Daily Thanthi |
- பிரபல ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை ஓய்வு
- சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்
- டேவிஸ் கோப்பை டென்னிசில் ஆட மகேஷ் பூபதி விருப்பம்
- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு: இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய முறையீடு
- 2016–ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி போட்டி?
- கணவர் சோயிப் மாலிக்குடன் கருத்துவேறுபாடா? சானியா மிர்சா மறுப்பு
- தமிழ்நாடு, புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு; 40 தொகுதிகளில் 875 பேர் போட்டி, வட சென்னை - 40, தென் சென்னை - 42, மத்திய சென்னை - 20
- யுவராஜ்சிங்குக்கு பீட்டர்சன் ஆதரவு
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் சாய்னா வெளியேற்றம்
- கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கருக்கு விஸ்டன் பத்திரிகை கவுரவம்
| பிரபல ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை ஓய்வு Posted: 09 Apr 2014 01:38 PM PDT சிட்னி, ஆஸ்திரேலியாவின் பிரபல நீச்சல் வீராங்கனை ஸ்டெபானி ரைஸ். இவர், 2008–ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் தனிநபர் மெட்லே, 400 மீட்டர் தனிநபர் மெட்லே, 4x200 மீட்டர் பிரீஸ்டைல் ஆகிய மூன்று பிரிவிலும் உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்று வியக்க வைத்தார். ஆனால் அதன் பிறகு தோள்பட்டை காயத்தில் சிக்கிய அவரால் 2012–ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. லண்டன் ஒலிம்பிக்குக்கு பிறகு சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். தோள்பட்டை காயத்துக்கு மூன்று முறை ஆபரேஷன் செய்த ரைசால், சர்வதேச போட்டியாளர்களுக்கு இணையாக மீண்டும் பழைய உத்வேகத்தை அடைய முடியவில்லை. இந்த நிலையில் சர்வதேச நீச்சல் போட்டியில் ஓய்வு பெறுவதாக ஸ்டெபானி ரைஸ் நேற்று அறிவித்தார். தனது இணையதளத்தில் வீடியோ காட்சி மூலம் பேசிய அவர் 'மீண்டும் நீச்சல் களத்திற்குள் ஒரு போதும் திரும்பமாட்டேன். இதுவே எனது இறுதி முடிவு. தொடர்ந்து நீச்சல் போட்டியில் பங்கேற்க முடியாமல் போவது வருத்தம் அளிக்கிறது' என்றார். அடுத்த கட்ட திட்டம் குறித்து எதுவும் வெளிப்படையாக தெரிவிக்காத ஸ்டெபானி ரைஸ் நீச்சல் களத்திற்கு வெளியே தன்னை நிரூபித்து காட்டுவதே நோக்கம் என்றும் குறிப்பிட்டார். 25 வயதான ஸ்டெபானி ரைஸ் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 வெள்ளியும், 5 வெண்கலமும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. image: category: |
| சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் Posted: 09 Apr 2014 01:37 PM PDT கராச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சாகித் அப்ரிடியும், உமர் அக்மலும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அப்ரிடிக்கு நோட்டீஸ் வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக அரைஇறுதி வாய்ப்பை இழந்து சூப்பர்–10 சுற்றோடு நடையை கட்டியது. அணி தாயகம் திரும்பிய போது விமான நிலையத்தில் பேட்டி அளித்த பாகிஸ்தான் ஆல்–ரவுண்டர் அப்ரிடி, 'வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் ஆக்ரோஷமான மனநிலையுடன் ஆடியது போன்று தெரியவில்லை. இதனால் தான் போட்டியில் இருந்து வெளியேற நேரிட்டது. கேப்டன் பதவியை எனக்கு வழங்கினால், அந்த சவாலை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்' என்று தெரிவித்தார். ஒரு போட்டித் தொடரில் பங்கேற்று விட்டு நாடு திரும்பும் போது, அது தொடர்பாக கேப்டன் மற்றும் குறிப்பிட்ட அணி நிர்வாகிகள் மட்டுமே மீடியாக்களிடம் பேச வேண்டும். இந்த கட்டுப்பாட்டை மீறி நீங்கள் ஏன் மீடியாக்களிடம் பேசினீர்கள் என்று விளக்கம் கேட்டு அப்ரிடிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உமர் அக்மலுக்கும் பிரச்சினை பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் 23 வயதான உமர் அக்மலும் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப்ரவரி மாதம் லாகூரில் காரில் சென்ற போது, போக்குவரத்து விதிகளை மீறியதாக அவரை போக்குவரத்து அதிகாரிகள் மடக்கினர். அப்போது அவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட உமர் அக்மல் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டார். பிறகு மன்னிப்பு கேட்டதால் இந்த வழக்கில் இருந்து தப்பினார். இந்த நிலையில் அவர் அடுத்த பிரச்சினையில் மாட்டியுள்ளார். லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்கு அவர் காரில் சென்றார். அப்போது அங்கு நின்ற பாதுகாவலர் அவரை மறித்தார். அவருக்கு. உமர் அக்மல் யார் என்று தெரியவில்லை. காரை உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது, வெளியே அதற்குரிய பகுதியில் நிறுத்துங்கள் என்றார். இதனால் எரிச்சல் அடைந்த உமர் அக்மல் அவருடன் கடும் வாக்குவாதம் செய்தார். தன்னை பற்றி எடுத்து கூறிய உமர் அக்மல், தனக்கு இந்த மாத இறுதியில் திருமணம் நடக்க இருப்பதாகவும், திருமண அழைப்பிதழ்கள் கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அதை அந்த பாதுகாவலர் பொருட்படுத்தவில்லை. இதனால் கோபத்துடன், திருமண அழைப்பிதழ்களை கொடுக்காமலேயே உமர் அக்மல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பொதுவாக வீரர்களின் கார் லாகூர் ஸ்டேடியத்தின் உள்பகுதியில் நிறுத்த அனுமதிக்கப்படுவது உண்டு. இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. image: category: |
| டேவிஸ் கோப்பை டென்னிசில் ஆட மகேஷ் பூபதி விருப்பம் Posted: 09 Apr 2014 01:35 PM PDT மும்பை, இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிசின் உலக குரூப் 'பிளை–ஆப்' சுற்று ஆட்டம் இந்தியாவில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் விளையாட விரும்புவதாக இந்திய மூத்த வீரர் மகேஷ் பூபதி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து விடைபெறும் மகேஷ் பூபதி, 2012–ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் எழுந்த பிரச்சினைக்கு பிறகு டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் மும்பையில் நேற்று நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேஷ் பூபதி கூறுகையில், 'டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாட எப்போதும் தயாராக இருக்கிறேன். கேப்டன் (ஆனந்த் அமிர்தராஜ்), பயிற்சியாளர் (ஜீஷன் அலி) ஆகியோரின் எண்ணமும் அது தான் என்பதை அறிவேன். செர்பியாவுக்கு எதிரான போட்டியில் இரட்டையர் ஆட்டம் மிகவும் முக்கியமானது. சொந்த ஊரில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச் விளையாட வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். சோம்தேவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் டேவிஸ் கோப்பை டென்னிசில் தென்கொரியாவை அதன் சொந்த மண்ணில் சாய்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இதற்கு முன்பு தென்கொரியாவை அவர்களது ஊரில் வைத்து வென்றதில்லை. பல முறை அங்கு நடந்த போட்டிகளில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஆனால் சோம்தேவும், சக வீரர்களும் அற்புதமாக விளையாடி, உலக குரூப்பில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளனர்' என்றார். image: category: |
| ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு: இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய முறையீடு Posted: 09 Apr 2014 01:33 PM PDT புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட பிரச்சினை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆஜராகி வரும் வக்கீல் சுந்தரம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் 'ஐ.பி.எல்.சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முகுல் முத்கல் கமிட்டியிடம், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் டேப்பை (ஒலிநாடா) நகலை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணையை 11–ந் தேதிக்கு (நாளை) நீதிபதி ஏ.கே.பட்நாயக் தள்ளிவைத்தார். image: category: |
| 2016–ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி போட்டி? Posted: 09 Apr 2014 01:31 PM PDT வாஷிங்டன், அமெரிக்காவில் 2016–ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என தெரிய வந்துள்ளது. சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாநாடு ஒன்றில் ஹிலாரி கிளிண்டன் பங்கேற்றார். அப்போது அவரிடம், ''உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன? நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகிறீர்களா? நீங்கள் அதை விரும்பினால் இங்கே அறிவிக்கலாமே?'' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஹிலாரி கிளிண்டன், ''நீங்கள் எல்லாரும் இப்படி என்னை கேட்பதையும், எனக்கு ஊக்கம் அளிப்பதையும், மிகுந்த கவுரவமாக கருதுகிறேன். நான் அதுபற்றி இப்போது சிந்தித்து வருகிறேன். இந்த சிந்தனை இன்னும் சிறிது காலம் தொடரும்'' என பதில் அளித்தார். ஹிலாரி கிளிண்டன், கடந்த 2008–ம் ஆண்டு ஜனநாயகக்கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களம் இறங்குவதற்கு நடந்த தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவிடம் தோல்வி அடைந்தது நினைவுகூரத்தக்கது. image: category:Tagging:News Group Category: |
| கணவர் சோயிப் மாலிக்குடன் கருத்துவேறுபாடா? சானியா மிர்சா மறுப்பு Posted: 09 Apr 2014 01:31 PM PDT கராச்சி, தனது கணவர் சோயிப் மாலிக்குடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று சானியா மிர்சா கூறியுள்ளார். சானியா–மாலிக் உறவில் விரிசலா? இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து மணந்தார். பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் இவர்களது திருமணம் 2010–ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சானியா மிர்சா தொடர்ந்து இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். சோயிப் மாலிக் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறார். இந்த நிலையில் இவர்கள் இடையே நெருக்கம் குறைந்து வருவதாகவும், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை சானியா மிர்சா திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ள சானியா மிர்சா அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:– பிரச்சினை இல்லை எங்களது திருமண வாழ்க்கை எளிதானது அல்ல. ஏனெனில் இருவரும் வெவ்வேறு நாட்டை சேர்ந்த, தொழில்முறை விளையாட்டு வீரர்கள். நாங்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதற்கு போதுமான நேரம் கிடைக்காது என்பதை அறிவேன். ஆனால் இதுவரை அந்த நிலைமையை முடிந்தவரை சிறப்பாக கையாண்டு வருகிறோம். எங்களுக்குள் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆனாலும், சோயிப் மாலிக்கை நான் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த கட்ட போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு கணவருடன் 'ரிலாக்ஸ்' செய்து கொள்வதற்காக மாமனார் வீடு உள்ள சியல்கோட்டுக்கு (பாகிஸ்தான்) வந்துள்ளேன். மீடியாக்களின் தொந்தரவு இல்லாததால் இங்கு ஜாலியாக நேரத்தை செலவிட்டு வருகிறேன். ஆசை தீர சாப்பிடுகிறேன். ஷாப்பிங் சென்று மனதுக்கு பிடித்ததை வாங்குகிறேன். ஒரு முறை கடைவீதிக்கு சென்ற போது, ஒரு கடைக்காரருக்கு முதலில் நான் சானியா தானா? என்று ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு எனது கணவருடன் என்னை பார்த்த பிறகு, அடையாளம் கண்டு என்னிடம் ஆட்டோகிராப் வாங்கினார். புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். உலக கோப்பை கிரிக்கெட் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை இடையிலான ஆட்டதை இங்கிருந்து டி.வி.யில் பார்த்தேன். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று எல்லோரும் விரும்பினோம். ஆனால் கடைசியில் அது இலங்கைக்குரிய நாளாக அமைந்து விட்டது. சோயிப் மாலிக் தொடர்ந்து முன்னிலை வீரராக நீடிக்க வேண்டும், மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும் என்று பிரார்தித்திக்கிறேன். இவ்வாறு சானியா மிர்சா கூறினார். image: category: |
| Posted: 09 Apr 2014 01:31 PM PDT சென்னை, தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வருகிற 24–ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 29–ந்தேதி தொடங்கி கடந்த 5–ந்தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் 1,256 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 7–ந்தேதி நடந்தது. அப்போது 348 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். நேற்று சில சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். 875 பேர் போட்டி அதன்பிறகு இறுதி வேட்பாளர் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 789 பேர் ஆண்கள், 55 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். புதுச்சேரி தொகுதியில் 30 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நேற்று மாலை வெளியிட்டார். தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:– திருவள்ளூர்(தனி) 1.பி.வேணுகோபால்(அ.தி.மு.க.) 2.ரவிக்குமார்(விடுதலை சிறுத்தைகள்) 3.வி.யுவராஜ்(தே.மு.தி.க.) 4.விக்டரி எம்.ஜெயக்குமார்(காங்.) 5.ஏ.எஸ்.கண்ணன்(இந்திய கம்யூ.) 6.பி.பாலமுருகன்(ஆம் ஆத்மி) 7.சீனிவாசன்(சமாஜ்வாடி) 8.சி.சத்தியமூர்த்தி(பகுஜன் சமாஜ்) உள்பட மொத்தம் 14 பேர் போட்டியிடுகிறார்கள். வடசென்னை 1.டி.ஜி.வெங்கடேஷ்பாபு(அ.தி.மு.க.) 2.வக்கீல் ஆர்.கிரிராஜன்(தி.மு.க.) 3.எம்.சவுந்திரபாண்டியன்(தே.மு.தி.க.) 4.பிஜூ சாக்கோ(காங்.) 5.உ.வாசுகி(மார்க்சிஸ்ட்) 6.எஸ்.சீனிவாசன்(ஆம் ஆத்மி) 7.ஜெ.ஜனார்த்தனன்(பகுஜன் சமாஜ்) 8.எம்.நிஜாம் முகைதீன்(எஸ்.டி.பி.ஐ.) 9.வி.சிவகுமார்(எஸ்.யு.சி.ஐ(கம்யூனிஸ்டு) 10.ஏ.பாபு மைலன்(லோக் சத்தா) 11.சி.பால்ராஜ்(மக்கள் மாநாடு கட்சி) 12.சி.ரமேஷ் கண்ணன்(இந்திய குடியரசு கட்சி(அ) 13.கே.விஜயகுமார்(தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்) உள்பட மொத்தம் 40 பேர் போட்டியிடுகிறார்கள். தென்சென்னை 1.டாக்டர் ஜெ.ஜெயவர்தன்(அ.தி.மு.க.) 2.டி.கே.எஸ்.இளங்கோவன்(தி.மு.க.) 3.இல.கணேசன்(பா.ஜ.க.) 4.எஸ்.வி.ரமணி(காங்கிரஸ்) 5.எம்.ஜாகீர் ஹூசேன்(ஆம் ஆத்மி) 6.ஏ.ஜெய்கணேஷ்(லோக் சத்தா) 7.பாலாஜி(பகுஜன் சமாஜ்) 8.டி.கே.ராமஜெயம்(பகுஜன் பாதுகாப்பு கழகம்) 9.எஸ்.கணேசன்(சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா(கம்யூனிஸ்டு) 10.எஸ்.சீத்தா லட்சுமி(தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்) 11டி.தனசேகர்(தேசிய காங்கிரஸ் அமைப்பு) 12.கே.மணி(ஜனதா தளம் (ஐக்கியம்) 13.ஆர்.கந்தசாமி(அம்பேத்கர் மக்கள் இயக்கம்) உள்பட மொத்தம் 42 பேர் போட்டியிடுகிறர்கள். மத்திய சென்னை 1.எஸ்.ஆர்.விஜயகுமார்(அ.தி.மு.க.) 2.தயாநிதிமாறன்(தி.மு.க.) 3.சி.டி.மெய்யப்பன்(காங்கிரஸ்) 4.ஜே.கா.ரவீந்திரன்(தே.மு.தி.க.) 5.ஜெ.பிரபாகர்(ஆம் ஆத்மி) 6.முரளிகிருஷ்ணன்(பகுஜன் சமாஜ்) 7.எஸ்.டி.கிருஷ்ணகுமார்(இந்திய குடியரசு கட்சி(அ) 8.ஆடிட்டர் கோபிநாராயணன்(மக்கள் மாநாடு கட்சி) உள்பட மொத்தம் 20 பேர் போட்டியிடுகிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் 1. கே.என்.ராமச்சந்திரன்(அ.தி.மு.க.) 2. எஸ்.ஜெகத்ரட்சகன்(தி.மு.க.) 3. இரா.மாசிலாமணி(ம.தி.மு.க.) 4. அருள்அன்பரசு(காங்கிரஸ்) 5. எஸ்.ஏ.என்.வசீகரன்(ஆம் ஆத்மி) 6. புலவர் ஏ.சு.மணி(தேசிய ஸ்தாபன காங்கிரஸ்) 7. ச.முகமதுஅப்பாஸ்(பகுஜன் சமாஜ் கட்சி) 8. ச.ஸ்ரீதர்(உழைப்பாளி மக்கள் கட்சி) 9. பாரதி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) உள்பட மொத்தம் 21 பேர் போட்டியிடுகிறார்கள். காஞ்சீபுரம் 1. கே.மரகதம் குமரவேல்(அ.தி.மு.க.) 2. க.செல்வம்(தி.மு.க.) 3. மல்லை சத்யா(ம.தி.மு.க.) 4. பெ.விஸ்வநாதன்(காங்.) 5. ஜெ.எஸ்.சத்தியராஜ்(பகுஜன் சமாஜ்) உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகிறார்கள். அரக்கோணம் 1.கோ.அரி(அ.தி.மு.க.) 2.இளங்கோ(தி.மு.க.) 3.வேலு(பா.ம.க.) 4.ரா.ராஜேஷ்(காங்.) 5.எஸ்.ராஜேஷ்(ஆம் ஆத்மி) மற்றும் 22 பேர் போட்டி. வேலூர் 1.செங்குட்டுவன்(அ.தி.மு.க.) 2. அப்துல்ரகுமான்(தி.மு.க.கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 3.ஏ.சி.சண்முகம்(பா.ஜ.க.கூட்டணி புதிய நீதிக்கட்சி) 4.விஜய்இளஞ்செழியன்(காங்.) 5. இம்தாத் ஷரீப்(ஆம் ஆத்மி) மற்றும் 19 பேர் போட்டி. கிருஷ்ணகிரி 1.கே.அசோக்குமார்(அ.தி.மு.க.) 2.பி.சின்னபில்லப்பா(தி.மு.க.) 3.ஜி.கே.மணி(பா.ம.க.) 4.டாக்டர் செல்லகுமார்(காங்.) மற்றும் 11 பேர் போட்டி தர்மபுரி 1.வி.எஸ்.மோகன்(அ.தி.மு.க.) 2.ஆர்.தாமரைச்செல்வன்(தி.மு.க.) 3.அன்புமணி ராமதாஸ்(பா.ம.க.) 4.ராம சுகந்தன்(காங்.) மற்றும் 11 பேர் போட்டி திருவண்ணாமலை 1.ஆர்.வனரோஜா(அ.தி.மு.க.) 2.சி.என்.அண்ணாதுரை(தி.மு.க.) 3.கோ.எதிரொலி மணியன்(பா.ம.க.) 4.ஏ.சுப்பிரமணியன்(காங்.) மற்றும் 20 பேர் போட்டி ஆரணி 1.செஞ்சி ஏழுமலை(அ.தி.மு.க.) 2.ஆர்.சிவானந்தம்(தி.மு.க.) 3.ஏ.கே.மூர்த்தி(பா.ம.க.) 4.எம்.கே.விஷ்ணுபிரசாத்(காங்.) மற்றும் 15 பேர் போட்டி விழுப்புரம் 1.எஸ்.ராஜேந்திரன்(அ.தி.மு.க.) 2.டாக்டர் முத்தையன்(தி.மு.க.) 3.உமாசங்கர்(தே.மு.தி.க.) 4.கே.ராணி(காங்கிரஸ்) 5.எம்.ஆனந்தன்(மா.கம்யூனிஸ்டு) 6.கலியமூர்த்தி(பகுஜன்சமாஜ்) மற்றும் 14 பேர் போட்டி. கள்ளக்குறிச்சி 1.டாக்டர் கே.காமராஜ் (அ.தி.மு.க.) 2.பொன்.ரா.மணிமாறன்(தி.மு.க.) 3.டாக்டர் வி.பி.ஈஸ்வரன்(தே.மு.தி.க.) 4.ஆர்.தேவதாஸ்(காங்கிரஸ்) 5.கே.முகமது யாசின்(ஆம்ஆத்மி 6.ச.சக்திவேல்(பகுஜன்சமாஜ் கட்சி) மற்றும் 16 பேர் போட்டி. சேலம் 1.வி.பன்னீர்செல்வம்(அ.தி.மு.க.) 2.செ.உமாராணி (தி.மு.க.) 3.எல்.கே.சுதீஷ் (தே.மு.தி.க.) 4.ஆர்.மோகன் குமாரமங்கலம் (காங்) 5.சதீஷ்குமார் (ஆம் ஆத்மி) மற்றும் 20 பேர் போட்டி. நாமக்கல் 1.பி.ஆர்.சுந்தரம்(அ.தி.மு.க.) 2.காந்தி செல்வன்(தி.மு.க.) 3.எஸ்.கே.வேலு(தே.மு.தி.க.) 4.ஜி.ஆர்.சுப்பிரமணியன்(காங்.) 5.செல்லகுமாரசாமி(ஆம்.ஆத்மி) மற்றும் 21 பேர் போட்டி. ஈரோடு 1.எஸ்.செல்வகுமார சின்னையன்(அ.தி.மு.க.) 2.எச்.பவித்ரவள்ளி(தி.மு.க.) 3.அ.கணேசமூர்த்தி(ம.தி.மு.க.) 4.பி.கோபி(காங்.) 5.கே.கே.குமாரசாமி(ஆம்ஆத்மி) மற்றும் 9 பேர் போட்டி திருப்பூர் 1.வி.சத்யபாமா(அ.தி.மு.க.) 2.டாக்டர் செந்தில்நாதன்(தி.மு.க.) 3.தினேஷ்குமார்(தே.மு.தி.க.) 4.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்(காங்.) 5.கே.சுப்பராயன்(இந்திய கம்யூ.) 6.சக்கரவர்த்தி ராஜகோபாலகிருஷ்ணன்(ஆம் ஆத்மி) மற்றும் 20 பேர் போட்டி நீலகிரி 1.சி.கோபாலகிருஷ்ணன்(அ.தி.மு.க.) 2.ஆ.ராசா(தி.மு.க.) 3.காந்தி(காங்.) 4.ராணி(ஆம் ஆத்மி) 5.கலா(பகுஜன் சமாஜ்) மற்றும் 5 பேர் போட்டி. கோவை 1.பி.நாகராஜ்(அ.தி.மு.க.) 2.கே.கணேஷ்குமார்(தி.மு.க.) 3.சி.பி.ராதாகிருஷ்ணன்(பா.ஜனதா) 4.ஆர்.பிரபு(காங்கிரஸ்) 5. பி.ஆர்.நடராஜன்(மார்க்சிஸ்ட் கம்யூ.) 6.பொன்.சந்திரன்(ஆத் ஆத்மி) மற்றும் 19 பேர் போட்டி பொள்ளாச்சி 1.சி.மகேந்திரன்(அ.தி.மு.க.) 2.பொங்கலூர் பழனிச்சாமி(தி.மு.க.) 3.ஈ.ஆர்.ஈஸ்வரன்(பா.ஜ.க.) 4.செல்வராஜ்(காங்.) 5.மனோகரன்(பகுஜன் சமாஜ்) மற்றும் 13 பேர் போட்டி. திண்டுக்கல் 1.எம்.உதயகுமார்(அ.தி.மு.க.) 2.எஸ்.காந்திராஜன்(தி.மு.க.) 3.அ.கிருஷ்ணமூர்த்தி(தே.மு.தி.க.) 4.என்.எஸ்.வி.சித்தன்(காங்.) 5.ம.பாண்டி(மார்க்சிஸ்ட் கம்யூ.) 6.ச.இளஞ்செழியன்(ஆம் ஆத்மி) 7.மு.பகத்சிங் பழனிச்சாமி(பகுஜன் சமாஜ்) மற்றும் 11 பேர் போட்டி. கரூர் 1.தம்பிதுரை(அ.தி.மு.க.), 2.சின்னசாமி(தி.மு.க.), 3.என்.எஸ்.கிருஷ்ணன்(தே.மு.தி.க.), 4.ஜோதிமணி(காங்கிரஸ்), 5.முருகேசன்(சமாஜ்வாடி) மற்றும் 20 பேர் போட்டி. திருச்சி 1.பா.குமார்(அ.தி.மு.க.) 2. மு.அன்பழகன்(தி.மு.க.) 3.ஏ.எம்.ஜி.விஜய்குமார்(தே.மு.தி.க.) 4.சாருபாலா தொண்டைமான்(காங்கிரஸ்) 5.ஸ்ரீதர்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) 6.ரவி(ஆம் ஆத்மி) 7.நடராஜன்(பகுஜன் சமாஜ்) மற்றும் 22 பேர் போட்டி. பெரம்பலூர் 1.ஆர்.பி.மருதராஜா(அ.தி.மு.க.) 2.ச.பிரபு (தி.மு.க.) 3.டி.ஆர்.பச்சமுத்து (இந்திய ஜனநாயக கட்சி) 4.எம்.ராஜசேகரன்(காங்கிரஸ்) 5.வி.எம்.செல்வராஜ் (பகுஜன் சமாஜ்) மற்றும் 16 போட்டி. கடலூர் 1.ஏ.அருண்மொழித்தேவன்(அ.தி.மு.க.) 2.டாக்டர் கொ.நந்தகோபாலகிருஷ்ணன் (தி.மு.க.) 3.சி.ஆர்.ஜெயசங்கர் (தே.மு.தி.க.) 4.எஸ்.அழகிரி (காங்.) 5.கு.பாலசுப்பிரமணியன் (இந்திய கம்யூ.) 6.ஏ.ஜி.சையது மொகிதீன் (ஆம் ஆத்மி) 7.செ.செந்தில் முருகன் (பகுஜன் சமாஜ்) மற்றும் 10 பேர் போட்டி சிதம்பரம் 1.மா.சந்திரகாசி(அ.தி.மு.க.) 2. திருமாவளவன்(விடுதலைசிறுத்தைகள்) 3.ம.சுதாமணிரத்னம்( பா.ம.க) 4.ப.வள்ளல்பெருமான்(காங்கிரஸ்) 5.கே.ராஜேந்திரன்(பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 10 பேர் போட்டி. மயிலாடுதுறை 1.பாரதிமோக(அ.தி.மு.க.) 2.ஹைதர்அலி(மனிதநேய மக்கள் கட்சி) 3.அகோரம்(பா.ம.க.) 4.மணிசங்கர்அய்யர்(காங்.) 5.இருளப்பன்(சமாஜ்வாடி) 6.ராஜவேலு(பகுஜன்சமாஜ்) மற்றும் 13 பேர் போட்டி. நாகை 1.டாக்டர்கோபால்(அ.தி.மு.க.) 2.ஏ.கே.எஸ்.விஜயன்(தி.மு.க.) 3.வடிவேல் ராவணன்(பா.ம.க.) 4.செந்தில் பாண்டியன்(காங்.) 5.கோ.பழனிச்சாமி(இந்திய கம்யூ.) 6.தங்கசாமி(பகுஜன் சமாஜ்) மற்றும் 3 பேர் போட்டி. தஞ்சை 1.கு.பரசுராமன்(அ.தி.மு.க.) 2.டி.ஆர்.பாலு(தி.மு.க.) 3.மு.கருப்புமுருகானந்தம்(பா.ஜ.க.) 4.து.கிருஷ்ணசாமிவாண்டையார்(காங்கிரஸ்) 5.எஸ்.தமிழ்ச்செல்வி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) 6.அரங்கராஜன்(பகுஜன் சமாஜ்) மற்றும் 6 பேர் போட்டி. சிவகங்கை 1.செந்தில்நாதன்(அ.தி.மு.க.) 2.சுப.துரைராஜ்(தி.மு.க.) 3.எச்.ராஜா(பா.ஜ.க. 4.கார்த்தி சிதம்பரம்(காங்கிரஸ்) 5.கிருஷ்ணன்(இந்திய கம்யூ.) மற்றும் 22 பேர் போட்டி மதுரை 1.கோபாலகிருஷ்ணன்(அ.தி.மு.க.) 2.வேலுச்சாமி (தி.மு.க.) 3.சிவமுத்துக்குமார்(தே.மு.தி.க.) 4.பரத்நாச்சியப்பன்(காங். 5.விக்ரமன்(மா.கம்யூ.) மற்றும் 26 பேர் போட்டி. தேனி 1.ஆர்.பார்த்திபன்(அ.தி.மு.க.) 2.பொன்.முத்துராமலிங்கம்(தி.மு.க.) 3.க.அழகு சுந்தரம் (ம.தி.மு.க.) 4.ஜே.எம்.ஆரூண் ரஷீத் (காங்.) 5.ஜே.ராம்பிரகாஷ் (ஆம் ஆத்மி) மற்றும் 18 பேர் போட்டி விருதுநகர் 1.ராதாகிருஷ்ணன்(அ.தி.மு.க.) 2.ரத்தினவேல் (தி.மு.க.) 3.வைகோ(ம.தி.மு.க.) 4.மாணிக்கம்தாகூர் (காங்.) 5.சாமுவேல்ராஜ் (மா.கம்யூ.) மற்றும் 21 பேர் போட்டி. ராமநாதபுரம் 1.அன்வர்ராஜா(அ.தி.மு.க.) 2.முகமது ஜலீல்(தி.மு.க. 3.குப்புராமு(பா.ஜ.க.) 4.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) 5.உமாமகேசுவரி(இந்திய கம்யூ) மற்றும் 26 பேர் போட்டி. தூத்துக்குடி 1.ஜெயசிங்தியாகராஜ் நட்டர்ஜி(அ.தி.மு.க.) 2.பெ.ஜெகன்(தி.மு.க) 3.வக்கீல் ஜோயல் (ம.தி.மு.க.) 4.ஏ.பி.சி.வி.சண்முகம்(காங்கிரஸ்) 5.அ.மோகன்ராஜ்(இந்திய கம்யூனிஸ்டு) 6.புஷ்பராயன்(ஆம் ஆத்மி) 7.அய்யாத்துரை(பகுஜன் சமாஜ்) மற்றும் 7 பேர் போட்டி. தென்காசி 1.எம்.வசந்தி முருகேசன்(அ.தி.மு.க.) 2.டாக்டர்கே.கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்) 3.டாக்டர் சதன் திருமலைகுமார்(ம.தி.மு.க) 4.கே.ஜெயகுமார்(காங்கிரஸ்) 5.பொ.லிங்கம்(இந்திய கம்யூனிஸ்டு கட்சி) மற்றும் 13 பேர் போட்டி. நெல்லை 1.பி.பிரபாகரன்(அ.தி.மு.க.) 2.சி.தேவதாச சுந்தரம்(தி.மு.க.) 3.எஸ்.சிவனணைந்த பெருமாள்(தே.மு.தி.க) 4.எஸ்.எஸ்.ராமசுப்பு(காங்கிரஸ்) 5.எம்.ஜேசுராஜ்(ஆம் ஆத்மி) மற்றும் 22 பேர் போட்டி. கன்னியாகுமரி 1.டி.ஜாண்தங்கம்(அ.தி.மு.க.) 2.எப்.எம்.ராஜரத்தினம்(தி.மு.க.) 3.பொன்.ராதாகிருஷ்ணன்(பா.ஜனதா) 4.எச்.வசந்தகுமார்(காங்கிரஸ்) 5.ஏ.வி.பெல்லார்மின் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) 6.சு.ப.உதயகுமார்(ஆம் ஆத்மி) 7.ஜோ.ஜவஹர்(பகுஜன் சமாஜ்) 8.த.பாலசுப்பிரமணியன்(அகில பாரத இந்து மகாசபா) மற்றும் 17 பேர் போட்டி. புதுச்சேரி 1.ஓமலிங்கம்(அ.தி.மு.க.) 2.நாஜிம்(தி.மு.க.) 3.நாரயணசாமி(காங்.) 4.அனந்தராமன்(பா.ம.க.) 5.விசுவநாதன்(இந்திய கம்யூனிஸ்டு) 6.ரங்கராஜன்(ஆம் ஆத்மி) 7.கிருஷ்ணமூர்த்தி(பகுஜன் சமாஜ்) மற்றும் 23 பேர் போட்டி. ஆலந்தூர் இடைத்தேர்தல் ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 16 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவற்றில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 14 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இவர்களில் யாரும் வேட்புமனுவை திரும்பப்பெறவில்லை. எனவே ஆலந்தூர் இடைத்தேர்தலில் பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 12 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். News Category:Hot Topic Icon : News Group Category: |
| யுவராஜ்சிங்குக்கு பீட்டர்சன் ஆதரவு Posted: 09 Apr 2014 01:30 PM PDT புதுடெல்லி, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையிடம் தோற்றதற்கு, யுவராஜ்சிங்கின் (21 பந்தில் 11 ரன்) மந்தமான பேட்டிங்கே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங்கை தொடர்ந்து, இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனும் யுவராஜ்சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சீசனுக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கெவின் பீட்டர்சன் நேற்று டெல்லியில் கூறும் போது, 'இங்கு நான் பத்திரிகைகளை படிக்கவில்லை. 'டுவிட்டர்' பக்கத்தில் யுவராஜ்சிங் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். இது தேவையற்ற ஒன்று. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. கிரிக்கெட்டில் எப்போதும் சிறப்பாக விளையாடி கொண்டிருக்க முடியாது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் வெளியில் இருந்து விமர்சிப்பது மிக மிக எளிது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாத வீரர்கள் கூட இவ்வாறு பேசிக் கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன்' என்றார். டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ரூ.12½ கோடிக்கு வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த குயின்டான் டீ காக்கும் விக்கெட் கீப்பர்கள். இவர்களில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற குழப்பம் இப்போதே ஏற்படத் தொடங்கி விட்டது. 'அணித் தேர்வு விஷயத்தில் இது போன்ற தர்ம சங்கடங்கள் உருவாவது நல்ல விஷயம் தான். இந்த குழப்பங்களை நான் உற்சாகமுடன் சமாளிப்பேன்.' என்றும் பீட்டர்சன் தெரிவித்தார். image: category: |
| சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் சாய்னா வெளியேற்றம் Posted: 09 Apr 2014 01:26 PM PDT சிங்கப்பூர், சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்றில் ஜப்பானின் எரிக்கோ ஹிரோசுடன் மோதினார். 1 மணி 2 நிமிடங்கள் போராடிய சாய்னா 21–16, 15–21, 11–21 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார். சர்வதேச அரங்கில் தொடர்ந்து தடுமாறி வரும் 8–ம் நிலை வீராங்கனையான சாய்னா, தன்னை விட தரவரிசையில் பின்தங்கிய (15–வது இடம்) வீராங்கனையிடம் பணிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் காஷ்யப் 21–16, 15–21, 20–22 என்ற செட் கணக்கில் கொரியாவின் டோங்க் கியூன் லீயிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். ஜூவாலா கட்டா–அஸ்வினி ஜோடியும் முதல் தடையை கடக்கவில்லை. அதே சமயம் மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தன்னை எதிர்த்த இந்தோனேஷியாவின் மிலிசென்ட் விரான்டோவை 21–9, 19–21, 22–20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பிரனாய், துளசி ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். image: category: |
| கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கருக்கு விஸ்டன் பத்திரிகை கவுரவம் Posted: 09 Apr 2014 01:24 PM PDT லண்டன், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கரின் படத்தை விஸ்டன் பத்திரிகை முகப்பு அட்டையில் வெளியிட்டு கவுரவப்படுத்தி இருக்கிறது. விஸ்டன் கவுரவம் இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் பத்திரிகை ஆண்டுதோறும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து அவர்கள் பற்றிய சாதனைகளை தனது பதிப்பில் வெளியிட்டு வருகிறது. இந்த புத்தகத்தில் இடம் பிடிப்பது என்பது கிரிக்கெட் வீரர்கள் இடையே மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. விஸ்டன் பத்திரிகையின் அட்டை பக்கத்தில் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றாலும், மீண்டும் விஸ்டன் பத்திரிகையில் 2–வது முறையாக இடம் பெற்று இருக்கிறார். கடைசி டெஸ்ட் காட்சி 40 வயதான தெண்டுல்கர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். அந்த போட்டி முடிந்ததும் தெண்டுல்கர், மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்களை நோக்கி தனது பேட்டை உயர்த்தியபடி உணர்ச்சி பொங்க பிரியா விடைபெற்ற புகைப்படத்தை விஸ்டன் பத்திரிகை இந்த ஆண்டுக்கான (2014) தனது பதிப்பின் (151–வது எடிசன்) முகப்பு அட்டையில் வெளியிட்டு இருக்கிறது. இந்த பத்திரிகை லண்டனில் இன்று (வியாழக்கிழமை) முறைப்படி வெளியிடப்படுகிறது. கிரிக்கெட் ஆட்டத்தில் தெண்டுல்கரின் தரமும், செல்வாக்கும் கேள்விக்கு அப்பாற்பட்டது. அவரது அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு விஸ்டன் மகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்துகிறது என்று விஸ்டன் பத்திரிகை புகழாரம் சூட்டி இருக்கிறது. அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட ரசிகர்கள் முன்னிலையில் தெண்டுல்கர் 24 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெண்டுல்கரின் சாதனையுடன், குக் (இங்கிலாந்து), மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் சாதனைகள் ஒப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஷிகர் தவான் இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியலில் ரையான் ஹாரிஸ் (ஆஸ்திரேலியா), கிறிஸ் ரோஜர்ஸ் (ஆஸ்திரேலியா), ஜோரூட் (இங்கிலாந்து) ஆகியோருடன் இந்திய வீரர் ஷிகர் தவானும் இடம் பிடித்து இருக்கிறார். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |