Tamil News | Online Tamil News |
- 2013- - 14 ம் ஆண்டு தமிழக மீனவர்களுக்கு 'இருண்ட காலம்' : இலங்கை கடற்படை தாக்குதலால் ரூ.50 கோடி நஷ்டம்
- சும்மா தரவேண்டிய குடிநீரை விற்கிறார் ஜெ.,: ஸ்டாலின் குற்றச்சாட்டு
- தி.மு.க., கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது : மயிலாடுதுறையில் கருணாநிதி 'சவால்'
- அடி வாங்கியபின் புத்தி வந்தது கெஜ்ரிவாலுக்கு
- அதானி உள்ளே அத்வானி வெளியே: ராகுல் கிண்டல்
- எனக்கு பொறுப்பு அதிகரித்துவிட்டது: மோடி பெருமிதம்
- பின்னோக்கி செல்லும் சமாஜ்வாதி கட்சியினரின் சமூக பார்வை: முலாயம் சிங்கை தொடர்ந்து அக்கட்சி மாநில தலைவரும் 'பகீர்'
- தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு சதியாம்: அதிருப்தியை சமாளிக்க ஜெ., புது குண்டு
- தமிழகம் எங்கும் குடிநீர் பஞ்சம்!
- அனைத்து தரப்பு விசாரணைக்கும் தயார் : காங்கிரசுக்கு நரேந்திர மோடி பதிலடி
| Posted: ராமேஸ்வரம் : 2013- - 14 ல், இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில், தமிழக மீனவர்கள் படகுகள், வலைகளை இழந்து, பொருளாதார ரீதியில், ரூ.50 கோடி வரை நஷ்டம் அடைந்துள்ளனர். இது தங்களுக்கு 'இருண்ட காலம்' என, மீனவர்கள் தெரிவித்தனர்.மீன்வளம் நிறைந்த பாக்ஜலசந்தி கடலில், பாரம்பரியமாக மீன்பிடித்த ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கு, இலங்கை கடற்படையால், 2013- - 14 ம் ஆண்டு, துயரமான ஆண்டாக அமைந்தது.மீன் பிடிக்க தடை காலம் (ஏப்., 15 முதல் மே 29 வரை) முடிந்தவுடன், ஜூன் 1 முதல் ஏப்., 15 வரை, விசைப்படகுகளில் 126 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்லலாம். இதில் மீனவர்கள் ... |
| சும்மா தரவேண்டிய குடிநீரை விற்கிறார் ஜெ.,: ஸ்டாலின் குற்றச்சாட்டு Posted: செஞ்சி : ''சும்மா தரவேண்டிய குடிநீரை ஜெ., வியாபாரம் ஆக்கி விட்டார்,'' என, ஸ்டாலின் பேசினார்.செஞ்சியில் நேற்று மாலை, ஆரணி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் சிவானந்தத்தை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:தேர்தலுக்கு மட்டும் வருபவர்கள் நாங்கள் இல்லை; உரிமையோடு மக்களைச் சந்திக்க வருபவர்கள். ஹெலிகாப்டரில் வரவில்லை; சாலை வழியாக வந்தேன்.ஜெ., பாதுகாப்பிற்கு போலீசார் சென்று விடுவதால், நாட்டில் வழிப்பறி, செயின் பறிப்பு, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எல்லோரும் வானத்தில் பறக்கும் ஹெலிகாப்டரை பார்த்து வணங்குகின்றனர். கீழே இறங்கியதும், தரையில் ... |
| தி.மு.க., கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது : மயிலாடுதுறையில் கருணாநிதி 'சவால்' Posted: மயிலாடுதுறை : ''தி.மு.க., தலைமையிலான ஐனநாயக முற்போக்கு கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.தி.மு.க., தலையிைலான, ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ஐதர்அலியை ஆதரித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. சூரியன் இல்லை என்றாலும், ஒன்றிற்கு இரண்டாக வெளிச்சம் ... |
| அடி வாங்கியபின் புத்தி வந்தது கெஜ்ரிவாலுக்கு Posted: புதுடில்லி : ''டில்லி மாநில முதல்வர் பதவியை, 49 நாட்களில் ராஜினாமா செய்தது என் தவறு தான்,'' என, ஆம் ஆத்மி கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில், டில்லி சட்டசபை தேர்தல் நடந்தது. ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வரானார். பதவியேற்றது முதல் பல குழப்பங்களை செய்த அவர், 'ஜன் லோக்பால்' மசோதாவை நிறைவேற்ற, மாநில எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிக்காததால், கோபத்தில் பதவியை ராஜினாமா செய்தார்; 49 நாட்களில் அவர் பதவி விலகினார்.பத்திரிகை ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த கெஜ்ரிவால் கூறியதாவது:டில்லி மக்களுக்காக பல ... |
| அதானி உள்ளே அத்வானி வெளியே: ராகுல் கிண்டல் Posted: தோடா : ''அதானி குழுமம் உள்ளே வந்ததும் அத்வானி, ஜஸ்வந்த சிங் போன்ற மூத்த தலைவரை வெளியே அனுப்பியவர், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,'' என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கூறினார்.தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான, ஜம்மு காஷ்மீரில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர், குலாம் நபி ஆசாத்தை ஆதரித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.அப்போது, ''குஜராத்தில் முதல்வர் மோடியின் அரசில், அம்மாநில, மிகப் பெரிய தொழிலதிபரான அதானியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதானி உள்ளே வந்ததும், அத்வானி, ... |
| எனக்கு பொறுப்பு அதிகரித்துவிட்டது: மோடி பெருமிதம் Posted: பாலாசூர் : ''லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுகள் பதிவாவதை பார்க்கும் போது, எனக்கான பொறுப்பு, மேலும் அதிகரித்துள்ளதாக கருதுகிறேன்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பளர் நரேந்திர மோடி பேசினார்.அன்பை பொழிகின்றனர்:ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, 10 தொகுதிகளுக்கு, நேற்று முன்தினம், தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள, 11 தொகுதிகளுக்கு, வரும் 17ல், தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, பாலாசூர் என்ற இடத்தில் ... |
| Posted: மும்பை:உ.பி.,யின் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், நேற்று முன்தினம், 'ஆம்பள பசங்கன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வர்; கற்பழிக்கவும் செய்வர்; அதற்காக அவர்களை துாக்கில் போடுவதா...' என கேள்வி எழுப்பி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அவர் கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவர் அபு அஸ்மி, முலாயமை விட ஒருபடி மேலே போய், ''திருமணத்திற்கு முன்னோ அல்லது பிறகோ, பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்களையும் துாக்கிலிட வேண்டும்,'' என கூறி, பரபரப்பை அதிகரித்துள்ளார்.வாய்க்கு வந்தபடி...உத்தர பிரதேசத்தில், லோக்சபா பிரசாரம் அனல் ... |
| தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு சதியாம்: அதிருப்தியை சமாளிக்க ஜெ., புது குண்டு Posted: சென்னை : தமிழகத்தில், அதிகரித்து வரும் மின் வெட்டால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இது, லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மின்வெட்டுக்கான காரணம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா, தினம் ஒரு விளக்கம் அளித்து வருகிறார். மக்களிடம் ஏற்பட்டு உள்ள அதிருப்தியை நீக்க, நேற்று, திருநெல்வேலியில் பேசும்போது, ''மின் வெட்டுக்கு சதித் திட்டமே காரணம். இச்சதியில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்போம்,'' என, சூளுரைத்துள்ளார்.தமிழகத்தில், கடந்த நவம்பரில், வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையத்தின், முதல் அலகில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ... |
| தமிழகம் எங்கும் குடிநீர் பஞ்சம்! Posted: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'அய்யோ...திரும்பவும் பஞ்சம் வரப்போகுது' என, மக்கள் புலம்பிவந்த காலம் உண்டு. அதற்கேற்ப, தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், பருவ மழை, தமிழகத்தை வஞ்சித்து, குடிநீருக்கே மக்கள் திண்டாடும் சூழல் ஏற்பட்டது உண்டு. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் இப்போது, அ.தி.மு.க.,விற்கும் அந்த அடையாளம் ஒட்டப்படும் நிலை உருவாகி உள்ளது.தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில், முதல்வராக பக்தவத்சலம் இருந்த போது, 1964 - 65 காலகட்டத்தில் ஏற்பட்ட, தண்ணீர் பஞ்சத்தை, யாரும் மறந்துவிட முடியாது. ... |
| அனைத்து தரப்பு விசாரணைக்கும் தயார் : காங்கிரசுக்கு நரேந்திர மோடி பதிலடி Posted: புதுடில்லி: என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் பயன்படுத்தாலாம்'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரங்களுக்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த பணம் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் என்றும். அவரின் புகழை பறப்ப, ஏராளமான தொகை சட்ட விரோதமான முறையில் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மோடி, காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 12,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |