Daily Thanthi |
- இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த விதம்
- விராட் கோலிக்கு கிரிக்கெட் வீராங்கனை காதல் தூது
- பெண்கள் உலக கோப்பையிலும் இன்று இறுதிப்போட்டி
- டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய ஜோடி வெற்றி
- 24-ந் தேதி தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது 40 தொகுதிகளில் 1,359 பேர் மனு தாக்கல்
- தாய்லாந்து சுற்றுப்பயணம்: இந்திய பீச் கைப்பந்து அணி அறிவிப்பு
- பங்குச்சந்தைகளின் எழுச்சியால், 25 நிறுவனங்களில் நிறுவனர்கள் கைவசமுள்ள பங்குகளின் மதிப்பு ரூ.1,000 கோடிக்கு மேல் உயர்வு
- கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் கடன்பத்திரங்கள் ஒதுக்கீடு மூலம் திரட்டிய நிதி ரூ.2.76 லட்சம் கோடி
- வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதால் புதிய பங்கு வெளியீட்டில் இறங்க நிறுவனங்கள் ஆர்வம்
- இந்திய சர்வதேச விமான நிலையங்களில் சிறப்பான வளர்ச்சியில் திருச்சி விமான நிலையம்
| இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த விதம் Posted: 05 Apr 2014 01:10 PM PDT இந்தியா சூப்பர்–10 சுற்று பாகிஸ்தானுடன் 7 விக்கெட்டில் வெற்றி வெஸ்ட் இண்டீசுடன் 7 விக்கெட்டில் வெற்றி வங்காளதேசத்துடன் 8 விக்கெட்டில் வெற்றி ஆஸ்திரேலியாவுடன் 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி அரைஇறுதி தென்ஆப்பிரிக்காவுடன் 6 விக்கெட்டில் வெற்றி இலங்கை சூப்பர்–10 சுற்று தென்ஆப்பிரிக்காவுடன் 5 ரன்னில் வெற்றி நெதர்லாந்துடன் 9 விக்கெட்டில் வெற்றி இங்கிலாந்துடன் 6 விக்கெட்டில் தோல்வி நியூசிலாந்துடன் 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி அரைஇறுதி வெஸ்ட் இண்டீசுடன் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி image: category:Tagging: |
| விராட் கோலிக்கு கிரிக்கெட் வீராங்கனை காதல் தூது Posted: 05 Apr 2014 01:06 PM PDT லண்டன், இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை 22 வயதான டேனியலி நிகோல் யாட், இந்திய இளம் நட்சத்திர வீரர் விராட் கோலி மீது காதல் வயப்பட்டுள்ளார். 'கோலி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த செய்தியை படித்த நிறைய பேர், 'கோலி ஏற்கனவே இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவின் வலையில் விழுந்து விட்டார்' என்று டேனியலிக்கு பதில் அனுப்பியுள்ளனர். image: category:Tagging: |
| பெண்கள் உலக கோப்பையிலும் இன்று இறுதிப்போட்டி Posted: 05 Apr 2014 01:03 PM PDT மிர்புர், வங்காளதேசத்தில் நடந்து வரும் 4–வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட்டின் பாரம்பரிய வைரிகளான மெக் லேனிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், சார்லோட் எட்வர்ட்ஸ் தலைமையிலான இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2009–ம் ஆண்டு இங்கிலாந்தும், 2010, 2012–ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவும் 20 ஓவர் உலக கோப்பையை வென்றன. ஆஸ்திரேலியாவின் 'ஹாட்ரிக்' பயணத்திற்கு அணைபோடும் முனைப்புடன் இங்கிலாந்து தயாராகி வருகிறது. இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 7–ல் ஆஸ்திரேலியாவும், 12–ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. மிர்புர் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. image: category: |
| டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய ஜோடி வெற்றி Posted: 05 Apr 2014 01:02 PM PDT பூசன், டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஆசிய–ஓசியானா குரூப்–1 பிளே–ஆப் சுற்றின் 2–வது ரவுண்டில் இந்தியா–தென் கொரியா அணிகள் பூசனில் மோதுகின்றன. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் முதல் நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றியும், சனம்சிங் தோல்வியும் கண்டனர். இந்த நிலையில் 2–வது நாளான நேற்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– சகெத் மைனெனி ஜோடி 7–6 (4), 5–7, 7–6 (2), 6–3 என்ற செட் கணக்கில் பேராடி தென்கொரியாவின் ஹூயுங்– தாய்க், லிம் யங் கியு இணையை தோற்கடித்தது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சோம்தேவ், சனம்சிங் தென் கொரிய வீரர்களை சந்திக்க உள்ளனர். இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே தென்கொரியாவை வீழ்த்தி உலக குரூப் பிளே–ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம். image: category:Tagging: |
| Posted: 05 Apr 2014 12:56 PM PDT சென்னை, 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி மே மாதம் 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக் கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வருகிற 24-ந் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே, காலியாக உள்ள ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 29-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கியது. விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (தெலுங்கு வருடப்பிறப்பு) ஆகிய இரு நாட்கள் தவிர மற்ற நாட்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வரை 758 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. முடிந்தது நேற்று பிற்பகல் 3 மணியுடன் மனு தாக்கல் முடிந்தது. கடைசி நாளான நேற்று மட்டும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 560 பேர் மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 1,318 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இவர்களில் 1,198 பேர் ஆண்கள். 118 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள் ஆவர். புதுச்சேரியில் 41 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். பாராளுமன்ற தொகுதி வாரியாக மனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- வட சென்னை 1. வட சென்னை - 53 2. மத்திய சென்னை - 43 3. தென் சென்னை - 46 4. திருவள்ளூர் - 25 5. காஞ்சீபுரம் - 24 6. ஸ்ரீபெரும்புதூர் - 38 7. தஞ்சை - 30 8. நாகை - 16 9. மயிலாடுதுறை - 28 10. ஈரோடு - 27 சேலம் 11. விழுப்புரம் - 26 12. கடலூர் - 26 13. சிதம்பரம் - 31 14. கள்ளக்குறிச்சி - 33 15. சேலம் - 34 16. நாமக்கல் - 35 17. தர்மபுரி - 29 18. கிருஷ்ணகிரி - 28 19. கோவை - 34 20. பொள்ளாச்சி - 29 21. நீலகிரி - 16 22. திருப்பூர் - 32 23. வேலூர் - 38 24. அரக்கோணம் - 52 25. ஆரணி - 24 26. திருவண்ணாமலை -51 திருச்சியில் 37 பேர் 27. திருச்சி - 37 28. பெரம்பலூர் - 30 29. கரூர் - 32 30. மதுரை - 46 31. சிவகங்கை - 37 32. விருதுநகர் - 37 33. ராமநாதபுரம் - 59 34. திண்டுக்கல் - 25 35. தேனி - 44 36. நெல்லை - 37 37. தென்காசி - 22 38 தூத்துக்குடி - 30 39. கன்னியாகுமரி - 34 40. புதுச்சேரி - 41 நாளை பரிசீலனை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அப்போது, தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற 9-ந் தேதி கடைசி நாள். அன்று மாலை 3 மணிக்கு பிறகு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தொகுதி வாரியாக வெளியிடப்படும். ஓட்டு எண்ணிக்கை அதன்பிறகு 24-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மே 16-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். News Category:Hot Topic Icon : News Group Category: |
| தாய்லாந்து சுற்றுப்பயணம்: இந்திய பீச் கைப்பந்து அணி அறிவிப்பு Posted: 05 Apr 2014 12:51 PM PDT சென்னை, இந்திய பீச் கைப்பந்து அணி வருகிற 9–ந்தேதி முதல் 16–ந்தேதி வரை தாய்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதற்கான இந்திய பீச் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:– பெண்கள் அணி: மகேஸ்வரி (ரெயில்வே), சாந்தி தேவி (ஆந்திரா), ஆண்கள் 'ஏ' அணி: சிவபாலன் (சென்னை சுங்க இலாகா), தாமோதரன் (சென்னை வருமானவரி), 'பி' அணி: நரேஷ் (ஐதராபாத் மத்திய கலால்வரி), கிருஷ்ணம் ராஜூ (ஐதராபாத் மத்திய கலால்வரி). பயிற்சியாளர்: பிரதீப் ஜான், மேலாளர்: விக்ராந்த் சவுத்ரி. image: category:Tagging: |
| Posted: 05 Apr 2014 12:39 PM PDT அண்மைக் காலமாக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியால் சென்ற நிதி ஆண்டில் 25 நடுத்தர நிறுவனங்களில் ஒவ்வொரு நிறுவனர் கைவசமுள்ள பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ.1,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. பூனாவைச் சேர்ந்த பாபா கல்யாணி குழுமம், வெஸ்ட்லைஃப் டெவலப்மெண்ட், அலெம்பிக் மற்றும் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு கணிசமாக உயர்ந்ததே ஒட்டுமொத்த அளவில் 25 நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பங்குச் சந்தை மதிப்பு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 25 நிறுவனங்கள் நடுத்தர அளவில் பங்குச் சந்தை மதிப்பைக் கொண்ட நிறுவனங்களாகும். இதில் பொதுத் துறை நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் சேர்க்கப்படவில்லை. 25 நிறுவனங்களில் அதிகபட்சமாக பாபா கல்யாணி குழும நிறுவனங்களின் உரிமையாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.4,087 கோடி அதிகரித்துள்ளது. இக்குழுமத்தின் முக்கிய அங்கமான பாரத் போர்ஜ் நிறுவனம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இழப்பைக் கண்டு வந்த சில துணை நிறுவனங்களை உதறியதாலும், புதிய வர்த்தக பிரிவுகளில் களம் இறங்கியதாலும் இந்நிறுவனம் மீண்டும் லாப பாதைக்கு திரும்பியுள்ளது. பங்கு மூலதனம் பாரத் போர்ஜ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, சென்ற நிதி ஆண்டில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தில் உரிமையாளர்களின் பங்கு மூலதனம், 2013 மார்ச் 31–ந் தேதியன்று 42.05 சதவீதமாக இருந்தது. அந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பங்கு மூலதனம் 46.74 சதவீதமாக உயர்ந்தது. பாபா கல்யாணி குழுமத்தின் மற்றொரு அங்கமான பி.எஃப். யுடிலிட்டீஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு கடந்த நிதி ஆண்டில் இரண்டு மடங்கு உயர்ந்து ரூ.2,467 கோடியை எட்டியுள்ளது. ரெஸ்ட்டாரண்ட்டுகள் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வெஸ்ட்லைஃப் டெவலப்மெண்ட் நிறுவனம் மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் மெக்டொனால்டு ரெஸ்ட்டாரண்ட்டுகளை நடத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்டொனால்டு கார்ப்பரேஷனுடன் உரிமக்கிளை அடிப்படையில் கூட்டு கொண்டுள்ளது. இந்த நிறுவனமும் பங்குச் சந்தைகளின் அண்மைக் கால ஏற்றத்தில் நல்ல பலன் அடைந்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் இந்நிறுவனப் பங்கின் விலை 3.5 மடங்கு உயர்ந்தது. இதனால் நிறுவனர்களின் பங்கு மூலதன மதிப்பு ரூ.2,703 கோடி அதிகரித்தது. நிறுவனர்களான ஜாட்டியா குடும்ப உறுப்பினர்கள் இந்நிறுவனத்தில் 62.19 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளனர். அடுத்து அலெம்பிக் குழும நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு கணிசமாக உயர்ந்ததால் நிறுவனர் குடும்பத்தின் பங்கு மூலதன மதிப்பு ரூ.2,700 கோடி உயர்ந்துள்ளது. அலெம்பிக் குழுமத்தின் முக்கிய அங்கமான அலெம்பிக் பார்மாசூட்டிக்கல்ஸில் நிறுவனர் குடும்பம் 74.13 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இந்நிறுவனம் முக்கிய சந்தைகளை இலக்காகக் கொண்டு செயல்பட்டதால் நல்ல வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. கடந்த 12 மாதங்களில் இந்நிறுவனம் லாபத்தில் 54 சதவீதமும், வருவாயில் 20 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த மதிப்பு 167 சதவீதம் உயர்ந்துள்ளது. அவந்தா குழுமம் அவந்தா குழுமத்தின் முக்கிய அங்கமான கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடந்த நிதி ஆண்டில் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து உரிமையாளர்களான தபார்களின் பங்கு மூலதனத்தின் மதிப்பு ரூ.2,021 கோடி உயர்ந்துள்ளது. பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் நிறுவனர்கள் கொண்டுள்ள பங்குகளின் மதிப்பு ரூ.1,986 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. 2013 காலண்டர் ஆண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 34 சதவீதமும், வருவாய் 36 சதவீதமும் உயர்ந்துள்ளது. பீ.எஸ்.இ. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் பீ.எஸ்.இ. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமையன்று 100 கோடி டாலரை (சுமார் ரூ.6,000 கோடி) தாண்டியது. அன்றைய தினம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.18–ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் செய்திக் குறிப்பு ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்கு வசதியாக 2012 மார்ச் மாதத்தில் மும்பை பங்குச் சந்தையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. இப்பிரிவில் தற்போது 55 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் சராசரி பங்குச் சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்கும் சற்று அதிகமாக உள்ளது. இரண்டே ஆண்டுகளில் இந்த நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு 100 கோடி டாலரை தாண்டியுள்ளது. மும்பை சந்தையின் தனிப்பிரிவில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேற்கொள்ளும் பங்கு வெளியீட்டின் சராசரி மதிப்பு ரூ.9 கோடியாக உள்ளது. தற்போது மேலும் 14 நிறுவனங்கள் பங்கு வெளியிட்டு இப்பிரிவில் பட்டியலிடுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளன. image: category:Tagging: |
| கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் கடன்பத்திரங்கள் ஒதுக்கீடு மூலம் திரட்டிய நிதி ரூ.2.76 லட்சம் கோடி Posted: 05 Apr 2014 12:36 PM PDT மும்பை இந்திய நிறுவனங்கள், கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் கடன்பத்திரங்கள் ஒதுக்கீடு மூலம் ரூ.2.76 லட்சம் கோடி திரட்டியுள்ளன. முந்தைய நிதி ஆண்டில் இந்த வழிமுறையில் திரட்டப்பட்ட தொகை ரூ.3.61 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, மதிப்பின் அடிப்படையில் கடன்பத்திர ஒதுக்கீடு 23.6 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் இவ்வகை ஒதுக்கீடுகளின் எண்ணிக்கையும் 2,489 என்ற அளவிலிருந்து 1,924–ஆக குறைந்துள்ளது. பங்கு வர்த்தகம் சென்ற நிதி ஆண்டில் பங்கு வர்த்தகம் ஓரளவிற்கு நன்றாக இருந்தது. எனவே கடன்பத்திர ஒதுக்கீடு மூலம் நிதி திரட்டுவதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும், சென்ற ஆண்டில் இந்த வழியில் நிறுவனங்கள் திரட்டிய நிதி குறைந்ததற்கு இதுவே காரணம் என்றும் பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த ஆண்டில் திரட்டப்பட்ட மொத்த நிதியில் தேசிய பங்குச் சந்தையில் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்கு ரூ.1.40 லட்சம் கோடியாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்கு ரூ.78,805 கோடியாகும். இரண்டு சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் பங்கு ரூ.56,536 கோடியாக உள்ளது. இந்திய நிறுவனங்கள், கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் கடன்பத்திர ஒதுக்கீடு மூலம் அதிகபட்சமாக ரூ.41,812 கோடி திரட்டின. அடுத்து ஜூன் மாதத்தில் ரூ.35,214 கோடி திரட்டப்பட்டது. முழு நிதி ஆண்டில் இந்த வழிமுறையில் மிக குறைந்தபட்சமாக ஆகஸ்டு மாதத்தில் ரூ.2,089 கோடி திரட்டப்பட்டது. முக்கிய வழிமுறை நிறுவனங்கள் தமது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பல்வேறு வழிமுறைகளில் திரட்டுகின்றன. நிதி நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்குவது போல், கடன்பத்திரங்கள் ஒதுக்கி நிதி திரட்டுவதும் இதில் முக்கிய வழிமுறையாக உள்ளது. பங்குகளைப் போல் கடன்பத்திரங்களில் இடர்பாடுகள் இல்லை என்பதால் முதலீட்டாளர்களை எளிதில் ஈர்க்க முடிகிறது. கடந்த நிதி ஆண்டில் பங்கு வர்த்தகம் மேலும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் இந்த வகையில் திரட்டிய நிதி மேலும் கணிசமாக குறைந்திருக்கும். image: category:Tagging: |
| வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதால் புதிய பங்கு வெளியீட்டில் இறங்க நிறுவனங்கள் ஆர்வம் Posted: 05 Apr 2014 12:34 PM PDT வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதால் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்க பல நிறுவனங்கள் தயாராகியுள்ளன. எனவே 2007–க்குப் பின் இந்த ஆண்டில் பங்குச் சந்தைகளில் பெரும் எழுச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொற்காலம் கடந்த 2007–ஆம் ஆண்டு பங்கு வர்த்தகத்திற்கு பொற்காலமாக இருந்தது. அந்த ஆண்டில் புதிய பங்குகளை வெளியிட்டு பல நிறுவனங்கள் மொத்தம் 3,100 கோடி டாலர் நிதி திரட்டின. எனினும் அதற்குப் பின் வந்த ஆண்டுகளில் பங்கு வெளியீடுகள் சுணக்கம் கண்டன. 2012–ல் இந்த வழிமுறையில் திரட்டப்பட்ட நிதி 1,500 கோடி டாலராக குறைந்தது. 2013–ஆம் ஆண்டில் 940 கோடி டாலர் மட்டுமே திரட்டப்பட்டது. பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களை ஒத்தி வைத்துள்ளன. மேலும் பல நிறுவனங்கள் கடன்பத்திரங்கள் வெளியீட்டில் மட்டுமே ஆர்வம் காட்டின. இதனால் புதிய பங்கு வெளியீடுகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது பொருளாதாரத்தில் முன்னேற்ற அறிகுறிகள் தென்படுகின்றன. நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது. அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் தேர்தலுக்குப்பின் நாட்டின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் பல நிறுவனங்கள் மீண்டும் பங்கு வெளியிடுவது குறித்து மும்முரமாக ஆலோசித்து வருகின்றன. இந்த வகையில் ஜி.எம்.ஆர். எனர்ஜி நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தயாராகியுள்ளது. இந்நிறுவனம் 25 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளது. ஜி.எம்.ஆர். ஏர்போர்ட் ஜி.எம்.ஆர். இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் ஓர் அங்கமான ஜி.எம்.ஆர். எனர்ஜி இதற்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.எம்.ஆர். இன்ப்ராஸ்ட்ரக்சரின் மற்றொரு அங்கமான ஜி.எம்.ஆர். ஏர்போர்ட் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் இறங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது. ஜூலை–செப்டம்பர் மாத காலத்தில் இந்நிறுவனம் பங்கு வெளியிட வாய்ப்புள்ளது. இந்நிறுவனம் 3 கோடி டாலர் திரட்ட விரும்புவதாக தெரிகிறது. மகாநகர் காஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பிக்க தயாராகி வருகிறது. பிரிட்டனின் பீ.ஜி. குழுமம், இந்தியாவின் கெயில் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டு நிறுவனமான இது 15 கோடி டாலர் திரட்ட உத்தேசித்துள்ளது. கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் புதிய பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனம் தேர்தலுக்குப் பின் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் என தெரிகிறது. பங்கு வெளியீட்டில் இந்நிறுவனம் 5 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நிதி ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டில் கணிசமாக நிதி திரட்டிய ஒரே நிறுவனம் ஜஸ்ட் டயல் ஆகும். 2013 ஜூன் மாதத்தில் பங்கு வெளியிட்ட இந்நிறுவனம் 16.50 கோடி டாலர் திரட்டியது. 2012 டிசம்பர் மாதத்தில் பார்தி இன்ஃப்ராடெல் 75 கோடி டாலர் திரட்டிய பின் அதிக மதிப்பிலான பங்கு வெளியீடாக இது அமைந்தது. image: category:Tagging: |
| இந்திய சர்வதேச விமான நிலையங்களில் சிறப்பான வளர்ச்சியில் திருச்சி விமான நிலையம் Posted: 05 Apr 2014 12:32 PM PDT மும்பை இந்தியாவின் முன்னணி 15 சர்வதேச விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. பயணிகள் எண்ணிக்கை திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த சர்வதேச விமான பயணிகள் எண்ணிக்கை 2012–13–ஆம் நிதி ஆண்டில் 382 சதவீதம் அதிகரித்து 7.73 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 2006–07–ஆம் நிதி ஆண்டில் 1.61 லட்சமாக இருந்தது. இதனையடுத்து கோவா, லக்னோ, அமிர்தசரஸ் ஆகிய பெரிய விமான நிலையங்களை பின்னுக்கு தள்ளி மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது. இதே ஆண்டுகளில் திருச்சி விமான நிலையம் கையாண்ட சரக்குகள் அளவு அடிப்படையில் 44 சதவீதம் அதிகரித்து 2,899 டன்னாக உயர்ந்துள்ளது. சரக்குகள் கையாண்டதிலும் கோவா, அமிர்தசரஸ் ஆகிய விமான நிலையங்களை விஞ்சியுள்ளது. தற்போது நம் நாட்டின் சர்வதேச விமான நிலைய தர வரிசையில் திருச்சி 11–வது இடத்தில் உள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் அகமதாபாத் விமான நிலையத்தை விஞ்சி 10–வது பெரிய விமான நிலையமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய நகரங்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக பெரிய நகரங்களை காட்டிலும் சிறிய நகரங்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. மேலும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் தென் மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் வளர்ச்சி வலுவாக உள்ளது. தென் இந்தியாவில் தான் அதிக அளவில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மேலும், கையாளும் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் அதிக பங்களிப்பை கொண்டுள்ளன. சிறப்பான வளர்ச்சி கண்டு வரும் போதிலும் குறைந்த உள்கட்டமைப்பு வசதிகளையே திருச்சி விமான நிலையம் கொண்டுள்ளது. உதாரணமாக மும்பை விமான நிலையத்தின் பயணிகள் முனையம் 44 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. அததேசமயம், திருச்சி விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனையம் 1.26 லட்சம் சதுர அடி பரப்பளவையே கொண்டுள்ளது. மேலும், இங்கு விமான ஓடுதளத்தின் அளவும் (8,136 அடி) குறைவாகவே உள்ளது. டெல்லி விமான நிலையம் 13,534 அடி ஓடுதளத்தை கொண்டுள்ளது. கோலாலம்பூர் திருச்சியில் இருந்து நாள் ஒன்றுக்கு 600 பேர் கோலாலம்பூருக்கும், 400 பேர் சிங்கப்பூருக்கும் செல்கின்றனர். மேலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,000 சர்வதேச பயணிகள் வருகின்றனர். திருச்சியை சுற்றியுள்ள தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு, சேலம், உள்ளிட்ட 15 நகரங்களில் சர்வதேச விமான நிலையம் இல்லாதது திருச்சி விமான நிலையத்திற்கு சாதகமான அம்சமாகும். தற்போது திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான போக்குவரத்து சேவை நிறுவனங்களை தன் பக்கம் திருப்பியுள்ளது. image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |