Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அந்த வீடும் சில மரங்களும்!

Posted: 18 Apr 2014 12:47 PM PDT

மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகாரத்தை அடிக்கடி திருப்பி பார்த்து, தனக்கிருக்கும் வேலைகளின் அவசரத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தான் சரவணன்.''எப்படா வர்றதா சொன்னான், அந்த குமாரு? எனக்கு வேலை இருக்குடா,'' என்று, தம்பி செந்திலைப் பார்த்து கேட்டான் சரவணன்.''வந்துடுவார்ணே, அதுக்கு முன்னால, அப்பாகிட்ட எல்லாத்தையும், சொல்லி புரியவச்சுட்டியா... அவர் பாட்டுக்கு உளறி, காரியத்த கெடுத்துடப் போறாரு.'' மகன்கள் பேசிக் கொள்வது, கல்யாண முருங்கை மரத்தடியில் அமர்ந்திருந்த, சத்திய மூர்த்திக்கு துல்லியமாய் கேட்டது. ...

பகவான் ஸ்ரீகிருஷ்ணர்

Posted: 18 Apr 2014 10:44 AM PDT

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தைப் பற்றி நாம் பெருமை கொள்கையில் நாம் ஒரு பாரம்பரியத்தை அதற்குரிய மரியாதையுடன் நோக்குகிறோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பாத்ரபத மாதம் ஓர் இருட்டான அஷ்டமி திதியன்று ரோஹிணி நட்சத்திரத்தில் ஒரு தெய்வப் பிறவி இப்பூமியில் தோன்றியது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரையும் தெய்வீக சக்தியை உணர வைத்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பிறப்பு நடுநிதி அஷ்டமி திதியில் இப்பூமிக்கு வந்தது. இப்படிப்பட்ட ஒரு அவதாரம்தான் ஸ்ரீ கிருஷ்ணர். இவரைத்தான் நாம் மனித உருவில் வழிபடுகின்றோம். ஒரு ...

இது சிறுசுங்க!!

Posted: 18 Apr 2014 10:22 AM PDT

அழுக்கான வீட்டில் அழகிய சுந்தரி சிப்பிக்குள் முத்து! .................................................. கீழ் நோக்கி பணிந்து மற்றவரை மகிழ்வித்தது புடலங்காய்! ................................................... தானும் உதவவில்லை மற்றவரையும் விடவில்லை சந்திரன் மறைத்த மேகம்! .................................................... தன்தலை சுற்றி மற்றவரை மகிழ்விக்கும் மின் விசிறி! ..................................................... தன் வால் பிடித்தோனுக்கு வழி சொல்லி ...

ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம்

Posted: 18 Apr 2014 10:19 AM PDT

தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் எல்லாம் இன்று தமிழர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க. இவர்களுக்கு நாம் எதற்காக ஓட்டு போட வேண்டும்? இப்படிப்பட்டவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள். இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் செல்வராசு தலைமை தாங்கினார். விஜயகுமார் முன்னிலை வகித்தார். கட்சி தலைவர் சீமான் கூட்டத்தில் ...

என்னைப் பற்றி அறியலாமே!

Posted: 18 Apr 2014 10:15 AM PDT

பெயர்:மு.ஹ.ஜவ்ஹர்
சொந்த ஊர்:இலங்கை,கிண்ணியா (திருகோணமலை மாவட்டம்)
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:தேடல் மூலம்
பொழுதுபோக்கு:கண்டதையும் கற்பது பிடித்ததை ஏற்று நடப்படு
தொழில்: எழுதுவினைஞர்
மேலும் என்னைப் பற்றி:சமூக சேவை செய்வது தொண்டுசெய்வோருக்கு கை கொடுப்பது
  

மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே?

Posted: 18 Apr 2014 10:12 AM PDT

கோடைக் காலம் தொடங்கினாலே வெயிலும் குடிநீர்த் தட்டுப்பாடும் பெரும் பிரச்சினைகள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலையைவிட இப்போது தமிழ்நாட்டின் கிணறுகளில் நீர்மட்டம் மேலும் கீழே போய்விட்டது என்று அரசின் நிலத்தடி நீர் தகவல் மையம் அதிர்ச்சியூட்டியிருக்கிறது. 22 மாவட்டங்களில் முன்பிருந்ததைவிட இரண்டு மீட்டருக்கும் மேல் நீர்மட்டம் இறங்கிவிட்டது. சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 6 மீட்டர் முதல் 7 மீ்ட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. எந்த மாவட்டத்திலும் ...

டைட்டானிக் சாதனையை முறியடித்த மோகன்லாலின் த்ரிஷ்யம்

Posted: 18 Apr 2014 10:08 AM PDT

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான த்ரிஷ்யம் மலையாள சினிமா டைட்டானிக் சாதனையை முறியடித்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள்கள் ஓடிய ஒரே படம் என்ற பெருமையை டைட்டானிக் திரைப்படம் தான் இதுவரை பெற்றிருந்தது. ஆனால் அந்த படத்தின் சாதனையை முறியடித்து தென்னிந்திய படமான த்ரிஷ்யம் (மலையாளம்) முறியடித்து உள்ளது.திரிஷ்யம் கடந்த ஜனவரி மாதம் 2 ந்தேதி எல்டோரடோவில் வெளியானது 100-வது நாளை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. மோகன்லாலின் ...

மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்

Posted: 18 Apr 2014 10:08 AM PDT

"தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய
நமது வீரர்களை எல்லாம்
மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?

ஆமாம் அவர்கள் தோண்டிய சுரங்கம்
அரண்மனையின்
தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது

மருத்துவ சிரிப்பு வெடி

Posted: 18 Apr 2014 10:07 AM PDT

டாக்டர்

உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மனைவி

அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?

டாக்டர்

மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.

கணவன் - மனைவி ஜோக்ஸ்

Posted: 18 Apr 2014 10:05 AM PDT

ராஜா: "குழந்தை மாதிரீ இருந்த பால்காரர் மகளை கல்யாணம் பண்ணிகிட்டியே இப்போ எப்படி இருக்கே?"


ரவி: "வீட்டுல நான் மாடு மாதிரீ கஷ்டப்படுறேன். அவள் இன்னும் குழந்தை மாதிரீயே தமாசாக பக்கத்துவீட்டு பையனோட விளையாட போயிடுறா சார்."

விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்!

Posted: 18 Apr 2014 10:03 AM PDT

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீடியேஷன் பிரிவில் விவாகரத்துக்கு வழக்குத் தாக்குதல் செய்த 500 தம்பதிகளைச் சேர்த்து வாழவைத்த வழக்கறிஞர் கிஷோர் குமாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கேஷ் அவார்ட் வழங்கியிருக்கிறார். அதுபற்றி திரு. கிஷோர் குமாரிடம் கேட்டோம். ''குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு சேர்ந்து வாழ முடியாத கணவனோ, மனைவியோ நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்வார்கள். அதில் கொடுமை செய்கிறார் அல்லது விட்டுட்டுப் போய்விட்டார் என்று நீதிமன்றத்தில் பொதுவாக 131(A) கீழ் வழக்குப் பதிவு செய்வார்கள். ...

600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம்

Posted: 18 Apr 2014 10:00 AM PDT

எத்தனையோ புது இயக்கங்கள், எழுச்சி, நிலையங்கள். ஆனால், காட்டாறு போல் ஓடி காளான்கள் போல் முளைத்து காணாமல் காலாவதியான இயக்கங்கள் பலப்பல... ஆனால் காலத்தையும் வென்று கலங்கா நிலையில் இருப்பது கடவுள் இயக்கங்களே என்பது நம் கண்கூடு. அப்படி அறுநூறு ஆண்டுகளாக வளர்ந்து எழுந்து நிற்கும் ஒரு உன்னதமான ஆன்மீக இயக்கம் அஹோபில மடம். 'அஹோ' என்றால் குகை 'பிலம்' என்றால் சிங்கம். அதனால்தான் தமிழில் சிங்கவேள்குன்றம் என்றார்கள். ஆந்திர மாநிலத்தில் கடப்பா - கர்னூலுக்கு அருகில் உள்ளது இந்தச் சிங்கவேள்குன்றம். அன்று ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 18 Apr 2014 09:26 AM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

தென்கொரிய கப்பல் விபத்து: 28 உடல்கள் மீட்பு; 268 பேரை தேடும் பணி தீவிரம்

Posted: 18 Apr 2014 09:22 AM PDT

தென்கொரிய கப்பல் விபத்தில் உயிரிழந்த 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 268 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தென்கொரியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் புதன்கிழமை காலை பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்தது. கடலுக்குள் மூழ்கிய 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உள்ளிட்ட 475 பயணிகளை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் 28 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 268 பயணிகள் மாயமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து ...

கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் *

Posted: 18 Apr 2014 07:37 AM PDT

கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் ***** புத்தகத்தைப் படித்தேன் மிகவும் அருமை. புவனத்தில் விடுபட்ட தலைவர்களை எல்லாம் புத்தகத்தில் நிரப்பி விட்டார் கவிஞர். இந்தக் கணினி யுகத்திலும் கூட காந்தியைக் கூட காகித நோட்டுக்களில் வருபவராகத்தாகத் தான் பலர் கணித்து வைத்திருக்கிறார்கள். வல்லிக் கண்ணன், நேதாஜி போன்றோரெல்லாம் பலரின் பார்வைக்கு தலைமறைவு! காமராஜர் முதல் கலாம் வரை அனைவரின் பெருமையையும் கவிஞர் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு! அதிலும் ...

இதெல்லாம் ஒரு புத்தகமா ? நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Posted: 18 Apr 2014 06:49 AM PDT

இதெல்லாம் ஒரு புத்தகமா ? நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வாசகன் பதிப்பகம் , 11/96, சங்கிலி ஆசாரி நகர் , சந்நியாசி குண்டு, சேலம் 636 016 விலை : ரூ. 70 . kavignareagalaivan@gmail.com அலைபேசி 9842974697. ***** இந்த நூலின் தலைப்பு நூலாசிரியரின் பெயர் போலவே வித்தியாசமாக உள்ளது. "இந்தப் புத்தகத்தை வாங்காதீர்கள்" என்று தலைப்பிட்டு நிறைய பேரை வாங்க வைத்து பல பதிப்புகள் வெளியான நூலின் ஆசிரியர் நீயா? நானா? திரு. கோபிநாத் ...

டூ இன் ஒன்!

Posted: 18 Apr 2014 06:44 AM PDT

1. இரவல் ஒரு வீட்டில் ஒரு பெண் நாய் கடித்து இறந்துவிட்டாள். அவளின் சடலம் வீட்டின் முன்பாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே அந்த நாயைக் கட்டி வைத்திருந்தனர்.அஞ்சலி செலுத்திட பல்லாயிரம் பேர்கள் கையில் மாலையுடன் நீண்ட வரிசையில் நின்றனர். அவ்வளவு கூட்டம். அந்த வழியே வந்த ஒருவருக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போய்விட்டது. இந்தத் தெருவில் இவ்வளவு பேர்கள் மாலையுடன் அஞ்சலி செலுத்திட மரணம் அடைந்த முக்கிய நபர் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ...

தான தர்மம்!

Posted: 18 Apr 2014 06:42 AM PDT

விருதூரில் விக்னேஷ் என்ற செல்வம் மிகுந்த வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி மங்கை நற்பண்பு நிறைந்தவளாக விளங்கினாள். கணவனிடம் அவள், ""நாள்தோறும் ஏழை எளிய மக்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்த நல்வினை பயனாக நமக்குச் சொர்க்கம் கிடைக்கும்,'' என்றாள்.""இப்போது என்ன அவசரம்? நாம் இன்றைக்கேவா இறந்துவிடப் போகிறோம்? நான்கைந்து ஆண்டுகள் செல்லட்டும். உன் விருப்பம் போலப் பிறருக்கு உதவி செய்யலாம்,'' என்பான் விக்னேஷ்.அவளும் அவ்வப்போது, இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவனும் ...

தெரிஞ்சுக்கோங்க!..............மூடுபனி வருவதற்கு என்ன "மூடு' வேண்டும்?

Posted: 18 Apr 2014 06:40 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

படித்ததில் பிடித்தது :) - அடடே... அப்படியா...?

Posted: 18 Apr 2014 06:37 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

உடற் காங்கை

Posted: 18 Apr 2014 05:19 AM PDT

சிலரின் உடல் எப்பொழுதும் "சூடாக" வே இருக்கும். இவர்களை தொட்டால் சூட்டை உணரலாம். அவர்களின் உடல் சூட்டை தர்மாமீட்டரில் பார்த்தால் 'நார்மலாக' இருக்கும். ஆனால் தொட்டால் சுரம் அடிப்பது போல் இருக்கும். இந்த உடல் சூடு, புதுமண தம்பதிகளுக்கு ஒரு வகை பிரச்சனை தான். நமது உடல், வெளிப்புற தட்ப, வெப்பத்திற்கு ஏற்ப, உடல் உஷ்ண நிலையை ஓரளவு கூட்டி, குறைக்கும். மனிதன் உஷ்ண ரத்தப்பிராணி. குளிர்ரத்த பிராணிகளான பாம்பு போன்றவற்றுக்கு, மனிதன் உடலிலிருப்பது போன்ற தெர்மோ - ஸ்டாட் (Thermostat) அமைப்பு இல்லை. இவைகளுக்கு ...

ஏக்கம்

Posted: 18 Apr 2014 04:21 AM PDT

உன்னுள் உறவு என்னுள் சுகம் உன்நினைவு என்னுள் இரணம் உமது உருவு கண்டு உள்ளம் உறங்காது உருண்டேன் ,புரண்டேன் உயிரற்ற தலையணையும் உதறி தள்ளியது உன்னைப் போல் மென்மையாய் . உறக்கம் தொலைத்தேன் உன் உணர்வை தொலைக்காது . உமது கரம் உரச காயமானது மனம் காமமானது அகம் மருந்திட வேண்டாம் பெண்ணே ! உமது கரம் கொடு காயம் மாயமாகும் . நீரோடையாய் எனது மனம் இரு விழிகளில் சிக்கி உன்பின்னால் ஓட்டம் உமது கரம் பட்ட ஆடையை கசக்க மறுக்கிறது மனம் கைரேகை களவு போய்விடுமென்று . நீ புவிந்தெழுந்த நாள்தனில் ...

ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங் கோ ! ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 18 Apr 2014 04:17 AM PDT

ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! md@acea2z.com ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கிழக்கு பதிப்பகம் 177/103, முதல் தளம் அம்பாள் கட்டிடம் ,லாயட்ஷ்சாலை ,ராயப்பேட்டை , சென்னை .6000014. விலை ரூபாய் 100. இந்த நூலில் 17 கட்டுரைகள் உள்ளன.படிக்கும் வாசகர் மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் நூல் .நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ அவர்கள் புறப் பார்வையற்ற மாற்றுத் திறனாளி அல்ல அவரது மொழியில் சிறப்புத் திறனாளி ஆனால் அவருக்கு அகப் பார்வை ஆயிரம் உள்ளன ...

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை

Posted: 18 Apr 2014 03:05 AM PDT

ஈகரை தளத்தில் தனித்தனியாக பதியப்பட்ட சத்திய சோதனையின் மொத்த
பதிப்பும் PDF வடிவத்தில் தரவிறக்க

இங்கே சொடுக்கவும்
https://www.dropbox.com/s/fw21swf10hol57i/மகாத்மா%20காந்தியின்%20சுய%20சரிதை%20-%20சத்திய%20சோதனை.pdf

தேர்தல் நகைச்சுவை

Posted: 18 Apr 2014 01:15 AM PDT

தினமலர் தளத்தில் வந்த தேர்தல் பற்றிய நகைச்சுவை படங்கள் இவை , இது போல வேறு பத்திரிகைகளில் வருவதையும் இங்கு பதிவிடுங்கள் நண்பர்களே






கறியமுதுகள் - பொரியல்கள் - வாழைக்காய் பொடிமாஸ்

Posted: 18 Apr 2014 01:08 AM PDT

இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம். இதில் பல வகைகள் உண்டு. அதாவது : 1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது 2 . வதக்கல் 3 . பருப்பு உசிலி 4 . மசியல் வகைகள் 5 . பொடிமாஸ் 6 . மசாலா போட்ட கறியமுது 7 . பல காய்கள் போட்ட கறியமுது 8 . பொடி போட்ட கறியமுது 9 . வேகவைத்த கறியமுது 10. வாழைக்காய் பொடி 11. வெறும் தேங்காய் ...

பறக்கத் தெரியாத பறவைகள்

Posted: 17 Apr 2014 11:13 PM PDT

காதலென்னும் மாயையால் காதல் வரையறை கடந்து கட்டுப்பாடு இழந்து காளையிடம் கற்பை காவு கொடுத்து வயிற்றிலும் ,மனதிலும் பாரம் சுமக்கும் பறவைகள் . கல்வி கற்க காசில்லா சிறார்கள் கட்டிட தொழிலாளியாய் குடும்ப சுமை போக்க தலையில் செங்கல் சுமைதாங்கி தேநீர் கடைதனில் தேனீயாய் சுவற்றில் சுவரொட்டி பதிக்க ஒரு சுவரொட்டிக்கு 1 ரூபாய் வீதம் ஒட்டிய வயிற்றை நிரப்ப குழந்தை தொழிலை ஒழிப்போம் அரசு அறிவிப்பை ஒட்டிக்கொண்டு கிழிந்த ஆடையை ஒட்ட மறந்த சிறு பறவைகள் . அரைகுறை ஆங்கில மோகத்தால் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 17 Apr 2014 10:39 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

கோடை கவிதைகள் {சென்ரியு }

Posted: 17 Apr 2014 09:11 PM PDT

குளிர்ச்சியாக இருக்கிறது இளநீர் * குண்டு குண்டாக உருண்டு கிடக்கிறது பாதையோரம் தர்பூசணி. * குளிர்சாதன அறையில் அமர்ந்து ஒரு மணி நேரமாய் குடிக்கிறார்கள் தேனீர். * ஹெல்மெட் வழியே வழிகிறது துளித் துளியாய் வியர்வை. * * ஒடி வந்து பஸ் ஏறிய பயணியின் மேல் எரிந்து விழுந்தார் கண்டக்டர். * விசிறிக் கொண்டே விற்கிறான் பனைஒலை விசிறி.

ந.க.துறைவன் புதுக் கவிதைகள்

Posted: 17 Apr 2014 08:32 PM PDT

பெரும் தயக்கம்{புதுக் கவிதை} * ஊரிலிருந்து வந்தவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. நீங்க யாரென்று கேட்டதற்கு உறவினர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர்களுக்குச் சொந்த மென்று விவரமாய்ச் சொன்னார். என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டேன். தேடி வந்தச் செய்தியைச் சொன்னார். * ஊர்காரர் என்றாலும் அறிமுகமில்லாதவர்க்கு எப்படி உதவி செய்வ தென்று பெரும் தயக்கம். சரி பார்க்கலாம் என்றேன். "கொஞ்சம் பார்த்து செய்யுங்க" என்று கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார். மறு முனையிலிருந்து போன் வந்தது. "நம்ம ...

போற்றுவார் தூற்றப் பணிந்திடாதே!!!

Posted: 17 Apr 2014 07:51 PM PDT

பாடம் படிக்க செல் ! பார் உனை அழைத்து! பட்டம் பல சூட்ட! பரிதவிக்கும் பாமரர் துயர் துடைக்க! பகடைக் காயாய் நில்லாதே! பணத்தைக் கொண்டவன் பாதம் பணியாதே! போற்றுவார் தூற்ற பணிந்திடாதே! உன்னால் முடியும் சாதிக்க! உயர்வாம் நிலையை எற்றிட! உடைந்து மனம் தளர்ந்து உணர்விழந்து போகாதே! உறுதியாய் நில் - வெற்றி உனை அணைக்கும்! மானம் காப்பாய் - பிறப்பின் மகிமையை உணர்வாய்! மயங்கிடாதே போதையாய்! மங்கையர் கண்டு! மாயை அது ! மறந்து விடு! முன்னே பல பணிகள் முயன்றிடு ! முன்னின்று பணி செய்! மூத்தோர் ...

ஹைக்கூ ...

Posted: 17 Apr 2014 07:43 PM PDT

தெருவில் சிதறீ கிடந்த நெல்மணி,
வேகமாய் வரும் லாரி,
ஆட்டுக்கு மரண பசி!!

ஹைக்கூ

Posted: 17 Apr 2014 07:41 PM PDT

 இனித்தது கரும்புக்குள்ளிருக்கும் உழவனின் வியர்வை.  புன்னகை செய் பூமியே உன்னை புகைபடம் பிடிக்கிறது பளிச்சென மின்னல்.  தலைக்கணம் மிகுந்தவன் அழிந்துபோவான் தீக்குச்சி.  முன்னேற்றம்தான் பின்னோக்கி சென்றாலும் கயிறு திரிப்பவன்.  மசூதியின்மேல் இளைப்பாறுகிறது கோயில்புறா.  தொட்டாலும் விரிகிறது தொட்டா சுருங்கி தொடுவது அவள்.  சுற்றிலும் முட்கள் நடுவில்ரோஜா வெற்றி.  தலைகுனிந்ததுதானாக வேண்டும் மாடி வீட்டுக்காரன் ...

தேர்தல் 'தமாசு'

Posted: 17 Apr 2014 07:40 PM PDT

நபர் 1: அந்த வீட்ல ஏதோ போர்டு மாட்டியிருக்கே என்னது? நபர் 2: இங்கு 'தட்கால்' முன்பதிவில் ஓட்டுகள் கிடைக்கும்னு போட்டு இருக்கு! பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி தொண்டர்-1: 'நம்ம வேட்பாளருக்கு ஓரளவு இருந்த மக்கள் ஆதரவையும் தலைவர் பேசி கெடுத்துட்டாரு...!' தொ. 2: 'என்ன பேசினார்...?' தொ. 1: 'நானே இந்த தொகுதியில வேட்பாளரா நிக்கறதா நினைச்சிக்குங்க வாக்காளர்களேன்னு தான்...!' ரா. திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர் நபர் 1: இவர் ஓட்டு புரோக்கர்னு எதை வச்சு சொல்றே? நபர் 2: ...

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 17 Apr 2014 06:23 PM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு நான்காவது இடம்

Posted: 17 Apr 2014 06:20 PM PDT

ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்குத் தண்டனை விதிக்கப்படாத நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா நான்காவது இடத்தை வகிப்பதாக, சிபிஜே என்று அழைக்கப்படும் நியுயோர்க்கை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்தப் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த பத்தாண்டுகளில் 100 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட போதும், அத்தகைய கொலைகளுக்கு காரணமானவர்கள் எவரையும் தண்டிக்க நடவடிக்கை எடுக்காத ஈராக், இந்தப் பட்டியலில் முதலிடத்தை. ...

தேர்வு முடிவு -நொச்சி இதழ்

Posted: 17 Apr 2014 05:48 PM PDT

காத்திருப்பவன்
பருவத்தே பயிர் செய்யும்
உழவன் மட்டுமல்ல
நாங்களும்தான்
வருவது
மழையோ? புயலோ?
- வி.பப்பிதா

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 17 Apr 2014 05:27 PM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

சிலுவையின் மறு உயிர்ப்பு (கஸல்)

Posted: 17 Apr 2014 05:19 PM PDT

உன் நினைவுகள்
ஆயிரமாயிரம் முறை
உயிர்த்தெழுகின்றன
அத்தனை முறையும்
சிலுவையில் அறைகிறாய்

என் கவிதைகள்
காதலைச் சுமக்கும்
சிலுவைமரம்
உன் வாசிப்பினால்தான்
மறு உயிர்ப்போடு துளிர்க்கிறது

இறைவா!
நீ சுமந்த சிலுவையை
இன்று
ஒவ்வொரு காதல் தோல்வியும்
சுமக்கின்றன



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™