுதர்சன பத்மநாபன் ... |
| மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Posted: 20 Apr 2014 12:50 PM PDT சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்கக் கோரும் வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்திருந்தார். வரும் 25-ம் தேதி, தாம் ஓய்வு பெறப் போவதாகவும், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் ... |
| காபிரியேல் கார்ஸியா மார்க்வெஸ் Posted: 20 Apr 2014 10:18 AM PDT 'நூறாண்டு காலத் தனிமை' நாவலின் மூலம் இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தின் மகத்தான ஆளுமையாக வலம்வரத் தொடங்கிய காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் மெக்ஸிகோ சிட்டியில் உள்ள தனது இல்லத்தில் வியாழன் அன்று காலமானார். அவருக்கு வயது 87. 1982-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற மார்க்வெஸின் எழுத்துகள் அவரது கற்பனையில் உருவாகிய லத்தீன் அமெரிக்க நிலப்பரப்பை விவரித்தாலும் உலகளாவிய ஈர்ப்பைக் கொண்டவை அவை. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. டிக்கன்ஸ், டால்ஸ்டாய் ... |
| எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Posted: 20 Apr 2014 10:14 AM PDT நேற்று மாலையில் ஒரு ஏழைத்தாயும், அவரது மகனும் தியாகராய நகரில் இருந்து தஞ்சாவூர் செல்வதற்கு முன்பதிவில்லாத டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள். அங்கிருந்து மின்சார ரெயிலில் எழும்பூர் ரெயில் நிலையம் வந்தனர். 11–வது பிளாட்பாரத்தில் இறங்கி வடக்கு பகுதி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்கும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் டிக்கெட் பரிசோதகர் மடக்கி சோதனை போட்டனர். டிக்கெட்டை காண்பித்த அந்த பெண்ணிடம் 'இது தஞ்சாவூர் செல்லும் டிக்கெட்'. இதை வைத்து மின்சார ரெயில் செல்லும் பிளாட்பாரத்தில் எப்படி ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 20 Apr 2014 10:07 AM PDT ![]() |
| திண்டுக்கல் பிரியாணி ருசி ரகசியம் Posted: 20 Apr 2014 06:44 AM PDT இந்தியாவில் முகலாய மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில் எல்லாம் பிரியாணி வாசனை பரவியது. ஆனால் பாரசீக முறையில் இருந்து இந்திய பிரியாணி தயாரிப்பு முறை மாறுபட்டது. இது ஐதராபாத்தில் புது வடிவம் பெற்றது. ஐதராபாத் நிஜாம் அரண்மனையில் மீன், இறால், மான், முயல் என்று 49 வகைளில் பிரியாணி சமைக்கப்பட்டதாக செய்திகளில் அறியலாம். ஐதராபாத்தில் புதுவடிவம் பெற்ற பிரியாணி அங்கிருந்து, திண்டுக்கல்லுக்கும் வந்தது. இன்று தமிழகத்தில் திண்டுக்கல் பிரியாணிக்கு என்று தனி அடையாளம் உள்ளது. இதன் சுவை ரகசியம் என்ன? பொதுவாக ... |
| Posted: 20 Apr 2014 06:20 AM PDT நான் பிஎஸ்என்எல் பிராட்பென்ட் இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்துகிறேன், இன்டர்நெட் பயன்படுத்தும்போது அடிக்கடி இணைப்பு கட் ஆகிறது. திரும்ப இணைப்பு கிடைக்க பத்து நிமிடங்களுக்கு மேல் அல்லது அரை மணி நேரம் ஆகிறது, BSNL ஆபிஸில் கொடுத்த மோடத்தை பயன்படுத்தி வந்தேன். மோடம் பிரச்சனையாக இருக்கலாம் என்பதால் புதிய மோடம் வாங்கலாம் என இருக்கிறேன். எனவே எந்த கம்பேனி மோடம் (வைபை வசதியுடன்) வாங்கினால் நன்றாகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் இருக்கும் என தெரிந்த நண்பர்கள் கூறினால் எனக்கு உபயோகமாக இருக்கும். நன்றி |
| Posted: 20 Apr 2014 12:26 AM PDT நகரத்து இளைஞர்களையும் இணையத்தையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு வெப் அவர்களது நேரத்தை விழுங்குகிறது. பலவிதத் தகவல்களையும் அவர்கள் இணையத்திலிருந்தும் சமூக வலைதளங்களிலிருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள். என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதிலிருந்து இன்று மனசே சரியில்ல என்று தங்கள் மன உணர்வை வெளிப்படுத்துவது வரை எல்லாவற்றையும் உடனுக்குடன் ஃபேஸ்புக் டிவிட்டர் போன்றவற்றில் பதிவிடுகிறார்கள். இதனால் நன்மைகள் இருக்குமளவுக்கு ஒருசில தீமைகளும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஃபேஸ்புக்கில் ... |
| யானை வருது ஓரம்போ...!!{ புதுக்கவிதை} Posted: 19 Apr 2014 08:27 PM PDT * புதிய அறிவுத் திறன் புதிய சிந்தனை புதிய கார்ப்பரேட் அணுகுமறையோடு சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன. புத்துணர்வு முகாமில் பயிற்சிப் பெற்ற கோயில் யானைகள். * நமக்கும் இப்பயிற்சியினைத் தர மாட்டார்களா? என்று அரசுக்கு விண்ணப்பித்தன யானைகள் புத்துணர்வு முகாமில் வேடிக்கைப் பார்த்து வியந்தன வனவிலங்குகள். * முகாமின் இறுதி நாள் ஓவ்வொரு யானையும் தத்தமது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டன " நாங்கள் கற்றது குன்றளவு கல்லாதது காடு அளவு ". * |
| Posted: 19 Apr 2014 06:46 PM PDT காகம் கரையக் கலங்கி! கருவருக்க வருவார் என்று! கரையும் என் பணமே என்று! கலைத்துவிடு அதனை என்பேன்! பனங்காக்கை கத்திக் கதற! பயந்திடுவேன் வீணாய் இங்கு! பந்தம் பாசத்துள் சண்டை என்று! பரிதாபம் என்னிலை என்பேன்! ஊர்க்குருவி உறையுள் அழிந்தால்! உடனிருப்போர் பிரிவார் என்று! ஊண் இழக்க வேண்டும் என்றும்! உடனிருப்பார் அணைப்பேன் என்றும்! ஆந்தை தன் துணைக்காய் அலறும்! அருமை உறவினர் யாரோ! ஆண்டவன் அழைக்க நேருமென்று அஞ்சியே தூங்காமலிருப்பேன்! சங்கொன்று வீட்டில் புகுந்தால்! சகலதும் சேரும் என்று! சஞ்சலம் ... |
| Posted: 19 Apr 2014 05:57 PM PDT நபர் 1: அந்த வீட்ல ஏதோ போர்டு மாட்டியிருக்கே என்னது? நபர் 2: இங்கு 'தட்கால்' முன்பதிவில் ஓட்டுகள் கிடைக்கும்னு போட்டு இருக்கு! பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி தொண்டர்-1: 'நம்ம வேட்பாளருக்கு ஓரளவு இருந்த மக்கள் ஆதரவையும் தலைவர் பேசி கெடுத்துட்டாரு...!' தொ. 2: 'என்ன பேசினார்...?' தொ. 1: 'நானே இந்த தொகுதியில வேட்பாளரா நிக்கறதா நினைச்சிக்குங்க வாக்காளர்களேன்னு தான்...!' ரா. திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர் நபர் 1: இவர் ஓட்டு புரோக்கர்னு எதை வச்சு சொல்றே? நபர் 2: ... |
| Posted: 19 Apr 2014 05:31 PM PDT கடவுளைப் பற்றிய கோட்பாடுகளில் மூன்று வகையான கருத்துகள் இருக்கின்றன. ஒன்று கடவுள் இருப்பதை ஏற்கும் ஆத்திகம். இன்னொன்று அவர் இல்லை எனச் சொல்லும் நாத்திகம். மூன்றாவது கடவுளைப் பற்றி எந்தக் கருத்தும் எனக்கில்லை என்று சொல்லும் கருத்தற்ற நிலை. கடவுள் இல்லை என்பவரை நாத்திகர் என்று சொல்ல வேண்டுமே அன்றிப் பகுத்தறிவாளர் என்பது சரியல்ல. பகுத்துப் பகுத்து ஒருவன் ஆராயும்போது கடவுள் உண்டு என்றோ இல்லை என்றோ எந்த முடிவுக்கும் வரக்கூடும். ஆத்திகம் நாத்திகம் என்கிற இரு கோட்பாடுகளும் பன்னெடுங் காலமாகவே நம்மிடையே ... |
| நாடு முழுவதும் பயணம் செய்யும் 2.1 லட்சம் பாதுகாப்பு படையினர் Posted: 19 Apr 2014 04:59 PM PDT மக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்த நாடு முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து 2.1 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் மாநிலம் மாநிலமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். போர் சமயத்துக்கு ஈடாக, உள்நாட்டிலேயே பாதுகாப்பு பணியாற்றி வருகின்றனர். அப்படிப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களின் செயல்பாடுகளை இங்கே பார்ப்போம்... தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம், துணை ராணுவப் படை இணைந்து பாதுகாப்பு பணியை ஒருங்கிணைத்து வருகிறது. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்திய-திபெத் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
