Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சென்னையில் ஓட்டு எண்ணும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு 24 மணி நேரமும் கண்காணிக்கிறார்கள்

Posted: 24 Apr 2014 08:55 AM PDT

சென்னை,

சென்னையில் ஓட்டு எண்ணும் இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எந்திர துப்பாக்கி போலீஸ் குவிப்பு

சென்னையில் நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தாலும், 6 மணிக்கு வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் சுமார் 30 வாக்குச்சாவடிகளில் இரவு 7 மணிவரை வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர்.ஓட்டுப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில் இருந்து, ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.வட சென்னை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணுப்படும்,சென்னை ராணிமேரி கல்லூரிக்கும்,மத்திய சென்னை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரிக்கும்,தென் சென்னை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் இடமான அண்ணாபல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு, எந்திர துப்பாக்கியுடன் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் காவல் காக்கிறார்கள்.அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.கேமரா காட்சிகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும்.கேமரா காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, டி.வி.மானிட்டரில் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதிக ஒளி வெள்ளத்தை கக்கும் ராட்சத விளக்குகளும் அங்கு பொருத்தப்பட்டுள்ளன.

மின்சார தடை இருக்காது

அங்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.ஜெனரேட்டர் வசதி இருக்கும்.2&வது அடுக்கில் எந்திர துப்பாக்கியுடன் தமிழக ஆயுதப்படை போலீசார் இருப்பார்கள்.3&வது அடுக்கில் உள்ளூர் போலீசார் இருப்பார்கள்.ஓட்டு எண்ணும் இடங்களில் ஒரு துணை கமிஷனர் தலைமையில் 500 போலீசார்,24 மணி நேரமும் 3 சிப்டுகளாக காவல் பணியில் இருப்பார்கள். தீயணைக்கும் வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

மொத்தத்தில், ஓட்டுப்பதிவு எந்திரங்களை கோழி, முட்டையை அடைகாப்பது போல,ஓட்டும் எண்ணும் நாளான மே மாதம் 16&ந் தேதிவரை போலீசார் காவல் காப்பார்கள், என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

category:

News Group Category:

ராயக்கோட்டை அருகே லாரி – கார் மோதல்; ஓட்டு போட்டு விட்டு பெங்களூருக்கு திரும்பிய 3 பேர் உடல் நசுங்கி சாவு

Posted: 24 Apr 2014 08:51 AM PDT

ராயக்கோட்டை,

ராயக்கோட்டை அருகே லாரி – கார் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டு போட்டு விட்டு பெங்களூருக்கு திரும்பிய 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

ஓட்டு போட சென்றனர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது பச்சிமாதரஅள்ளி. இந்த ஊரைச் சேர்ந்தவர் மாது (வயது 40). இவர் உள்பட சிலர் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் தங்களது சொந்த ஊரில் சென்று வாக்களிப்பதற்காக கார்களில் பெங்களூரில் இருந்து பச்சிமாதரஅள்ளி கிராமத்திற்கு சென்றனர்.

அங்கு வாக்களித்து விட்டு அவர்கள் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இதில் ஒரு காரில் மாது (வயது 40), முருகேசன் (31) உள்பட மொத்தம் 4 பேர் பயணம் செய்தனர். மற்றொரு காரில் தங்கவேல், முனியம்மா, மாரியாத்தா, மணி, தஞ்சம்மா ஆகிய 5 பேர் சென்றனர்.

3 பேர் சாவு

மாது சென்ற கார் நேற்று மாலை ராயக்கோட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. ராயக்கோட்டை அருகே பிள்ளாரி அக்ரஹாரம் முனியப்பன் கோவில் பக்கமாக சென்ற போது லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மாது(வயது 40), முருகேசன் (31), மற்றும் 5 வயது சிறுமி என மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். அந்த காரில் பயணம் செய்த நடராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார்.

போலீசார் விசாரணை

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள்.

மேலும் விபத்து நடந்த இடத்துக்கு கிரேன் மற்றும் பொக்லைன் வரவழைக்கப்பட்டது. விபத்துக்குள்ளான லாரி மற்றும் கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் உள்ளே நசுங்கி கிடந்த மாது, முருகேசன் ஆகியோர் உடல்கள் மீட்கப்பட்டன. இதை தொடர்ந்து போலீசார் அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து நடந்த இடத்தில் 108 ஆம்புலன்சின் கண்ணாடி உடைப்பு

ராயக்கோட்டை அருகே லாரி – கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அதில் 3 பேரின் உடல்களை ஏற்றவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சிலர் அந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

category:

News Group Category:

தமிழகத்தில் 72.83% சதவீதம் வாக்குகள் பதிவு

Posted: 24 Apr 2014 08:43 AM PDT

சென்னை,

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற வாக்கு பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பாராளுமன்ற தேர்தல் இன்று 6-வது கட்டமாக தமிழ் நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள்   மற்றும் யூனியன்  பிரதேசங்களில் நடந்து முடிந்துள்ளது.  மொத்தம் 117 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக காலை 6.45 மணி முதலே மக்கள் வாக்கு சாவடிகளுக்கு வர தொடங்கி விட்டார்கள்.

7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும்  பெரும்பாலான  ஓட்டு சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டளித்தனர்.

தமிழகம் முழுவதும் 9 மணி நிலவரப்படி 14.31 சதவீத வாக்குபதிவும்  11 மணி நிலவரப்படி 35.28 சதவீத வாக்குப்பதிவும் நடநது இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

74 சதவீத வாக்குகள்

இந்நிலையில், மாலை 6 மணியுடன் நடந்து முடிந்த தமிழக அளவிலான வாக்கு பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று, சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு 62 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

category:

News Group Category:

தமிழகத்தில் 72.83% வாக்குகள் பதிவு பிரவீன்குமார் தகவல்

Posted: 24 Apr 2014 08:41 AM PDT

சென்னை,

தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் 72.83% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அனைத்து வாக்குசாவடி வாக்குப்பதிவும் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. தமிழகத்தில் உள்ள 5 கிராம மக்கள் தேர்தலை புற்க்கணித்துள்ளனர். தருமபுரியில் அதிகபட்சமாக80.90% பதிவாகியுள்ளன.குறைந்தபட்டம் வாக்குபதிவு தென் சென்னை 57,86%வாக்குகள் பதிவுவாகியுள்ளன. வாக்குப்பதிவு தொடர்பன முழுமையான விவரம் நாளை அறிவிக்கபடும். தமிழகத்தில் 144 தடை உத்தரவு பயன் அளிக்கும் வகையில் இருந்தது. விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

 

category:

News Group Category:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது

Posted: 24 Apr 2014 08:08 AM PDT

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை அமைதியாக நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக,திமுக கூட்டணி,காங்கிரஸ்,பாஜக கூட்டணி, இடதுசாரிகள் என ஐந்து முனை போட்டி உள்ளது. தமிழகம் புதுவையில் 40 தொகுதிகளில் 875 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இன்று பதிவான வாக்குகள் மே 16-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபடும்.
 

category:

News Group Category:

தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத ஐ.டி.நிறுவனங்கள் மீது வழக்கு தேர்தல் கமிஷன் அதிரடி

Posted: 24 Apr 2014 08:05 AM PDT

சென்னை,

தேர்தல் நாளில் செயல்பட்டதாக 3 தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரபட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. சோழிங்க நல்லூரில் செயல்பட்டு வரும் 3 தனியார் ஐ.டி.நிறுவங்கள் மீது குற்றச்சாட்டபட்டுள்ளது. ஐ.டி.நிறுவனத்தில் பணி புரிந்த 3,500 பேரை தேர்தல் அதிகாரிகள் வெளியேற்றினர். 3 ஐ.டி. நிறுவனங்களின் நுழைவாயில்களையும் பூட்டி தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசு உத்தரவுக்கு மாறாக செயல்பட்டதாக 3 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் நெல்லையில் விடுப்பு அளிக்காத துணிக்கடைக்கு  ஆட்சியர் உத்தரவின்படி சீல் வைக்கபட்டது.

category:

News Group Category:

பொறியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு மே3-ந்தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

Posted: 24 Apr 2014 07:11 AM PDT

சென்னை,

அண்ணா பல்கலைகழகம் அறிவிக்கபடவுள்ள மையங்களில் மே20தேதி முதல் விண்ணப்பங்களை பெற்றுகொள்ளலாம் என்று அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.மேலும் பொறியல் மாணவர் சேர்க்கைக்கான முழு விவர அறிக்கை மே20ம் தேதி வெளியீடப்படும். ரேண்டம் எண்,தரவரிசை பட்டியல்,கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கபடும். கூடுதல் விவரங்களை பெற www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறியலாம் என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
 

category:

News Group Category:

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெறும்; வாக்களித்த பின்னர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

Posted: 24 Apr 2014 07:02 AM PDT

திண்டிவனம்,

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெறும் என திண்டிவனத்தில் வாக்களித்தபின் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

அன்புமணி ராமதாஸ்

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெரு மரகதாம்பிகை ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தர்மபுரி பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் காலை 8.15 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் வெளியே வந்த அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

35 தொகுதிகளில் வெற்றி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெறும். மோடி பிரதமராக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் அல்லாத மிகப்பெரிய கூட்டணி உருவாகியிருக்கிறது.

எனவே இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் தமிழகத்திலும், இந்தியாவிலும் மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வினர் கடந்த 2 நாட்களாக 39 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர். தேர்தலுக்கு பணம் கொடுக்கும் செயல் என்பது வேதனையளிக்கிறது. இந்த கேவலமான கலாசாரம் அடியோடு அழிக்கப்பட வேண்டும்.

இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நன்மையில்லை

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதேபோன்று இலங்கை பிரச்சினை, நதிநீர் பிரச்சினை, மீனவர் பிரச்சினையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் குடிநீர் மற்றும் மின்வெட்டு பிரச்சினை அதிகமாக உள்ளது. தர்மபுரி தொகுதியில் மேட்டூர் அணை உள்ளது. அந்த அணையின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்கின்றனர்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு போட்டு எந்தவித நன்மையும் இல்லை. இந்த தடை உத்தரவால் அ.தி.மு.க.வினர் அமைதியான முறையில் பணம் கொடுப்பதற்கு உதவியுள்ளது. இது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்திய தேர்தல் விதி சட்டத்தை மாற்ற வேண்டும். இந்த தேர்தலில் ஜனநாயகத்தை மீறிய செயல்கள் நடக்கிறது. காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோழமை கட்சிக்கு வாக்களித்தீர்களா? என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, உங்களுக்கு அதில் என்ன சந்தேகம் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

ம.தி.மு.க. வேட்பாளர்

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7.15 மணிக்கு வாக்களித்தார்.

category:

News Group Category:

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது; திருநாவுக்கரசர் பேட்டி

Posted: 24 Apr 2014 06:56 AM PDT

ஆவுடையார்கோவில்,

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறினார்.

தொண்டர்களிடம் உற்சாகம்

ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான திருநாவுக்கரசர், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் தீயத்தூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;–

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளதை தேர்தல் பிரசாரத்தின் போது நான் நேரில் கண்டேன். ராமநாதபுரத்திற்கு காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி வந்து சென்றபின்னர் தொண்டர்களிடம் புதிய உற்சாகத்தை காண முடிகிறது.

சரியான நடவடிக்கை இல்லை

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி கணிசமான வாக்குகளை பெறுவதால், எதிர் காலத்தில் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலுக்கு அது நல்ல அஸ்திவாரமாக அமையும். ஆளுங்கட்சியினர் பணம் கொடுப்பது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்தோம். அதற்கு அவர்கள், எந்த தொகுதியில் பணம் கொடுக்கப்படுகிறது என்று சரியாக கூறினால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறிவிட்டனர்.

தமிழகத்தில் தேர்தல் பணியில் தமிழக அரசு ஊழியர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அரசுக்கு பணிந்து செயல்படுகின்றனர். தேர்தல் கமிஷனுக்கு என்று சுயமான அலுவலர்கள் இல்லாத நிலையில், அரசு அலுவலர் களை நம்பி தேர்தல் பணி செய் வதால், சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால், நூறு நாள் வேலை திட்டம் 200 நாளாக அதிகரிப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

category:

News Group Category:

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெறும் வாக்களித்த பின்னர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

Posted: 24 Apr 2014 06:52 AM PDT

விழுப்புரம்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெறும் என திண்டிவனத்தில் வாக்களித்தபின் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

அன்புமணி ராமதாஸ்

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெரு மரகதாம்பிகை ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தர்மபுரி பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் காலை 8.15 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் வெளியே வந்த அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

35 தொகுதிகளில் வெற்றி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெறும். மோடி பிரதமராக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் அல்லாத மிகப்பெரிய கூட்டணி உருவாகியிருக்கிறது.

எனவே இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் தமிழகத்திலும், இந்தியாவிலும் மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வினர் கடந்த 2 நாட்களாக 39 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர். தேர்தலுக்கு பணம் கொடுக்கும் செயல் என்பது வேதனையளிக்கிறது. இந்த கேவலமான கலாசாரம் அடியோடு அழிக்கப்பட வேண்டும்.

இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நன்மையில்லை

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதேபோன்று இலங்கை பிரச்சினை, நதிநீர் பிரச்சினை, மீனவர் பிரச்சினையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் குடிநீர் மற்றும் மின்வெட்டு பிரச்சினை அதிகமாக உள்ளது. தர்மபுரி தொகுதியில் மேட்டூர் அணை உள்ளது. அந்த அணையின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்கின்றனர்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு போட்டு எந்தவித நன்மையும் இல்லை. இந்த தடை உத்தரவால் அ.தி.மு.க.வினர் அமைதியான முறையில் பணம் கொடுப்பதற்கு உதவியுள்ளது. இது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்திய தேர்தல் விதி சட்டத்தை மாற்ற வேண்டும். இந்த தேர்தலில் ஜனநாயகத்தை மீறிய செயல்கள் நடக்கிறது. காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோழமை கட்சிக்கு வாக்களித்தீர்களா? என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, உங்களுக்கு அதில் என்ன சந்தேகம் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

ம.தி.மு.க. வேட்பாளர்

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7.15 மணிக்கு வாக்களித்தார்.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™