ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்
- பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்
- நரேந்திர மோடி - ரஜினி சந்திப்பு
- தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
- அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !
- லீஸ்... வாடகை... எது நல்லது
- படித்ததில் பிடித்தது :) - பெண்களே... 'சில்லரைகளை அங்கே' வைக்காதீர்!
- ஜய' வருஷம், நாளை பிறக்கிறது :)
- நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)
- நகைச்சுவை
- சிக்கி முக்கி காதல்...{ சென்ரியு }
- மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்
- ஓர் அப்பளத்தின் மரணம்...!
- குற்ற உணர்ச்சி (சிறுகதை)
- தெலுங்கு சிறுவர் பாடல்.
- ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் !
- கோடை கவிதைகள் {சென்ரியு }
- நிறங்கள்
- தம்பி நீ வரவேண்டும்
- எல்லாம் சிவன் செயல்!
| ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Posted: 13 Apr 2014 02:29 PM PDT நம் தளத்தில் என்னென்ன புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் இங்கு தொகுத்து வழங்கப்படும். ஏதேனும் மாற்றங்கள் உங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது எனக் கருதினால் இங்கு அறியத் தரவும். மறுமொழி எழுதுங்கள் ஒவ்வொரு பதிவிற்குக் கீழேயும் உள்ள மறுமொழி எழுதுங்கள் என்பதைத் திறந்து அந்தப் பக்கத்திற்கான பின்னூட்டம் எழுதலாம். இதில் கூகிள் தமிழ் எழுதி இணைக்கப்பட்டுள்ளது. விரைவாகவும் பின்னூட்டமிடலாம். தனிமடல் * ஒரு பதிவு குறித்த கருத்தை பதிவிட்டவருக்கு தனிமடலில் தெரிவிக்க வேண்டுமெனில் ... |
| பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Posted: 13 Apr 2014 02:21 PM PDT தமிழக - ஆந்திர மாநில எல்லையில், 60 ஆண்டுகளாக நிலவி வந்த மீன்பிடி தகராறு, நேற்று, கலவரமாக வெடித்தது. பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்த ஒரு கிராமத்தினர் மீது ஆத்திரம் கொண்ட, தமிழக - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கத்தினர், அவர்கள் கிராமத்தில், பெட்ரோல் குண்டு வீசி, தீக்கிரையாக்கினர். தாக்குதலைத் தடுத்த, போலீஸ் அதிகாரிகள் உட்பட மூன்று பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. #திருவள்ளூர் மாவட்டத்தில் ... |
| நரேந்திர மோடி - ரஜினி சந்திப்பு Posted: 13 Apr 2014 02:02 PM PDT நேற்று தனது தேர்தல் சூறாவளி சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்த பாஜகவின் பிரதமர் வேட்பாளர் சென்னையில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். மோடியுடனான சந்திப்பிற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான். நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னைச் சந்தித்த நரேந்திர மோடி நான் நலமடைவதற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த முறை அவர் என்னைச் சந்தித்தபோது அவர் தேர்தலில் வெல்வதற்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்" ... |
| தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Posted: 13 Apr 2014 01:52 PM PDT முதல்வர் ஜெயலலிதா #சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை கோலோகலமாய் கொண்டாடி மகிழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய 'தமிழ்ப் #புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி' என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கிறார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ... |
| அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ! Posted: 13 Apr 2014 10:14 AM PDT அனைவருக்கும் அன்பான ஜய வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள் உறவுகள் அனைவருக்கும் என் அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ! இந்த ஜய வருடம் நம் அனைவருக்கும் எல்லா ஜெயங்களையும் தரட்டும் என்று வேண்டுகிறேன் |
| Posted: 13 Apr 2014 06:48 AM PDT சொந்த வீட்டில் குடியிருப்பவர் களுக்கு இருக்கும் பிரச்சினைகளை விட, வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்குப் பிரச்சினைகள் அதிகம் என்பதில் இருவேறு கருத்து இல்லை. சம்பளம் உயருகிறதோ இல்லையோ, ஆண்டுதோறும் வீட்டின் வாடகை மட்டும் கண்டிப்பாக உயர்ந்துவிடும். இதற்கு வீட்டின் உரிமையாளரைக் குறை சொல்வதில் பலன் இல்லை. ஏனென்றால், வீடு அமைந்திருக்கும் பகுதி, வீட்டில் இருக்கும் வசதிகள், போக்குவரத்து சாதகங்கள் ஆகியவைதான் வீட்டின் வாடகையை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைகின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில், அலுவலகத்திற்கு ... |
| படித்ததில் பிடித்தது :) - பெண்களே... 'சில்லரைகளை அங்கே' வைக்காதீர்! Posted: 13 Apr 2014 06:46 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| ஜய' வருஷம், நாளை பிறக்கிறது :) Posted: 13 Apr 2014 06:35 AM PDT ஏப்ரல் - 14 தமிழ் புத்தாண்டு தமிழ் புத்தாண்டான, 'ஜய' வருஷம், நாளை பிறக்கிறது. தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; கடந்த, 1954ம் ஆண்டிற்கு பிறகு, 'ஜய' வருஷம் மீண்டும் பிறக்கிறது. 'ஜய' என்றால், வெற்றி; இந்த ஆண்டின் தன்மை குறித்து, அக்காலத்திலேயே வெண்பா ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அது, 'செய வருடந் தன்னிலே செய்புனங்களெல்லாம் வியனுறவே பைங்கூழ் விளையும் - நயமுடனே அஃகம் பெரிதாம் அளவில் சுகம் பெருகும் வெஃகுவார் மன்னரிறை மேல்.' இந்த ஆண்டில், நல்ல மழை பெய்யும்; புன்செய் பயிர்கள் நன்றாக விளையும்; தொழில்கள் ... |
| நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்) Posted: 13 Apr 2014 05:41 AM PDT நடிகர் திலகம் மனோகரனாக (சிவாஜி என்ற மாநடிகர்) தொடர் 10 பாகம் 3 மதிவதன மனோகரனாக நடிகர் திலகம். மனோகரன் என்ற மகோன்னதமான பாத்திரத்திற்கு தன் மிரள வைக்கும் நடிப்பால் புத்துயிர் ஊட்டி அப்பாத்திரத்தை தமிழக மக்களின் நெஞ்சில் ஆழப்புதைத்த நடிகர் திலகத்தின் திறமையை எப்படி எழுத!? எப்படி மெச்ச!? எப்படிப் புகழ!? அழகு என்றால் அப்படி ஒரு அழகு! இளமை என்றால் அப்படி ஒரு இளமை! 1952-இல் 'பராசக்தி'யில் அறிமுகமாகி தனது பத்தாவது படமான 'மனோகரா'வில் (1954) உடலும், முகமும் வனப்பேறி மன்மதனிடம் சவால் ... |
| Posted: 13 Apr 2014 04:12 AM PDT 1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு. சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்! வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு. சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன். 2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க? ராமு: தோலை உரிச்சுட்டாங்க... 3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற? மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு. 4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?'' மற்றவர்: என்னங்க ... |
| சிக்கி முக்கி காதல்...{ சென்ரியு } Posted: 13 Apr 2014 02:49 AM PDT குடும்பஸ்தன் உள்ளத்தில் துறவு ஞானியின் உள்ளத்தில காமம் உள்ளம் ஒரு பெருங் கள்வன். * நெருங்கி உரசிக் கொண்டன சிக்கி முக்கிக் கற்கள் பிறந்தது காதல் * " மணியாட்டிக்கிட்டு எங்கடா போறே " என்றாள் கிழவி தெருவில் நிர்வாணச் சிறுவன். * |
| மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள் Posted: 13 Apr 2014 01:12 AM PDT 'பாரத் மா கா ஷேர் ஆயா!' (பாரத அன்னையின் சிங்கம் வருகிறது) என்ற முழக்கம், 'பாரத் மாதா கீ ஜே' என்பதையே தூரமாக, ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது. மகாராணா பிரதாப், சிவாஜி, சாணக்யா, விவேகானந்தர்... என்ற உதாரணப் புருஷர்களையே உச்சரித்து, அதனுடைய கலிகால வார்ப்பாகத் தன்னையே காட்டிக்கொள்கிறது அந்தக் குரல். 'இன்று காங்கிரஸ் ஒரு பிரிவினைவாத சக்தி. வாக்குக்காக ஒவ்வொன்றையும் பிரித்து வைத்துள்ளது. நான் வளர்ச்சி என்ற தளத்தில் இந்தியாவை ஒன்றுபடுத்த விரும்புகிறேன். என் முழக்கம் இந்தியாவுக்கே முன்னுரிமை' என்கிறது. வெள்ளையர்களிடம் ... |
| Posted: 12 Apr 2014 11:19 PM PDT * அரைத்த மாவையே குழைத்து உருட்டி பழமைக் கல்லில் நடுவில் நிறுத்தி யாப்பு உருளையால் எண்சீர் அளவுக்கு இழுத்துத் தேய்த்து உலர்ந்த உவமை மாவைத் தூவி எடுத்துச் சிலேடை எண்ணெயில் போட பஃப் என உப்பிச் சிரித்தது. அது ! அதை ஆசையாய் எடுத்து இலையில் போடும் வேளையில் ஒரு புதுக் காற்று ' குப் ' பென வீசிற்று ஓ ! குனிந்து பார்த்தேன் உடைந்த அதற்குள் ஒன்றுமே இல்லை !! * ஆதாரம்:- கவிஞர். புவியரசு – வின் " இதுதான் " என்ற நூலிலிருந்து. |
| Posted: 12 Apr 2014 11:11 PM PDT போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியின் வீட்டை சந்தானம் சில வாரங்களாக தீவிரமாக உளவு பார்த்துக் கொண்டிருக்கிறான். வீரபாண்டி எப்போது அலுவலகத்திற்குப் போவார் எப்போது வீடு திரும்புவார். அவரது 4 வயது மகள் கீதாவை எப்போது பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள் திரும்ப வீட்டுக்கு அழைத்து வருவார்கள், வீரபாண்டி மனைவியின் அன்றாட வேலை என்ன என்பது முதல் அவர்கள் பால் வாங்கும் நேரம், படுக்கைக்குப் போகும் நேரம் வரை சந்தானத்திற்கு ஓரளவிற்கு அனைத்தும் அத்துபடி. அதிகாலை ஐந்து மணி. மழை வருவது போல ஈரப்பதமான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. ... |
| Posted: 12 Apr 2014 10:38 PM PDT * சிட்டுக்குருவி. * சிட்டுக்குருவி சிட்டுக்குருவி கோபம் என்னம்மா… அம்மா திட்டினாளென அழுது படுத்திருக்கா…? * தண்ணீரில் விளையாடினால் சளி என்கிறாளா…அம்மா மண்ணில் விளையாடினால் புண்வரும் என்கிறாளா... * குரலெடுத்துப் பாடினால் கத்தாதே என்கிறாளா… பரணிலுள்ள பொம்மைகளை எடுக்காதே என்கிறாளா… * வேகமாய் ஒடினால்….தடுக்கி விழுவாய் என்கிறாளா… குதித்து விளையாடினால் கால் உடையும் என்கிறாளா…. * சொன்னதைக் கேக்கலன்னா சங்கதி தெரியும் என்கிறாளா…. பிடிக்கலன்னா கூட வாயில் சோறு திணிக்கிறாளா…? ... |
| ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் ! Posted: 12 Apr 2014 09:22 PM PDT ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் ! pudhuyugan@yahoo.com - ஜெயசித்ரா வெளியீடு, ; நூல் கிடைக்குமிடம் மின்னல் கலைக்கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .600018. வசீகரன் அலைபேசி 9841436213.விலை: ரூ 50 பல ஹைக்கூ கவிதை நூல்களை தேர்ந்தெடுத்து அவற்றின் மீது தனது விமர்சன ஒளி வீசிக் காட்டி இருக்கிறார், இலக்கிய விமர்சகராகவும் பரிணாம வளர்ச்சி எய்தியிருக்கும் கவிஞர் இரா இரவி. அதுதான் 2010 ஆம் ஆண்டு வெளியான 'ஹைக்கூ ஆற்றுப்படை' ... |
| Posted: 12 Apr 2014 09:22 PM PDT குளிர்ச்சியாக இருக்கிறது இளநீர் * குண்டு குண்டாக உருண்டு கிடக்கிறது பாதையோரம் தர்பூசணி. * குளிர்சாதன அறையில் அமர்ந்து ஒரு மணி நேரமாய் குடிக்கிறார்கள் தேனீர். * ஹெல்மெட் வழியே வழிகிறது துளித் துளியாய் வியர்வை. * * ஒடி வந்து பஸ் ஏறிய பயணியின் மேல் எரிந்து விழுந்தார் கண்டக்டர். * விசிறிக் கொண்டே விற்கிறான் பனைஒலை விசிறி. |
| Posted: 12 Apr 2014 08:19 PM PDT - பாலின் நிறமோ வெள்ளை பல்லின் வரிசையும் வெள்ளை! தலையின் முடியுமோ கறுப்பு தாரின் தன்மையும் கறுப்பு! - வெட்டுக்கிளியோ பச்சை வெட்ட உழு வயலும் பச்சை! கட்டும் செங்கலோ சிவப்பு காலைக் கதிரவனும் சிவப்பு! - வானின் வகையோ நீலம் வற்றாக்கடலும் நீலம்! வட்ட நிலாவோ மஞ்சள் வாங்கும் தங்கமும் மஞ்சள்! - உதிரும் இலையோ பழுப்பு உயர்நிலக் கரியும் பழுப்பு! - ------------------------ >கவிச்செம்மல் கோ.ஜெயச்சந்திரன் நன்றி: மழலை மகுடம் - சிறுவர் பாடல்கள் _________________ |
| Posted: 12 Apr 2014 08:08 PM PDT img][/img] -- - நல்லாட்சி நாட்டில் அமைந்திட நம்பிக்கை செயலில் சமைத்திட இல்லாமை அறவே ஓட்டிட இறையன்பு நெஞ்சில் ஊட்டிட - தம்பி நீ வரவேண்டும் - ஆண்மையுடன் எதையும் ஆற்றிட அழகுக்கவி தீபம் ஏற்றிட வீணர்களைத் துணிந்தே விரட்டிட வெற்றிப் படைதன்னைத் திரட்டிட- தம்பி நீ வரவேண்டும் - கடமையைப் போற்றி வாழ்ந்திட கண்மூடிப் பழக்கம் மாய்ந்திட உடல்தன்னில் உரத்தைச் சேர்த்திட உண்மையெனும் ஆரம் கோர்த்திட - தம்பி நீ வரவேண்டும் - உள்ளத்தில் உறுதி தேக்கிட உரிமையெனும் கொடியைத் தூக்கிட வல்லோர்கள் ... |
| Posted: 12 Apr 2014 07:44 PM PDT 1) எனது குருநாதரைப் பற்றிக் குறையாகப் பேசாதே! சைவ இலக்கியத்திற்கு அரும்பாடுபட்ட ஆன்மீக அறிஞர்களுள் முக்கியமானவர் சிவப்பிரகாசர். தமிழில் இவர் இயற்றிய ""பிரபுலிங்க லீலை" என்ற நூல், இன்றும் இவருக்கு பெருமை சேர்த்து வருகிறது. இந்நூலுக்கு பல தமிழறிஞர்களும் சைவ சிந்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட அன்பர்களும் உரை எழுதியுள்ளனர். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் பிறந்த சிவப்பிரகாசர், பிறகு பெற்றோருடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அப்போது அம்மலையில் வாழ்ந்த "குருதேவர்" என்ற யோகியுடன் பழகி, ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |