Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

Posted: 16 Apr 2014 09:22 AM PDT

தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக  தேர்தல் பிரசார செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி   கன்னியாகுமரி வந்தார். அப்போது அவரை வரவேற்க கன்னியாகுமரியில் திரண்டிருந்த கூட்டத்தினரை பார்த்து  சோனியா காந்தி கையசைத்த போது எடுத்த படம்.

2

கிராம மக்களை பிரியங்கா சந்தித்து பேசினார்

Posted: 16 Apr 2014 09:17 AM PDT

சோனியாகாந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் கிராம மக்களை பிரியங்கா சந்தித்து பேசிய போது எடுத்த படம்.

8

அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி

Posted: 16 Apr 2014 09:16 AM PDT

உத்தரபிரதேச மாநிலம் உன்னோ பகுதியில்  நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது கட்சியின் பெண் வேட்பாளர் அன்னு தாண்டன் ராகுல்காந்திக்கு நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

7

ஈரோடு திருநகர் காலனியில் கனிமொழி எம்.பி

Posted: 16 Apr 2014 09:12 AM PDT

ஈரோடு திருநகர் காலனியில் கனிமொழி எம்.பி., திறந்த வேனில் நின்று பேசிய போது எடுத்த படம். அருகில் தி.மு.க.வேட்பாளர் பவித்திரவள்ளி உள்ளார்.

6

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை

Posted: 16 Apr 2014 09:09 AM PDT

சேலத்தில், நரேந்திரமோடி வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.

9

பா.ஜனதா பிரதம வேட்பாளர் நரேந்திரமோடி

Posted: 16 Apr 2014 09:07 AM PDT

சேலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பா.ஜனதா பிரதம வேட்பாளர் நரேந்திரமோடி, கூட்டத்தினரை பார்த்து கையசைத்த காட்சி. அருகில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் உள்ளார்.

5

நரேந்திரமோடி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் ‘திடீர்’ சோதனை

Posted: 16 Apr 2014 08:46 AM PDT

சேலம்,

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படை பறக்கும்படை அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரான நரேந்திரமோடி பிரசாரத்திற்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டரை பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

இன்று  மாலை 5.29  மணிக்கு நரேந்திரமோடி, தே.மு.தி.க..வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சேலம் இரும்பாலை வளாகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அப்போது பறக்கும் படை குழுவினர் சுமார் 10 நிமிடம் நரேந்திரமோடி பிரசாரத்திற்காக வந்த ஹெலிகாப்டரை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை பறக்கும் படையினரால் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
 

category:

News Group Category:

நரேந்திர மோடியை சந்தித்து பேசினார் நடிகர் விஜய்

Posted: 16 Apr 2014 08:37 AM PDT

கோவை,

கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பாரதீய ஜனதா  பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை , லீமெரிடியன் ஓட்டலில் நடிகர் விஜய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. சந்திப்புக்கு பின் நடிகர் விஜய் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க மறுத்துவிட்டு சென்று விட்டார்.

முன்னதாக, நமது நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோடி என்னை சந்திக்க விரும்பினார். அவரது அழைப்பை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக மட்டுமே அவரை சந்திக்கின்றேன். இந்த சந்திப்பு அரசியல் ரீதயானதல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். என்று இந்த சந்திப்பு குறித்து நடிகர் விஜய் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

category:

News Group Category:

ஜிலேபியால் ஆபத்து

Posted: 16 Apr 2014 08:29 AM PDT

இந்தியர்களுக்கு பிடித்தமான இனிப்பு வகைகளில், ஜிலேபிக்கு முக்கிய இடமுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜிலேபியை ரசித்து உண்பதை பார்க்க முடியும். ஆனால் அதனுள்ளே ஒளிந்திருக்கும் ஆபத்து குறித்து வல்லுனர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி, ஜிலேபி பிரியர்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்கள், குறிப்பாக கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவு பொருட்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் ஜிலேபி முக்கிய இடம் பிடித்துள்ளது. இதைப்போல இத்தாலியின் கல்சோன், பிரேசிலின் அகராஜி, ஜார்ஜியாவின் கச்சாபுரி போன்ற இனிப்பு வகைகளும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
 

image: 

category:

News Group Category:

புனித வெள்ளியையட்டி கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்

Posted: 16 Apr 2014 08:10 AM PDT

சென்னை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான, புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையட்டி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை-வேளச்சேரி ரெயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும். மேலும் சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மகளிர் மட்டும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™