Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்!

Posted: 03 Apr 2014 10:34 AM PDT

அடிப்படை வசதிகூட இல்லாத குக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை இலவசமாக அளிக்கிறது சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம். மாணவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லையென்றால், மாணவர்களைத் தேடி பள்ளிகள் செல்ல வேண்டும்' என்கிற தாரக மந்திரத்தின்கீழ் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்புகளை நடத்துகிறது சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம். 2006-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தப் ...

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Posted: 03 Apr 2014 10:11 AM PDT

100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள் கேழ்வரகில் 'மித்தியானைன்' என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த 'மித்தியானைன்' புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது. பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ ...

கோடை நோயே ஓடிப் போய்விடு!

Posted: 03 Apr 2014 09:25 AM PDT

கோடைக்கால நோய்களை எதிர்கொள்ள சில வழிமுறைகள் கோடையின் தாக்கம் ஆரம்பித்த கடந்த சில தினங்களாகவே தொற்று வியாதிகளால் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்து உள்ளது. குறிப்பாக, தண்ணீர் மூலம் பரவக்கூடிய நோய்களின் பாதிப்பு, குழந்தைகளிடம் அதிகம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். பல குழந்தைகளுக்கு லேசான வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் வருகிறது. நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சின்னம்மை (chicken pox) டைபாய்டு (typoid) போன்றவற்றின் ...

இதோ பணம்! சும்மா தருவாங்களாம்!

Posted: 03 Apr 2014 09:15 AM PDT

பணமென்றால்... சும்மா வரும் பணமென்றால்... எவர் தான் மறுப்பர்! கிளிக்கினால் பணமாம்... பார்த்தால் பணமாம்... பரப்பினால் பணமாம்... இன்னும் எத்தனையோ வழிகளில் பணமாம்... பணம்...! இஞ்சாருங்கோ... கொஞ்சம் கேளுங்கோ... இணையத்தில (வலைப் பக்கங்களில்) கிளிக்கினால் பணமென்றால்... எல்லாம் பொய்யென்று நம்புங்கோ... என்றாலும் என்னதான் மெய்யென்று பார்க்க ஆவது கீழுள்ள இணைப்பை சொடுக்கிப் (கிளிக்) பண்ணுங்கோவேன்! http://Visitors2Cash.com/ref.php?refId=164875 குறிப்பு: இணையத்தில பணம் வழங்கிற ஆள்களின் ...

நதி நீர் வீணாகக் கடலில் கலக்கிறதா?

Posted: 03 Apr 2014 09:10 AM PDT

'வீணாகக் கடலில் கலக்கும் நதி நீரைத் தமிழகத்துக்குக் கொடுத்தால் என்ன?' என்பது போன்ற குரலை நாம் அடிக்கடி கேட்கலாம். தமிழகத்துடன் நதிநீர்ப் பங்கீடு செய்துகொள்ளப்படுவது சரிதான். ஆனால், நதிநீர் கடலில் வீணாகக் கலக்கிறது என்ற வாதம்தான் தவறு. கடல்களின் முக்கிய நீர் ஆதாரங்களில் நதிகளும் அடக்கம். திடீரென்று, உலகில் உள்ள எல்லா நதிகளையும் கடலில் கலக்கவிடாமல் தடுத்துவிடுகிறோம் என்று கற்பனையாக வைத்துக்கொள்வோம். அப்போது என்ன ஆகும்? கடல் மட்டம் குறிப்பிட்ட அளவு குறைந்துவிடும். உலகின் தட்பவெப்பத்தை நிர்ணயிப்பதில் ...

எழுதப்படாத கவிதை...!!

Posted: 03 Apr 2014 09:08 AM PDT

என்னுள் இருந்து என் எண்ணங்களை ஆட்சிசெய்யும் என்னவனைக் கவிதையாய் வடித்திட உருகும் மனத்துடன் விடியும் ஒவ்வொரு நாளும் விரும்புகிறேன்..!! வார்த்தைகள் வசப்படாது வஞ்சனை செய்திட மனதாளும் மன்னவனை வார்த்தையில் அடக்கிடவும் இயலுமோ..?!! மனதைச் சுண்டியிழுத்து நாடி, நரம்புகளை புடைக்கச்செய்து எங்கோ இருந்தபடி எனை வீணையாய் மீட்டும் ஆழி அலையின் ஓசையாய் ரசிக்க வைக்கும் கம்பீரக் குரல்...! மனதிற்குள் மறைந்திருந்து நான் விழிமூடும் நேரத்தில் கதிரவனையே கூசச்செய்யும் பார்வையுடன்.. மின்னலும் ...

வங்கிகளில் பிற சேவைகளுக்குக் கட்டணம்? - வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted: 03 Apr 2014 09:07 AM PDT

வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் இதற்குப் பதிலாக வங்கிகள் அளிக்கும் பிற சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம். இது அபராத கட்டணத்தை விட கூடுதல் சுமையாக வாடிக்கையாளர்களுக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டபோதிலும் இது இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று வங்கியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத ...

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Posted: 03 Apr 2014 08:59 AM PDT

நகைச்சுவை கவிதை - காதலர் தினம் காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன் காதில் விழாதது போல் மனைவி இருந்தாள் பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன் பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான் மகளை அழைத்து தேநீர் கேட்டேன். மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை. அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன் நடத்துனர் காதில் விழவே இல்லை அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன் அதிகாரி கண்டும் காணாமல் சென்றார் மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன் கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை மாலையில் பருக தேநீர் ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -107)

Posted: 03 Apr 2014 08:21 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

ராகுல்காந்திக்கு இருப்பிட சான்று தர முடியாது

Posted: 03 Apr 2014 07:37 AM PDT

ராகுல்காந்திக்கு இருப்பிட சான்று தர முடியாது --மாவட்ட ஆட்சியர் அமேதி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு இருப்பிட சான்று தர முடியாது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார் ராகுல் காந்தி. இந்த தேர்தலிலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் அவர் தேர்தல் செலவு கணக்குகளை வங்கி கணக்குகள் மூலம் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு அமேதியில் வங்கி கணக்கு எதுவும் இல்லை. இதையடுத்து ...

கணினி ஆன் ஆகவில்லை

Posted: 03 Apr 2014 07:36 AM PDT

நண்பர்களே!

எனது கணினி சில நாட்களாக ஆன் ஆகவில்லை. விண்டோஸ் 7 லோகோ வுடன் நிற்கிறது.

சேப் மோட் ஆன் ஆகவில்லை, ஸ்ட்ராட் அப் ரிப்பேர் எதும் பயனில்லை!

ஓ.எஸ் இன்ஸ்டால் செய்யும்போது டிஸ்க் காமிக்கவில்லை. லோடு ஆகிக் கொன்டே உள்ளது..

தயவுசெய்து உதவுங்கள்!!!

பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா?

Posted: 03 Apr 2014 05:52 AM PDT

நம் நாட்டைக் காப்பாற்றப்போவது யார் என்ற ஜனநாயகப் போராட்டம் அடுத்த சில நாட்களில் - நம்முடைய பெரும்பாலான ஆண் அரசியல்வாதிகளுக்கிடையே - தீவிரமடைந்துவிடும். நம்முடைய மக்களில் 'பாதிப் பேர்' (அதாவது பெண்கள்) - எதிரிகளாலோ பயங்கரவாதிகளாலோ அல்லாமல் நம்முடைய மக்களாலேயே - ஆபத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், நம் நாடு எப்படிப் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்களில் ஒருவர்கூடக் கேள்வி எழுப்பப்போவதில்லை. இந்தியாவின் பாதுகாப்பு என்பது அதன் மக்கள்தொகையில் 48% ஆக இருக்கும் பெண்களின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதுதான். பெண் ...

கற்போம் – கணிணி செய்திகள் மின்னூல் வடிவில் ...

Posted: 03 Apr 2014 05:22 AM PDT

கற்போம் – கணிணி செய்திகள் மின்னூல் வடிவில் ... கணினி செய்திகளை தமிழில் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . ஆசிரியர் : பிரபு கிருஷ்ணா prabuk@live.in டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/x9lcee7q1t9mpqu/karpom-computer-news-A4%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf http://orathanadukarthik.blogspot.ae/2014/04/blog-post_9500.html

மலேசிய நிறுவனத்தின் பம்பாய் மோனோ ரயில் திட்டம் நஷ்டத்தில் இயங்குகின்றது!

Posted: 03 Apr 2014 05:20 AM PDT

இந்தியாவின் முதல் மோனோ ரயில் திட்டம் மும்பாயில் தற்போது இயங்கி வருகின்றது. மலேசியாவின் ஸ்கோமி (SCOMI) நிறுவனம்தான் இந்தியாவில் தனது முதல் திட்டமாக இதனை நிறைவேற்றியுள்ளது. சென்னையிலும் மற்ற இந்திய நகரங்களிலும் இதே போன்று மோனோ ரயில் திட்டங்களை நிர்மாணிக்கும் முயற்சிகளிலும் ஸ்கோமி ஈடுபட்டு வருகின்றது. இதற்கிடையில், மும்பாய் மோனோ ரயில் இயக்கத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.7 லட்சம் செலவாகின்றது என்றும், ரூ.2 லட்சம் மட்டுமே வருமானமாகக் கிடைக்கின்றது என்றும் இதனால் மாதத்திற்கு ரூ.1½ கோடி நஷ்டத்தில் ...

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்

Posted: 03 Apr 2014 05:17 AM PDT

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். வியட்னாமில் ...

டிப்ஸ்... டிப்ஸ்...

Posted: 03 Apr 2014 05:16 AM PDT

திருக்குறள் காவியம்

Posted: 03 Apr 2014 05:13 AM PDT

இசை வடிவில் 1330 திருக்குறளையும் கேட்டு மகிழுங்கள்!

ஆனந்த நர்த்தனம்

Posted: 03 Apr 2014 04:09 AM PDT

இளவேனில் மாலையில் யாருமற்ற சாலையில் மோனப் பயனமளிக்கும் மோகன இன்பத்தில்... ஆடைகடந்து அதிகாரமாய் ஆவித் தொட்டுப் போகும் தென்றலின் ஸ்பரிசத்தில்... தொட்டிச் செடியழகில் தொலைந்துக் கொண்டிருக்கையில் இறைத்த நீர் உரிஞ்சுவதாய் வேர் பாடும் ராகத்தில்... மண்ணைத் தொடுமுன்னே மடியில் விழுந்து உயிர்த்தொட்டு வழியும் கள்ளத் துளியின் செல்லத் தீண்டலில்... நட்சத்திர நயனங்கள் இமையாது பார்ப்பதனால் வெட்கத்தில் முகம் மறைக்கும் வெள்ளிநிலவின் பேரழகில்... அலைகள் அரங்கேற்றும் ஆனந்த ...

வெண்முகிலே

Posted: 03 Apr 2014 04:07 AM PDT

நீரடைத்த பந்தே வானில் நிலைகொண்ட மேகமே... நடைபயிலும் மழலையாய் நீ தவழ்ந்து வரத் தொலைகின்றேன்... நிலவோடு நீயாடும் கண்ணாமூச்சி அதை இமைக்காமல் நாளும் ரசிக்கின்றேன்... சேர்த்துவைத்த பன்னீரை  இறைக்கின்றாய் பூமண்டலம் போல் நானும் பூக்கின்றேன்... எனை எடுத்தாளும் உனைக் கவர எத்தனித்து நீராவியாய் உன்னில் நான் நிறைந்துவிட்டேன்...!

ராஜாவும் பிறரும் -சலிக்காத ஒரு இசை பயணம்

Posted: 03 Apr 2014 03:06 AM PDT

80களின் திரையிசை பற்றிய அனுபவப் பகிர்வுகள் தமிழ்த் திரை இசையை அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகள், இரண்டாயிரம்கள், இரண்டாயிரத்துப்பத்துகள் என்று decadeவாரியாகப் பிரித்துப் பேசுகிற மரபு இருக்கிறது. ஒவ்வொரு Decadeக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர்கள் முந்தைய decadeஐச் சற்றே அலட்சியமாகப் பார்ப்பதும் (நாங்க அங்கிருந்து வளர்ந்துட்டோம்ல!), அடுத்த decadeஐ மிக அலட்சியமாகப் பார்ப்பதும் (அங்கே தரம் குறைஞ்சுபோச்சுல்ல!) உப மரபு. அவ்வகையில், நான் எண்பதுகளின் ரசிகன். குறிப்பாகச் சொல்வதென்றால், ...

ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்

Posted: 03 Apr 2014 02:51 AM PDT

ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில் ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமானது. அதிலும் நம் நாட்டில் புனிதப் பயணம் இன்றைய நவீன கால கட்டத்தில் மிக எளிதாகி விட்டது. நாங்கள் பல புனிதப் பயணங்கள் செய்தாலும் அந்தப் பயணங்களில் எல்லாம் அயோத்தி செல்ல முடியவில்லை. ஆகவே இம்முறை திட்டமிட்டு ராமன் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம். ஆனாலும் ...

ந.க.துறைவன் ஹைபுன் கவிதை

Posted: 03 Apr 2014 02:46 AM PDT

இந்திய தேசத்தில் நீதி நெறிக் குறியீடாகவும் காந்தீயத் தத்துவத்தின் சிறப்பு நிலை அறக் கோட்பாடாகவும் விளங்கியது அந்த உருவப் பொம்மைகள். அப்பொம்மைகளைக் குழந்தைகளாலும் சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அனைத்து தரப்பு மதவாதிகளாலும் விரும்பி ஏற்று ரசிக்கபட்டது. அந்த உருவப் பொம்மைகள். இன்று எங்கும் காண்பது அரிதாகி இருக்கிறது. அது என்ன பொம்மைகள்?. பார்க்காதே பேசாதே கேட்காதே என்று தத்துவம் போதித்தது மூன்று குரங்கு பொம்மைகள். .

மலேசியாவின் 2-வது கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்!

Posted: 03 Apr 2014 01:33 AM PDT

கோலாலம்பூர், ஏப்ரல் 3 – மலேசியாவில் பொருளாதார தடுமாற்றம் மற்றும் பணமதிப்பு சரிவு ஆகியவை மக்களை போராட்ட நிலைக்கு தள்ளுகின்றது.இருப்பினும் போர்ப்ஸ் மலேசியா, மலேசிய கோடீஸ்வரர்கள் 18 பேரின் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் டான்ஸ்ரீ ரோபர்ட் குவோக் நீயென் உள்ளார். இவருக்கு வயது 91 ஆகிறது. இவர் சொத்து மதிப்பு 38 பில்லியன் ஆகும். டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் 2-வது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் மலேசியா தெரிவித்துள்ளது. ஆனந்த கிருஷ்ணனின் வயது 76. இவரின் புனைப் பெயர் ஏகே ஆகும். ...

இவங்களைப் பார்த்து பேரு வச்சாங்களா...! இப்படியும் விருது வழங்கலாம்

Posted: 02 Apr 2014 11:25 PM PDT

"அது என்னமோ தெரியல, என்ன மாயமோ புரியல... சில சினிமா தலைப்புகளுக்கும் சில அரசியல் கட்சிகளுக்கும் ஏதோ தொடர்பு இருக்குமோன்னு தோணுது. இத படிச்சுப் பாருங்களேன். "பணிவான' அ.தி.மு.க., அமைச்சர்கள் "நிமிர்ந்து நில்' தொகுதிக்காக தொடர்ந்து மோதிக்கொள்ளும் தே.மு.தி.க., பா.ம.க., --- "கேடி பில்லா, கில்லாடி ரங்கா' கூட்டணிக்காக கட்சிகளை தேடும் காங்கிரஸ்: - "பரதேசி' ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு. "ரிஸ்க்' எடுக்கும் புதிய தமிழகம் -- "நைய்யாண்டி' மதுரையில் இருந்தபடி அரசியல் நடத்தும் அழகிரி ...

கலாய்க்கிறாங்க...

Posted: 02 Apr 2014 11:22 PM PDT

தேர்தல் தேதி அறிவிச்சதும், தேர்தல் விதி முறை அமலுக்கு வந்ததோ இல்லையோ, ஆனா "கரன்ட் கட்' பண்றது அமலுக்கு வந்திருச்சு. ஒருவேளை இதுவும் தேர்தல் விதிமுறையா இருக்குமோ?! - நித்தி ஒருத்தனுக்கு தலைல அடிபட்டு, வெள்ளை துணில கட்டுப் போட்டுட்டு போறான், அவன்கிட்ட போய் "எப்ப ஆம் ஆத்மில சேர்ந்தீங்க'ன்னு கேக்குறாங்க - ஜே.எஸ் ஏப்ரல் மாதம் "சூரியன்' சுட்டெரிக்கும். "இலை' எல்லாம் காஞ்சு போய்டும். "கை'யெல்லாம் வெயில்ல காயும்... ஆனா "தாமரை' அழகா பூத்திருக்கும், "மாம்பழம்' அந்த நேரத்துல தான் பழுக்கும், ...

மாத்தி யோசி... மாத்தி பேசு...! இப்படி நடந்தா எப்படியிருக்கும்?

Posted: 02 Apr 2014 11:19 PM PDT

ஏங்க, எத்தனை நாட்களுக்கு தான் கருணாநிதியை, ஜெயலலிதா விமர்சித்து பேசுவதையும்; ஜெயலலிதாவை கருணாநிதி விமர்சித்து பேசுவதையும் கேட்பது, படிப்பது? கொஞ்சம் மாறுதலுக்காக, 'ஜெயலலிதாவுக்கு கருணாநிதியும், கருணாநிதிக்கு ஜெயலலிதாவும் ஓட்டுக் கேட்டால் எப்படி இருக்கும்' என்ற விபரீத கற்பனையால் விளைந்தது இது. கருணாநிதி: உடன்பிறப்பே... இனிமேல் உன்னை, 'ரத்தத்தின் ரத்தமே' என, அழைக்கப் போகிறேன். அதிர்ச்சி அடையாதே. பெரியாரின் பாசறையில் நான் பயின்ற காலத்தில், அண்ணா எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது. எதிரி ...

"ஓட்டல் பாலிடிக்ஸ் பவன்"

Posted: 02 Apr 2014 11:16 PM PDT

"ஓட்டல் பாலிடிக்ஸ் பவன்" கட்சி தலைவர்கள் ஓட்டு சேகரிக்க கூட்டம் போட்டு பேசும் போது, தொண்டர்களை குண்டு கட்டாக லாரியில் அழைத்து வந்து, இறக்கி பிரியாணி பொட்டலங்களை கொடுக்கும் கட்சிகள், தொண்டர்களுக்காக ஒரு ஓட்டல் துவங்கினால் எப்படி இருக்கும். ஓட்டல் பாலிடிக்ஸ் பவன்னின் "ஸ்பெஷல்' "மெனு'வை ருசித்து பாருங்களேன் மக்களே... உடன்பிறப்பு உப்புமா பார்க்க கருப்பு, சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த உப்புமாவை சாப்பிட்டதும், ஐந்து விரல்களையும் விரித்து காட்ட தோணும். தி.மு.க., தலைவர்களின் பெயர்களை ...

"டயலாக்' பழசு "சிச்சுவேஷன்' புதுசு!

Posted: 02 Apr 2014 11:07 PM PDT

காமெடி சேனல்களில், ஓடும் காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம், நமது அரசியல் தலைவர்கள் பேசிக் கொள்வதைப் போலவே, "டயலாக்" கேட்கிறது; அப்படியாக நம் செவிகளில் கற்பனையாக விழுந்த சில, "டயலாக்'குகளை உங்களுக்கும் "டெடிகேட்' பண்ணுகிறோம்... தா.பாண்டியனிடம் ஜி.ராமகிருஷ்ணன்: "உங்களுக்கும் இஸ்க்... இஸ்க்... என்றா கேட்கிறது; எனக்கும் இஸ்க்... இஸ்க்... என்றுதான் கேட்கிறது!'' கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின்: "பட்... எனக்கு அந்த டீலிங் பிடிச்சிருந்துச்சு!'' ராதிகாவிடம் சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத்குமார்: ...

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...?

Posted: 02 Apr 2014 10:36 PM PDT

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால்.. என்ன செய்யலாம்…?        அதிக விலைக்கொடுத்து வாங்கிய உங்களுடைய ஆண்ட்ராய்ட், ஐபோன் தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை இப்பதிவில் பார்ப்போம். ஆம் நண்பர்களே.! உங்களுடைய விலைமதிப்புடைய iPhone அல்லது ஆண்ட்ராய் வகை போன்கள் (Costly smartphones) தண்ணீரில் விழுந்துவிட்டால் செய்ய வேண்டியவை:          எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் உங்களுடைய ஐபோனை தண்ணீரிலிருந்து உடனடியாக எடுத்து விடுங்கள். உடனடியாக உங்களுடைய ...

காத்திருக்கும் அழிவுகள்!

Posted: 02 Apr 2014 07:41 PM PDT

ஜப்பானில் நடந்த மாநாட்டில் 'பருவநிலை மாற்றத்துக்கான நாடுகளுக்கிடையிலான குழு' வெளியிட்டிருக்கும் அறிக்கை, உலகம் சந்திக்கவிருக்கிற பேரபாயங்கள்குறித்து மிகவும் பலமாக எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. புவி வெப்பமாதலால் துருவங்களில் பனி உருகிக் கடல் மட்டம் உயர்வது, பசுங்குடில் வாயுக்கள் அதிக அளவில் வெளியிடப்படுவது, மீன் இனங்கள் துருவப் பகுதியை நோக்கிப் புலம்பெயர்வது அல்லது அழிந்துபோவது, பவளப்பாறைகள் அழிந்து போவது போன்ற, ஏற்கெனவே நமக்குத் தெரிந்த தகவல்களைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கும் ...

இந்த சின்னம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..!

Posted: 02 Apr 2014 07:36 PM PDT

தமிழக அரசியல் பிரமுகர்களில் அதிக சின்னங்களில் போட்டியிட்ட வேட்பாளராக திகழ்பவர் தற்போது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சு.திருநாவுக்கரசர். அதிமுக தொடங்கப்பட்டவுடன் 1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் சு.திருநாவுக்கரசர் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 1980, 1984 ஆகிய தேர்தல்களிலும் அதே தொகுதியில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்ஜிஆர் ...

உப்பு, ரொம்ப தப்பு... அயோடின் உப்பு, ரொம்ப ரொம்ப தப்பு!

Posted: 02 Apr 2014 07:32 PM PDT

மனித உடலின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இன்னொரு உணவுப் பொருள், சோடியம் எனப்படும் உப்பு. ஆதிமனிதன் வேட்டையாடி விலங்குகளின் மாமிசத்தையும் ரத்தத்தையும் உணவாக உண்டான். உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான சோடியம், விலங்குகளின் ரத்தத்தின் மூலமாகவே அவனுக்குக் கிடைத்தது. பிறகு, விவசாயம் செய்து உணவு உண்ண ஆரம்பித்தபோதுதான் உப்பைத் தேடி, சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தான்! இன்றைக்கு, இந்த உப்பே, அவனுக்கு எமனாகும் அளவுக்கு வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது... சோகம்தான்! உப்பின் உற்பத்தி ஸ்தானம் கடல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™