Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


தெலுங்கானா விவகாரம்:மத்திய மந்திரி சாம்பசிவ ராவ் ராஜினாமா

Posted: 03 Apr 2014 09:09 AM PDT

புதுடெல்லி,

ஆந்திராவின் ஏழுரு தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுரி சாம்பசிவ ராவ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஜவுளித்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார். மாநில காங்கிரசிலும், பல்வேறு பாராளுமன்ற குழுக்களிலும் அங்கம் வகித்திருந்த இவர், தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட்டதால் மத்திய அரசு மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் கடும் அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில்  பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அந்த கடிதத்தில், Ôதெலுங்கானாவை பிரித்ததன் மூலம், ஆந்திராவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் மந்திரிசபையில் தொடர்வதற்கு என்னுடைய மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. எனவே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்Õ என்று கூறப்பட்டுள்ளது. அவரது ராஜினாமாவை ஜனாதிபதி நேற்று இரவு ஏற்றுக்கொண்டார். அவர் வகித்த பொறுப்பு மத்திய மந்திரி ஆனந்த் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சாம்பசிவ ராவ், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி, பா.ஜனதாவில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

category:

News Group Category:

நள்ளிரவில் வீடுகளில் பிரசாரம் செய்ய அனுமதி: தா.பாண்டியன் கண்டனம்

Posted: 03 Apr 2014 09:04 AM PDT

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நள்ளிரவில் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையர் அறிவித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் செய்கிறது.

தேர்தலில் சட்டத்திற்கு புறம்பான செயல்களைத்தடுப்போம். பொதுமக்களிடம் இதற்கு விழிப்புணர்வை உருவாக்குவோம் என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த நள்ளிரவு பிரசார அனுமதியால் பொதுமக்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும்.

எனவே, நள்ளிரவிலும் வீடு, வீடாகக் பிரசாரம் செய்யலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உடன் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

category:

News Group Category:

இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம்: தேர்தல் ஆணையம் உடனே திரும்ப பெறவேண்டும்

Posted: 03 Apr 2014 08:58 AM PDT

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியல் கட்சிகள் இரவு 10 மணிக்கு மேல் வீடுவீடாக தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது வியப்பை அளிக்கிறது. தலைமை தேர்தல் அதிகாரியின் இந்த அறிவிப்பு தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை தேர்தல் ஆணையம் அறியாமல் இருக்க முடியாது.

தமிழகத்தின் தேர்தலின் போது குறிப்பாக இரவு நேரங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, பொருட்கள் கொடுப்பது என வாக்குகளை பெறுவதற்காக பல சட்ட விரோத நடவடிக்கைகளில் சில அரசியல் கட்சிகள் ஈடுபடுவதை மக்களும் தேர்தல் ஆணையமும் அறிந்ததே.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு பெருத்த அளவில் தேர்தல் முறைகேட்டிற்கு வழிவகுக்கும் என தமிழக பாரதீய ஜனதா கட்சி கருதுகிறது. எனவே தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென தமிழக பாரதீய ஜனதா கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

category:

News Group Category:

தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் போலீஸ் அதிகாரிகள் அரசிதழில் பட்டியல் வெளியிடப்பட்டது

Posted: 03 Apr 2014 08:24 AM PDT

சென்னை,

தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள உள்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வ வர்மாவின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழக டி.ஜி.பி., அனைத்து கூடுதல் டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அவர்களின் கீழ்வரும் போலீஸ் அதிகாரிகள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர் அனைவருமே, பாராளுமன்ற தேர்தல் பணிக்காக இந்திய தேர்தல் கமிஷனுக்காக பணி அமர்த்தப்படுகிறார்கள் என்று கவர்னர் அறிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து (மார்ச் 29-ந்தேதி) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் வரையில் (மே 16-ந்தேதி), தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

category:

News Group Category:

பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் இதுவரை 457 பேர் வேட்புமனு தாக்கல்

Posted: 03 Apr 2014 08:17 AM PDT

சென்னை,

தமிழ்நாட்டில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள 39 பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29&ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கி 4&வது நாளான நேற்று வரை 457 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 வேட்புமனு தாக்கலுக்கான 4-வது நாளான இன்று  பாராளுமன்ற தேர்தலுக்காக 139 பேரும், ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை பாராளுமன்ற தேர்தலுக்காக மொத்தம் 457 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். இவர்களில் 417 பேர் ஆண்கள், 39 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக இதுவரை 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

category:

News Group Category:

மற்ற வேட்பாளர்கள் அதிக செலவு செய்கிறார்கள் ஆம் ஆத்மி வேட்பாளர் மாயங்க் காந்தி குற்றச்சாட்டு

Posted: 03 Apr 2014 07:56 AM PDT

மும்பை,

வட மேற்கு மும்பை தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் மாயங்க் காந்தி  நிருபர்களிடம் கூறியதாவது:–

பாராளுமன்ற தேர்தலில் ரூ.70 லட்சம் செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் நான் போட்டியிடும் தொகுதியில் மற்ற கட்சி வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக செலவு செய்கிறார்கள். இதனால் என்னை போன்ற வேட்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. இந்த குற்றச்சாட்டுக்காக என்னிடம் ஆதாரம் இல்லை. இதற்கு ஆதாரம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல் ஆணையம் தான் கண்காணிக்க வேண்டும்.

இந்த தொகுதியில் தேர்தல் வெற்றி நிலவரம் பற்றி சர்வே நடத்தியுள்ளோம். அதில் நான் 1 லட்சம் வாக்குகளில் முன்னணியில் உள்ளேன். ஆம் ஆத்மி கட்சியையே ஆதரிப்பதாக பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவித்து உள்ளனர். எங்களது கட்சி சார்பில் மும்பைக்கு தனியாக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு மாயங்க் காந்தி கூறினார்.
 

category:

News Group Category:

சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனி விமானம் ரத்து; பயணிகள் அவதி

Posted: 03 Apr 2014 07:05 AM PDT

சென்னை

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று ஜெர்மனிக்கு விமானம் செல்லவேண்டும். இந்த விமானம் ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு வந்து மீண்டும் புறப்பட்டு செல்லும்.

ஆனால் ஜெர்மனியில் விமானிகள் ஓய்வுபெறும் வயது வரம்பை சமீபத்தில் அந்நாட்டு அரசு மாற்றி அமைத்ததை கண்டித்து விமானிகள் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் ஜெர்மனி விமானம் சென்னைக்கு வரவில்லை.

இதையடுத்து சென்னையில் இருந்து செல்லவேண்டிய ஜெர்மனி விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த 341 பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

category:

News Group Category:

கள்ளக்காதலை கண்டித்த மனைவி கொலை; கணவர் கைது

Posted: 03 Apr 2014 07:01 AM PDT

திருவள்ளூர்

பெரியபாளையம் அருகே கள்ளக்காதலை கண்டித்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளத்தொடர்பு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வெங்கல்குப்பம் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 32). டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் வெங்கல் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுசீலாவின் மகள் நதியா(26) என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ரீயா (8), ரிந்தியா (5) என்ற மகள்களும் ராக்கி (2) என்ற மகனும் உள்ளனர். காளிமுத்துவுக்கு பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. மேலும், திருவண்ணாமலையை சேர்ந்த நதியா என்ற பெண்ணுடன் சோழவரத்தில் காளிமுத்து வசித்து வந்தார்.

பெண்கள் தொடர்பு

இதனை அறிந்த காளிமுத்துவின் மனைவி நதியா, மைத்துனர் கலைவாணன், மாமியார் சுசீலா ஆகியோர் அவரை கண்டித்தனர். இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் 31–ந்தேதி சோழவரம் போலீஸ் நிலையத்தில் திருவண்ணாமலை நதியா குடும்பத்துக்கும், காளிமுத்துவின் மனைவி குடும்பத்தாருக்கும் இடையே சமரசம் நடைபெற்றது.

மேலும், கன்னிகைபேர், திருக்கண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இளம்பெண்களுடன் காளிமுத்துவுக்கு பழக்கம் இருந்ததையும் காளிமுத்துவின் மனைவி குடும்பத்தினர் கண்டித்தனர். இதுதொடர்பாக நேற்று  மாலை கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மனைவி கொலை

இதனால் மனைவியிடம் தகராறு செய்து, வீட்டைவிட்டு காளிமுத்து வெளியே சென்றுவிட்டார். இந்த நிலையில், நேற்று  நள்ளிரவு குழந்தைகள் அலறி துடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அம்மிக்கல்லை மனைவி நதியா தலையில் காளிமுத்து போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறிது நேரத்தில் நதியா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனடியாக பொதுமக்கள் காளிமுத்துவை பிடித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கணவர் கைது

வெங்கல் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் காளிமுத்துவை கைது செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நதியாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காளிமுத்து மீது வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News Group Category:

பெங்களூர் தனிக்கோர்ட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆஜராக உத்தரவு ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது

Posted: 03 Apr 2014 06:40 AM PDT

பெங்களூர்,

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நாளை(சனிக்கிழமை) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ஜெயலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கு

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் வாதிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் பிராபர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் நிறுவனம் தங்கள் சொத்து முடக்கத்தை எதிர்த்து பெங்களூர் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

உத்தரவு நகல்

அதன்படி பெங்களூர் தனிக்கோர்ட்டில் அந்த நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் அந்த நிறுவனம் மீண்டும் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் அந்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது சென்னை ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவை நகலை அந்த தனியார் நிறுவனம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அப்போது எந்த அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை பெற்றீர்கள்? என்பது குறித்து நாளை(சனிக்கிழமை) கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதோடு ஜெயலலிதா ஆஜராவதற்கு வசதியாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு ஐகோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

ஜெயலலிதாவுக்கு விலக்கு

இந்த நிலையில் குறுகிய காலத்தில் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க இயலாது என்று கர்நாடக ஐகோர்ட்டு பதிவாளர் சார்பில் தனிக்கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேரில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு மட்டும் விலக்கு அளிப்பதாக நீதிபதி பின்னர் அறிவித்தார். இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் இன்றும்(வெள்ளிக்கிழமை) அரசு சிறப்பு வக்கீலின் வாதம் தொடர்ந்து நடைபெறுகிறது.

category:

News Group Category:

ஆம் ஆத்மி கட்சி சார்பில் சோனியா காந்தியை எதிர்த்து முன்னாள் நீதிபதி போட்டி

Posted: 03 Apr 2014 06:36 AM PDT

புதுடெல்லி,

பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 14–வது பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், சத்தீஷ்கார் மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் தலா இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், தமிழ்நாடு, மேற்கு வங்காளத்தில் தலா ஒரு தொகுதிக்கான வேட்பாளரும் இடம் பெற்று உள்ளனர்.

அதன்படி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மத்தியபிரதேச ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி பக்ருதீன் போட்டியிடுகிறார். அலகாபாத் தொகுதியில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி ஆம் ஆத்மி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™