Daily Thanthi |
- சேலம் அருகே குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு
- கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது: சென்னையில் மோடி பேச்சு
- நரேந்திர மோடியுடனான சந்திப்பில் அரசியல் இல்லை: நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
- விழாவில் கலந்துகொண்ட மு.க.அழகிரி
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்
- சிறப்பு பயிற்சி முகாம்
- மகாவீர் ஜெயந்தி
- பாஜக ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து கிடைக்க முயற்ச்சி மேற்கொள்ளபடும் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்
- மத்திய பிரதேசத்தில் 8 கைத்துப்பாக்கி, 52 தோட்டாக்கள் பறிமுதல்
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் தேர்தல் அறிக்கை ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார்
| சேலம் அருகே குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு Posted: 13 Apr 2014 08:33 AM PDT சேலம், சேலம் அருகே குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– கல்லூரி மாணவர் சேலம் அன்னதானப்பட்டி பழனியப்பா காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். முறுக்கு வியாபாரி. இவரது மகன் மோகன்தாஸ் (வயது 19). இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ் (20), ஹரிஹரன் (18), நாகாஅர்ஜூன் (19), ரகோத்குமார் (18). இவர்கள் 5 பேரும் நண்பர்கள் ஆவர். இந்தநிலையில், அரசு விடுமுறை என்பதால் இவர்கள் 5 பேரும் மதியம் கன்னங்குறிச்சி அருகே குரும்பப்பட்டி அடுத்துள்ள ஒரு குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிப்பதற்காக சென்றனர். இதையடுத்து மோகன்தாஸ் உள்பட 5 பேரும் குட்டையில் இறங்கி ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர். இவர்களில் சதீசுக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் அவர் மட்டும் டயர் டியூப்பை உடம்பில் கட்டிக்கொண்டு தண்ணீரில் குளித்தார். தண்ணீரில் மூழ்கி சாவு அப்போது மோகன்தாஸ், சதீஷ் ஆகிய 2 பேரும் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கியவாறு தத்தளித்தனர். இதை பார்த்த சக நண்பர்கள் யாராவது வந்து காப்பாற்றுங்கள்..! காப்பாற்றுங்கள்...! என்று சத்தம் போட்டு கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கிருந்த சிலர் உடனடியாக ஓடிவந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மோகன்தாஸ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். பிறகு தண்ணீரில் மூழ்கி தத்தளித்த சதீசை மட்டும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அவரது நண்பர்கள் காப்பாற்றி மேலே கொண்டுவந்தனர். இது குறித்து தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த சதீசை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மோகன்தாசின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொருவரும் உயிரிழப்பு மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட சதீசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இது குறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மேல்சிகிச்சைக்காக சதீசை சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்தில் சதீசும் உயிரிழந்தார். உறவினர்கள் கதறல் குட்டையில் மூழ்கி உயிரிழந்த மோகன்தாஸ், சதீஷ் ஆகியோரின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் ஆஸ்பத்திரியில் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது குட்டையில் உள்ள தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. image: category:News Group Category: |
| கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது: சென்னையில் மோடி பேச்சு Posted: 13 Apr 2014 07:59 AM PDT சென்னை, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று சென்னை வந்து சேர்ந்தார். பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். தற்பொழுது, அவர் சென்னையில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அவர் கூறுகையில், மத்தியில் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு மாநிலத்தின் விருப்பங்களை குறித்து கருத்தில் கொள்வதில்லை. தற்போது நடைபெறுகிற தேர்தல் நம்பிக்கை தரும் தேர்தல். இந்த தேர்தல் மாற்றத்துக்கான தேர்தல். மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள் என்று கூறியுள்ளார். பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரதமரும், மாநில முதல் மந்திரிகளும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். பாரதீய ஜனதா கூட்டணி கட்சியானது தமிழக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| நரேந்திர மோடியுடனான சந்திப்பில் அரசியல் இல்லை: நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் Posted: 13 Apr 2014 06:30 AM PDT சென்னை, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்து சேர்ந்தார். தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக சென்னை வந்துள்ள மோடி போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்பு அளித்தனர். இந்த சந்திப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டபோது தன்னை மோடி வந்து சந்தித்தார் எனவும், எனவே, தமது இல்லத்திற்கு வரும்படி நரேந்திர மோடிக்கு தான் அழைப்பு விடுத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் கிடையாது என்றும் தமது இல்லத்தில் தேநீர் அருந்த அழைப்பு விடுத்து இருந்ததாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டையட்டி வாழ்த்து தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளதாக நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். image: category:Tagging:News Group Category: |
| விழாவில் கலந்துகொண்ட மு.க.அழகிரி Posted: 13 Apr 2014 05:28 AM PDT |
| திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் Posted: 13 Apr 2014 05:26 AM PDT |
| Posted: 13 Apr 2014 05:24 AM PDT |
| Posted: 13 Apr 2014 05:21 AM PDT |
| Posted: 13 Apr 2014 04:55 AM PDT புதுச்சேரி, புதுச்சேரியில் பா.ம.க. வேட்பாளர் அனந்தராமனை ஆதரித்து அன்புமணி ராம்தாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டா அப்போது அவர் பேசியதாவது; புதுச்சேரியில் ரங்கசாமி-நாராயணசாமி இடையேயான மோதலால் புதுச்சேரிக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்தியில் 23 ஆண்டுகளாக எம்.பி.ஆக இருந்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி மக்களுக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. image: category:Tagging:News Group Category: |
| மத்திய பிரதேசத்தில் 8 கைத்துப்பாக்கி, 52 தோட்டாக்கள் பறிமுதல் Posted: 13 Apr 2014 04:45 AM PDT போபால், மத்திய பிரதேச மாநிலம் போபால் நகருக்கு பக்கத்து மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆயுதங்களை கடத்தி வருபவர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டது. இந்த நிலையில், போபால் நகருக்குள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த விக்கி அலியா சாதிக் (வயது 26) என்பவர் உள்ளிட்ட 7 வாலிபர்களை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த 8 கைத்துப்பாக்கிகள் மற்றம் 52 தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர். இவர்கள் அனைவரும் சாதிக்கின் கீழ் ஒரு கும்பலாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து இதுபோன்ற தேடுதல் வேட்டைகள் நடைபெறும் என்று போபால் நகர போலீசார் தெரிவித்தனர்.
image: category:Tagging:News Group Category: |
| ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் தேர்தல் அறிக்கை ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார் Posted: 13 Apr 2014 04:42 AM PDT ஐதராபாத், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் வெளியிட்டார். அதில், மறைந்த முதல்–அமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் லட்சியங்களையும், நலத் திட்டங்களையும் மக்களுக்காக நிறைவேற்றுவது, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவது உள்ளிட்டவை முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் ஆட்சி காலத்தில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஆந்திராவின் ஏற்றுமதி சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியை விட 5 மடங்கு அதிகரித்ததாகவும், இதேபோல் தொழில் வளர்ச்சி 10 சதவீதமாக உயர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
image: category:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



