Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'செல்ல பிள்ளை' ராஜா வெல்வாரா?

Posted:

நம்மூரில் இருந்து நியூயார்க் வரை, ஆண்டி முத்து என்ற பெயரை பிரபலப்படுத்தியவர், தி.மு.க.,வின் நீலகிரி வேட்பாளரும், முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சருமான ஆண்டிமுத்து ராஜா. '2ஜி' அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள இவர், இந்த முறை, தேர்தலில் தேறுவாரா என்பது, பெரும்பாலான அரசியல் ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது. இதனோடு, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு மக்கள் ஆதரவு தருவார்களா என்பது, ஒட்டுக்கேள்வியாக உள்ளது. இதை அறிய, 'தினமலர்' நாளிதழ் சிறப்பு கள ஆய்வை நடத்தியது. அதில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் இதோ:நீலகிரி லோக்சபா தொகுதிக்கு ...

கார்கில் போர் குறித்து அபத்தம்

Posted:

காஜியாபாத் : கார்கில் போர் தொடர்பாக, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, அசம் கான் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.உ.பி., காசியாபாத் தொகுதியில், இன்று தேர்தல் நடக்கிறது. அங்கு போட்டியிடும் சமாஜ்வாதி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் அசம் கான், சமீபத்தில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர், 'கடந்த 1999ல் நடைபெற்ற கார்கில் போரில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பெற்றுத் தந்தது, முஸ்லிம் வீரர்கள் தான்; இந்து வீரர்களுக்கு இதில் பங்கு இல்லை' ...

'நல்லது செய்வாரென நினைத்தால் பதவியை ராஜினாமா செய்து நிற்கிறார்'

Posted:

கழுத்தில் மாலையை போட்டு, கன்னத்தில், 'பளார்... பளார்...' என அறைந்த ஆட்டோ டிரைவரை, ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்தார். அப்போது, தன் செயலுக்காக அந்த ஆட்டோ டிரைவர் மன்னிப்பு கேட்டார். ''கெஜ்ரிவால் எனக்கு கடவுள்,'' என, உருக்கமாக கூறினார்.தாக்குதல்:லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் பல விதமான தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார் கெஜ்ரிவால். நேற்று முன்தினம், டில்லியில் ஓட்டு சேகரித்த கெஜ்ரிவாலுக்கு அடி கிடைத்தது. லவ்லி என்ற ஆட்டோ டிரைவர், கெஜ்ரிவாலுக்கு மாலையிட முண்டியடித்துச் சென்றார்; யாரும் எதிர்பாராத ...

அ.தி.மு.க., - தி.மு.க., தலைமை திடீர் அதிர்ச்சி : கட்சியினரை முடுக்க வைத்த சர்வே முடிவு

Posted:

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும், தங்களது சாதக, பாதக அம்சங்களை ஆராயத் துவங்கி உள்ளன. அ.தி.மு.க., தரப்பில் உளவுத்துறை மூலமும், தி.மு.க., தரப்பில், தனியார் ஏஜன்சி மூலமும், நடத்தப்பட்ட சர்வேக்களில், இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் கிடைத்துள்ளதால்,'வீக்'கான தொகுதிகளில், அதிக கவனம் செலுத்தும் நடவடிக்கைகளில், இரு கட்சிகளும் இறங்கி உள்ளன.யாருக்கு வெற்றி?தமிழகத்தில், பலமுனைப் போட்டி நிலவினாலும், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., அணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி என்பது உறுதியாகி உள்ளது. இந்த ...

அமைச்சர் கபில் சிபல் 'திருமங்கலம் பார்முலா'

Posted:

டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மத்திய சட்ட அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான, கபில் சிபல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில், மதுரை அருகே உள்ள திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கு 2009ல், இடைத்தேர்தல் நடந்த போது தான், இந்த விவகாரம் பகிரங்கமாக வெளிப்பட்டது. அதையடுத்து, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, 'திருமங்கலம் பார்முலா' என, தமிழக அரசியல் தலைவர்கள் அழைக்கின்றனர்.அந்த யுக்தியை, டில்லி அரசியல்வாதிகளும் தற்போது பின்பற்றத் துவங்கியுள்ளனர்.டில்லியில் ...

கங்கையே சூதகமானால் எங்கே போய் மூழ்குவது: கருணாநிதி

Posted:

சென்னை : 'கங்கையே சூதகமானால், எங்கே போய் மூழ்குவது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:சுப்ரீம் கோர்ட்டில், 'சொத்து குவிப்பு வழக்கை, மூன்று வாரங்களுக்கு நடத்தக் கூடாது' என, தடை பெற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் விரைவில் ஓய்வு பெறப் போகிறார்.விளக்கம் அளிக்க வேண்டும்சொத்துக் குவிப்பு வழக்கை, மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ள நீதிபதி சவுகான் விரைவில் ஓய்வு பெறப்போகிறார். தலைமை நீதிபதியாக வரப்போகிற நீதிபதி லோதா, மார்ச், 10ம் தேதி ஒரு தீர்ப்பை வெளியிட்டார். அந்த தீர்ப்பு வருமாறு: ...

பா.ஜ.,வை கண்டுகொள்ளவில்லை 'வால்மார்ட்': 50 விற்பனை நிலையங்களை திறக்க திட்டம்

Posted:

புதுடில்லி: 'சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்' என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின், 'வால்மார்ட்' நிறுவனம், நம் நாட்டில், 50 மொத்த விலை விற்பனை நிலையங்களை, அடுத்த ஐந்தாண்டில் துவக்க திட்டமிட்டுள்ளது.கடும் எதிர்ப்பு: பா.ஜ., சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட, லோக்சபா தேர்தலுக்கான அறிக்கையில், 'சில்லரை வர்த்தகம் தவிர்த்து, அனைத்து துறைகளிலும், நேரடி அன்னிய முதலீட்டுக்கு வழி செய்யப்படும். நேரடி அன்னிய முதலீட்டை, தனியார் துறை பங்களிப்புடன் ஊக்குவிக்க நடவடிக்கை ...

வதோதராவில் மோடி வேட்பு மனு தாக்கல்: முன்மொழிந்தார் டீக்கடை தொழிலாளி

Posted:

வதோதரா : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, திறந்த வேனில் ஊர்வலமாக சென்று, வதோதரா தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரின் வேட்பு மனுவை, டீக்கடை தொழிலாளி ஒருவரும், மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் முன்மொழிந்தனர்.லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி, உ.பி., மாநிலம் வாரணாசியிலும், குஜராத் மாநிலம் வதோதராவிலும் போட்டியிடுகிறார். வதோதராவில், இம்மாதம் 30ல், தேர்தல் நடக்கவுள்ளது; வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள்.ஊர்வலம்இதையடுத்து, மோடி, ஆமதாபாத்திலிருந்து வதோதராவுக்கு விமானத்தில் வந்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் தேர்தல் ...

காங்., தனிநபர் துதிபாடும் கட்சி இல்லையாம்! அசாம் பிரசாரத்தில் ராகுல் தகவல்

Posted:

உதர்பாண்ட் : ''காங்கிரஸ் கட்சி, மக்களை சார்ந்துள்ள கட்சி; பா.ஜ.,வைப் போல் தனிநபர் புகழ் பாடும் கட்சியல்ல,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறினார்.கனவு காண உரிமை உள்ளதுவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், நேற்று தேர்தல் பிரசாரம் செய்த ராகுல், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாவது:தனி மனிதரை முன்னிறுத்தி, அவர் பிரதமரானால், அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என, பா.ஜ., போல் நாங்கள் சொல்லவில்லை. எங்களை பொறுத்தமட்டில், காங்கிரஸ், மக்களை சார்ந்துள்ள கட்சி. மக்கள் கையில் தான் அதிகாரம் இருக்க வேண்டும் என விரும்பும் கட்சி.அசாமிற்கு, குஜராத் ...

பா.ஜ., - தெ.தே., கூட்டணிக்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு

Posted:

ஐதராபாத்: தெலுங்கு தேசம் - பா.ஜ., இடையே, 10 ஆண்டிற்கு பின் கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், தொகுதிகளை பங்கீடு செய்வதில், இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது.இரு கட்சிகளிலும், 'டிக்கெட்' எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், தொகுதிகளை விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள தால், இரு தரப்பிலும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், தெருவில் இறங்கி போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு, ஆரம்பம் முதல், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், கடந்த ...

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு 845 பேர் போட்டி: பல முனை போட்டியால் வேட்பாளர்கள் அதிகம்

Posted:

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளில், 875 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பல முனை போட்டி காரணமாக, வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 2009 தேர்தலை விட, 22 வேட்பாளர்கள், கூடுதலாக உள்ளனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், வரும், 24ம் தேதி, ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. இத்தொகுதிகளில், மார்ச், 29ம் தேதி, மனு தாக்கல் துவங்கியது. ஏப்., 5ம் தேதி நிறைவு பெற்றது.தள்ளுபடி : தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில், 121 பெண்கள், ஒரு திருநங்கை, 1,134 ...

தேர்தலுக்கு பின் என்ன நடக்கும்... இப்போதே பிரணாப் தயார்!

Posted:

லோக்சபா தேர்தலுக்கு பின், ஏற்பட போகும் சூழ்நிலையை, எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.ஒன்பது கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள், மே 16ல், எண்ணப்படுகின்றன. அதற்கு பிந்தைய சூழ்நிலைகள் குறித்து, ஜனாதிபதியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய பிரணாப் முகர்ஜி இப்போதே ஆய்வு செய்ய துவங்கியுள்ளார்.சட்ட ஆலோசகராக...: ஆட்சி அமைப்பு நேரங்களில், சட்ட நுணுக்கங்களின் படி செயல்பட வேண்டிய தேவை இருப்பதால், அதற்கு தயாராகும் வகையில், லோக்சபா முன்னாள் செயலராக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™