Tamil News | Online Tamil News |
- காங்., - பா.ஜ., கட்சி வேட்பாளர்களுக்கு டிபாசிட் கிடைக்க கூடாது: முதல்வர் ஜெயலலிதா ஆவேசம்
- அ.தி.மு.க.,வை ஜெ., சிதைக்கிறார்: கருணாநிதி கவலை
- ரயிலை கவிழ்க்க நக்சல் சதி: மத்திய அரசு உஷார்
- ஆம் ஆத்மி கட்சியில் 86 கோடீஸ்வர வேட்பாளர்கள்
- கிரிக்கெட்டில் இருந்து கால்பந்துக்கு குதித்தார்: கொச்சி அணியை வாங்கினார் சச்சின்
- "ரூ.1 கோடி புது பங்களாவை ஜெட்லி கணக்கில் சேர்க்கணும்!'
- "சொன்னது பாதிதான்: அதற்கே அதிர்ச்சியா?'
- தமிழகத்தில் பிரசாரம் செய்வது "டைம் வேஸ்ட்' : ராகுல் மறுப்பு: காங்., தலைவர்கள் "அப்செட்'
- தொகுதிக்கு பணம் எப்போது வரும்? : மா.செ.,க்கள் எதிர்பார்ப்பு; தி.மு.க., - காங்கிரசில் பரபரப்பு
- தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்: மோடி விளாசல்
- மோடியை, ரஜினி மனம் திறந்து பாராட்டினார் :புத்தாண்டு சமயத்தில் வேட்டியில் வந்து மோடி அசத்தல்
| காங்., - பா.ஜ., கட்சி வேட்பாளர்களுக்கு டிபாசிட் கிடைக்க கூடாது: முதல்வர் ஜெயலலிதா ஆவேசம் Posted: ''காவிரி நீர் பிரச்னையில், தமிழகத்தை வஞ்சித்து, துரோகம் செய்த காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகளின் வேட்பாளர்களை, டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்,'' என, கரூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.கரூரில், அ.தி.மு.க., வேட்பாளர், தம்பிதுரைக்கு ஆதரவு திரட்ட நடந்த பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:தற்போது நடைபெறும், 16வது லோக்சபா தேர்தல், ஏதோ ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் இல்லை. நாட்டை, மீண்டும் ஒருமுறை விடுதலை செய்வதற்கான தேர்தல். பொருளாதார சீரழிவு, ஊழல், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, வேலையின்மை, விவசாயிகளை ... |
| அ.தி.மு.க.,வை ஜெ., சிதைக்கிறார்: கருணாநிதி கவலை Posted: மதுரை:''எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க.,வை ஜெ., சிதைக்கிறார்,'' என மதுரையில் நடந்த தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டத்தில், அதன் தலைவர் கருணாநிதி வருத்தம் தெரிவித்தார்.தென்மாவட்ட தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்றிரவு நடந்த கூட்டத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:'இருட்டறையில் உள்ளதடா உலகம்...' என்ற பாரதிதாசனின் பாடலை நினைவுப்படுத்தும் வகையில் தமிழகம் இருட்டறையில் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்த போது, ஜெ., எனக்கு சில உத்தரவிட்டார். 'கருணாநிதியே உடனே கடையை கட்டு, ராஜினாமா செய், 2 மணி நேர மின்வெட்டை ... |
| ரயிலை கவிழ்க்க நக்சல் சதி: மத்திய அரசு உஷார் Posted: புதுடில்லி: லோக்சபா தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நக்சலைட்டுகள், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, ராணுவம், துணை ராணுவப் படையினர் செல்லும் ரயில்களை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளில், நக்சலைட்டுகள் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கரில், இன்னும், இரண்டு கட்ட தேர்தல்கள் நடக்கவுள்ளன. அதேபோல், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும், அடுத்தடுத்து, தேர்தல்கள் ... |
| ஆம் ஆத்மி கட்சியில் 86 கோடீஸ்வர வேட்பாளர்கள் Posted: புதுடில்லி : சாமானிய, ஏழை மக்களின் கட்சியாக அடையாளப்படுத்திக் கொள்ளும், ஆம் ஆத்மி கட்சி, லோக்சபா தேர்தலில், 86 கோடீஸ்வர வேட்பாளர்களை நிறுத்திஉள்ளது.டில்லியில், கடந்த ஆண்டு இறுதியில், 49 நாட்கள் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி பெயர், ஆம் ஆத்மி. இந்தி வார்த்தையான, ஆம் ஆத்மிக்கு, தமிழில், 'சாமானிய, ஏழை மக்களின் கட்சி' என, அர்த்தம். ஊழல், லஞ்சம் ஆகியவற்றை ஒழிப்பதற்காகவே, கட்சி துவக்கியுள்ளதாக, அரவிந்த் கெஜ்ரிவாலும், அவரின் சகாக்களும் மேடை தோறும் முழங்கி வருகின்றனர். சாதாரண மக்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதே, தங்களின் லட்சியம் என்றும் கூறி ... |
| கிரிக்கெட்டில் இருந்து கால்பந்துக்கு குதித்தார்: கொச்சி அணியை வாங்கினார் சச்சின் Posted: மும்பை:இந்திய கால்பந்து அரங்கில் புரட்சி ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் நட்சத்திரங்கள் எல்லாம், கால்பந்து பக்கம் படை எடுக்கத் துவங்கியுள்ளனர். இந்தியன் சூப்பர் லீக் தொடரில், கொச்சி அணியை சச்சினும், கோல்கட்டா அணியை கங்குலியும் வாங்கியுள்ளனர்.இந்தியன் சூப்பர் லீக்ஐ.பி.எல்., 'டுவென்டி-20' கிரிக்கெட் பாணியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர், வரும் செப்டம்பர் - நவம்பரில் நடக்க உள்ளது. இதற்கு, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.ஐ.எப்.,) அங்கீகாரம் அளித்துள்ளது.முன்னாள் பிரான்ஸ் வீரர் ராபர்ட் பைரஸ், சுவீடனின் பிரடரிக் ... |
| "ரூ.1 கோடி புது பங்களாவை ஜெட்லி கணக்கில் சேர்க்கணும்!' Posted: அமிர்தசரஸ்: பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, அமிர்தசரஸ் தொகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பங்களா வாங்கியுள்ளதை அடுத்து, அந்த செலவையும் அவரின் தேர்தல் செலவில் சேர்க்கும் படி, தேர்தல் கமிஷனை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில், அந்த கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், பஞ்சாப் முன்னாள் முதல்வர், அம்ரிந்தர் சிங் போட்டியிடுகிறார். அருண் ஜெட்லி டில்லியை சேர்ந்தவர் என்றும், அவருக்கும் அமிர்தசரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ... |
| "சொன்னது பாதிதான்: அதற்கே அதிர்ச்சியா?' Posted: பிரதமர் மன்மோகன் சிங்கின், முன்னாள் ஊடக ஆலோசகராக இருந்தவர், சஞ்சய் பாரு. மூத்த பத்திரிகையாளரான அவர், மன்மோகன் சிங்குடன், தாம் பணியாற்றிய போது நடந்த, அனுபவங்களை தொகுத்து, சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டு உள்ளார்.மிகப் பெரிய அதிர்வலைகளை, ஏற்படுத்தக்கூடிய அளவிலான செய்திகளுடன் வெளியாகியுள்ள, அந்த புத்தகத்தால், மத்திய அரசு மற்றும் அரசியல் வட்டாரங்களில், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ள தகவல்கள் திரிக்கப்பட்டவை என, பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.இந்த நிலையில், நேற்று டில்லியில், சஞ்சய்பாரு அளித்த பேட்டியின்போது, ... |
| தமிழகத்தில் பிரசாரம் செய்வது "டைம் வேஸ்ட்' : ராகுல் மறுப்பு: காங்., தலைவர்கள் "அப்செட்' Posted: தமிழகத்தில், தனித்து போட்டியிடும், காங்., கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, அக்கட்சியின் துணைத் தலைவர், ராகுல் மறுத்து விட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது. அதனால், தமிழக காங்., தலைவர், ஞானதேசிகன் உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், அதிருப்தி அடைந்து உள்ளனர்.மறைந்த காங்., தலைவர் மூப்பனார், தமிழக காங்., தலைவராக பணியாற்றிய போது, 1989 சட்டசபை தேர்தலில், காங்., தனித்து போட்டியிட்டது. அப்போது, மறைந்த முன்னாள் பிரதமர், ராஜிவ், 13 முறை, தமிழகம் வந்து, மூலை முடுக்குகளில் எல்லாம் பிரசாரம் செய்தார். தீவிரமாக இறங்கி:அந்தத் தேர்தலில், தமிழக காங்., 27 ... |
| தொகுதிக்கு பணம் எப்போது வரும்? : மா.செ.,க்கள் எதிர்பார்ப்பு; தி.மு.க., - காங்கிரசில் பரபரப்பு Posted: தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள, தி.மு.க.,வினர் மத்தியில், கட்சி நிதி எப்போது கிடைக்கும் என்ற கேள்வி, பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் ஒவ்வொருவரும், கட்சி நிதி கேட்டு, அறிவாலயத்திற்கு, அடிக்கடி போன் செய்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.இந்த தேர்தலில், தி.மு.க., 35 தொகுதிகளில், வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் போதே, அவர்களது நிதி வசதியை ஆராய்ந்து தான், தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். வசதி படைத்தவர்கள் எனில், அவர்களே செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டு ... |
| தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்: மோடி விளாசல் Posted: ''தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் நடுவில் தமிழக மக்கள் சிக்கி தவிக்கின்றனர். மக்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்கள் மீது அக்கறை செலுத்தவும், இந்த இரு கட்சிகளும் நினைப்பது இல்லை. ''அவர்கள் தீய விளையாட்டுக்களை விட்டாக வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் புதிதாக உருவாகி உள்ள, மூன்றாவது சக்தி தமிழக மக்களின் விருப்பங்களையும் எண்ணங்களையும் நிறைவேற்றும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லுாரி மைதானத்தில், தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் ... |
| மோடியை, ரஜினி மனம் திறந்து பாராட்டினார் :புத்தாண்டு சமயத்தில் வேட்டியில் வந்து மோடி அசத்தல் Posted: லோக்சபா தேர்தல் இன்னும் 10 நாளில் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில், மோடி அலை பலமாக வீச துவங்கி உள்ளது. தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, தமிழர் வழக்கப்படி, வேட்டி கட்டி, அசத்தல் தோற்றத்தில், நேற்று சென்னை வந்த, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினி காந்தை அவரின் வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார்.இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்த போது, ''மோடி ஒரு வலுவான தலைவர்; சிறந்த நிர்வாகி. அவர் வெற்றி பெற வாழ்த்துகள்,'' என, நடிகர் ரஜினி மனம் திறந்து பாராட்டினார்.தமிழகத்தில், வரும் 24ல், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இன்று தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, பா.ஜ., ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 14,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |