Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்

Posted: 19 Apr 2014 08:31 AM PDT

சென்னை,

தாம்பரம் ரெயில்வே பணிமனை பணியையட்டி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு சென்னை கடற்கரை&பல்லாவரம் இடையே 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.

ரெயில்கள் ரத்து

சென்னை தாம்பரம் ரெயில்வே பணிமனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்ஜினீயரிங் தொடர்பான பணிகள் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை&தாம்பரம் மார்க்கத்தில் மொத்தம் 66 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை &தாம்பரம் மார்க்கத்தில் வார நாட்களில் மொத்தம் 230 மின்சார ரெயில்களும், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று 32 ரெயில்கள் குறைவாக 198 மின்சார ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. தாம்பரம் பணிமனை பணி காரணமாக ரெயில் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் பாதிப்படையக்கூடும்.

சிறப்பு மின்சார ரெயில்

ஆகவே என்ஜினீயரிங் பணிகள் நடைபெறும்போது, பயணிகளின் போக்குவரத்து தேவையை கருத்தில்கொண்டு சென்னை கடற்கரை&பல்லாவரம் இடையே ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகின்றது. இந்த ரெயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு பல்லாவரம் வரை செல்லும்.

பின்னர் பல்லாவரம் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கடற்கரை நோக்கி வரும். மாலை 4 மணிக்கு பின்னர் வழக்கமான கால அட்டவணைப்படி சென்னை கடற்கரை&தாம்பரம் மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் ஓடும் என்று தெற்கு ரெயில்வேயை சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

News Group Category:

சாம்ராஜ்நகரில் ஆலங்கட்டி மழை பலத்த காற்றுக்கு 2 ஏக்கர் வாழை நாசம்

Posted: 19 Apr 2014 08:25 AM PDT

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாம்ராஜ்நகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது சாம்ராஜ்நகர் அருகே உள்ள அமச்சவாடி கிராமத்தில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த ஆலங்கட்டி மழையால் அதே பகுதியை சேர்ந்த முகமது அமீர் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 2 ஏக்கர் வாழை மரங்கள் நாசமானது.

மேலும் சில தோட்டங்களில் தென்னை மரங்களும் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினரும், வேளாண்மை துறையினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

category:

News Group Category:

சீமாந்திராவில் இலவச டி.வி., லேப்–டாப் வழங்கப்படும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

Posted: 19 Apr 2014 08:23 AM PDT

ஐதராபாத்,

பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இங்குள்ள சீமாந்திரா பகுதியில் குறிப்பிடத்தக்க வகையிலான வெற்றியை பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக போராட வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இதை உணர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிட்டுள்ளது.

இதில், விவசாயத்துக்கு பகலில் 9 மணி நேர இலவச மின்சாரம், பெண்களுக்கு டிஷ் ஆன்டெனாவுடன் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி, அரசு கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்–டாப்கள் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும்.

சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தருவது, சீமாந்திரா வளர்ச்சிக்காக பாராளுமன்றத்தில் பிரதமர் அறிவித்த 6 அம்ச திட்டங்களை செயல்படுத்துவது போன்ற வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இதைப்போல அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயராது என்றும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 

category:

News Group Category:

சமூக வலைதளங்களில் நடிகர் அமீர்கான் பற்றி அவதூறு செய்தி பரப்பியவர் கைது

Posted: 19 Apr 2014 08:19 AM PDT

மும்பை,

நடிகர் அமீர்கான் கடந்த மார்ச் 9–ந் தேதி மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தன் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ மர்ம நபர் சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக புகார் கூறியிருந்தார். இதையடுத்து மும்பை சைபர் கிரைம் போலீசார் அமீர்கானுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்டவரை தேடி வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் மணிப்பாலை சேர்ந்த ஓய்வு பெற்ற வணிக கடற்படை அதிகாரி அஜீத் வடகாயில் என்பவர் சமூக வலைதளங்களில் அமீர்கானுக்கு எதிராக கருத்துகள் பரப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநிலம் சென்ற மும்பை போலீசார் அஜீத் வடகாயிலை கைது செய்தனர். அவரை மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

category:

News Group Category:

பெண் கற்பழிப்பு சம்பவம்: 10 ஆண்டுக்கு பிறகு புகார்; 3 பேர் கைது

Posted: 19 Apr 2014 08:17 AM PDT

மும்பை,

மும்பை மாட்டுங்கா லேபர் கேம்ப் பகுதியை சேர்ந்த பெண்ணை சபீர் சேக் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி அந்த பகுதியில் உள்ள லாட்ஜுக்கு அழைத்து சென்று கற்பழித்தார். இதை அறிந்த சுரேந்திர பிள்ளை மற்றும் ராஜேஷ் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்தனர். இந்த சம்பவம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.

இதனை அந்த பெண் யாரிடமும் சொல்லவில்லை. இந்நிலையில் தற்போது அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். அவரிடம் தனக்கு நடந்த அவலங்களை அந்த பெண் கூறி அழுதார். பின்னர் அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாட்டுங்கா போலீசில் புகார் அளித்தனர். புகாரை பெற்று கொண்ட போலீசார் சபீர் சேக், சுரேந்திர பிள்ளை, ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

category:

News Group Category:

ராதாகிருஷ்ணனுக்கு மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு

Posted: 19 Apr 2014 08:12 AM PDT

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து  சால்வை அணிவித்த போது எடுத்த படம்.

7

பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் வருகை

Posted: 19 Apr 2014 08:09 AM PDT

பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சிக்கு  கூடுதலாக துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெங்களூரில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்த போது எடுத்த படம்.

8

ஒரு தேர்தலில் ஓட்டு போடாதவர்களுக்கு அடுத்த தேர்தலில் தடை விதிக்க வேண்டும் தேர்தல் கமிஷனுக்கு அத்வானி யோசனை

Posted: 19 Apr 2014 08:04 AM PDT

போபால்

ஒரு தேர்தலில் ஓட்டுப்போடாத வாக்காளர்கள், அடுத்த தேர்தலில் ஓட்டளிக்க தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அத்வானி யோசனை தெரிவித்தார்.

அபராதம்

மத்தியபிரதேச மாநிலம் ஜபுவா அருகே தண்ட்லா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:

சில வெளிநாடுகளில், ஓட்டுப்போடாத வாக்காளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. நான் இங்கு அபராதம் விதிக்க சொல்லவில்லை.

தடை விதியுங்கள்

ஆனால், ஒரு தேர்தலில் ஓட்டுப்போடாத வாக்காளர்களை அடுத்த தேர்தலில் ஓட்டுப்போட அனுமதிக்கக்கூடாது. இதுகுறித்து நான் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் ஓட்டுப்போட வேண்டும்.
இவ்வாறு அத்வானி பேசினார்.

இந்த கூட்டத்தில், மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானும் பேசினார்.

category:

News Group Category:

ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா

Posted: 19 Apr 2014 07:54 AM PDT

ஊட்டியில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

9

தபால் ஓட்டு போட வரிசையில் நிற்கும் பெண் போலீஸ்

Posted: 19 Apr 2014 07:52 AM PDT

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தபால் ஓட்டு போட  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தபால் ஓட்டு போட வரிசையில் நிற்கும் பெண் போலீசாரை படத்தில் காணலாம்.

10


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™