Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டிய மன்மோகன் சிங்கை மாண்டேக் சிங்கை வைத்து சோனியா சமாதானம்

Posted: 11 Apr 2014 09:17 AM PDT

புதுடெல்லி,

2008ம் ஆண்டு ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டிய மன்மோகன் சிங்கை மாண்டேக் சிங்கை வைத்து சோனியா சமாதானம் செய்தார் என்று சஞ்ஜய பாரு எழுதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி அவருடன் இணைந்து பணியாற்றிய உதவியாளர் (ஊடக ஆலோசகர்) சஞ்ஜய பாரு 'விபத்தாக வந்த பிரதம மந்திரி  மன்மோகன் சிங் செய்தது, செய்யாதது' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். 301 பக்கங்களைக் கொண்ட இந்த மன்மோகன் சிங்கை நன்கு ஆராய்ந்து பல தகவல்களை சஞ்ஜய பாரு வெளியிட்டுள்ளார். சஞ்ஜய பாரு கடந்த 2008ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தவர்.

புத்தகத்தில் அமெரிக்காவுடனான சிவில் அணுசக்தி உடன்படிக்கையை இந்தியா செய்து கொண்டபோது ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில், இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்துக்கு இணங்கிவிட்டால் ராஜினாமா செய்யப்போவதாக பிரதமர் மன்மோகன்சிங்  மிரட்டியதுடன், பிரதமர் பதவிக்கு வேறு ஆளைப் பாருங்கள் என்று சோனியா காந்தியிடம் கேட்டுக் கொண்டதாகவும் சஞ்ஜய பாரு தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். பின்னர் ராஜினாமா செய்வதற்கான வாய்ப்பை வழிவகுத்தது என்ன விளக்கினார் என்றும் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவைக் கொண்டு மன்மோகன் சிங்கை சோனியா காந்தி அப்போது சமாதானப்படுத்தி விட்டதாகவும் தெரிய வந்ததாக சஞ்ஜய பாரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

category:

News Group Category:

மோடியின் பெயரை பயன்படுத்தி ராஜ்தாக்கரே ஓட்டு கேட்க கூடாது - கோபிநாத் முண்டே

Posted: 11 Apr 2014 08:59 AM PDT

புனே,

பாராளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் சிவசேனா போட்டியிடும் தொகுதிகளை குறிவைத்து நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தனது வேட்பாளர்களை களமிறக்கினார். அப்போது மோடி பிரதமராக வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். இதனால் பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகளில் அவர் பெரும்பாலும் தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இந்த நிலையில் ராஜ்தாக்கரே தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது, நரேந்திர மோடியின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பதாக கூறப்படுகிறது. இது பா.ஜனதா– சிவசேனா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே "ராஜ்தாக்கரே அவரது கட்சி வேட்பாளர்களுக்காக மோடியின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க கூடாது. அவ்வாறு ஓட்டு கேட்டு பொதுமக்களை குழப்ப வேண்டாம். நானும், நிதின் கட்காரியும் சேர்ந்து ராஜ்தாக்கரேயையும், உத்தவ் தாக்கரேயையும் ஓரணியில் கொண்டு வர முயற்சித்தோம். ஆனால் அந்த முயற்சி வீணாகி விட்டது. இந்த நிலையில் நவநிர்மாண் சேனாவுக்கு போடப்படும் ஒவ்வொரு ஓட்டும், காங்கிரசுக்கு சாதகமாக அமைந்து விடும். இதனால் வாக்காளர்கள் சிந்தித்து ஓட்டு போட வேண்டும் என்று கூறினார்.

News Group Category:

மலேசிய விமான பயணிகள் உயிருடன் உள்ளனரா? விமானம் ஆப்கானுக்கு கடத்தல் - ரஷ்யா உளவுத்துறை

Posted: 11 Apr 2014 08:47 AM PDT

மாஸ்கோ,

கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கி பறந்து கொண்டிருந்தபோது கடந்த மாதம் 8ந்தேதி அதிகாலையில் மாயமானது. அந்த விமானத்தின் கதி என்ன என்பது குறித்து தொடர்ந்து முரண்பட்ட  தகவல்கள் வெளியாகி வந்தன.  இருப்பினும், அந்த விமானம் விழுந்து நொறுங்கி விட்டதாகக் கருதி, அதன் கறுப்புப்பெட்டியை இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உலக நாடுகள் அனைத்து அங்கு தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அங்கு கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருவதாகவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. விரைவில் விமானம் கண்டு பிடித்துவிடப்படும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. மலேசியாவும் விமானம் விபத்துக்குள்ளாகி பயணிகள் அனைவரும் இறந்துவிட்டனர் என்று முன்னதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மாயமான மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலின் விழுந்து நொறுங்கவில்லை என்றும் விமானம்  ஆப்கானிஸ்தானுக்கு  தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளதாகவும் ரஷியா தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாயமான மலேசிய விமானம் ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் எல்லைக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தரை இறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிருடன் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு மண் குடிசைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவின்றி தவிக்கின்றனர் என்று ரஷியாவின் எப்.எஸ்.பி உளவுத்துறை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவன பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

category:

News Group Category:

சோனியாவிடம் மன்மோகன்சிங் சரண், முன்னாள் பிரதமர் ஊடக ஆலோசகர் எழுதிய புத்தகத்தில் தகவல்கள்

Posted: 11 Apr 2014 08:30 AM PDT

புதுடெல்லி,

பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி அவருடன் இணைந்து பணியாற்றிய உதவியாளர் (ஊடக ஆலோசகர்) சஞ்ஜய பாரு என்பவர் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 'விபத்தாக வந்த பிரதம மந்திரி  மன்மோகன் சிங் செய்தது, செய்யாதது' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். 301 பக்கங்களைக் கொண்ட இந்த மன்மோகன் சிங்கை நன்கு ஆராய்ந்து பல தகவல்களை சஞ்ஜய பாரு வெளியிட்டுள்ளார்.

மன்மோகன்சிங் தனது 2 வது பதவிக்காலத்தில் (2009-2014) காங்கிரஸ் கட்சியால் விஷப்பல்லைப் பிடுங்கிய பாம்பு ஆக்கப்பட்டு விட்டார், மத்திய மந்திரிகள் நியமனம் உள்பட அனைத்திலும் சோனியாதான் முடிவுகளை எடுத்தார், மன்மோகன் சிங், சோனியா காந்தியிடமும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடமும் சரண் அடைந்து விட்டதாகவே தோன்றுகிறது என புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது. அது குழப்பத்தை தந்தது. கட்சித்தலைவர்தான் அதிகார மையம் என்பதை நான் ஏற்க வேண்டியதாயிற்று. கட்சிக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று மன்மோகன் சிங் என்னிடம் கூறினார் என்றும் மந்திரிகளுக்கான இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிற அதிகாரத்துடன், அரசின் மீதான கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்துக்கொள்வதே சோனியாவின் நோக்கமாக இருந்தது என்றும் புத்தக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மன்மோகன்சிங்கிற்கு 1991-93 காலக்கட்டத்தில் இணைந்து பணியாற்றிய சி.ரங்கராஜனைத்தான் நிதி மந்திரியாக ஆக்க வேண்டும் எண்ணிணார் என்றும் ஆனால் மன்மோகன் சிங்கை ஆலோசிக்காமல் பிரணாப் முகர்ஜியை, சோனியா காந்தி தன் விருப்பப்படி நிதி மந்திரியாக்கினார் என்றும் தெரிவித்துள்ளார்.  

2-ஜி ஊழல் பெரிதாவுவதற்கு முன் ஆ.ராசாவை மந்திரி சபையில் சேர்க்காமல் இருக்க வேண்டும் என்று அவர் முயற்சித்தார். ஆனால் 24 மணி நேரத்தில், அவர் தனது சொந்தக் கட்சி மற்றும் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து விட்டார். டி.ஆர்.பாலுவையும் மந்திரிசபையில் சேர்ப்பதை மன்மோகன் சிங் எதிர்த்தார் என்றும் அதில் அவர் நினைத்ததை செய்து காட்டினார் என்றும் ஆ.ராசா விஷயத்தில் அது முடியவில்லை என்றும் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

category:

News Group Category:

தேசிய கொடியை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு: ஆம் ஆத்மிக்கு எதிரான மனு தள்ளுபடி

Posted: 11 Apr 2014 08:01 AM PDT

மும்பை,

ஆம் ஆத்மி கட்சியினர் தேசிய கொடியை தவறாக பயன்படுத்துவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆம் ஆத்மி மீது வழக்கு

மும்பை ஐகோர்ட்டில் ராம் சமுத்ரே என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், ஆம் ஆத்மி கட்சியினர் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக தங்களது பிரசார கூட்டங்களிலும், வலைதளங்களிலும் தேசிய கொடி மற்றும் தேசிய சின்னத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

தள்ளுபடி

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி மொகித் ஷா மற்றும் நீதிபதி சங்க்லேச்சா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம் ஆத்மி சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''தாங்கள் தேசிய கொடியை பயன்படுத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதை தொடர்ந்து கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பரில் இருந்து நிறுத்தி விட்டோம்'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பிரமாணப்பத்திரத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள், ஆம் ஆத்மி கட்சியினருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

category:

News Group Category:

திருமணம் செய்வதாக கூறி பெண் ஏமாற்றிய வாலிபர் கைது

Posted: 11 Apr 2014 07:55 AM PDT

தானே,

தானே மாவட்டம் அம்பர்நாத் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வினோத் யாதவ்(வயது28). தனியார் நிறுவன ஊழியர். அதே நிறுவனத்தில் பணிபுரியும் 26 வயது பெண்ணுடன் வினோத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தார்.

இந்தநிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வினோத் யாதவ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  பின்னர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், அம்பர்நாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, திருமணம் செய்வதாக கூறி பெண்ணை கற்பழித்ததாக வினோத் யாதவை கைது செய்தனர்.

category:

News Group Category:

‘ரகஷ்யா’ படத்துக்கு தடை கோரிய வழக்கு: ஆருஷி கொலை வழக்கு பின்னணியிலேயே படத்தின் காட்சிகள் உள்ளன கைதிகளான பெற்றோர் தரப்பு வக்கீல் வாதம்

Posted: 11 Apr 2014 07:52 AM PDT

மும்பை,

சிறுமி ஆருஷி கொலை வழக்கு பின்னணியிலேயே 'ரகஷ்யா' படத்தின் காட்சிகள் அமைந்து இருப்பதாக கைதிகளான சிறுமியின் பெற்றோர் தரப்பு வக்கீல் மும்பை ஐகோர்ட்டில் வாதம் செய்தார்.

ரகஷ்யா படம்

டெல்லியை அடுத்த நொய்டாவில் நடந்த சிறுமி ஆருஷி கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்காகும். கடந்த 2008–ம் ஆண்டு சிறுமி ஆருஷி, வீட்டு வேலைக்கார வாலிபர் ஹேமராஜுடன் பிணமாக கிடந்தார். இந்த கொலை வழக்கில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நுபுர் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பல் டாக்டர்களான தம்பதியர் இருவருக்கும் காசியாபாத் செசன்சு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. தற்போது அவர்கள் சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி ஆருஷி கொலை பின்னணியில் 'ரகஷ்யா' என்ற இந்தி படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சிறையில் இருக்கும் ராஜேஷ் தல்வார், நுபுர் தம்பதியர் மும்பை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.

மீண்டும் விசாரணை

இந்த மனு மீதான விசாரணையின்போது சென்சார் போர்டு பிரமாண பத்திரம் ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் ஆருஷி கொலை வழக்குக்கும், படத்தின் காட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தது. அப்போது படத்தை டாக்டர் தம்பதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு திரையிட்டு காட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் அவர்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் நேற்று மும்பை ஐகோர்ட்டில் நீதிபதிகள் வி.எம்.கனாடே, ஏ.கே. மேனன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு வக்கீல் ஆஜராகி வாதிடுகையில் கூறியதாவது:–

வெளியிட கூடாது

ஆருஷி கொலை வழக்குக்கும், படத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. தொடர்பு இல்லாத காட்சிகளை பற்றி தான் சென்சார் போர்டு கூறுகிறது. ஆனால் 100–க்கும் மேற்பட்ட காட்சிகள் தொடர்பு உள்ளவையாக உள்ளன. படத்தின் இறுதி கட்சி சிலவற்றை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கொலை வழக்குக்கு தொடர்புடையதாக உள்ளன.

இந்த படம் ஆருஷி கொலை வழக்கின் உண்மை பற்றி தெரியாமல், தண்டனை அனுபவித்து வரும் டாக்டர் தம்பதியரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது. டாக்டர் தம்பதியர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் அப்பீல் செய்து உள்ளனர். இதனால் அந்த அப்பீல் மனு மீது கோர்ட்டு முடிவு எடுக்கும் வரையில், ரகஷ்யா படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது.

இவ்வாறு வக்கீல் வாதம் செய்தார்.

இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட வழக்கு விசாரணையை வருகிற 17–ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

category:

News Group Category:

அமித்ஷா மற்றும் அசாம்கான் பொதுக்கூட்டத்தில் பேச தடை விதித்தது தேர்தல் கமிஷன்

Posted: 11 Apr 2014 07:43 AM PDT

புதுடெல்லி,

சமாஜ்வாடி கட்சி தலைவர்களில் ஒருவரான அசம் கான், கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் கடுமையாக போரிட்டு, வெற்றி பெற்றுத்தந்தவர்கள் இஸ்லாமிய வீரர்கள் தான். இந்து வீரர்கள் அல்ல. என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்தது.

பின்னர் கார்கில் போர் குறித்து அசாம்கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு உத்தரபிரதேச தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதேபோன்று உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளர் அமித்ஷா ஷாம்லி, பிஜ்னோர், முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. முசாபர்நகர் கலவரத்தை மேற்கோள் காட்டி, 'இந்த தேர்தல் நமது கவுரவத்துக்கான தேர்தல். நம்மை அவமானப்படுத்தியதற்கு பழிவாங்கும் தேர்தல். அநீதி இழைத்ததற்கு பாடம் கற்பிக்கும் தேர்தல்' என்று அவர் பேசினார்.

இப்பேச்சு, இரு மதத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி, தேர்தல் கமிஷனில் புகார் செய்தது. மேலும், அமித்ஷா மீது போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தனர். இதற்கிடையே, அமித்ஷாவின் பேச்சை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்தது.

தற்போது தேர்தல் கமிஷ்ன், அமித்ஷா மற்றும் அசாம்கான் உத்தரபிரதேச மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் பேச தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  
 

News Group Category:

சர்ச்சைக்குரிய பேச்சு: முலாயம் சிங்குக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீசு

Posted: 11 Apr 2014 07:34 AM PDT

புதுடெல்லி,

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கூடாது என்று பேசிய சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்குக்கு, விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

தேர்தல் பிரசார கூட்டத்தில் கற்பழிப்பு பற்றி முலாயம் சிங் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார் என்றும், இதற்காக அவருக்கு நோட்டீசு அனுப்பி இருப்பதாகவும் தேசிய மகளிர் ஆணைய தலைவி மம்தா சர்மா தெரிவித்தார். தனது பேச்சுக்காக நாட்டில் உள்ள பெண்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

முலாயம் சிங்கின் பேச்சை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் மம்தா சர்மா தெரிவித்தார்.

News Group Category:

நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிக்க நான் பைத்தியகாரன் அல்ல ராஜ் தாக்கரே பேச்சு

Posted: 11 Apr 2014 06:42 AM PDT

நாசிக்,

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே நாக்பூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:– மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், மராட்டியத்தை சேர்ந்த எந்தவொரு நபருக்கும் அங்கு வேலைவாய்ப்பு அளிப்பது இல்லை. மராட்டியம் அல்லாத நபர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. சொந்த பூமியில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல், மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பழக்கத்தை அரசியல்வாதிகள் ஏன் புரிந்து கொள்ளவில்லை?

மறைந்த தலைவர்கள் யஷ்வந்த்ராவ் சவான் மற்றும் பால்தாக்கரே ஆகியோர் தான் மராட்டியத்தை தங்களது சொந்த மண்ணாகவும், சொந்த தொகுதியாகவும் நினைத்தார்கள். வேறு எந்த அரசியல்வாதியும் அவர்களது வழியை பின்பற்றவில்லை. மத்திய அரசின் பல்வேறு அமைச்சக்கத்தை தன்னகத்தே வைத்திருக்கும் சரத்பவார், பாராமதியை தாண்டி வெளியே வர மறுக்கிறார். இதுபோன்ற குறைபாடுகளை களைய தான், நவநிர்மாண் சேனா சார்பில் நன்கு படித்த நபரை வேட்பாளராக களம் இறக்கி உள்ளோம்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி, நரேந்திர மோடி தண்ணீர் வசதி செய்து கொடுத்தார். இருப்பினும், பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு ஆதரவு அளிக்க நான் ஒன்றும் பைத்தியகாரன் அல்ல. இவ்வாறு ராஜ் தாக்கரே பேசினார்.

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™