Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்கிறார் மோடி

Posted:

புதுடில்லி:''எந்த மதத்தினரிடமும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்க மாட்டேன். தேர்தல் ஆதாயத்திற்காக, மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல்களை ஏற்க முடியாது. இங்கு வாழும், 125 கோடி மக்களும், ஒரு தாய் மக்களே,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறியுள்ளார்.வட மாநில தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது:மத்தியில், பா.ஜ., தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிப்பதற்காக, 24 மணி நேரமும் பாடுபடுவோம். பழைய ஊழல் குப்பைகளை கிளறி நேரத்தை வீணடிப்பதை விட, புதிய ஊழல்கள் நடைபெறாமல் ...

ஓட்டளிக்காவிட்டால் குடிநீர் கிடையாது: அஜித் பவார் மிரட்டல்

Posted:

மும்பை:'சரத் பவார் மகள், சுப்ரியா சுலேவுக்கு ஓட்டுப் போடாவிட்டால், குடிநீர் சப்ளையை துண்டித்து விடுவோம்' என, பாரமதி தொகுதி வாக்காளர்களுக்கு, மகாராஷ்டிரா துணை முதல்வர், அஜித் பவார் மிரட்டல் விடுக்கும், 'வீடியோ' வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சுப்ரியா சுலே போட்டி:மகாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசை சேர்ந்த, பிரித்விராஜ் சவான் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், துணை முதல்வராகவும் உள்ளனர்.இந்த லோக்சபா தேர்தலிலும், இரண்டு கட்சிகளும் இணைந்தே ...

கெஜ்ரிவாலுக்கு "அடி' :ஆம்ஆத்மிக்கு குவிகிறது நிதி

Posted:

ஆம்ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாதகத்தில், இப்போது சுக்கிர தசை போல நன்கொடைகள் கொட்டோ கொட்டு என்று கொட்டுகின்றன. கடந்த, 15ம் தேதி அவர் வாரணாசிக்கு சென்று சேர்ந்த உடனே, "நான் வாரணாசி வந்து சேர்ந்துவிட்டேன். மோடி மற்றும் ராகுலை எதிர்த்து போராட எனக்கு சுத்தபத்தமான (அதாவது கறுப்பு பணம் வேண்டாமாம்) பணம் தேவைப்படுகிறது என் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்' என, "ட்விட்டரில்' தகவல் அனுப்புகிறார் . அடுத்த 24 மணிநேரத்தில், ஆம்ஆத்மி கட்சியின் வங்கி கணக்கிற்கு, இணையதளம் மூலம் மட்டுமே, 8110 லட்சம் ரூபாய் நன்கொடையாக வந்து குவிந்தது என்ன அதிசயம்! ...

மோடியை தாக்குவது ஜெயலலிதாவுக்கு பலன் தருமா?

Posted:

தமிழக முதல்வரும், அதிமுக, தலைவருமான ஜெயலலிதாவின் தொடர் நிலைப்பாடு மாற்றங்கள், அந்த கட்சியினர் மத்தியில் பெரும் சோர்வை ஏற்படுத்தி உள்ளதாக, அதிமுக,வில் பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்கடந்த மார்ச் 3ம் தேதி, ஜெயலலிதா, தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கிய போது, கள நிலவரம் அதிமுக,விற்கு சாதகமாக இருந்தது. பின், அவர் கம்யூ, கட்சிகளை கழற்றிவிட்டார் அப்போது, பாஜ,வுடன் கூட்டணி வைப்பதற்காக தான் இத்தகைய முடிவை, ஜெயலலிதா எடுத்து உள்ளார் என்ற பேச்சு நிலவியது. அதற்கு ஏற்ப, அந்த நேரத்தில் பாஜ,வின் தற்போதைய கூட்டணி முடிவாகவில்லை; ஜெயலலிதாவும், பிரசார மேடைகளில் ...

தி.மு.க.,விற்கு 14 இடங்கள் : கருத்துக்கணிப்பை நம்பும் கருணாநிதி

Posted:

சென்னை: "குடிநீர், மின்வெட்டு பிரச்னை, அ.தி.மு.க.,வுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது என, என்.டி.டி.வி., கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:என்.டி.டி.வி., சார்பில், பிப்., 14ம் தேதி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில், "தமிழகத்தில் உள்ள மொத்தக் தொகுதிகளில், ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., 27 தொகுதிகளை பிடிக்கும்' என, தெரிவித்தனர்.அதே நிறுவனம் சார்பில், மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பில், அ.தி.மு.க., 25 இடங்களை பிடிக்கும் என்றும், தற்போதைய கருத்துக் கணிப்பில், அ.தி.மு.க.,வின் செல்வாக்கு தொடர்ந்து ...

ராமநாதபுரத்தில் மட்டும் ராகுல் பிரசாரம் : சிதம்பரம், வாசன் "அப்செட்'

Posted:

தேர்தல் பிரசாரத்திற்கு, தமிழகம் வரப் போவதில்லை என, முடிவெடுத்திருந்த, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், ராமநாதபுரம் தொகுதிக்கு மட்டும் வர, திடீரென சம்மதம் தெரிவித்துள்ளதால், கட்சியில் உள்ள மூத்த தலைவர்களான சிதம்பரம், வாசன், தங்கபாலு ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.புறக்கணிப்பு:சிதம்பரத்தின் மகன் கார்த்தி போட்டியிடும் சிவகங்கை, வாசனின் தீவிர ஆதரவாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடும் திருப்பூர், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு போட்டியிடும் கோவை, மணிசங்கர் அய்யரின் மயிலாடு துறை உள்ளிட்ட எல்லா தொகுதிகளையும் புறக்கணித்து விட்டு, ...

தமிழகத்தில் 20 இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி : பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

Posted:

"தமிழகத்தில், 20 இடங்களில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி," என, பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் கூறினார்.இம்மாதம் 24ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்காக, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்துள்ள ராஜ்நாத் சிங், திருச்சியில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், பா.ஜ., 272 இடங்களிலும், எங்களின் கூட்டணி, 300 இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகத்தில், 20 இடங்களில் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்."வானவில் கூட்டணி':மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், எவ்வித முற்போக்கு திட்டங்களும் இல்லை. ...

பதவியை பறிக்கும் முன் தி.மு.க., எம்.பி., செல்வகணபதி ராஜினாமா: 2 ஆண்டு தண்டனை பெற்றதால் எம்.பி., பதவிக்கு முழுக்கு

Posted:

தர்மபுரி:: ''சுடுகாட்டு கூரை ஊழல் விவகாரத்தில், சென்னை, சி.பி.ஐ., நீதிமன்றம் இரண்டாண்டு சிறை தண்டனை விதித்துள்ளதால், ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்துள்ளேன்; அதற்கான கடிதத்தை, ராஜ்யசபா தலைவருக்கு அனுப்பியுள்ளேன்,'' என, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள், தமிழக அமைச்சர் செல்வகணபதி கூறினார். தன் பதவியை, அரசு பறிக்கும் முன்பே, தானாக முன்வந்து, அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.இது குறித்து, தர்மபுரியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இது, எனக்கு சோதனையான மற்றும் சவாலான காலம். சுடுகாட்டு கூரை ஊழல் தொடர்பான வழக்கில், எனக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்து ...

தொகுதியை விட்டு கொடுத்து தெ.தேசத்துடன் பா.ஜ., சமரசம்

Posted:

ஆந்திராவில், பா.ஜ., - தெலுங்கு தேசம் கூட்டணி முறியும் சூழ்நிலை, தவிர்க்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு, ஒரு சட்டசபை தொகுதியை விட்டு கொடுக்க, பா.ஜ., முன்வந்துள்ளது.பலமான கூட்டணி : தென் மாநிலங்களை பொறுத்தவரை, கர்நாடகாவில் பா.ஜ., பலமாக உள்ளது. தமிழகத்திலும், பலமான கூட்டணி அமைத்துள்ளது. இதுபோல், ஆந்திராவிலும், பலமான கூட்டணி அமைப்பதற்கான பேச்சு நடந்தது. இறுதியில், சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சியுடன், பெரும் இழுபறிக்கு பின், கூட்டணி அமைந்தது. இதில், தெலுங்கானா தவிர்த்து, பிற பகுதியான சீமாந்திரா பகுதியில், 14 சட்டசபை தொகுதிகளிலும், ...

அமித் ஷாவுக்கு தடை நீக்கம்: அசம் கானுக்கு தொடர்வது ஏன்?

Posted:

புதுடில்லி: "பா.ஜ., பொதுச் செயலர் அமித் ஷாவுக்கு சலுகை காட்டிய தேர்தல் கமிஷன், எங்கள் கட்சியின் அசம் கான் விஷயத்தில் மட்டும் பாரபட்சமாகச் செயல்படுகிறது' என்ற, சமாஜ்வாதி கட்சியின் குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது."நான் பேசியது தவறு' : பா.ஜ., பொதுச் செயலர்களில் ஒருவரும், உ.பி., மாநில, பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான, அமித் ஷா, பிரசாரத்தின்போது, வெறுப்பை தூண்டும் விதமாக பேசுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்தது.இதேபோல், முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவரும், உ.பி., மாநில ...

"பிரதமரின் செயல்பாடு சிறப்பு தான் மீடியாக்கள் கண்டுகொள்ளவில்லை' : பிரதமர் அலுவலகத்திற்கு வீரம் வந்திருச்சு!

Posted:

புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாட்களுக்கு ஒரு முறை, பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார். மீடியாக்கள் தான் கண்டுகொள்ளவில்லை; பொருளாதார வளர்ச்சியை இந்தியாவை போல், எந்த நாட்டிலும் பார்க்க முடியாது,'' என்று பிரதமரின் மீடியா ஆலோசகர் பங்கஜ் பச்சோரி கூறியுள்ளார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து, நரேந்திர மோடி, மத்திய அரசை பலவழிகளில் சாடி வந்தார். ஊழலில் ஆரம்பித்து, வளர்ச்சி, குஜராத்தோடு ஒப்பீடு, ராகுல், சோனியா என வசைபாடி, இப்போது பிரதமர் செயல்பாடு வரை வந்துள்ளது."தாயும், மகனும் சேர்ந்து அதிகார மையமாக செயல்பட்டனர். பிரதமர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™