Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஐ.டி. நிறுவனங்களின் செயல்திறனால் இந்திய நிறுவனங்கள் ஈட்டிய லாபம் 18 சதவீதம் வளர்ச்சி

Posted: 29 Apr 2014 12:34 PM PDT

ஐ.டி. நிறுவனங்களின் செயல்திறனால், நான்காவது காலாண்டில் (ஜனவரி – மார்ச்) 70 இந்திய நிறுவனங்கள் ஈட்டிய நிகர லாபம் ஒட்டுமொத்தத்தில் 18.3 சதவீதம் அதிகரித்து ரூ.22,237 கோடியாக உயர்ந்துள்ளது.

வருவாய்

நான்காவது காலாண்டில் 70 நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் 12.4 சதவீதம் உயர்ந்து ரூ.1.12 லட்சம் கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இதில், ஐ.டி. துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் வருவாயில் மட்டும் 27 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நான்காவது காலாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு குறைந்துள்ளது. இது, ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாகும். மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்திய ஐ.டி. நிறுவனங்கள் தமது வருவாயில் பெரும் பகுதியை மேற்கண்ட நாடுகள் வாயிலாக ஈட்டுகின்றன.

டி.சி.எஸ்.

இதனையடுத்து ஐ.டி. துறையைச் சேர்ந்த டி.சி.எஸ். மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் நிகர லாபம் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 70 நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் ஐ.டி. துறையைச் சேர்ந்தவை. இந்த ஐ.டி. நிறுவனங்கள் நீங்கலாக 60 கம்பெனிகளின் நிகர லாபம் 0.50 சதவீதம் மட்டுமே அதிகரித்து ரூ.10,108 கோடியாகவும், வருவாய் 1.7 சதவீதம் மட்டுமே அதிகரித்து ரூ.60,854 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இது, ஐ.டி. நிறுவனங்களின் லாபம் மற்றும் வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இதனையடுத்து, இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள காட்டி வரும் தயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. எனவே, உள்நாட்டை இலக்காகக் கொண்டு செயல்படும் சிமெண்டு, மோட்டார் வாகனம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளது.

அதிக வட்டி விகிதம்

கடனிற்கான அதிக வட்டி விகிதம், எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் கார் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. நான்காவது காலாண்டில் வாகனங்கள் விற்பனை 5.5 சதவீதம் குறைந்துள்ளது. அந்த காலாண்டில் கார் மற்றும் பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வருவாய் 9.5 சதவீதம் குறைந்துள்ளது.

பொருளாதார மந்தநிலையால் வங்கிகளின் கடன் வளர்ச்சி குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் உயர்ந்துள்ளது. நான்காவது காலாண்டில் தனியார் வங்கிகளின் நிகர வட்டி வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளது. அதேசமயம், இந்த வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் 0.04 சதவீதம் குறைந்து 1.7 சதவீதமாக குறைந்துள்ளது.

கணக்கீட்டு காலத்தில் ஏழு தனியார் வங்கிகளின் நிகர வட்டி வருவாய் 16 சதவீதம் அதிகரித்து ரூ.14,404 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வங்கிகளின் நிகர லாப வளர்ச்சி 18 சதவீதமாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்–நினோ தாக்கம்

இந்நிலையில், எல்–நினோ தாக்கம் ஏற்பட்டால் பருவமழை சராசரி அளவிற்கும் கீழ் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இதன் காரணமாக உணவு பொருள்கள் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கலாம். எனவே, ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை ஓராண்டு காலம் வரை குறைக்க வாய்ப்பில்லை என நிபுணர் ஒருவர் தெரிவித்தார். எனவே, இனிவரும் காலாண்டுகளிலும் வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் ஈட்டும் லாபம் குறைய வாய்ப்புள்ளது.

தேர்தலுக்கு பிறகு...

அதேசமயம், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் போன்ற துறைகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

category:

கடந்த 2013–ஆம் ஆண்டில் நுகர்பொருள்கள் விற்பனையில் பாக்கெட் கார வகைகள் முதலிடம்

Posted: 29 Apr 2014 12:30 PM PDT

புதுடெல்லி

கடந்த 2013–ஆம் ஆண்டில் நுகர்பொருள்கள் விற்பனையைப் பொறுத்தவரை பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற கார வகைகள் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நீல்சன் நிறுவனத்தின் அண்மைக் கால ஆய்வு ஒன்றின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

பண்டிகை காலம்

இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை என்பது பண்டிகை காலம், திருமண சீசன் மற்றும் உள்ளூர் திருவிழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே தின்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் காலத்திற்கேற்ப தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. பெப்சிகோ, ஐ.டி.சி. மற்றும் பார்லே போன்ற நிறுவனங்கள் கடந்த ஆண்டில் உள்ளூர் மக்களின் தேவை மற்றும் பிராந்திய ரசனைகளைக் கருத்தில் கொண்டு சிறிய நகரங்களில் விநியோகத்தை விரிவுபடுத்தி விற்பனையில் வளர்ச்சி கண்டன.

அதே நேரத்தில், ஹால்டிராம், பாலாஜி, கார்டன், பிகானோ, யெல்லோ டயமண்டு மற்றும் டீ.எஃப்.எம். புட்ஸ் கிராக்ஸ் போன்ற நிறுவனங்கள் அந்தந்த பகுதி மக்களின் தேவையறிந்து உடனுக்குடன் புதுமைகளை புகுத்தி, காலத்திற்கேற்ப தமது தயாரிப்புகளின் விலையை குறைத்து சுறுசுறுப்பாக செயலாற்றி அதிக வருவாய் ஈட்டின. சீசனைப் பொறுத்து தின்பண்டங்கள் விற்பனையில் கடும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். குறிப்பாக பருவநிலை மாற்றங்களால் குளிர்பானங்கள் விற்பனையில்தான் அதிக தாக்கம் ஏற்படுகிறது. இதனை ஈடு கட்டும் வகையில் பல நிறுவனங்கள் இனிப்பு, கார வகைகளில் விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்குகின்றன. இதனால் கடந்த ஆண்டில் பல்வேறு நுகர்பொருள்களில் பாக்கெட் கார வகைகளின் விற்பனை ரூ.12,679 கோடியை எட்டியுள்ளது.

6 வகை நுகர்பொருள்கள்

2013–ஆம் ஆண்டில் ஆறு வகையான நுகர்பொருள்கள் விற்பனையில் முன்னிலையில் இருந்தன. பாக்கெட் காரம் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், சாக்லேட், கோதுமை மாவு, எண்ணெய் வகைகள் மற்றும் அரிசி ஆகியவை அதற்கு அடுத்த ஐந்து இடங்களில் இருந்தன. இந்த பொருள்களின் விற்பனை 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி கண்டுள்ளது. மிக பிரபலமான நுகர்பொருளான பிஸ்கெட் விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது. சலவைத் தூள் மற்றும் சோப்பு விற்பனை 10 சதவீத வளர்ச்சியும், குளியல் சோப் விற்பனை 4 சதவீத வளர்ச்சியும் கண்டுள்ளன.

category:

இதுவரை இல்லாத அளவிற்கு முந்திரி பருப்பு ஏற்றுமதி ரூ.4,976 கோடியாக உயர்வு

Posted: 29 Apr 2014 12:24 PM PDT

கொச்சி

சர்வதேச சந்தையில் தேவைப்பாடு அதிகரித்ததன் காரணமாக 2013–14–ஆம் நிதி ஆண்டில் முந்திரி பருப்பு ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,976 கோடியாக உயர்ந்துள்ளது என முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

கச்சா முந்திரி

கச்சா முந்திரி பருப்பாக மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி போதுமான அளவில் இல்லாததால் ஆண்டுக்கு 8 முதல் 9 லட்சம் டன் கச்சா முந்திரி இறக்குமதி செய்யப்படுகிறது. பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இது அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. சென்ற ஆண்டில் அங்கு உற்பத்தி குறைவாக இருந்ததால் விலை உயர்ந்தது. இதனால் இறக்குமதி செலவினம் உயர்ந்தது. சென்ற நிதி ஆண்டில் கச்சா முந்திரி இறக்குமதி 15 சதவீதம் குறைந்து 7.58 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

அதேசமயம், பாரம்பரிய சந்தையான அமெரிக்காவிலும், அரபு நாடுகளிலும் முந்திரிக்கான தேவைப்பாடு அதிகரித்தது. ஐரோப்பிய சந்தையில் தேவைப்பாடு வழக்கம் போலவே இருந்தது. இதன் காரணமாக சென்ற நிதி ஆண்டில் முந்திரி ஏற்றுமதி அளவு அடிப்படையில் 13 சதவீதம் வளர்ச்சி கண்டு 1.13 லட்சம் டன் முந்திரி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சென்ற நிதி ஆண்டின் இறுதியில் கச்சா முந்திரி விலை உயர்வால் ஏற்றுமதி சிறிது குறைந்தது. இருப்பினும், சர்வதேச சந்தையில் முந்திரி விலை நிலையாக இருந்ததால் ஏற்றுமதி எளிதாக ரூ.5,000 கோடியை நெருங்கியது என வெஸ்டர்ன் இந்தியா கேஷ்யூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹரிகிருஷ்ணன் ஆர்.நாயர் தெரிவித்தார்.

உற்பத்தி செலவினம்

ஊதிய உயர்வு மற்றும் கச்சா முந்திரி விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் முந்திரி பருப்பு விலை அதிகரிக்கவில்லை என்றால் நடப்பு ஆண்டில் முந்திரி ஏற்றுமதியில் நல்ல வளர்ச்சி இருக்காது என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

category:

பாக்.தீவிரவாதிகளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டு சதி நரேந்திரமோடியை கொல்லமனித வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம்பாதுகாப்பை அதிகரிக்க ஜனாதிபதிக்கு கோரிக்கை

Posted: 29 Apr 2014 12:18 PM PDT

புதுடெல்லி,

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.கடந்த ஆண்டு பாட்னாவில், புத்த கயாவில் அவரை கொல்ல சதிசெய்து குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் அதில் இருந்து அவர் தப்பித்து விட்டார்.

3 அடுக்கு பாதுகாப்பு

இப்போது பிரதமர் வேட்பாளராக அவர் பாரதீய ஜனதாவினால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்தபோது, அவர்களை எதிர்த்து வீரமாய் சண்டையிட்ட தேசிய பாதுகாப்பு படையின் 108 கமாண்டோக்கள் (கறுப்பு பூனைப்படையினர்) பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

ராஜீவ் பாணியில்...

இந்த நிலையில், நரேந்திரமோடியை மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கொல்வதற்கு கூட்டுச்சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக விசுவ இந்து பரிஷத் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அந்த அமைப்பின் தலைவர் அசோக்சிங்கால் ஒரு அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
நரேந்திரமோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை (ஐ.பி.) உச்சகட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை போன்று, இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் அமையலாம் என கூறப்பட்டுள்ளது.நரேந்திரமோடியை துப்பாக்கியால் சுட மாட்டார்கள், ஆதரவாளர் போன்ற வேஷத்தில் மனித வெடிகுண்டாக மாறி வந்து அவரை குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதல் நடத்துபவர் ஆணா, பெண்ணா என்பது குறிப்பிடப்படவில்லை.

கூட்டுச்சதி

நரேந்திரமோடியை கொல்வதற்கு இந்திய முஜாகிதீன், பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., மும்பை தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் ஆகியோர் கூட்டுச்சதி செய்துள்ளனர்.சமீபத்தில் நரேந்திரமோடி அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவால் தேடப்பட்டு வருகிற தீவிரவாதி தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டு வந்தே தீருவோம் என்று சூளுரைத்துள்ள நிலையில், மோடி மீதான மனித வெடிகுண்டு தாக்குதல் அச்சுறுத்தல் வெளிப்படையான ஒன்றாக அமைந்துள்ளது.

விசாரணை வேண்டும்

தீவிரவாதம் என்பது நமது நாட்டில் நீண்ட காலமாகவே மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. அரசு, இந்த சவாலை கவனத்தில் கொள்ள வேண்டும். தீவிரவாதிகளை, கூலிப்படையினரை, கொலையாளிகளை, அவர்களது கூட்டத்தை, தாதாக்களை, சிலீப்பர் செல் களை (தீவிரவாத குழுக்களை) ஒடுக்குவது தொடர்பாக பணியாற்றி, ஒட்டுமொத்த செயல் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.தற்போது வெளியிடப்பட்டுள்ள உளவுத்துறை எச்சரிக்கையின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பாதுகாப்பை உறுதி செய்க

அவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதில் பொதுவாக இந்த தேசமும், குறிப்பாக அவரது ஆதரவாளர்களும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.நரேந்திரமோடியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உங்கள் அரசின் மூலமாகவும், மாநில அரசுகள் மூலமாகவும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் பாதுகாப்பு அம்சங்களை தரம் உயர்த்தி, எந்தவித கவனக்குறைவுக்கும் இடம் அளிக்காத, முழுமையான பாதுகாப்பினை வழங்குவதை உறுதி செய்ய வேண்டுகிறோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கைதான தீவிரவாதி தகவல்

நரேந்திரமோடியை பாட்னாவிலும், புத்த கயாவிலும் கொல்வதற்கு குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடத்திய வழக்கில், இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் மூத்த தளபதி தேசின் அக்தர் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு விட்டார். கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இந்த இயக்கத்தின் மற்றொரு தளபதியான யாசின் பட்கல், போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, மோடியை கொல்வதற்கு எதையும் செய்வோம். அதற்கு என்ன விலையும் கொடுப்போம் என்று கூறி இருந்தது நினைவுகூரத்தக்கது.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

வீடுகள் விலை குறைவு, ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு ரியல் எஸ்டேட் துறையில் அதிகரிப்பு

Posted: 29 Apr 2014 12:15 PM PDT

புதுடெல்லி

வீடுகள் விலை குறைவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவால் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த 2013–ஆம் ஆண்டில் இவர்கள் இத்துறையில் சுமார் ரூ.12,000 கோடி (200 கோடி டாலர்) முதலீடு செய்துள்ளனர்.

ரூபாய் மதிப்பு சரிவு

சென்ற ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 முதல் 25 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டு வரும் டாலருக்கு அதிக ரூபாய் கிடைக்கும். பொருளாதார மந்தநிலையால் வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் விற்பனை குறைந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளன.

மேற்கண்ட இரண்டு அம்சங்களால் 2013–ஆம் ஆண்டில் அடுக்கு மாடி குடியிருப்புகள் விலை அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரியல் எஸ்டேட் துறையில் எழுச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் மந்தநிலைக்கு பிறகு துபாயில் வீடுகள் விலை மிகவும் உயர்ந்துள்ளது. எனவே, வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2013–ஆம் ஆண்டில் இந்தியாவில் வீடுகள் வாங்குவதற்காக மேற்கொண்ட முதலீடு அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏழு பெரிய நகரங்களில் 12 சதவீத அபார்ட்மெண்டுகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விற்பனையாகியுள்ளன.

பெங்களூரைச் சேர்ந்த நிதேஷ் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் சொகுசு பங்களாக்கள் விற்பனையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. இந்த சொகுசு வீடுகள் ரூ.5 கோடி முதல் ரூ.20 கோடி வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கும் துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து முதலீட்டை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. கடந்த 2013–ஆம் ஆண்டில் ரூபாய் மதிப்பு மிகவும் சரிவடைந்திருந்த காலத்தில் கூர்கானைச் சேர்ந்த ரஹேஜா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் வீடுகள் விற்பனையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு 50 சதவீதமாக உள்ளது.

இந்தியா முதலிடம்

வெளிநாடுகளில் வசிப்பவர்களிடமிருந்து அதிக தொகையை பெற்று கடந்த 2013–ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அவ்வாண்டில் நம் நாட்டிற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய தொகை 7,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

category:

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் வெற்றி

Posted: 29 Apr 2014 11:59 AM PDT

அபுதாபி,

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ள 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே–ஆப்' என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 19–வது லீக் ஆட்டத்தில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.இதன் படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது.  அந்த அணியில் அதிகபட்சமாக ரகானே 59 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார்.கொல்கத்தா அணி தரப்பில் வினய் குமார் 30 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

பின்னர் 153 ரனக்ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா  அணியில் கம்பீரும் பிஸ்லாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். மோசமான பார்மில் இருந்த கம்பீர் இந்த ஆட்டத்தில் சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினார்.எனினும் மற்றொரு தொடக்க ஆட்டகாரர் பிஸ்லா 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து வந்த கலீஸ் 13 ரன்களும் மனிஷ் பாண்டே 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.  

13.4 ஓவரில் அணியின் ஸ்கோர் 88 ரன்களாக இருந்த போது  45 ரன்கள் எடுத்து இருந்த கம்பீர் அவுட் ஆனார். பின்னர் யாதவ்(31) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தர். பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 20 ஓவரில் கொல்கத்தாவும் 152 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது.

இதன் பின்னர் ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பின்பற்றபட்டது. இதில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட ஒரு ஓவரில்  11 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியும் 11 ரன்கள் எடுத்ததால் அதிக பவுண்டரி அடித்த அணியான ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
 

image: 

category:

News Group Category:

கார்கில் போரில் பலியான தியாகிகளை களங்கப்படுத்துவதை விட அரசியலை விட்டேஒதுங்கி விடுவேன்: நரேந்திர மோடி

Posted: 29 Apr 2014 11:41 AM PDT

புது டெல்லி,

கார்கில் போரில் இறந்த தியாகிகளை களங்கப்படுத்துவதை விட அரசியலில் இருந்தே விலகி விடுவேன் என்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

இமாச்சல பிரதேச மாநிலம் பலம்பூரில் பிரச்சாரம் செய்த பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,   உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும். நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அவர்க்ளுக்கு நீங்கள் காங்கிரஸ் 60 ஆண்டுகலை கொடுத்தீர்கள். 60 மாதங்கள் எனக்கு கொடுக்க மாட்டீர்களா?

கார்கில் போரில் போரில் உயிர் நீத்த கேப்டன் விக்ரம் பத்ரா, இந்த உள்ளம் கேட்குதே மோர் (more) என்று கூறுவார். அதையே நானும் கூறுகிறேன். இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளையும் பெற விரும்புகிறேன். இந்தியா முழுவதும் தாமரைக்கு 300 இடங்களை தாருங்கள்" என்று மோடி பேசினார். மோடி இவ்வாறு பேசியதற்கு பத்ராவின் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில்,  இந்த சர்ச்சை தொடர்பாக மோடி பேசினார். அதில் பேசியதாவது:-'போரில் வீர மரணம் அடைந்த ஒரு தியாகியை நினைவுக் கூரக் கூடாது என்பது அரசியலில் எந்த வகையை சேர்ந்தது?' பாராளுமன்ற தேர்தலில் தோற்றுப் போவோம் என்ற பயத்தில் அனைத்து வகை அரசியல் தந்திரங்களையும் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சி என் மீது பழிசுமத்துகிறது.அவருடைய பெற்றோர் ஏராளமான தியாகங்களை செய்துள்ளனர். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

நமது தியாகிகளையும், அவர்களது பெற்றோரையும் களங்கப்படுத்த நினைப்பதை விட   அரசியலில் இருந்தே ஒதுங்கி விடுவேன் என்று கூறும் அளவுக்கு மோடி மாறுபட்டவன்' என்று அவர் கூறியுள்ளார்.

category:

News Group Category:

இன்று நாள் எப்படி?

Posted: 29 Apr 2014 11:05 AM PDT

Endru Image: 

ஆன்மீக சிந்தனை (30-04-2014)

Posted: 29 Apr 2014 11:02 AM PDT

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Anmikasinthanai: 

கன்னித்தீவு (30-04-2014)

Posted: 29 Apr 2014 11:01 AM PDT

Daily Thanthi Image Special: 

Daily Thanthi Special Term:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™