ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
- மணத்தக்காளி!
- கர்ணனும் கண்ணனும்
- மலம்புழா அணை!
- குரோம் பிரவுசர் டிப்ஸ்
- உலகச் செய்திகள்!
- பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்
- விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்
- செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா?
- ஆங்கில இலக்கணம் -எளிய தமிழில்
- பாப்பாவை பாதுகாக்க 10 கட்டளைகள்!
- அதுபோதும் எனக்கு..
- சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை
- நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம்
- கங்கையே சூதகமானால்...
- நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா?
- அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள் மெளனம் கொள்ளுங்கள்
- இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை
- தமிழ் சினிமாவின் வன்கொடுமை
- கறியமுதுகள் - பொரியல்கள் - பாகற்காய் பொடி போட்ட கறியமுது
- ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .
- கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங்
- வாழ்க தமிழ் மொழி - செம்மொழியான தமிழ்மொழி
- விக்ரமாதித்யன் கவிதைகள்.
- தேர்தல் நகைச்சுவை
- ஆள் காட்டி விரல்..!
- காதல் கவிதைகள்
- தமிழ் மண்ணில் தமிழனை மிரட்டுவதா?: தெலுங்கு அமைப்புகளுக்கு இயக்குனர் வ.கௌதமன் கண்டனம்
- வெங்கிட்டாவிற்குச் சில வெண்பாக்கள் (?!)
- தொடத் தொடத் தொல்காப்பியம் (233)
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- ந.க.துறைவன் புதுக் கவிதைகள்
- கவிதையில் யாப்பு
- இருமல்
| ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Posted: 11 Apr 2014 02:43 PM PDT |
| Posted: 11 Apr 2014 02:37 PM PDT அரிய வகை மூலிகையான மனத்தக்காளிக் கீரையின் சிறப்புப் பற்றிப் பார்ப்போம். மணத்தக்காளிக் கீரையினுடைய இலை, காய், கனி பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இக்கீரையைப் பருப்புச் சேர்த்து மசியல், பொரியல் செய்து சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்தது. காச நோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. பசியை நன்கு தூண்டும். கரு வலிமை பெற இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ... |
| Posted: 11 Apr 2014 02:35 PM PDT கர்ணனுக்கு மறு பெயர் கன்னன்? கிருஷ்ணனுக்கு மறுபெயர் கண்ணன்? முன்னவன் "தோரோட்டியின் மகன்' என்று ஏசப்பட்டவன். பின்னவன் பார்த்தனுக்குச் (அர்ச்சுனனுக்கு) சாரதியாகக் குதிரை ஓட்டி, எல்லாராலும் பூஜிக்கப்பட்டவன். "கர்ணன்' என்றாலே நம் கண்முன் நிற்பவர் நடிகர் திலகம் சிவாஜி. "கண்ணன்' என்றாலே மறக்க முடியாத நடிகர் என்.டி.ஆர். "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா' என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல்வரிகள் அவரைப் போலவே காலத்தால் அழியாத வைரவரிகள். "கர்ணன்' திரைப்படத்தில் ... |
| Posted: 11 Apr 2014 02:33 PM PDT சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, 'குளு குளு' பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா? பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள். கோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது. மலம்புழா அணைக்கு சிறிது தூரத்தில் உள்ளது ராக் கார்டன் எனப்படும், கற்களால் ஆன பொம்மை ... |
| Posted: 11 Apr 2014 02:26 PM PDT சில வாரங்களுக்கு முன்னர், குரோம் பிரவுசரில் நீங்கள் எளிதாக உலாவ, பயன்படுத்த, சில குறிப்புகளையும், ஷார்ட் கட் கீகளையும் தந்திருந்தேன். இந்த வாரத்தில் இன்னும் சில குறிப்புகளையும் காணலாம். 1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச்செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் ... |
| Posted: 11 Apr 2014 02:24 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர் Posted: 11 Apr 2014 01:34 PM PDT பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" ஆசிரியர் : படிக்காசுப் புலவர் (அறுசீர் விருத்தம்) காப்பு விநாயகர் துதி சீர்கொண்ட கற்பகத்தில் வாதாவி நாயகனைத் தில்லை வாழுங் கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர கணபதியைக் கருத்துள் வைப்பாம் பேர்கொண்ட ஞானநா யகிபகன் தண்டலையெம் பெருமான் மீதில் ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ மொழிவிளக்கம் இயம்பத்தானே இதுவுமது வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல் விளம்பியசொல் மிகுபுராணம் ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல் ... |
| விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் Posted: 11 Apr 2014 01:01 PM PDT அதிகாரம் 1. 1. தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, 2. மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. 3. அப்பொழுது கடவுள், ஒளி தோன்றுக! என்றார்: ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். 4. கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். 5. கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. 6. ... |
| செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? Posted: 11 Apr 2014 09:37 AM PDT பேப்பரைப் பார்த்துப் படித்து ''செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?'' என நம்மைப் பார்த்துக் கேள்விகளாகக் கேட்டுத்தள்ளும் தங்கத் தாரகை அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் இவை. படிப்பீர்களா? நீங்கள் படிப்பீர்களா? எப்போதும் ஜென் நிலையில் லயித்துக்கிடக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை நார்மல் மனிதனாக மாற்றிக் காட்டுவீர்களா? நீங்கள் மாற்றிக் காட்டுவீர்களா? நீங்கள் காரில் போகும்போது டயரைப் பார்த்து சம்மணக்கால் போட்டு வணக்கம் வைக்கிறார்கள் உங்கள் தொண்டர்கள். எல்லாம் சரி. 'ஹெலிகாப்டரில் நான் பறக்கும்போதும் ... |
| Posted: 11 Apr 2014 09:33 AM PDT ஆங்கில இலக்கணம் எளிய தமிழில் மென்நூல் தறவிறக்கம் செய்ய http://www.ziddu.com/download/4444611/eegarai tamilzhan-easy-english.pdf.html |
| பாப்பாவை பாதுகாக்க 10 கட்டளைகள்! Posted: 11 Apr 2014 09:28 AM PDT தனிக்குடித்தன இளசுகள் பெற்றோர் அவதாரம் எடுக்கும் தருணம், படு அவஸ்தையானது. பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி என்ற மூத்தோர்களின் ஆலோசனைக்கு வழியின்றித் தடுமாறுவார்கள். அதிலும் வேலைக்குச் செல்லும் இளம் தாயின் நிலை இன்னும் பரிதாபம்! தனிக்குடித்தனத் தம்பதிகள், குழந்தை பிறந்ததும் இப்படித் தடுமாறாமல் இருக்க, பச்சிளம் குழந்தையின் படிப்படியான வளர்ச்சியையும் ஒரு வயது வரையில் அந்தப் பாப்பாவை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் விளக்குகிறார், சென்னை சூர்யா மருத்துவமனையின் பச்சிளம் ... |
| Posted: 11 Apr 2014 08:34 AM PDT உனக்கு என்றேனும் உன் வகுப்பறை போர் அடித்தால்,, உன் கைப்பேசி-இன் இன்பாக்ஸ்-ல் நீ படிக்காமல் வைத்திருக்கும் என் குறுந்தகவல்-களை பார் ... " அதை படித்துவிட்டு உனக்கு குறுஞ்-சிரிப்பேனும் வந்தால் " .. அதுபோதும் எனக்கு... உனக்கு என்றேனும் உன் மாலை வேளை மங்கிக்கிடந்தால் ,, உனக்காக நான் கிறுக்கிய கவிதைகளை தருகிறேன் .. அதை படித்துவிட்டு உனக்கு, " பைத்தியக்காரன் இப்படியா பொய் சொல்லுவான் " என்ற எண்ணமேனும் வந்தால் அதுபோதும் எனக்கு... உனக்கு என்றேனும் FACEBOOK,TWEETER ,WHATS APP இந்த மூன்றும் ... |
| சீனப் பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் - நகைச்சுவை Posted: 11 Apr 2014 08:03 AM PDT சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை இந்தியப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டாள். முதல் வருடத்தில் அவர்களுக்கு அழகான குழந்தை பிறந்தது. மறு வருடம் யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த சீன இளைஞன் இறந்து போனான். இந்தியப் பெண்ணிடம் துக்கம் விசாரிப்பதற்காகஉறவினர்களும், அந்தப் பகுதி மக்களும் கூடி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இரண்டு வருடத்தில் இந்தியப் பெண்ணின் காதல் கணவன் இறந்து போனது அவர்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அந்தப் பெண்ணோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எனக்குத் ... |
| நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Posted: 11 Apr 2014 07:58 AM PDT 'நார்கொலாப்ஸி' இது ஒரு மோசமான தூக்க வியாதி. அடிக்கடி கண்ணைக் கட்டிக் கொண்டு தூக்கம் வந்து விடும். என்ன டா இது இராத்திரி எல்லாம் தூக்கம் வராம அவனவன் பேஸ்புக்ல உட்கார்ந்து கிட்டு இருக்காய்ங்க. தூக்கம் வருவதெல்லாம் ஒரு வியாதியா? என்று குழப்பமாக இருக்கலாம். ஆனால் 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் விஷாலுக்கு உள்ள வியாதி எந்த அளவிற்கு மோசம் என்றால்? கண்ணுக்கு முன்னாடி அழகுச் சிலையாக நிற்கும் லட்சுமி மேனனை உணர்ச்சிவசப்பட்டு அணைக்க நினைக்கும் போது கூட பாழாய் போன இந்த தூக்கம் வந்து அப்படியே கண்கள் ... |
| Posted: 11 Apr 2014 07:57 AM PDT வெளிநாட்டவர்களுக்கு பனாரஸ், வட மாநிலத்தவர்களுக்கு வாரணாசி, நமக்கு காசி. நாட்டிலேயே பழமையும்,பெருமையுமிக்க புராதனமான நகரம்.இந்த பழம் பெருமை பேசி,பேசியே இந்த ஊரை நம்மூர் அரசியல்வாதிகள் காசியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி வைத்திருக்கின்றனர். ஊருக்குள் காரில் போவது என்பது தேரில் போவது போலத்தான். இதன் அர்த்தம் அவ்வளவு சுகமானது என்பதல்ல அவ்வளவு மெதுவாக போகுமென்பதாகும்.வேகமாக போகவேண்டும் என்றால் காரைவிட்டு இறங்கி இங்கே ஒடும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சைக்கிள் ரிக்ஷாக்களில் ஒன்றில்தான் ... |
| நேர்மை பற்றி பேச உங்களுக்கு உரிமை இருக்கிறதா? Posted: 11 Apr 2014 07:39 AM PDT இது தேர்தல் காலம். நேர்மை, தூய்மை, ஊழல், லஞ்சம் என்பன உள்ளிட்ட சொற்களின் ஆதிக்கம் மிகுந்த காலம். பிரதமர் வேட்பாளர் முதல் எம்.பி. வேட்பாளர் வரையிலானவர்களின் நேர்மையைப் பற்றி அறிந்தோ அறியாமலோ பேசுகிறோம். சரி, இந்த 'நேர்மை'யின் நிலைமை நம் அன்றாட வாழ்க்கையில் எப்படி இருக்கிறது? நல்லனவற்றை தூரத்தில் வைத்து ஆராதித்தே பழக்கப்பட்டுப்போன நாம், அதன் கரம் பிடித்து நடக்க முயல்வதே இல்லை. அதனால்தானோ என்னவோ, இறைவனுடன் கூட வழிநடப்பதை தவிர்த்து அவருக்கு தனியாக இல்லம் அமைத்து கொடுத்து வணங்குகிறோம். வெறும் ... |
| அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள் மெளனம் கொள்ளுங்கள் Posted: 11 Apr 2014 07:21 AM PDT நாவின் பத்தினித்தனம் வாய்முடி மெளனமாய் இருப்பதாகும். வாய்முடி இருப்பது இஸ்லாத்தின் தலை போன்றதாகும். ஈமானின் பக்தர்களுக்கு இறைநேசமும் கிரீடமும் வாய்முடி மெளனமாய் இருப்பதாகும். ஒரு ஆலிம் மார்க்க விஷயத்தில் மெளனமாய் இருப்பது குற்றமாகும். அவர் பேசுவது சிறப்பாகும். பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் நாவைப் பிடித்து கொண்டு இதை (தீயவழியில்) உபயோகிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். -அல் ஹதீஸ் உங்களில் அளவுக்கு அதிகமாக பேசுவோனும், வீண்பேச்சுப் பேசுவேனும், தற்பெருமையாகப் பேசுவேனும், ... |
| இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Posted: 11 Apr 2014 07:06 AM PDT 'தாய்மை' – இப்பூமியில் உலா வருகிற பல கோடிக்கணக்கான ஜீவராசிகளின் மூல ஆதாரமாகும். உலக இயக்கத்தின் சாட்சியமே தாய்மை தான். தாயின் அன்பு மூலமே இறைவனின் அன்பை நாம் ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும். ஏனைய அன்புகள் எல்லாம் தாயின் அன்புக்கு நிகராகாது. தன் குழந்தையின் மீது கொண்டிருக்கிற ஒரு தாயின் நேசம் தன்னிகரற்றது. எனவே தான் நாயகம் (ஸல்) அவர்கள் இறை அன்பின் அளவை விளக்கும் பொருட்டு ஒரு தாய் தன் குழந்தையின் மீது கொண்டுள்ள அன்பை உவமைப்படுத்தி சொன்னார்கள். ஒரு தாயின் அன்பைக் காட்டிலும் 70 மடங்கு ... |
| Posted: 11 Apr 2014 06:59 AM PDT பெண்களைப் பற்றித் தமிழ் சினிமா என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது? ஒரு பக்கம் பெண்களை வெறும் உடலாகப் பாவித்து முடிந்தவரையில் அவர்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது. இன்னொரு புறம் தாய்ப் பாசம், தங்கைப் பாசம் என்று பாச அபிஷேகம் செய்து ஆராதிப்பது. இவற்றுக்கு இடையே அடக்கம், பண்பு, நாகரிகம் ஆகியவற்றைப் பற்றிப் பாடம் எடுப்பது. இப்படியாகப் பெண்களைப் 'பன்முகம்' கொண்ட கோணங்களில் அணுகும் தமிழ் சினிமா இவற்றுக்கிடையில் இருக்கும் உள் முரண்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இவை ஒரு புறம் இருக்க, வாய்ப்புக் ... |
| கறியமுதுகள் - பொரியல்கள் - பாகற்காய் பொடி போட்ட கறியமுது Posted: 11 Apr 2014 06:38 AM PDT இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம். இதில் பல வகைகள் உண்டு. அதாவது : 1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது 2 . வதக்கல் 3 . பருப்பு உசிலி 4 . மசியல் வகைகள் 5 . பொடிமாஸ் 6 . மசாலா போட்ட கறியமுது 7 . பல காய்கள் போட்ட கறியமுது 8 . பொடி போட்ட கறியமுது 9 . வேகவைத்த கறியமுது 10. வாழைக்காய் பொடி 11. வெறும் தேங்காய் ... |
| ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப . Posted: 11 Apr 2014 06:27 AM PDT 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப . ------------------------------------------------------------------------------------------ வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100. இதயத்தில் சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தும் கவிதைகள் ! ***** எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவர் இரா. இரவி. அவரிடம் எந்தப் ... |
| கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங் Posted: 11 Apr 2014 05:44 AM PDT லக்னோ: பெண்களை கற்பழித்த வழக்கில் குற்றம்சாட்டப்படுபவர்கள் தூக்கு தண்டனை மூலம் தண்டிக்கப்படுவது தவறானது என்றும், இது தொடர்பான சட்டத்தை திருத்தி அமைக்க பாடுபடுவோம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவரான முலாயம்சிங் பரபரப்பாக பேசியுள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்து வருவதால் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று குரல் ஒலிக்க துவங்கியது. குறிப்பாக மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட பின்னர் பெரும் போராட்டம் வலுத்தது. இதனையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை தடை செய்யலாமா ... |
| வாழ்க தமிழ் மொழி - செம்மொழியான தமிழ்மொழி Posted: 11 Apr 2014 03:27 AM PDT வாழ்க தமிழ் மொழி |
| Posted: 11 Apr 2014 03:04 AM PDT முதல் போகம் * யாருடன் எப்பொழுது எப்படி எங்கே அனேகமாய் கள்ளத்தனமாக? பதற்றப்பட்டு? வயசு? மனசு? தொடர்ந்து இது எத்தனாவது இதில் எத்தனையில் நீயம் எதிராளியும் இன்னும். * தாம்பத்யம் * முதலில் உடல் தொட்டு உடல் பிறகு மனசறிந்து மனசு ஆதி காமம் அப்புறம் காதல். * பிறகு * அவள் அந்தப்பக்கமாய் திரும்பிப் படுக்க இவன் இந்தப் புறமாய் விலகிக் கிடக்க இடையில் விழுந்தது ஒரு வெளி நடுவில் கிடந்தது இருமனம். * ஆதாரம்:- விக்ரமாதித்யனின்- " தேவiதைகள் பெருந்தேவிகள் மோகினிப் பிசாசுகள் ... |
| Posted: 11 Apr 2014 02:38 AM PDT தினமலர் தளத்தில் வந்த தேர்தல் பற்றிய நகைச்சுவை படங்கள் இவை , இது போல வேறு பத்திரிகைகளில் வருவதையும் இங்கு பதிவிடுங்கள் நண்பர்களே |
| Posted: 10 Apr 2014 11:45 PM PDT - |
| Posted: 10 Apr 2014 11:42 PM PDT நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் ..அதனால தான் என்னவோ அவள் ஓடி விட்டாள் என்று நினைக்கிறன் ..இருந்தாலும் முக நூலில் பார்த்த இதை உங்களுடன் பகிர விழைகிறேன் ..ரசிக்க மட்டுமே 1.அன்பே ..! உன் அப்பன் என்ன தீவிரவாதியா? புள்ளைய பெத்துவிட சொன்னா அணுகுண்ட பெத்துருக்கான் .. 2.பாய்சன் குடிச்சாகூட வராத மயக்கம், நீ பக்கத்தில் வந்து பேசும் போது வருகிறது .தயவு செய்து பல் விலக்கு ப்ளீஸ் .. 3.நான் பயப்படுவதெல்லாம் நீ கட்டும் 5 ருபாய் ராக்கிக்கு அல்ல, நீ அதை கட்டி வாங்க இருக்கும் 500ரூபாய்க்கே.. 4.ஒரு ... |
| தமிழ் மண்ணில் தமிழனை மிரட்டுவதா?: தெலுங்கு அமைப்புகளுக்கு இயக்குனர் வ.கௌதமன் கண்டனம் Posted: 10 Apr 2014 11:41 PM PDT நடிகர் வடிவேலு நடிக்கும் 'தெனாலி ராமன்' படத்துக்கு தெலுங்கு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் கிருஷ்ண தேவராயர் குறித்து தவறாகச் சொல்லப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தெலுங்கு அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். சீமானைத் தொடர்ந்து இயக்குனர் வ.கௌதமனும் தெலுங்கு அமைப்புகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ் ... |
| வெங்கிட்டாவிற்குச் சில வெண்பாக்கள் (?!) Posted: 10 Apr 2014 11:26 PM PDT வேர்முதல் உச்சிவரை ஆட்கொண்ட வேங்கடவா கோர்வையாய் இங்கே கேட்டிடுவேன் - நேர்பட நெஞ்சில் நினைந்துருகி நித்தமும் நினைக்குமென் பிஞ்சுமனம் தான்தழைக்க வா வாவென்றால் வந்திருந்தாய் வாகாகப் பாய்சுருட்டிப் போவென்றால் போன பெருமாளே – நாவெங்கும் ஆர்வமாய் உச்சரித்தே ஆழ மனம்பதிப்பேன் தீர்த்திடு என்வலியைத் தான்.. (ஓரிருக்கையில் பாய்சுருட்டிச் சென்று பின் வந்த பெருமாள்) தானால் குழம்ப தகுந்த ரசமாக்க தானை எடுக்கவுன் தாள்பணிவேன் – ஆனாலும் வீற்றிருக்கும் கோலத்தில் வேங்கடவா உன்கண்ணால் தீற்றி அருள்புரிந்தால் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (233) Posted: 10 Apr 2014 11:16 PM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 10 Apr 2014 10:23 PM PDT 1.தாளம் போட்டு சிரித்தது தாத்தாவின் தொந்தியைத் தட்டி மடியில் உட்கார்ந்தக் குழந்தை. 2.மருத்துவர் கொடுத்த மருந்தால் அழிந்தது குழந்தை வயிற்றில் பூச்சிகள். 3.தங்கச் சங்கலி பறித்தவன் நம்பிக்கைத் தகர்ந்துப் போனது கிடைத்ததோ கவரிங் நகை. 4.வலது கைமணிக் கட்டில் கலர் கலராய் கோயிலில் வாங்கியக் கயிறுகள். |
| Posted: 10 Apr 2014 09:02 PM PDT பெரும் தயக்கம்{புதுக் கவிதை} * ஊரிலிருந்து வந்தவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. நீங்க யாரென்று கேட்டதற்கு உறவினர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர்களுக்குச் சொந்த மென்று விவரமாய்ச் சொன்னார். என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டேன். தேடி வந்தச் செய்தியைச் சொன்னார். * ஊர்காரர் என்றாலும் அறிமுகமில்லாதவர்க்கு எப்படி உதவி செய்வ தென்று பெரும் தயக்கம். சரி பார்க்கலாம் என்றேன். "கொஞ்சம் பார்த்து செய்யுங்க" என்று கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார். மறு முனையிலிருந்து போன் வந்தது. "நம்ம ... |
| Posted: 10 Apr 2014 08:59 PM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 10 Apr 2014 08:18 PM PDT ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
