Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சேலம் அருகே பயங்கரம்: ஓடும் பஸ்சில் கண்டக்டர் சரமாரி வெட்டிக்கொலை 10 பேர் கும்பல் வெறிச்செயல்–பயணிகள் அலறியடித்து ஓட்டம்

Posted: 26 Apr 2014 01:10 PM PDT

சேலம்,

சேலம் அருகே நேற்று இரவு ஓடும் பஸ்சில் கண்டக்டரை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பஸ்சுக்குள் ஏறிய கும்பல்

சேலம் அருகே வலசையூரில் இருந்து நேற்று இரவு அரசு டவுன் பஸ் சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு புறப்பட்டு வந்தது. பஸ்சில் சுமார் 30–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். பள்ளிப்பட்டியை சேர்ந்த ஜம்பு என்கிற சண்முகம் (வயது 46) கண்டக்டராக பணியில் இருந்தார்.

வீராணம் அருகே சின்னனூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்து நின்று பயணிகளை இறக்கி கொண்டிருந்தபோது, திடீரென 10 பேர் கொண்ட கும்பல் பஸ்சுக்குள் மளமளவென ஏறியது. பின்னர், பஸ்சில் இருந்த டிரைவர் சிவகுமாரின் கழுத்தில் கத்தியை வைத்து கும்பலை சேர்ந்த சிலர் மிரட்டல் விடுத்தனர். பிறகு பஸ்சுக்குள் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்த கண்டக்டர் சண்முகத்தை, பஸ்சுக்குள் ஏறிய 10 பேர் கும்பலை சேர்ந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.

கண்டக்டர் கொலை

இதை சற்றும் எதிர்பாராத பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு கீழே இறங்கி அலறியடித்துக் கொண்டு அய்யோ..! அம்மா...! என்று சத்தம்போட்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது பஸ்சுக்குள் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தபடி கண்டக்டர் சண்முகம் பஸ்சுக்குள் விழுந்தார். இருப்பினும் ஆத்திரம் தாங்காத கும்பல், கண்டக்டர் சண்முகத்தை பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த கண்டக்டர் சண்முகம் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

பிறகு சண்முகத்தை கொலை செய்துவிட்டு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவாகினர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் சின்னனூரை சேர்ந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். இது குறித்து வீராணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

போலீசார் விசாரணை

மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார்தாகூர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

காரணம் என்ன?

கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் மகன் சுரேன்பாபு (25) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்ததாகவும், பிறகு அவர்கள் திருமணம் செய்துவிட்டனர். அதன்பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் சண்முகத்திற்கு முன்விரோதம் இருந்து வந்தாகவும் தெரிகிறது.

இதுதவிர, அப்பகுதியில் அவர் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தாகவும், மேலும், சாதிவிட்டு சாதி கலப்பு திருமணம் செய்யும் காதலர்கள் பிரச்சினையிலும் அவர் அவ்வபோது தலையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சண்முகத்தை மர்ம ஆசாமிகள் கொடூரமாக வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையுண்ட சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பள்ளிப்பட்டி கிராமத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இந்தநிலையில், சண்முகம் கொலைக்கு தொடர்புடைய நபர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் நேற்று நள்ளிரவு சேலம் வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் அங்கு வந்து கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

image: 

category:

தாதர் ரெயில் நிலையம்

Posted: 26 Apr 2014 01:04 PM PDT

யோகா குரு பாபாராம்தேவ், தலித் பெண்களை பற்றி இழிவாக பேசியதாக கூறி அவரை கண்டித்து நேற்று தாதர் ரெயில் நிலையம் முன் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்தபடம்.

7

தல்ஜீத் சிங் கோலி

Posted: 26 Apr 2014 01:01 PM PDT

பா.ஜனதாவில் இணைந்த தல்ஜீத் சிங் கோலியை நரேந்திரமோடி பாராட்டிய காட்சி.

5

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

Posted: 26 Apr 2014 12:57 PM PDT

பெங்களூர் கேப்டன் விராட்கோலி ஆட்டம் இழந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர்.

3

நன்மை தருவார் கோவில்

Posted: 26 Apr 2014 12:46 PM PDT

சனி மகாபிரதோஷத்தை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சுவாமி - அம்பாள் நந்தி வாகனத்தில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

4

இந்திய டென்னிஸ் வீரர்

Posted: 26 Apr 2014 12:45 PM PDT

டெல்லியில் நேற்று நடந்த விழாவில் இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயசுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்ம பூஷண் விருதை வழங்கிய போது எடுத்தபடம்.

6

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

Posted: 26 Apr 2014 12:27 PM PDT

டெல்லி டேர்டெவில்ஸ்–மும்பை இந்தியன்ஸ்

இடம்: ஷார்ஜா, நேரம்: மாலை 4 மணி

கேப்டன்கள்: கெவின் பீட்டர்சன்/ரோகித் ஷர்மா

நட்சத்திர வீரர்கள்: மயங்க் அகர்வால், நாதன் கவுல்டர் நிலே, குயின்டன் டீ காக், டுமினி, ஜெய்தேவ் உனட்கட்/கோரி ஆண்டர்சன், மைக் ஹஸ்ஸி, பொல்லார்ட், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங்.

இதுவரை நேருக்கு நேர்: 12 டெல்லி வெற்றி–6, மும்பை வெற்றி–6

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடந்த தனது 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வி (கொல்கத்தா, பெங்களூர், சென்னை அணிகளுக்கு எதிராக) கண்டு வெற்றிக்கணக்கை தொடங்காமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வி கண்டது. 2–வது ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. 3–வது மற்றும் 4–வது லீக் ஆட்டங்களிலும் (சென்னை, ஐதராபாத் அணிக்கு எதிராக) தோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் 7–வது இடத்தில் உள்ளது. முதல் 3 ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாடாத டெல்லி அணி கேப்டன் கெவின் பீட்டர்சன் கடந்த ஆட்டத்தில் களம் கண்டாலும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சோபிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் எம்.விஜய், டீ காக் ஆகியோர் ஆட்டம் சிறப்பாக இருந்தது. மிடில் ஆர்டரில் கெவின் பீட்டர்சன், டுமினி ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியமாகும். ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியினர் 184 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இருந்தனர். இதனால் டெல்லி அணியின் பந்து வீச்சு முன்னேற்றம் காண வேண்டியது இன்றியமையாததாகும். டெல்லி அணியின் பந்து வீச்சு பலம் அடைந்தால் மட்டுமே, முதல் வெற்றியை ருசிக்க மும்முரம் காட்டும் மும்பை இந்தியன் அணிக்கு முஸ்திப்பை காட்ட முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ்

இடம்: ஷார்ஜா, நேரம்: இரவு 8 மணி

கேப்டன்கள்: டோனி, ஷிகர்தவான்

நட்சத்திர வீரர்கள்: பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், சுரேஷ்ரெய்னா, டுபிளிஸ்சிஸ், ரவீந்திர ஜடேஜா/ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டெயின், டேரன் சேமி, அமித்மிஸ்ரா.

இதுவரை நேருக்கு நேர்: 2 சென்னை வெற்றி–2, ஐதராபாத் வெற்றி–0

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளிடம் தோல்வி கண்டு மோசமான தொடக்கத்தை சந்தித்தது. 3–வது லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரில் 4 ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி புதிய நம்பிக்கையை பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் ஆரோன் பிஞ்ச் (88 ரன்கள்)– டேவிட் வார்னர் (58 ரன்கள்) ஜோடி 2–வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 128 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர்தவான், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் லோகேஷ் ராகுல், வேணுகோபால் ராவ் ஆகியோர் இதுவரை ஜொலிக்கவில்லை. ஸ்டெயின், புவனேஷ்வர்குமார் ஆகியோர் அடங்கிய அந்த அணியின் பந்து வீச்சு மெச்சும் படியாகவே உள்ளது.

2 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியுடன் தான் இந்த ஆண்டு போட்டியை தொடங்கியது. ஆனால் அடுத்தடுத்த 3 லீக் ஆட்டங்களில் (டெல்லி, ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கு எதிராக) தொடர்ச்சியாக வெற்றி கண்டு வலுவாக விசுவரூபம் எடுத்து வருகிறது. வலுவான சென்னை அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி காண்பது என்பது கடும் சவாலான விஷயம் என்றால் மிகையாகாது.

--–

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்–சோனி செட்மேக்ஸ்.

category:

ஐ.பி.எல். கிரிக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் 2–வது வெற்றி பெங்களூர் அணியை 70 ரன்னில் சுருட்டியது

Posted: 26 Apr 2014 12:17 PM PDT

அபுதாபி,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 70 ரன்னில் சுருட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ள 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே–ஆப்' என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் அபுதாபியில் நேற்று மாலை நடந்த 14–வது லீக் ஆட்டத்தில் ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்–விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

கெய்ல் ஆடவில்லை

முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் நேற்றும் உடல் தகுதியை எட்டவில்லை. இரண்டு அணிகளிலும் தலா இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் குல்கர்னி, பவுல்க்னெருக்கு பதிலாக கருண்நாயர், கனே ரிச்சர்ட்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பெங்களூர் அணியில் வருண் ஆரோன், முரளிதரன் ஆகியோருக்கு பதிலாக ரவிராம்பால், சச்சின் ராணா ஆகியோர் இடம் பெற்றனர்.

'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஷேன் வாட்சன், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட பெங்களூர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது.

70 ரன்னில் சுருண்டது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், பெங்களூர் அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் மளமளவென்று சரிந்தன. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய கேப்டன் விராட்கோலி (21 ரன்கள்), ஸ்டார்க் (18 ரன்கள்), ரவிராம்பால் (13 ரன்கள்) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் வந்த வேகத்திலேயே சொற்ப ரன்களில் நடையை கட்டினார்கள்.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 15 ஓவர்களில் 70 ரன்னில் சுருண்டது. இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் இதுவே குறைந்தபட்ச ஸ்கோராகும். அத்துடன் ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் பெங்களூர் அணி எடுத்த மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். ஏற்கனவே 2008–ம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 82 ரன்னில் ஆல்–அவுட் ஆனதே பெங்களூர் அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பிரவின் தாம்பே 4 விக்கெட்டும், கனே ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பின்னி, ஷேன் வாட்சன், ரஜத் பாட்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 2–வது வெற்றி

பின்னர் 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஹானே 23 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும், கருண்நாயர் 8 ரன்னிலும், கேப்டன் ஷேன் வாட்சன் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அபிஷேக்நாயர் 11 ரன்னுடனும், ஸ்டூவர்ட் பின்னி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பிரவின் தாம்பே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

4–வது ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். 4–வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இது 2–வது தோல்வியாகும்.

ஸ்கோர்போர்டு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

பார்த்தீவ் பட்டேல் (ரன்–அவுட்) 1

யோகேஷ் தகவாலே (சி) சஞ்சு சாம்சன் (பி) ஸ்டூவர்ட் பின்னி 0

விராட்கோலி (சி) டிம் சவுதி (பி) பிரவின் தாம்பே 21

யுவராஜ்சிங் (சி) ஸ்டீவன் சுமித் (பி) கனே ரிச்சர்ட்சன் 3

டிவில்லியர்ஸ் (பி) கனே ரிச்சர்ட்சன் 0

சச்சின் ராணா (பி) ஷேன் வாட்சன் 3

அல்பி மோர்கல் (சி) ஸ்டீவன் சுமித் (பி) பிரவின் தாம்பே 7

ஸ்டார்க் (சி) ஸ்டூவர்ட் பின்னி (பி) ரஜத் பாட்டியா 18

ரவிராம்பால் (சி) டிம் சவுதி (பி) பிரவின் தாம்பே 13

அசோக் திண்டா எல்.பி.டபிள்யூ (பி) பிரவின் தாம்பே 0

யுஸ்வேந்த்ரா சாஹல் (நாட்–அவுட்) 0

எக்ஸ்டிரா 4

மொத்தம் (15 ஓவர்களில் ஆல்–அவுட்) 70

விக்கெட் வீழ்ச்சி:

1–1, 2–1, 3–5, 4–5, 5–17, 6–28, 7–46, 8–62, 9–70.

பந்து வீச்சு விவரம்:

ஸ்டூவர்ட் பின்னி 1–0–1–1

டிம் சவுதி 3–0–16–0

கனே ரிச்சர்ட்சன் 4–0–18–2

ஷேன் வாட்சன் 2–1–5–1

பிரவின் தாம்பே 4–0–20–4

ரஜத் பாட்டியா 1–0–7–1

ராஜஸ்தான் ராயல்ஸ்

ரஹானே (சி) பார்த்தீவ் பட்டேல் (பி) ஸ்டார்க் 23

கருண் நாயர் (சி) பார்த்தீவ் பட்டேல் (பி) ஸ்டார்க் 8

சஞ்சு சாம்சன் (ரன்–அவுட்) 2

அபிஷேக்நாயர் (நாட்–அவுட்) 11

ஷேன் வாட்சன் (சி) டிவில்லியர்ஸ் (பி) யுஸ்வேந்த்ரா சாஹல் 24

ஸ்டூவர்ட் பின்னி (நாட்–அவுட்) 0

எக்ஸ்டிரா 3

மொத்தம் (13 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 71

விக்கெட் வீழ்ச்சி:

1–31, 2–35, 3–36, 4–68.

பந்து வீச்சு விவரம்:

ஸ்டார்க் 4–0–29–2

ரவிராம்பால் 4–0–16–0

யுஸ்வேந்த்ரா சாஹல் 3–1–17–1

அசோக்திண்டா 2–0–8–0

category:

ஆசிய பேட்மிண்டன் போட்டி: சிந்து, ஜூவாலா–அஸ்வினி ஜோடிக்கு வெண்கலப்பதக்கம்

Posted: 26 Apr 2014 12:14 PM PDT

ஜிம்சியோன்,

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிந்துவும், இரட்டையர் பிரிவில் ஜூவாலா–அஸ்வினி ஜோடியும் வெண்கலப்பதக்கம் பெற்றது.

ஆசிய பேட்மிண்டன் போட்டி

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்போட்டி தென் கொரியாவில் உள்ள ஜிம்சியோனில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் 18 வயதான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக தர வரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் ஷிசியான் வாங்கை எதிர்கொண்டார்.

சிந்து தோல்வி

78 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21–15, 20–22, 12–21 என்ற செட் கணக்கில் ஷிசியான் வாங்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 2–வது செட்டில் கடைசி கட்டத்தில் செர்வ் செய்த போது நேர்ந்த தவறால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழக்க நேரிட்டது. இருப்பினும் சிந்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

ஐதராபாத்தை சேர்ந்த சிந்து ஏற்கனவே ஷிசியான் வாங்கை 3 முறை வீழ்த்தியதுடன், அவரிடம் ஒரு முறை தோல்வியும் கண்டு இருந்தார். தற்போது சிந்து சந்தித்தது 2–வது தோல்வியாகும்.

ஜூவாலா ஜோடியும் தோல்வி

தோல்வி குறித்து தேசிய பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், 'ஒட்டு மொத்ததில் சிந்து நன்றாக விளையாடினார். மிகவும் நெருக்கமான ஆட்டமாக இருந்தது. இதுபோன்ற நெருக்கடிமான போட்டியில் அதிர்ஷ்டமும் அவசியம். தோற்றாலும் சிந்து விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது' என்றார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜூவாலா கட்டா–அஸ்வினி ஜோடி 12–21, 7–21 என்ற நேர்செட்டில் சீனாவின் லூ யிங்–லூ யு ஜோடியிடம் 33 நிமிடத்தில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது.

category:

கல்லூரி மாணவி மாயம்: கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted: 26 Apr 2014 12:13 PM PDT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வேகுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறி இருப்பதாவது:–

எனது மகள் அம்சவேணி(வயது 19) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ 2–ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 11–ந்தேதி தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்ற அவள் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பொன்னமராவதி போலீசில் புகார் கொடுத்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் முத்தல்ராஜ், பழனியாண்டி ஆகியோர் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மாயமான கல்லூரி மாணவியை போலீசார் கண்டுபிடித்து 2 வாரத்துக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™