ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கிராமத்துக் காதல்
- நலம் நலமறிய ஆவல்!
- ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- தோசை வகைகள் - உளு ந்து இல்லாமல் செய்யும் தோசை + அதன் போட்டோ :)
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
- இட்லி வகைகள் - வெந்தய இட்லி Photo வுடன்
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- அகல் மொழி பத்து - பாகம் 6
- இந்த ஜென்மம் போதுமே!
- இறுதிப் பயணமாய் இந்த மரணம்
- முயன்று நட
- அண்டம் காக்கும் ஆண்டான் நீ ஆவாய்
- உயிர் பதுமைகள் { குழந்தைகள் சார்ந்த கட்டுரை }
- விதிகள் இல்லா விளையாட்டு
- மணத்துடன் மருத்துவ குணமும் கொண்ட தாழம்பூ
- 2015இல் உலகை வட்டமிடத் தயாராகும் புதிய சோலர் விமானம்
| Posted: 16 Apr 2014 09:36 AM PDT இஞ்சருங்கோ என்னவரே! இவ சொல்ரதையும் கேளுங்கோவேன்! இஞ்சி போட்ட தேநீர் தாறேன்! இருந்து குடிச்சிவிட்டு கிளம்புங்கோவேன்!! வெரும் வயிராப் போகாமே! வெந்து குடல் நோகாமே! வருந்திப் பசியோட சாகாமே! வந்து உண்டு போங்கோவேன்!! வீட்டேக்க வர நேரமாகும்! வேலையுமங்கே கனக்கேயாகும்! வெட்ட வெயில் வெந்து விடும்! வட்டக் குடை எடுத்துப் போங்க!! மதியம் உண்ண என்ன வேணும்! மடித்துச் சோறு எடுத்துத் தாறேன்! மனங் கொண்டு உண்டிடுங்கோ! மணம் மாற முன்னமேயே!! பார்த்து வேலை செய்திடுங்கோ! பரபரத்து செய்யாதைங்கோ! புண் ... |
| Posted: 16 Apr 2014 09:33 AM PDT உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு - பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும். மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 எனது கணவருக்குக் கடந்த 4 ஆண்டுகளாகச் ... |
| Posted: 16 Apr 2014 09:22 AM PDT ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! kavithaiuravu@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! சுதா பதிப்பகம் ,420இ . மலர்க் குடியிருப்பு ,அண்ணா நகர் மேற்கு, சென்னை .6000040. விலை ரூபாய் 70. . திருநெல்வேலி அருகே உள்ள ஏர்வாடி என்ற பிறந்த ஊருக்கு பெருமைகள் சேர்த்து வருபவர் நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்கள் .பெயரோடு பிறந்த மண்ணை இணைத்துக் கொண்டவர் . இவரை இராதா கிருஷ்ணன் என்றால் சிலர் மட்டுமே அறிவர் .ஆனால் ஏர்வாடியார் ... |
| தோசை வகைகள் - உளு ந்து இல்லாமல் செய்யும் தோசை + அதன் போட்டோ :) Posted: 16 Apr 2014 07:55 AM PDT தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம். வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் ... |
| Posted: 16 Apr 2014 06:44 AM PDT ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| இட்லி வகைகள் - வெந்தய இட்லி Photo வுடன் Posted: 16 Apr 2014 06:38 AM PDT தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே ! இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ... |
| Posted: 16 Apr 2014 06:34 AM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| Posted: 16 Apr 2014 02:52 AM PDT 61. பிடித்தவர்களிடம் பிடிக்காததைக் கண்டுகொள்ளாததும் பிடிக்காதவரிடம் பிடித்ததைக் கண்டுகொள்ளாததும் மானுட இயல்பு. 62. ஒரு விவாதத்தின் மீதான நமது கருத்தும் நிலைப்பாடும் சிலமுறை தவறாக இருக்கும். அது தவறு என்று புரிந்துகொள்ள தேவைப்படும் சூழ்நிலை அமைய, சில நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ ஆகலாம். 63. பெரும்பாலும், மகன்களின் மனதிற்கு மிக நெருக்கமான இடத்தில் தாய் இருப்பார். ஆனால் அதைவிட நெருக்கமான இடத்தில் சிலருக்கு தந்தையும் இருக்கிறார்கள். 64. அளவுக்கு மிஞ்சினால் அமுதமட்டுமல்ல அன்புகூட நஞ்சுதான். 65. ... |
| Posted: 16 Apr 2014 02:11 AM PDT http://kaviyinkavi.blogspot.in/2014/03/blog-post.html#links இந்த ஜென்மம் போதுமே!!! தீ மூட்டும் காதல்வத்திக்குச்சி, நீதானே! – அது நீ தானே! என்னை நனைக்கும் காதல் மழையும், நீதானே! – அது நீ தானே! உன்னை நான் தேடுகிறேன்! என்னை நான் தேடுகிறேன்! பசலையும் என்னைத் தீண்டுதே அன்பே! என் அன்பே!!! காதல் விளையாட்டில் சேர்ந்தே தானே – நாம் தொலைந்து போனோமே! - அங்கே காதல் சடுகுடு நாமும் ஆடினோமே! கண்ணில் உன்னை சுமந்தேனே! உன் தோளில் நானும் சாய்ந்தேனே! ஜென்மம் போதுமே- எனக்கு இந்த ஜென்மம் ... |
| Posted: 16 Apr 2014 01:00 AM PDT மரணப் படுக்கையின் இறுதி அந்த நேரங்கள் உயிர் பறி போகும் (பறிக்கும்) சிலநொடிகள் பச்சை புண்ணில் வேலிக் கம்பிகள் கிழிப்பதாய் பூவொன்றின் காம்பை பிள்ளைகள் முறிப்பதாய் வேதனையால் வாட்டசாட்டமான உடல் வாடும் உதவிக்காய் கண்கள் எல்லோரையும் தேடும் ஒன்றும் உதவாததாய் கைகள் தானாக வீழும் தண்ணீர் வேண்டி நாக்கு பெரிதாய் கொஞ்சம் நீளும் கத்தும் உறவுகளின் கண்ணீர் துடைக்க முடியாது மரணப் பிடியில் இருந்து தப்பிக்க இயலாது கண்கள் மேலேந்தி கடைசி தருணத்தைப் பார்த்தபடி தனது நற்செயலை மட்டும் தூக்கிச் ... |
| Posted: 16 Apr 2014 12:29 AM PDT ஆழம் பார்த்து நட ஆளுயரம் பார்க்காதே ஆழ் மனம் பார்த்து நட அரவணைக்கத் தவறாதே அன்பதனை வேண்டி நட ஆதரவை மறுக்கதே அச்சமதை கொண்டு நட அடிமையதை ஏற்காதே துணை சேர்ந்து கூடி நட தனித்திருக்க நினைக்காதே தடைக்கற்கள் நீக்கி நட தரம் பார்த்து நடக்காதே நாவன்பு கொண்டு நட நாவிழந்து போகாதே நடை துணிந்து நிமிர்ந்து நட நடைப்பிணம் ஆகாதே சுகம் வேண்டி முயன்று நட சுயநலம் வேண்டாதே சுதந்திரம் வேண்டி நட சூனியம் செய்யாதே இன்முகம் காட்டி நட இரந்து நிற்காதே இழிவதை வெறுத்து நட இழிவாகப் பேசாதே ஜவ்ஹர் |
| அண்டம் காக்கும் ஆண்டான் நீ ஆவாய் Posted: 16 Apr 2014 12:02 AM PDT உத்தண்டம் வறுமை கண்டு ஊட்டம் அதனை வழங்கி உண்டான் மகிழ்வைக் கண்டு உளமது மகிழ்வு கொண்டு உயர்ந்தவன் ஆகி விடுவாய்!! கொற்றவன் நீயே உலகில் கதிரவனாகி ஔியாய் கண்டன் செயலை எதிர்த்து கண்டகம் செய்து அழித்து காப்பவனாகி விடுவாய்!! அண்டம் உன் வசம் விழுந்து அண்டை ஆகிப் பணிந்து அணிந்திடும் மாலையாகி அகிலம் உன் கால் பணியும் ஆண்டானாகி விடுவாய்!! சொர்ணம் உன்னிடம் குவியும் சொர்க்கம் உன் வசமாகும் சென்னப் பறவையைப் போல சுதந்திரமாய் நீ பறந்து சுந்தரனாகி விடுவாய்!! குண்டன் செய்யும் செயலை கண்டம் ... |
| உயிர் பதுமைகள் { குழந்தைகள் சார்ந்த கட்டுரை } Posted: 15 Apr 2014 11:59 PM PDT * உயிர்ப் பதுமைகள் . * குழந்தைகள் நம் உயிர்த்துளியில் உதித்த உன்னதப் பிறப்புகள். பஞ்சபூதங்களின் உயிர்ப் பதுமைகள். பேசும் சித்திரங்கள். பெற்றவரகளின் வாரிசாகத் திகழும் வருங்காலச் சந்ததிகள். குழந்தைகளைக் கொஞ்சாதவர்கள், மழலைச் சொல் கேளாதவர்கள். சேட்டைகளை ரசிக்காதவர்கள் எவரேனுமுண்டோ? அய்யன் வள்ளுவன் எத்தனை அழகாக மழலைகளின் இனிய சொற்களைத் தன் குறுகிய வரிகளில் இயம்புகிறார் பாருங்கள். குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் {குறள் 66 } பெற்றக் குழந்தைகளின் மழலைச் சொற்கள் ... |
| Posted: 15 Apr 2014 11:37 PM PDT சின்ன விளையாட்டாய்! மிட்டாய் உண்ணும்! சிறுசுகள் செய்யும்! விளையாட்டு முற்றத்தில்! சிறுவர்கள் ஒன்றுகூடி! ஒதுக்கிடம் தேர்ந்து! ஒற்றுமையாய்! ஓரினமாய்! தொடங்குவர் விளையாட்டு! வலியவன் தலைவன்! தோழன் ஆலோசகன்! அவர் விதித்ததே சட்டம்! தலையாட்டி ஓணான்களாய்! ஏற்று தொடர்ந்திடும்! புதுமையாய் விளையாட்டு! குதூகலம் மிஞ்சிவிடு்ம்! சத்தமும் வானுயரும்! அலப்பல்கள் இடையிடையே! வலியவன் ஆயுதம்! சண்டைகள் இடையிடையே! சாந்தமும் அதனிடையே! சலிப்பின்றி தொடர்ந்திடும்! பெயரில்லா ... |
| மணத்துடன் மருத்துவ குணமும் கொண்ட தாழம்பூ Posted: 15 Apr 2014 08:59 PM PDT மனதை மயக்கும் மணத்துடன் மருத்துவ நலன்களையும் அள்ளித்தருகிறது தாழம்பூ. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும் சக்தியுடையது. ரத்தம் சுத்தமடைய உடலில் சில சமயங்களில் பித்த நீர் இரத்ததில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த ரத்தத்தை சுத்தப்படுத்த காயவைத்து பொடி செய்து நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும். பசியை தூண்டக்கூடியது தாழம்பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் 1ஸ்பூன் அளவு பொடியை நீரில் இட்டு கொதிக்க ... |
| 2015இல் உலகை வட்டமிடத் தயாராகும் புதிய சோலர் விமானம் Posted: 15 Apr 2014 08:51 PM PDT சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த பொறியியலாளர்கள் குழு ஒன்று சோலர் படலத்தில் செயற்படக்கூடிய விமானம் ஒன்றினை வடிவமைத்துள்ளனர். Solar Impulse 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானமானது ஒருமுறை பறக்க ஆரம்பித்ததன் பின்னர் மீண்டும் தரையிறங்காது தொடர்ச்சியாக பூமியை வட்டமிடக்கூடிய வகையில் இருக்கும் என அப்பொறியியலாளர்கள் நம்புகின்றனர். இதற்கு முன்னரும் சோலர் விமானம் ஒன்றினை வடிவமைத்துள்ள குறித்த பொறியியலாளர்கள் அதனை விடவும் 8 மீற்றர்கள் நீளம் அதிகம் கொண்டதாக இப்புதிய விமானத்தின் விங்ஸ்பேனை வடிவமைத்துள்ளனர். இந்த ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |