Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மக்களின் தீர்ப்பை எதிர்பார்க்கிறேன்: மோடி பேட்டி

Posted:

காந்திநகர்: தற்போது தான் மக்கள் நீதிமன்றம் முன்பு உள்ளதாகவும், அவர்களின் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனியார் செய்திநிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், குஜராத் கலவரம் தொடர்பாக நான் அமைதியாக இருக்கவில்லை. கடந்த 2002-2007ம் ஆண்டு காலகட்டங்களில், இந்தியாவின் பல மூத்த பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன். ஆனால் உண்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர முடிகிறது. ...

நிதி விவரத்தை தெரிவிக்காத கட்சிகள்: வரி சலுகை ரத்து செய்ய கமிஷன் முடிவு

Posted:

புதுடில்லி : 'நன்கொடை மற்றும் செலவு கணக்கு விவரங்களை, குறித்த காலத்திற்குள் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வருமான வரிச் சலுகையை, ரத்து செய்ய வேண்டும்' என, மத்திய நேரடி வரிகள் ஆணையத்திடம், தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டு உள்ளது.தேர்தல் கமிஷனில், பதிவு செய்த கட்சிகள், தனி நபர்கள், நிறுவனங்களிடமிருந்து பெறும் நன்கொடை, நிதி பற்றிய விவரங்களை, ஆண்டுக்கு ஒரு முறை, தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டும்.'அந்தத் தொகை, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அது பற்றிய விவரத்தையும், செலவு விவரத்தையும், தேர்தல் கமிஷனுக்கு, கடந்த செப்டம்பர் மாதத்திற்குள் ...

121 தொகுதிகளில் இன்று ஐந்தாம் கட்டம் ஓட்டுப்பதிவு: முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டி

Posted:

புதுடில்லி:நாட்டின், 16வது லோக்சபாவிற்கான எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான, ஐந்தாம் கட்ட தேர்தல், இன்று நடைபெறுகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட, 12 மாநிலங்களில் உள்ள, 121 தொகுதிகளில், இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.நாடு முழுவதும், ஒன்பது கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலின், ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு, 12 மாநிலங்களில் இன்று நடக்கிறது. இம்மாதம், 7, 9, 10, 12 என, நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று, ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில், 1,769 வேட்பாளர்கள் ...

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி துவக்கம்: மின் வாரியத்திற்கு அடுத்த சோதனை

Posted:

சென்னை : தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப, மின்சாரம் உற்பத்தி ஆகாத நிலையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, நேற்று துவங்கியுள்ளதால், மின் தேவை, கூடுதலாக, 500 மெகாவாட் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தின் ஒருநாள் மின் தேவை, 12 ஆயிரம் மெகாவாட்; மின் உற்பத்தி, 11 ஆயிரம் மெகாவாட். 'மே முதல் ஜூலை வரை, மின் தேவை, 13 ஆயிரம் முதல், 14 ஆயிரம் மெகாவாட் இருக்கும்' என, கணக்கிடப்பட்டு உள்ளது.தற்போது, வெயில் கடுமையாக உள்ளதால், வீடுகளில், பகல் நேரங்களிலும், 'ஏசி' பயன்பாடு அதிகரித்துள்ளது. லோக்சபா தேர்தல் காலம் என்பதால், பொதுக்கூட்டங்கள் அதிகளவில் நடக்கின்றன.இதனால், கோடைக்கு முன்னரே, மின் ...

மின் உற்பத்தியில் சதி செய்ய முடியுமா?முதல்வர் குற்றச்சாட்டால் பலர் அச்சம்

Posted:

தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில், 'மின் உற்பத்தியில் சதி' என, முதல்வர் ஜெயலலிதா பேசியது, அத்துறையில் பணியாற்றும் பலரை, குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.ஆட்சியாளர் வகுக்கும் திட்டம், அதற்கேற்ப நிதிவசதி மற்றும் பணிகளை நிறைவேற்ற, துறை சார்ந்த வல்லுனர்கள் இருந்தால், இம்மாதிரி துறைகளில் நடக்கும் பணிகளில், அதிக பாதிப்பு ஏற்படாது. மாறாக, இந்த குற்றச்சாட்டால், தற்போது நடைபெறும் மின் பணிகள் கூட, என்ன நடவடிக்கை வருமோ என்ற அச்சத்தில், தேக்கம் அடைய வாய்ப்புகளை ஏற்படுத்தி விடும் என்ற கருத்தும் பேசப்படுகிறது.90 ஆயிரம் ஊழியர்கள்:தமிழ்நாடு மின்சார ...

'ஏ' டீம் யாரென தேர்தலுக்குப்பின் தெரியும்: முதல்வருக்கு ஸ்டாலின் பதில்

Posted:

''தேர்தலுக்கு பின், யார், எந்த டீம் என்பது தெரியவரும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.ஈரோட்டில் உள்ள மாவட்ட, தி.மு.க., அலுவலகத்துக்கு, நேற்று காலை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வந்தார். அங்கு, தி.மு.க., நகர, ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கூட்டம் முடிந்து வெளியே வந்த ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில், 51 லட்சம் ரூபாய் பிடித்தது குறித்து, தேர்தல் ஆணையத்திடம், முறைப்படி புகார் தெரிவித்து உள்ளோம். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறோம். அ.தி.மு.க.,வினரின் இதுபோன்ற நடவடிக்கையை, பத்திரிகைகள் வெளிப்படையாக ...

ஆம்ஆத்மியில் நடக்கும் ஊழல்கள் வெளிப்படுத்துகிறார் வாரணாசி வேட்பாளர்

Posted:

வாரணாசியில், நரேந்திர மோடியை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். ஆனால், அதே வாரணாசியில், அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து அவரது ஆம்ஆத்மி கட்சியின் முன்னாள் தொண்டர் ஒருவர் போட்டியிடுகிறார். 'மோடி எங்கு நின்றாலும், அங்கு அவரை எதிர்ப்பேன்' என்று கெஜ்ரிவால் கூறுவதை போல, 'கெஜ்ரிவால் எங்கு நின்றாலும், அங்கு அவரை எதிர்ப்பேன்' என, இந்த, கட்சி 'மாஜி' சொல்லி வருகிறார்.மதன் திவாரி; வழக்கறிஞர். ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து, பணியாற்றியவர். உள்ளே சென்ற பின் தான், அவருக்கே தெரிந்தது, கட்சியில் நடக்கும் பல ஊழல்களுக்கு பதில் இல்லை என்று.அதன் பின்தான் அவர் ...

பா.ஜ., கூட்டணிக்கு ஒன்பது தொகுதிகள்! சர்வே முடிவால் அ.தி.மு.க., அதிர்ச்சி

Posted:

தமிழகத்தில் முதல் முறையாக, இந்த தேர்தலில், தனது தலைமையில் அணி அமைத்து போட்டியிடும், பா.ஜ.,வுக்கு, ஒன்பது இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக, பா.ஜ., மேலிடம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. தமிழக உளவுத்துறை எடுத்த கள ஆய்விலும், இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.நாற்பது தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்குடன் தேர்தலை சந்தித்து வரும், ஆளும் அ.தி.முக.,வுக்கு இந்த தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால், 30 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என, முனைப்புடன் அக்கட்சி, இறுதிக்கட்டத் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் துவங்கி உள்ளதாக ...

ரிமோட் கன்ட்ரோல்' அரசு தேவையில்லை : கோவை பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு

Posted:

கோவை:'ரிமோட் கன்ட்ரோல் அரசு தேவையில்லை. மத்தியில் வலிமையான அரசு அமைய, பா.ஜ., கூட்டணிக்கட்சிகளுக்கு ஓட்டளியுங்கள்,'' என்று, கோவையில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேசினார்.கோவை பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி கொ.ம.தே.க., வேட்பாளர் ஈஸ்வரன் ஆகியோரை ஆதரித்து, கோவை, கொடிசியா அருகே நடந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசியதாவது:மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். ஆனால், காங்., கட்சியினர், மோடி பதவிக்கு வரக்கூடாது என்று நினைக்கின்றனர். பொதுவாக தேர்தலென்றால், ...

மீனவர் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை: தமிழக அரசு மீது சோனியா குற்றச்சாட்டு

Posted:

நாகர்கோவில் : ''தமிழக- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு, மத்திய அரசு ஏற்பாடு செய்த போது மாநில அரசு தாமதப்படுத்தியது,'' என,கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்., தலைவர் சோனியா குற்றம்சாட்டினார்.அவர் பேசியதாவது:கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட போதும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் வகையில், ஐ.மு., கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது.வறுமைக்கோடுக்கு கீழே வாழ்ந்த 40 கோடி பேரின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது; அவர்களுக்கு கல்வி, வேலை, உயர்கல்வி, தொழில், மருத்துவ வசதிகள் ...

மத்திய அரசு திட்டங்களை மறுத்தவர் ஜெ.,: வேலூரில் கருணாநிதி காட்டம்

Posted:

வேலூர்: மத்திய அரசு கொடுக்க நினைத்த திட்டத்தை, வேண்டாம், என திருப்பி அனுப்பிய ஒரே முதல்வர் ஜெயலலிதா தான்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல்ரகுமான், அரக்கோணம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் இளங்கோ, திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் அண்ணாத்துரை, ஆரணி தொகுதி வேட்பாளர் சிவானந்தம் ஆகியோரை ஆதரித்து, வேலூரில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:வேலூரில், அதிகாரிகள், போலீசார் பாடுபட்டு, இக்கூட்டத்தை எந்த அளவுக்கு சிறிதாக நடத்த முடியுமோ, அந்த அளவுக்கு நடத்த அனுமதி அளித்துள்ளனர். இதே அதிகாரிகள், ...

தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் மீது மோடி விளாசல்: தமிழக அவல நிலைக்கு காரணம் என தாக்கு

Posted:

பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் களுக்கு ஆதரவாக, நேற்று கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கோவையில் பிரசாரம் செய்த, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியை விளாசித் தள்ளினார். தமிழகத்தின் அவல நிலைக்கு, இந்தக் கட்சி களே காரணம் என்றும், குற்றம்சாட்டினார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, பா.ம.க., கட்சியின், தர்மபுரி வேட்பாளர் அன்புமணி, கிருஷ்ணகிரி வேட்பாளர் ஜி.கே.மணி, அரக்கோணம் வேட்பாளர் வேலு, ஆரணி வேட்பாளர் மூர்த்தி, திருவண்ணாமலை வேட்பாளர் எதிரொலி மணியன், புதிய நீதிக்கட்சியை சேர்ந்த வேலூர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™