Tamil News | Online Tamil News |
- காந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?
- 'ஆஜராகாவிட்டால் கைது செய்ய நேரிடும்': கெஜ்ரிவாலுக்கு கோர்ட் எச்சரிக்கை
- ராகுல் பிரசாரம்: கூட்டம் கூட்ட உத்தரவு
- சர்வேயை பார்த்து விஜயகாந்த் அதிர்ச்சி: கட்சி நிர்வாகிகளுக்கு கண்டிப்பான உத்தரவு
- தேர்தல் அன்று தடையில்லா மின் வினியோகம் சாத்தியமா? மின் வாரிய அதிகாரிகள் தீவிர ஆலோசனை
- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு யாருக்கு லாபம்? சந்தேகத்தை கிளப்புகிறார் கருணாநிதி
- தமிழகத்தில் ஜெ., எதிர்ப்பு அலை வீசுகிறது: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேட்டி
- ஓட்டு போடலைன்னா 'லேப்-டாப்'பை பறிச்சிடுவாராம்: தேர்தல் கமிஷனிடம் சிக்கினார் முலாயம்
- 'ரிமோட் கன்ட்ரோல்' ஆட்சி நடப்பதாக மோடி ஆவேசம் : சோனியா, ராகுல் மீது சரமாரி குற்றச்சாட்டு
- தி.மு.க., மீது ஜெயலலிதா தாக்கு: சென்னை பிரசாரத்தில் ஆவேசம்
- ராபர்ட் வாத்ரா சொத்து குவித்தது எப்படி? பா.ஜ., தலைவர் அருண் ஜெட்லி கேள்வி
| காந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? Posted: நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, குஜராத் காந்திநகரில் போட்டியிடுகிறார். யாரை அவர் எதிர்த்தாரோ அவரது ஆதரவாளர்கள் தற்போது அத்வானி வெற்றி பெற, கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆர்.எஸ்.எஸ்.,சை சேர்ந்தவரும், பா.ஜ.,வின் மூத்த தலைவருமான, மோகன்லால் தேசாய் இதுபற்றி கூறியதாவது: காந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு என, தனி ஆதரவாளர்கள் மற்றும் ஓட்டு வங்கி உண்டு. ஆனால் கடந்த 45 ஆண்டுகளில், அவரது ஆதரவாளர்கள் சிறிது சிறிதாக, மோடி ஆதரவு முகாமுக்கு மாறி விட்டனர். கடந்த, 2009 ... |
| 'ஆஜராகாவிட்டால் கைது செய்ய நேரிடும்': கெஜ்ரிவாலுக்கு கோர்ட் எச்சரிக்கை Posted: புதுடில்லி: 'அவதூறு வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாவிட்டால், கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்' என, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி கோர்ட், உத்தரவிட்டுள்ளது.ஆம் ஆத்மி கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரின் கட்சியை சேர்ந்த, பிரசாந்த் பூஷண், மணீஷ் சிசோடியா, ஷாஜியா இல்மி ஆகியோர், சில மாதங்களுக்கு முன், மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, கபில் சிபலின் மகன், அமித் சிபல் மீது, ஒரு குற்றச்சாட்டை கூறியிருந்தனர். 'கபில் சிபல், தொலை தொடர்பு அமைச்சராக இருப்பதால், அவரின் மகன் அமித் சிபல், தன் தந்தையின் பதவியை தவறாக ... |
| ராகுல் பிரசாரம்: கூட்டம் கூட்ட உத்தரவு Posted: கன்னியாகுமரியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எதிர்பார்த்த தொண்டர்கள் கூட்டம், அதிகமாக கூடவில்லை என்பதால், ராமநாதபுரத்திற்கு, நாளை வரும் துணை தலைவர் ராகுல் பிரசாரக் கூட்டத்திற்கு, தொண்டர்கள் அதிகமாக திரண்டு வர வேண்டும் என, கட்சியினருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உத்தரவிட்டுள்ளார்.கூட்டம் வரவில்லை: தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ... |
| சர்வேயை பார்த்து விஜயகாந்த் அதிர்ச்சி: கட்சி நிர்வாகிகளுக்கு கண்டிப்பான உத்தரவு Posted: தே.மு.தி.க., போட்டியிடும், 14 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், ரகசிய 'சர்வே' எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சர்வேயை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள, அவர், கட்சி நிர்வாகிகளுக்கு கண்டிப்பான உத்தரவிட்டிருக்கிறார்.வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதா அல்லது பா.ஜ., கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதா என்கிற கடுமையான குழப்பம், தே.மு.தி.க., கட்சி வட்டாரத்தில் வெகுநாட்களாக நிலவியது. குறிப்பாக, கட்சித் தலைவர் விஜயகாந்தின் மச்சான், 'தி.மு.க.,வுடன் தான் கூட்டணி சேர வேண்டும்' என, ... |
| தேர்தல் அன்று தடையில்லா மின் வினியோகம் சாத்தியமா? மின் வாரிய அதிகாரிகள் தீவிர ஆலோசனை Posted: கடும் மின் பற்றாக்குறை நிலவுவதால், லோக்சபா தேர்தல் அன்று , தடையில்லா மின்சாரம் வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை சமாளிக்க, மின் வாரிய அதிகாரிகள், தீவிர ஆலோசனை நடத்தினர்.தமிழகத்தில், மின் தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகமாக உள்ளது. இதனால், நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, மின் தடை செய்யப்படுகிறது.கடந்த நான்கு மாதங்களாக, அனல் மின் நிலையம்; நீர் மின் நிலையங்களில், 2,000 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தியும், எதிர்பார்த்த அளவிற்கு, அதிகரிக்கவில்லை.மின் பற்றாக்குறை :இதனால், நாள்தோறும், ... |
| சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு யாருக்கு லாபம்? சந்தேகத்தை கிளப்புகிறார் கருணாநிதி Posted: சென்னை:ராஜிவ் கொலை குற்றவாளிகள் மீதான வழக்கில், ஏப்., 25ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருப்பது யாருக்கு லாபம் தரும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கேள்வி எழுப்பி உள்ளார்.தென் சென்னை தி.மு.க., வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, எம்.ஜி.ஆர்., நகரில், நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது: தமிழகத்திற்கு வளம் சேர்க்கும், சேது சமுத்திர திட்டத்தை, அ.தி.மு.க., கைவிட்டு விட்டது. அந்த திட்டத்திற்கு ஜெயலலிதா, தடையாக உள்ளார்.சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, ஒரு ... |
| தமிழகத்தில் ஜெ., எதிர்ப்பு அலை வீசுகிறது: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேட்டி Posted: கரூர்:தமிழகத்தில் ஜெயலலிதா எதிர்ப்பு அலை பலமாக வீசி வருகிறது. நரேந்திர மோடி அலையை எங்கேயும் காணவில்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் மற்றும் புதுவையில், 35 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளேன். மீதமுள்ள ஐந்து தொகுதிகளில், வரும் ஏப்., 22 க்குள் பிரசாரத்தை முடித்து விடுவேன். தி.மு.க., வேட்பாளர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.கரூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை மீது, சென்னையில் நில அபகரிப்பு புகார் வந்துள்ளது. இதை உரிய முறையில் விசாரிக்க வேண்டும். கடந்த மூன்றாண்டு கால, ஜெயலலிதா ... |
| ஓட்டு போடலைன்னா 'லேப்-டாப்'பை பறிச்சிடுவாராம்: தேர்தல் கமிஷனிடம் சிக்கினார் முலாயம் Posted: 'சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டு போடவில்லை என்றால், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய, 'லேப்-டாப்'களை எல்லாம், திரும்ப வாங்கி விடுவோம்' என, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.புகார்:உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரும், அகிலேஷ் யாதவின் தந்தையுமான, முலாயம் சிங் யாதவ், சமீபத்தில், புலந்த்சாகர் என்ற ஊரில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது, 'ஆளுங்கட்சியான நாங்கள், எங்கள் ... |
| 'ரிமோட் கன்ட்ரோல்' ஆட்சி நடப்பதாக மோடி ஆவேசம் : சோனியா, ராகுல் மீது சரமாரி குற்றச்சாட்டு Posted: கவுகாத்தி : ''சோனியாவும், ராகுலும், மன்மோகன் சிங் என்ற, 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம், நாட்டை ஆட்சி செய்கின்றனர் என்பது, நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளைவுகளை, அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.அசாமில், முதல்வர் தருண் கோகோய் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் உள்ள, 14 லோக்சபா தொகுதிகளில், எட்டு தொகுதிகளுக்கு ஏற்கனவே தேர்தல் முடிந்து விட்டது. மீதமுள்ள, ஆறு தொகுதிகளுக்கு, வரும், 24ல் தேர்தல் நடக்கிறது.இதே நிலை நீடிக்க வேண்டும்:இங்கு, பா.ஜ., சார்பில் போட்டியிடும் ... |
| தி.மு.க., மீது ஜெயலலிதா தாக்கு: சென்னை பிரசாரத்தில் ஆவேசம் Posted: சென்னை: ''தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்த, மத்திய காங்கிரஸ் அரசை ஆதரித்த, தி.மு.க.,வை விரட்டி அடிக்க வேண்டும். '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அடித்தளம் அமைத்த மத்திய சென்னை தி.மு.க., வேட்பாளர், இந்த தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்,'' என, சென்னையில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா ஆவேசத்துடன் கூறினார்.மத்திய சென்னை லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர், விஜயகுமாரை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, வேன் மூலம் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், அனைத்து துறைகளிலும், ஊழல் தலை ... |
| ராபர்ட் வாத்ரா சொத்து குவித்தது எப்படி? பா.ஜ., தலைவர் அருண் ஜெட்லி கேள்வி Posted: சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவின் சொத்து மதிப்பு, திடீரென உயர்ந்தது பற்றி, அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டி, பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, காங்கிரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற, புகழ்பெற்ற பொருளாதார பத்திரிகையில், சில தினங்களுக்கு முன், ஒரு செய்தி வெளியானது. சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ரா குறித்த அந்த செய்தியில், பல்வேறு புள்ளி விபரங்கள், அடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, அந்த புத்தகத்தில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 20,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |