Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

Posted: 09 Apr 2014 01:40 PM PDT

சென்னை : தமிழகத்தில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வு பணிகள் சென்னையில் உள்ள, மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின், தென்கிழக்கு கடலோர பிராந்திய அலுவலகம், மழை பொழிவு, நிலத்தடி நீர் இருப்பு உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது. இந்நிறுவனம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து, 1,369 கிணறுகளில் ஆய்வு மேற்கொண்டது; இதில், 778 கிணறுகளும், 591 ஆழ்துளை கிணறுகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. தமிழகத்தில், 712 கிணறுகளில் ...

நாளை நமதே..(மழலையர் கவிதை)

Posted: 09 Apr 2014 01:00 PM PDT

- நாளை நமதே நாமதன் அங்கம் நன்றென உழைத்தால் நன்மை தங்கும் மூளை தெளிவுற முயன்றே கற்போம்! முன்னோர் நெறிமுறை பயின்றே ஏற்போம்! - காலை நேரமே களிப்புடன் விழிப்போம் கைத்தொழில் கைவர களிப்புடன் தழைப்போம்! மாலைப் பொழுதை மகிழ்வுடன் கழிப்போம் மான் மயில் போன்றே ஆடியே மகிழ்வோம்! - சாலை விதிமுறை சட்டம் காப்போம் சாதி மத இன பேதம் ஒழிப்போம்! மேலைக் கல்வி முறையை விடுப்போம் மேலாம் தமிழ்மறை திருக்குறள் படிப்போம்! - --------------------------------------- >கவிஞர் தடாகத்தான் நன்றி: நாளை நமதே - ...

சிவபெருமான் போற்றி!

Posted: 09 Apr 2014 12:58 PM PDT

கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின்னா ருருவ விகிர்தா போற்றி கல்நார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா என்றனக் கருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி விரைசேர் சரண விகிர்தா ...

வேர்டு 2010 பாஸ்வேர்டு/ உதவி வேண்டும்

Posted: 09 Apr 2014 12:52 PM PDT

அனைவருக்கும் காலை வணக்கம்,
வேர்டு (2010) பைலுக்கு கொடுத்த பாஸ்வெர்டு மறந்துவிட்டது.
அந்த பைல் முக்கியமானது. அது திரும்ப கிடைக்க வழி
இருந்தால் கூறுங்கள் நண்பர்களே

பேஸ்புக்கின் புதியமொழி

Posted: 09 Apr 2014 12:40 PM PDT

இதுவரை கிட்டத்தட்ட 70-க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பேஸ்புக் இனி ஒரு புது மொழியில் இயங்கவுள்ளது. இது என்ன புது மொழி என்கிறீர்களா? அது மனிதர்களுக்கான மொழியல்லை பேஸ்புக்கிற்கான இயக்க மொழி - புரொகிராமிங் லாங்குவேஜ். இதுநாள் வரை PHP மொழியில் இயங்கி வந்த பேஸ்புக் இனி அதற்கு பதில் புதிய மொழி ஒன்றில் இயங்கவுள்ளது. ஹேக்கிங்கை தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவன பொறியாளர்கள் உருவாக்கியிருக்கும் அந்த மொழிக்கு 'ஹேக்' என்றே பெயர் சூட்டிவிட்டார்கள். ஹேக் மொழி பேஸ்புக் பக்கத்தை வேகமாகவும் அதே ...

மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள்

Posted: 09 Apr 2014 12:30 PM PDT

மதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார். தமிழக அரசு நல்கைத் திட்டமான "தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்" என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை உதவிப் பேராசி ரியர் முனைவர் பா.ஜெயக்குமார் மேற்கொண்ட கள ஆய்வின்போது இந்த அரிய கற்சிற்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறித்து முனைவர் திருமலை தெரிவித்துள்ளதாவது: "தமிழகத்தில், ...

குறட்டை: நோயா, நோயின் அறிகுறியா?

Posted: 09 Apr 2014 12:23 PM PDT

அரட்டைக் கச்சேரி நடக்கிற அறையில்கூடத் தூங்கிவிடலாம், ஒரு குறட்டை ஆசாமியுடன் தூங்குவது இயலாத காரியம் – எல்லாமே, நாமும் தூங்க ஆரம்பித்துக் குறட்டை விடும்வரைதான். பெரும்பாலான கல்யாண வீடுகளில் இந்தக் காட்சியைப் பார்க்கலாம். இரவு 11 அல்லது 12 மணிக்கு ஃபேன் இருக்கும் இடமாகப் படுத்துக்கொள்ளலாம் என்று தேடியலைந்து படுக்கும்போது, பக்கத்திலேயே ஒருவரோ, இருவரோ தூங்குவது மட்டுமில்லாமல், நமக்கு அதிருஷ்டமில்லாமல் போனால் குறட்டையையும் விட்டுக்கொண்டே தூங்குவார்கள். ஒருவரது குறட்டை குளவியின் ஓசையைப் போல என்றால், ...

3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்!

Posted: 09 Apr 2014 11:22 AM PDT

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 210 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை மாநகரில் மட்டும் 97 செயின் பறிப்புகள் நடந்துள்ளன. சமீபகாலமாக செயின் பறிப்பு அதிகரிக்க என்ன காரணம்? 1.தங்கம் விலை உயர்வு. 2.பணமாக்குவது எளிது. 3. கொள்ளையர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். 4.கொஞ்சம் ரிஸ்க், நிறைய பணம். 5.விழிப்புணர்வு, எச்சரிக்கை உணர்வு இல்லாத பெண்கள். 6.உழைக்க விரும்பாத சோம்பேறி இளைஞர்களின் அதிக பணத்தாசை. 7.இவற்றெல்லாம்விட முக்கியமாக கண்டுகொள்ளாத காவல் துறை. இவைதான் ...

மனதை கவரும் வண்ணப்பறவைகள்

Posted: 09 Apr 2014 11:15 AM PDT



தமிழ் புத்தாண்டு பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை

Posted: 09 Apr 2014 11:14 AM PDT

தமிழ் புத்தாண்டு பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை 7-4-2014-தினத்தந்தி தமிழ் புத்தாண்டு பலன்கள் மின் நூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/3zdyydir698bjib/Rasipalan+7.4.14%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf http://www48.zippyshare.com/v/61789584/file.html

எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்

Posted: 09 Apr 2014 10:45 AM PDT

முதற்பகுதி 1. பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு உலகம் விளக்கம் உறக்கீழ்த் திசையில் மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை! வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப் புள்ளிமான் வௌியிற் புறப்பட் டதுவாம்! நீலப் பூவிழி நிலத்தை நோக்கக் கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச் செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும் அப்படி இப்படி வலதுகை யசைத்தும் புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள். நிறப்பட் டாடை நெகிழ்ந்தது காற்றில்! பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம் சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்! பெண்ணழகி ...

கிராமத்துக் கதை.

Posted: 09 Apr 2014 10:30 AM PDT

* புதுப் புடவையால் ஏற்பட்ட தாகம். * தொழிலாளி ஒருவன் தன் மனைவிக்குப் புடவை ஒன்று வாங்கிக் கொடுத்தான். மனைவி ஆசையோடு அந்தப் புடவையை உடுத்திக் கொண்டு, அக்கம் பக்கம் தெரிந்தவர்கள் வீடுகளுக்குச் சென்றாள். " புடவை என்ன விலை? நல்லா இருக்கிறதே " என்று ஒருவராவது அவளைப் பார்த்துக் கேட்கவில்லை. " தாகமாக இருக்கிறது, புதுப் புடவை கட்டினால் தாகம் எடுக்கும் போலிருக்கிறது. தண்ணீர் தாருங்கள் " என்று ஒவ்வொரு வீட்டிலும் சொல்லி தண்ணீர் வாங்கிக் குடித்தாள் புதுப் புடவை உடுத்தியவள். * ஆதாரம் :- ...

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Posted: 09 Apr 2014 10:23 AM PDT


1. தியானம்

உலகமே
இருளினுள் மூழ்கித் துயிலும்
ஒரு கரீய பெரீய முட்டையாய்.

உறங்காது
நானோ
உள்விழித்திருப்பேன்.

உள்திரளும் பரிதிக் குஞ்சின்
உதயம் தியானித்து.

நலம் நலமறிய ஆவல்!

Posted: 09 Apr 2014 10:10 AM PDT

உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு - பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும். மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 எனது கணவருக்குக் கடந்த 4 ஆண்டுகளாகச் ...

மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள்

Posted: 09 Apr 2014 10:05 AM PDT

மதுரைக் காஞ்சியில் உள்ள மதுரை நகரம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கும் போது, அன்றைய மதுரைக்கும், இன்றைய மதுரைக்கும் உயிர்ப்புள்ள ஒரு தொடர்ச்சி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. மதுரை, அன்றும் மெதுவாகவே உறங்கச் சென்றதென்பதை உணர்த்தும் காட்சிகள் இவை. இரவில் பழைய மதுரையும், புதிய மதுரையும் நெருங்கிப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் மதுரைக் காஞ்சியில் கிடைக்கிறது. வெறுமனே வரலாற்றுக்குட்பட்ட மதுரை எனச் சில பல செய்திகளாக வறண்டுபோகாது கவிதைக்கே இயல்பான உயிர்த்துடிப்பால் படிப்பவரோடு ஊடாடும் ஒன்று என்று கூறுகிறார், ...

விருதுகளை அள்ளிய 'பரதேசி'!

Posted: 09 Apr 2014 10:04 AM PDT

சிறந்த படம், இயக்குநர், ஒளிப்பதிவு, நடிகர் என நான்கு விருதுகளை, நார்வே திரைப்பட விழாவில் வென்றிருக்கிறது 'பரதேசி' வருடந்தோறும் நார்வேவில் சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவப்படுத்தி வருகிறார்கள். தொடர்ச்சியாக 5ம் ஆண்டை எட்டியிருக்கிறது நார்வே திரைப்பட விழா. இந்தாண்டிற்கான விருதுகள் பட்டியலைப் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் 'பரதேசி' திரைப்படம் 4 விருதுகளை வென்றிருக்கிறது. விருதுகள் பட்டியல்: சிறந்த படம் - பரதேசி சிறந்த இயக்குநர் - பாலா (பரதேசி) சிறந்த நடிகர் ...

சென்னையில் பரவும் சின்னம்மை நோய்

Posted: 09 Apr 2014 09:54 AM PDT

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சின்னம்மை வேகமாக பரவி வருகிறது. தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகள் உட்பட 30 பேர் சின்னம்மைக்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்னம்மை நோய் பரவி வருகிறது. நோய் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சின்னம்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு ...

அதிமுகவுக்கு எதிராகக் கமல் ரசிகர்கள்

Posted: 09 Apr 2014 09:49 AM PDT

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் நடிகர் கமல் நடித்த விஸ்ரூபம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பல காட்சிகள் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றது என்றும், இந்த காட்சிகளை நீக்கியே ஆக வேண்டும் என்றும் பல முஸ்லீம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தது. ராமநாதபுரத்தில் சிலர் திரையரங்கு மீது பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு நடத்தினர். கமல் 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை ...

தேர்தல் நகைச்சுவை

Posted: 09 Apr 2014 09:44 AM PDT

தினமலர் தளத்தில் வந்த தேர்தல் பற்றிய நகைச்சுவை படங்கள் இவை , இது போல வேறு பத்திரிகைகளில் வருவதையும் இங்கு பதிவிடுங்கள் நண்பர்களே






என் கவிதை நூல்

Posted: 09 Apr 2014 09:29 AM PDT

ஈகரை உறவுகளின் அன்பில் முகிழ்த்த வாழ்த்துகளுடன்
விரைவில் என் கவிதை நூல் வெளியாக உள்ளது.

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Posted: 09 Apr 2014 08:35 AM PDT

பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ...

பருவநிலை மாற்றத்தால் வெடிக்கப் போகிறது போர்?

Posted: 09 Apr 2014 08:33 AM PDT

'தண்ணீர் வளத்தைக் கைப்பற்ற எதிர்காலத்தில் மூன்றாவது உலகப் போர் வெடிக்கலாம்' என்று சுற்றுச்சுழல் அறிஞர்கள் முன்பு எச்சரித்தபோது, நம்பமுடியாத ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது ஐ.நாவின் துணை அமைப்பான ஐ.பி.சி.சி. (பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழு - Intergovernmental Panel on Climate Change) அந்தக் கணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. 'எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு, உணவுப் பயிர் உற்பத்தி போன்றவை கடுமை யாக பாதிக்கப்படும். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா உள்ளிட்ட ...

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

Posted: 09 Apr 2014 08:31 AM PDT

வாஷிங்டன்: புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேட்டரிகள் சார்ஜ் ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பேட்டரியை தயாரித்தார், அந்த பேட்டரியில் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறுகிறது. இந்த அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் சிறிய அளவிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ் பேட்டரிகளை தயாரிக்க முடியும் என கருதப்படுகிறது. இந்த ...

2007 ஒரு கண்ணோட்டம்

Posted: 09 Apr 2014 06:30 AM PDT

தமிழகம் ஜன.1: பெரியாறு அணையின் கைப்பிடி சுவர் 6 அடி நீளத்துக்குக் கடப்பாரையால் உடைக்கப்பட்டது. ஜன.2: ஈ.வெ.ரா., சிலை உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் அர்ஜுன் சம்பத் சிறையில் அடைப்பு. ஜன.5: திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து 5 நாட்கள் நடந்த ஸ்டிரைக் வாபஸ். *இமாம் அலி தப்பிய வழக்கில் 7 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் 30 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு. ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 09 Apr 2014 05:54 AM PDT



பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்களின் செலவை வேட்பாளர் கணக்கில் சேர்ப்பதா? ஜெயலலிதா கண்டனம்!

Posted: 09 Apr 2014 05:43 AM PDT

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஜெயலலிதா முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரியை ஆதரித்தும், திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபாலை ஆதரித்தும் 2 இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். திருவள்ளூர் வடமதுரையில் நடைபெற்ற ...

900 கோயில்கள் உள்ள உலகின் ஒரே அதிசய மலை- தகவல்களும் படங்களும்!

Posted: 09 Apr 2014 05:13 AM PDT

ஜைன மத ஐதீகங்களின் அடிப்படையில் பண்டைய காலம் முதலே பிராயச்சித்தம் அளிக்கும் புண்ணியத் தலமாக பாலிதானா என்ற புனித ஸ்தலம் கருதப்படுகிறது. இங்குதான் ஜைன மத தீர்த்தங்கரர்கள் நிர்வாணா அல்லது சமாதி நிலை எய்தியாகக் கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டம், ஷத்ருஞ்ஜய் மலைதான் இந்த பெருமைக்குரிய தலமாகும். மலை மேல் 900 கோயில்கள் உள்ளதாம்! மார்பிளினால் உருவக்காப்பட்ட இந்தக் கோயில்கள் மிகவும் அழகானவை. இந்த மலைக்கோயிலின் பிரதான கடவுள் ஜைன மதத்தின் கடவுளான ஆதிநாத். இது 220 அடி உயரத்தில் ...

கருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்

Posted: 09 Apr 2014 03:12 AM PDT

பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதிப்பொருட்கள் நாள்தோறும் நம் உடலை வந்தடைகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு உடலின் கழிவு நீக்க அமைப்பு மூலம் வெளியேற்றப்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், தேவையற்ற நச்சு வேதிப்பொருட்களை கழிவாக வெளியேற்ற முடிவதில்லை. எனவே, இந்த வேதி பொருட்களால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளின் உடலை அடையும் வேதிப் பொருட்களின் பாதிப்புகள் உடனடியாகக் ...

தேர்{ஆறு}தல் கவிதைகள்

Posted: 09 Apr 2014 03:04 AM PDT

* வெற்றி பெறுவதற்கு யாகம் செய்கிறார்கள் வேட்பாளர்கள் * சுறுசுறுப்பாகச் சுற்றிய சுயமரியாதைப் பம்பரம் தாமரையிடம் தஞ்சம். * வாரிசுகள் வருகை வரவேற்கிறதா? வெறுக்கிறதா? வருங்கால அரசியல். * கையெடுத்து கும்பிடுகிறார்கள் காலில் விழுந்து எழுகிறார்கள் ஐந்தாண்டுகளுக் கொரு முறை. * எதிர்ப்பு, குழப்பம், மௌனம் மூத்தத் தலைவர்கள் தத்தளிக்கிறார்கள் தாமரை இலைத் தண்ணீராய்…

மலேசியாவில் டெங்கி அதிகரிப்பு! 3 மாதங்களில் 63 பேர் பலி!

Posted: 09 Apr 2014 03:03 AM PDT

கோலாலம்பூர், ஏப்ரல் 9- நாட்டில் இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 63 பேர் டெங்கி காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்தக் காலக்கட்டத்தில் நாட்டில் மொத்தம் 26,107 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படாவிட்டால் நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் துயரம் விளைவிக்கக்கூடிய ஆபத்தமாக இது உருவெடுத்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார். "சிறு கடி… பெரிய அபாயம்" என்ற கருப்பொருளில் ...

விண்டோஸ் எக்ஸ்பியின் ஆயுட் காலம் நேற்றுடன் முடிவு,,

Posted: 09 Apr 2014 02:15 AM PDT

விண்டோஸ் எக்ஸ்பியின் ஆயுட் காலம் நேற்றுடன் முடிந்தது.   விண்டோஸ் எக்ஸ்பியை உபயோகப்படுத்தும் பயனாளிகள்  விண்டோஸ்7 க்கு மாறும் நேரம் வந்துவிட்டது. விண்டோஸ்  எக்ஸ்பிக்கான மேம்படுத்தல் பணியை மைக்ரோசாப்ட் நிறுவனம்  நேற்றுடன் நிறுத்தியது. எனவே இனி மேம்படுத்தல்கள் இருக்காது  என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி  (Windows XP), என்பது வீடுகளில் உள்ள மற்றும்  அலுவலகங்களில் உள்ள கணினிகளை இயக்கும் இன்றியமையாத  இயக்கு தளங்களில் ஒன்று. இதன் பெயரின் பின்னே ஒட்டியுள்ள XP  எனும் ஆங்கில எழுத்துக்களானது ...

வெப் பிரவுசருக்கான சிறப்பு குறிப்புகள்

Posted: 09 Apr 2014 12:35 AM PDT

இணைய பிரவுசரில் சில ஷார்ட் கட் கீகளை மேற்கொள்வதன் மூலம், நம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அவற்றில் சில வற்றை இங்கு பார்ப்போம். இணைய தளம் ஒன்றில் அதன் முகவரியில் www மற்றும் com என்பவை கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இவற்றை ஒவ்வொரு இணைய தள முகவரியிலும் டைப் செய்திட வேண்டியதில்லை. இணைய தளத்தின் பெயரை டைப் செய்த பின்னர், CTRL + Enter கீகளை அழுத்தினால், ஆகியவை இணைக்கப்படும். இதில் com என்பதற்குப் பதிலாக .net என்பது தேவை எனில், தளத்தின் பெயரை டைப் செய்திட்ட பின்னர், CTRL + Shift + Enter ஆகிய கீகளை ...

சமூக வலைத் தளங்களின் தேர்தல் வருமானம் ரூ. 500 கோடி

Posted: 09 Apr 2014 12:33 AM PDT

நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் கட்சிகள் எந்த வாய்ப்பினையும் விட்டு வைக்கவில்லை. முதல் முறையாக, டிஜிட் டல் ஊடகங்களைச் சிறந்த முறையில் அதிகபட்சம் பயன்படுத்தும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த வகையில் ரூ.500 கோடி அளவில் வருமானம் கிடைக்கும் என மொத்தமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை, சமூக மற்றும் பயனுறை வலைத் தளங்களாக இயங்கும் கூகுள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவை பங்கிட்டுக் கொள்ள இருக்கின்றன. ஏறத்தாழ 81.4 கோடி வாக்காளர்கள் தேர்தலில் ...

அரசியலில் பெண்கள்: இந்தியாவிற்கு 73 வது இடம்

Posted: 09 Apr 2014 12:02 AM PDT

உலக அளவில் அரசியலில் பெண்கள் பங்கேற்பில் இந்தியா கான்கோ மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளை விடவும் மிகவும் பின்தங்கி 73 வது இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் பெண்களின் அரசியல் பங்கேற்பை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியவிற்கு 73 வது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆய்வு முடிவில், 2014 ஆம் ஆண்டு அரசியலில் பெண்களின் பங்கு குறித்த புள்ளி விவர அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பது மற்றும் மத்திய ...

வயிற்றுப் பிரட்டலைத் தடுக்க

Posted: 08 Apr 2014 11:49 PM PDT

அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இரண்டும் நாட்டு மருந்துக் கடையில் பொடியாகக் கிடைக்கும். இரண்டையும் கலந்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பொடியைத் தேனுடனோ, வெந்நீரிலோ கலந்து சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் குறைந்துவிடும். வயிற்றுப் பிரட்டலுக்கு (நாஸியா) 1 பிடி கறிவேப்பிலை, அதன் தண்டு, அரை ஸ்பூன் மிளகு, 1 டேபிள்ஸ்பூன் ஓமம். இவற்றைத் தனித்தனியாக வறுத்து, உப்பு சேர்த்துப் பொடி செய்துவைக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் இது நல்லது. வயிற்றுப் பிரட்டல் ...

தலைவலியைத் தடுப்பது எப்படி?

Posted: 08 Apr 2014 11:47 PM PDT

தலைவலிகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அறிந்தோம். எந்த வகைத் தலைவலி என்று எப்படி அறிவது, அதை எப்படித் தடுப்பது, சிகிச்சை என்ன என்று பார்ப்போம். பொதுவாகத் தலைவலியை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 1.தலைவலியே நோயாக வருவது – இதற்குக் காரணம் கிடையாது அல்லது தெரியாது (Primary Headache). இதில் மைக்ரேன், டென்ஷன் தலைவலி, கிளஸ்டர் தலைவலி, காரணம் தெரியாத மற்றத் தலைவலிகளும் அடங்கும். 2.மற்ற நோய்களின் வெளிப்பாடாகத் தலைவலி இருப்பது – (Secondary Headache) (அல்லது) காரணத் தலைவலிகள். சில காரணங்கள்: 1. ...

முதல் விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ரூ. 60 கோடிக்கு விற்பனை

Posted: 08 Apr 2014 11:42 PM PDT

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கடந்த 1957-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இந்திய அரசால் வாங்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இந்தக் கப்பல் சென்ற 1971-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய- பாகிஸ்தானியப் போரின்போது கிழக்கு பாகிஸ்தானின் மீதான முற்றுகைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தது.  15 வருடங்களுக்கும் மேலாக இந்தியக் கப்பற்படையில் முக்கிய பணி ஆற்றிய இந்தக் கப்பல் அதன்பின்னர் 1997ஆம் ஆண்டு ஜனவரியில் பாதுகாப்புப் பணியிலிருந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™