Tamil News | Online Tamil News |
- வாரணாசியில் போட்டியிட விரும்பவில்லை: சோனியா மகள் பிரியங்கா திட்டவட்டம்
- தடையில்லா மின்சாரம்: தமிழக அரசு உத்தரவு
- நிலையான அரசு அமைக்க காங்கிரசால் தான் முடியுமாம்
- மோடி குறித்து ரஜினி பதில் : கருணாநிதி 'நோ கமென்ட்ஸ்'
- 'அ.தி.மு.க., ஆட்சிக்கு நான் தான் எமன்' : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆத்திரம்
- உருக்கமான 'போன்' பேச்சு: ஸ்டாலின் பயங்கர 'டேலன்ட்'
- அம்பேத்கரை சோனியா குடும்பம் அவமதிக்கிறது: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி குற்றச்சாட்டு
- பலவீனமான பிரதமர் யார் என்பதில் போட்டி! பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் கடும் மோதல்
- பா.ஜ.,வை ஜெயலலிதா விமர்சிப்பதால் தி.மு.க., உற்சாகம் : சிதறும் ஓட்டுகளால் கட்சிக்கு லாபம் என கணக்கு
| வாரணாசியில் போட்டியிட விரும்பவில்லை: சோனியா மகள் பிரியங்கா திட்டவட்டம் Posted: புதுடில்லி:காங்., தலைவி சோனியாவின் மகள் பிரியங்கா, உ.பி.,யின் வாரணாசி தொகுதியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட, சோனியா குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ''வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிட, நான் விரும்பவே இல்லை. அப்படி நான் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தால், என் தாய் சோனியா, சகோதரர் ராகுல், கணவர் ராபர்ட் வாத்ரா என, யாருமே தடை செய்திருக்க மாட்டார்கள்,'' என, பிரியங்கா வாத்ரா, 42, கூறியுள்ளார்.இரண்டு தொகுதிகளில் போட்டி:உ.பி.,யின் வாரணாசி தொகுதியில், மே 12ம் தேதி, தேர்தல் நடக்கிறது. பா.ஜ., ... |
| தடையில்லா மின்சாரம்: தமிழக அரசு உத்தரவு Posted: மின் தடை பிரச்னையை சமாளிக்க, விடுமுறை தினமான, நேற்று, மின் வாரிய அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து, ஆலோசனை நடத்தினர்.வட சென்னை மற்றும் மேட்டூர் விரிவாக்க அனல் மின் நிலையம்; நீர் மின் நிலையம் ஆகியவற்றில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், 3,000 3,500 மெகா வாட், மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், பல மணி நேரம், மின் தடை செய்யப்படுகிறது.லோக்சபா தேர்தல் நேரத்தில், மின் தடை செய்வது, அ.தி.மு.க., தொண்டர்கள் உட்பட, பல தரப்பினரிடமும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மின் வாரிய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு, மாதத்தின், இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை. ... |
| நிலையான அரசு அமைக்க காங்கிரசால் தான் முடியுமாம் Posted: மொராதாபாத் : ''காங்கிரசால் மட்டும் தான், மத்தியில் நிலையான ஆட்சியை ஏற்படுத்த முடியும்,'' என, அக்கட்சித் தலைவர் சோனியா கூறினார்.மொத்தம், 80 லோக்சபா தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தின், மொராதாபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர், பேகம் நுார் பானுவை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் சோனியா, பொதுக்கூட்டம் ஒன்றில்பேசியதாவது:இரண்டு மாறுபாடான கொள்கைகளுக்கு இடையேயான போட்டி, இந்த லோக்சபா தேர்தல். மகாத்மா காந்தியடிகள், மவுலானா ஆசாத் போன்றோரின் கொள்கைகளை பின்பற்றும் காங்கிரசுக்கும், குறுகிய நோக்கம் கொண்ட, தீவிரவாத போக்கு உடைய ஒரு அமைப்பின் ... |
| மோடி குறித்து ரஜினி பதில் : கருணாநிதி 'நோ கமென்ட்ஸ்' Posted: ''மோடி நல்ல நிர்வாகி என, ரஜினி கூறியதற்கு, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அவரது பேட்டி:'மோடி நல்ல நிர்வாகி' என, நடிகர் ரஜினி சொல்லியிருக்கிறாரே?ரஜினி பேசியதை பற்றியோ, அவர் சொன்னதை பற்றியோ, 'நோ கமென்ட்ஸ்' நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்திருக்கிறீர்கள். அது பற்றி தங்கள் கருத்து?நான் மகிழ்ச்சி அடையத்தக்க அளவிற்கு இருந்தது.அ.தி.மு.க., தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும், உங்களை சாடிக் கொண்டிருக்கின்றனரே?அவர்கள் ஆத்திரத்தில் இருக்கின்றனர். தோல்வி பயம் ... |
| 'அ.தி.மு.க., ஆட்சிக்கு நான் தான் எமன்' : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆத்திரம் Posted: "ஊழல் கட்சிகளான, அ.தி.மு.க.,- - தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளை, லோக்சபா தேர்தலில், டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். அ.தி.மு.க., ஆட்சிக்கு, நான் தான் எமன்," என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.'வளர்ந்து விடுமோ...':கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து, நேற்று, ஆத்துார் அருகே, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள, கட்சிகளுக்கு இடையே, எந்த பிரச்னையும் இல்லை. எங்கள் கூட்டணியை பிரிக்க நினைத்தவர்கள், ஏமாந்து விட்டனர். நரேந்திர மோடி பிரதமராக வந்ததும், மலைவாழ் மக்களுக்கு, பட்டா, ... |
| உருக்கமான 'போன்' பேச்சு: ஸ்டாலின் பயங்கர 'டேலன்ட்' Posted: தி.மு.க.,வில் அழகிரியின் ஆட்டத்திற்கு, 'செக்' வைக்க, ஸ்டாலின் களம் இறங்கி உள்ளார். அனைத்து மாவட்ட செயலர்கள், வேட்பாளர்களுடன் தொலைபேசியில் பேசி, தேர்தல் பணிகளை தினந்தோறும் முடுக்கி விடுகிறார்.அதே நேரத்தில், அதிருப்தியில் ஒதுங்கி இருக்கும் கட்சி பிரமுகர்களை அழைத்து, உருக்கமாக பேசி, சமாதானப்படுத்தும் காரியத்தையும் சிரத்தையோடு செய்கிறார். மாவட்ட செயலர்களால் ஓரங்கட்டப்பட்டு உள்ளவர்களையும் கூப்பிட்டு, தேர்தல் பணியில் தீவிரம் காட்டும்படி கேட்டுக் கொள்கிறார். ஸ்டாலினின் உருக்கமான பேச்சை கேட்டு, சிலர் கண்ணீர் சிந்தியதாகவும், பலர் தேர்தல் வேலைகளில் ... |
| அம்பேத்கரை சோனியா குடும்பம் அவமதிக்கிறது: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி குற்றச்சாட்டு Posted: ஆமதாபாத் : ''சட்டத்தை, தாங்களே உருவாக்கியது போல் காட்டி கொள்வதன் மூலம், சட்ட மேதை அம்பேத்கரை, சோனியா குடும்பத்தினர் அவமதிக்கின்றனர்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.சட்ட மேதை அம்பேத்கரின், 123வது பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், அவரின் உருவப்படத்துக்கு, அம்மாநில முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி, அஞ்சலி செலுத்தினார்.பின், அவர் பேசியதாவது:இந்த நாட்டின் சட்டத்தை உருவாக்கியவர், அம்பேத்கர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர். ஆனால், காங்கிரஸ் தலைவர் ... |
| பலவீனமான பிரதமர் யார் என்பதில் போட்டி! பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் கடும் மோதல் Posted: பங்கா: ''நாடு சந்தித்த பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமானவர், இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தான். அவரைச் சுற்றி நடந்த ஊழல்களையும், முறைகேடுகளையும் கட்டுப்படுத்த தவறிவிட்டார்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார். அதற்கு போட்டியாக காங்கிரசும், பா.ஜ., மூத்த தலைவர் வாஜ்பாயை, பலவீனமான பிரதமர் என, கூறியுள்ளது.ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகாரில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பங்கா என்ற இடத்தில், அத்வானி நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அவசர நிலை பிரகடனம்:அப்போது அவர் பேசியதாவது:கடந்த 1975ல், அப்போதைய ... |
| பா.ஜ.,வை ஜெயலலிதா விமர்சிப்பதால் தி.மு.க., உற்சாகம் : சிதறும் ஓட்டுகளால் கட்சிக்கு லாபம் என கணக்கு Posted: பிரசாரக் களத்தில், திடீர் திருப்பமாக, பா.ஜ.,வை தாக்கி, முதல்வர் ஜெயலலிதாவும், அ.தி.மு,க.,வை விமர்சித்து பா.ஜ.,வும், பேசத் துவங்கியிருப்பது, தி.மு.க., தரப்புக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இரு கட்சிகளும் மோதிக் கொள்வதன் மூலம், ஆளும் கட்சிக்கு ஆதரவான ஓட்டுகள் சிதறும் நிலை ஏற்படுவதால், தி.மு.க.,வுக்கு அது லாபம் என, அக்கட்சி கணக்கு போடுவது தான், இந்த திடீர் உற்சாகத்திற்கு காரணம்.தேர்தல் பிரசாரத்திற்காக, நேற்று முன்தினம், சென்னை வந்த பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அ.தி.மு.க., மீதான விமர்சனத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். அதுவரை, இக்கட்சி தரப்பில், எந்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 15,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |