Daily Thanthi |
- டெல்லி மேல்–சபை எம்.பி.யாக சரத்பவார் பதவி ஏற்பு
- கர்நாடகத்தில் 12 வாக்குச்சாவடிகளில் இன்று மறுதேர்தல்
- உத்தரபிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டது; 15 பயணிகள் காயம்
- வரதட்சணை கேட்ட புகாரில் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் கோர்ட்டில் சரண் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு
- பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியது நரேந்திரமோடி-ராகுல் ஆவேச பேச்சு ஒருவர் மீது ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டு
- ஆந்திராவில் சட்டசபையை கலைக்க ஜனாதிபதி ஒப்புதல் ஜனாதிபதி ஆட்சி நீடிப்பு
- எல்–நினோ தாக்கம் ஏற்பட்டால் பருப்பு, வெங்காயம் உற்பத்தி குறையும்
- ஓடும் ரெயிலில் நகைபறிப்பு சம்பவத்தையொட்டி ரெயில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
- ‘நரேந்திரமோடி ஒரு பிசாசு’ மம்தா பானர்ஜி கடும் தாக்கு
- சிருங்கேரியில் துப்பாக்கி சூடு கைது செய்யப்பட்ட போலீஸ்காரரை விடுதலை செய்ய வேண்டும்
| டெல்லி மேல்–சபை எம்.பி.யாக சரத்பவார் பதவி ஏற்பு Posted: 28 Apr 2014 01:20 PM PDT மும்பை, மராட்டியத்தில் இருந்து டெல்லி மேல்–சபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் மத்திய மந்திரி சரத்பவார், மஜீத் மேமன் (தேசியவாத காங்கிரஸ்), முரளி தியோரா, உசேன் தல்வாய் (காங்கிரஸ்), ராஜ்குமார் தூட் (சிவசேனா), ராம்தாஸ் அத்வாலே (இந்திய குடியரசு கட்சி), சஞ்சய் காகடே (சுயேச்சை) ஆகிய 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் சரத்பவார், மஜீத் மேமன், முரளி தியோரா ஆகிய 3 பேர் நேற்று டெல்லி மேல்–சபையில் உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். image: category:Tagging:News Group Category: |
| கர்நாடகத்தில் 12 வாக்குச்சாவடிகளில் இன்று மறுதேர்தல் Posted: 28 Apr 2014 01:17 PM PDT பெங்களூர், கர்நாடகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) 12 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மின்னணு எந்திரங்களில் கோளாறு கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 17–ந் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 67 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவின்போது தும்கூர், ஹாவேரி, பாகல்கோட்டை, பிஜாப்பூர், குல்பர்கா, ராய்ச்சூர், பீதர், சிமோகா, ஹாசன் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 12 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு மறுதேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரியின் ஆலோசனைப்படி 12 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. 12 வாக்குச்சாவடிகளில்... இதையடுத்து அந்த 12 வாக்குச்சாவடிகளில் 29–ந் தேதி (அதாவது இன்று) மறுதேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி அந்த 12 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் இன்று (செவ்வாய்கிழமை) நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மின்னணு எந்திரங்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், போலீசார் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| உத்தரபிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டது; 15 பயணிகள் காயம் Posted: 28 Apr 2014 01:05 PM PDT லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் அவுராவில் இருந்து டேராடூன் சென்ற 'டூன் எக்ஸ்பிரஸ்' ரெயில் நேற்று மாலை அம்பேத்கர்நகர் மாவட்டம் ஜாபர்கஞ்ச் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதில் 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின. இந்த விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்தனர். அதில் சிலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பாதையில் ரெயில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டனர். image: category:News Group Category: |
| Posted: 28 Apr 2014 01:02 PM PDT சென்னை வரதட்சணை கேட்ட புகாரில் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை வருகிற 12–ந் தேதி வரை 15 நாட்கள் ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். காதல் – வரதட்சணை சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 25). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அப்போது இவருக்கும், அதே மையத்தில் படித்த திருச்சியைச் சேர்ந்த வருண்குமார் (27) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 2011–ம் ஆண்டு இரு வீட்டாரும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் பிரியதர்ஷினி குடும்பத்தினரிடம் வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், 2 கிலோ தங்கமும், சொகுசு காரும் கேட்டதாகவும், இதனால் திருமணம் நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது. கோர்ட்டில் சரண் இதுகுறித்து பிரியதர்ஷினி சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். அதன்பேரில் வரதட்சணை ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் போலீஸ் அதிகாரியாக வருண்குமார் நியமிக்கப்பட்டார். தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக ஐகோர்ட்டில் அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் நேற்று காலை சைதாப்பேட்டை பெருநகர 11–வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சாந்தி முன் சரண் அடைந்தார். இதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு சாந்தி வருகிற 12–ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் வருண்குமார் தரப்பில் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை 30–ந் தேதிக்கு (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது. ஜாமீன் மனு தள்ளுபடி இதற்கிடையே தான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு சாந்தி முன் வந்தது. அப்போது அரசு தரப்பிலும், பிரியதர்ஷினி தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவை மாஜிஸ்திரேட்டு சாந்தி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்த தகவல் அறிந்ததும் இந்த வழக்கை விசாரிக்கும் கூடுதல் துணை கமிஷனர் வசுந்திரதேவி நீதிமன்றத்திற்கு வந்தார். அரசு தரப்பு வக்கீல் மானுவேல் அரசுவிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் சைதாப்பேட்டை பெருநகர 11–வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சாந்தியிடம் அரசு தரப்பு வக்கீல் மானுவேல்அரசு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கில் வருண்குமாரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. எனவே 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு இன்று (29ந் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜெயிலில் அடைப்பதற்காக கோர்ட்டில் இருந்து வருண்குமாரை போலீசார் அழைத்து சென்றனர். சிறைக்கு சென்றதும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் category:News Group Category: |
| Posted: 28 Apr 2014 12:57 PM PDT கெராலு, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார்? என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கட்சி முன்னணி தலைவர்கள் கூறி வருகிறார்கள். இறுதி கட்டம் பாராளுமன்ற தேர்தல்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் ஒருவரையொருவர் தாக்கி பிரசாரம் செய்து வருகிறார்கள். தனது மாநிலமான குஜராத்தில் பிரசாரம் செய்த நரேந்திர மோடி, ராகுல் காந்தியை தாக்கியும், பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் செய்த ராகுல்காந்தி, மோடியை தாக்கியும் பேசினர். பொதுஅறிவு இல்லை நரேந்திர மோடி குஜராத் மாநிலம் கெராலு நகரில் பதான் பாராளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:- நீங்கள் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைக்கிறீர்களா, அப்படியென்றால் ராகுல் காந்தியின் பேச்சுகளை கேளுங்கள். அவரது கணக்குப்படி, குஜராத்தில் 27 ஆயிரம் கோடி வேலைகள் காலியாக இருக்கிறது. குஜராத்தின் மொத்த ஜனத்தொகையே 6 கோடியாக இருக்கும்போது, இது எப்படி சாத்தியமாகும்? எந்த மாதிரியான சான்றை காங்கிரஸ் கொண்டு வந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் லோக் அயுக்தா இருக்கிறது. அதன் முதல் வழக்கு இப்போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது என்கிற பொது அறிவு அந்தளவுக்கு இல்லை. டீ விற்றேனா?இல்லையா? நான் உண்மையிலேயே டீ விற்றேனா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க, காங்கிரஸ் குறைந்தபட்சம் 100 பேரை எனது சொந்த ஊரான வத்நகருக்கு அனுப்பியிருக்கிறது. அவர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், என் தந்தை வயதில் உள்ள சேகர்சிங் வஹேலா அந்த நாட்களில் எனது இடத்துக்கு வருவார். அவர் என்னிடம் அவருக்காக டீ போட்டுத்தரும்படி கூறுவார். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார். ராகுல் தாக்குதல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதாவது:- மோடியின் பேச்சையும் கவனியுங்கள், எனது பேச்சையும் கவனியுங்கள். காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு அன்பும், மரியாதையும் நிறைந்தது. நாங்கள் எதிர்க்கட்சியினர் பற்றி பேசும்போதும் அன்பு, மரியாதையுடன் தான் பேசுகிறோம். கடுமையான சொற்களை கோபமான குரலில் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் எப்படி யாருக்கும் நல்லது செய்ததில்லையோ, அதுபோல எந்த நல்லதையும் பேசுவதில்லை, குஜராத் மக்கள் தான் அந்த மாநிலத்தை உருவாக்கினார்கள். குஜராத் பெண்களால் தான் அமுல் நிறுவன பொருட்களை பிரபலமானது. ஆனால் நீங்கள் 60 வருடங்களாக ஒன்றும் செய்யவில்லை. ரூ.35 ஆயிரம் கோடி ஆனால் இப்போது மோடி வந்து, நான் தான் குஜராத்தை உருவாக்கினேன் என்று தற்பெருமை பேசுகிறார். அதேபோல நாட்டையும் உருவாக்குவேன் என்கிறார். எல்லா பொது அறிவும் இருக்கிறதா? என்று யாரையும் கேட்கும் உரிமை மோடிக்கு இல்லை. மோடி சில குறிப்பிட்ட தொழில் அதிபர்களுக்கு தான் சாதகமாக செயல்படுகிறார். அதானி குழும நிறுவனங்களுக்கு 45 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்டர் ஒரு ரூபாய் விலையில் வழங்கியிருக்கிறார். ரூ.26 ஆயிரம் கோடி ஆதாயம் அளிக் கக்கூடிய அளவுக்கு மின்சாரத்தை விட்டுக் கொடுத்தார். இவைகளின் மூலம் அதானிக்கு கிடைத்த மொத்த பலன் ரூ.35 ஆயிரம் கோடி. ஒரு கார்கம்பெனிக்காக ஒரு நானோ கார் கம்பெனிக்காக டாடா நிறுவனத்துக்கு 0.1 சதவீத வட்டியில் ரூ.10 ஆயிரம் கோடி 25 வருட கடனாக மோடி வழங்கியிருக்கிறார். ஆனால் அவர் பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்துக்கு ஒதுக்கியது வெறும் ரூ.8 ஆயிரம் கோடி தான். அதேசமயம் விவசாயிகளின் கடனுக்கு 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. கர்நாடகா, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடந்த ஊழல்கள் அவர் கண்களுக்கு தெரியவில்லை. இந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் அன்புடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் நாட்டை பிளவுபடுத்துவதை பற்றி பேசுகிறார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| ஆந்திராவில் சட்டசபையை கலைக்க ஜனாதிபதி ஒப்புதல் ஜனாதிபதி ஆட்சி நீடிப்பு Posted: 28 Apr 2014 12:05 PM PDT புதுடெல்லி, ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு பதவியில் இருந்த காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்ததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அரசியல் சாசன விதி 356–ன் கீழ் ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால், அதற்கு 2 மாதத்திற்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். ஆனால் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடப்பதன் காரணமாக அதற்கான வாய்ப்பு இல்லை என்பதால், ஆந்திராவில் சட்டசபையை கலைக்கவும், ஏப்ரல் 30–ந் தேதிக்கு மேலும் ஜனாதிபதி ஆட்சியை நீடிக்கவும் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய மந்திரிசபை சிபாரிசு செய்தது. அதை ஏற்று ஆந்திர சட்டசபையை கலைக்கவும், அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை நீடிக்கவும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. image: category:Tagging:News Group Category: |
| எல்–நினோ தாக்கம் ஏற்பட்டால் பருப்பு, வெங்காயம் உற்பத்தி குறையும் Posted: 28 Apr 2014 12:01 PM PDT புதுடெல்லி நடப்பு ஆண்டில், எல் நினோ தாக்கம் ஏற்பட்டால் பருப்பு மற்றும் வெங்காயம் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. எல் நினோ பருவநிலை மாற்றத்தால் பசிபிக் பெருங்கடல் சார்ந்த சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கிறது. பொதுவாக இந்த எல் நினோ பாதிப்புகளால் இந்தியாவில் பருவமழை குறைய வாய்ப்புள்ளது. நம் நாட்டில் 4 முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை எல் நினோ பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. எல் நினோ தாக்கம் ஏற்படும் பட்சத்தில் உற்பத்தி குறைவு, விலை உயர்வு, தனிநபர் நுகர்வு பற்றாக்குறை ஆகிய இடர்பாடுகள் தோன்றும். மேலும் இறக்குமதியை அதிகம் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பருப்பு உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. மொத்த பருப்பு உற்பத்தியில் இம்மாநிலங்களின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. பருவமழை சராசரி அளவைக் காட்டிலும் குறைவாக இருந்தால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். இதன் தொடர்ச்சியாக பருப்பு வகைகளின் விலையும் அதிகரிக்கும். நம்நாட்டில் தற்போது ஆண்டுக்கு சுமார் 1.80 கோடி டன் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. 2016–ஆம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தி 2.10 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் அடுத்த சில ஆண்டுகளில் நுகர்வு 2.30 கோடி டன்னாக உயரும் என தெரிகிறது. சப்ளையை காட்டிலும் தேவைப்பாடு அதிகரிக்கும் என்பதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சப்ளையை அதிகரிக்கும் வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். image: category:Tagging:News Group Category: |
| ஓடும் ரெயிலில் நகைபறிப்பு சம்பவத்தையொட்டி ரெயில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 28 Apr 2014 11:57 AM PDT சென்னை, தர்மபுரி அருகே ஓடும் ரெயிலில் பெண்களிடம் நகைபறிப்பு சம்பவத்தையொட்டி, சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து நெடுந்தூரம் செல்லும் ரெயில்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் மற்றும் மானாமதுரை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ், மன்னார்குடி செல்லும் மண்ணை எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வழக்கமாக இந்த ரெயில்களில் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். தற்போது இந்த சம்பவத்தையொட்டி கூடுதலாக 2 போலீசார் ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று ரெயில்வே போலீஸார் கூறினர். image: category:News Group Category: |
| ‘நரேந்திரமோடி ஒரு பிசாசு’ மம்தா பானர்ஜி கடும் தாக்கு Posted: 28 Apr 2014 11:51 AM PDT கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி குறித்து பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தேர்தல் பிரசார கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த திரிணாமுல் காங்கிரசின் செய்தி தொடர்பாளர் டெரக் ஓ பிரியன், மோடியை குஜராத்தின் கசாப்புகடைக்காரர் என்று வர்ணித்தார். இந்த நிலையில் மோடி, மம்தா பானர்ஜி தான் வரைந்து அதிக விலைக்கு விற்பனை செய்த ஓவியங்கள் பற்றி தெரிவிக்கவேண்டும் என்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடது சாரிகளை விட மம்தா கடந்த 35 மாதங்களில் மேற்கு வங்காளத்தை சேதப்படுத்திவிட்டார் எனவும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு மம்தாவிடமிருந்து நேற்று ஆவேசமாகவும், கோபமாகவும் பதில் வந்தது. இதுதொடர்பாக டுவிட்டரில் அவர், ''மோடி ஒரு பிசாசு. ஆபத்தான மனிதர். அவர் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இருளில் மூழ்கிவிடும். அவரைப் போன்ற கலவரக்கலை நிபுணர்களிடமிருந்து வளர்ச்சி பற்றிய போதனை எங்களுக்குத் தேவையில்லை'' என்று காட்டமாக எழுதியுள்ளார்.
image: category:Tagging: |
| சிருங்கேரியில் துப்பாக்கி சூடு கைது செய்யப்பட்ட போலீஸ்காரரை விடுதலை செய்ய வேண்டும் Posted: 28 Apr 2014 11:30 AM PDT சிக்மகளூர், சிக்மகளூர் மாவட்டம் சிருங்கேரியில் கடந்த 19–ந் தேதியன்று நக்சலைட்டு ஒழிப்பு படையினர் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு லாரியை அவர்கள் மறித்து சோதனை செய்ய முயன்றனர். அப்போது லாரியில் இருந்தவர்கள் திடீரென்று கீழே குதித்து தப்பியோடினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த நக்சலைட்டு ஒழிப்பு படையினர் தப்பியோடிவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் தீர்த்தஹள்ளி பகுதியை சேர்ந்த கபீர் என்பவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார். இதுகுறித்து சி.ஐ.டி. விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கபீரை துப்பாக்கியால் சுட்ட நக்சலைட்டு ஒழிப்புபடை போலீஸ்காரர் நவீன் நாயக்கை சி.ஐ.டி. போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கைது செய்தனர். இதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று சிக்மகளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற போலீஸ்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் சேகரப்பா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேத்தன் ஆகியோர்களிடம் மனு ஒன்றையும் கொடுத்தனர். --– படம் உண்டு. image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |