Daily Thanthi |
- தென் கொரிய கப்பல் மூழ்கும்போது உயிர் காப்பு கவசத்தை நண்பனுக்கு அளித்து உயிரிழந்த மாணவன்
- மாயமான மலேசிய விமானத்தை தேட புதிய முயற்சி; சர்வதேச விசாரணைக்கு மலேசியா ஒப்புதல்
- வாரணாசியில் ஆம் ஆத்மி தலைவர் சோம்நாத் பார்தி மீது தாக்குதல்
- எனது பையில் 500 ரூபாய் உள்ளது, பழைய ஜீப் உள்ளது வாரணாசியில் கெஜ்ரிவால் பிரசாரம்
- தேர்தல் பிரசாரம் செய்ய சென்ற குஜராத் மந்திரி ஹெலிகாப்டரில் ரூ.1¾ லட்சம் பறிமுதல்
- வீடு புகுந்து பெண்ணுக்கு கத்திக்குத்து கள்ளக்காதலனின் மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
- நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு பாகிஸ்தான் ஆதரவு இங்கிலாந்து செய்தி நாளிதழ்
- மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டவர்கள் டைம் கருத்துக்கணிப்பில் மோடியை முந்திய கெஜ்ரிவால்
- ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை
- வெளிநாட்டுக்கொள்கை தொடர்பான மோடியின் கருத்து ஊக்கம் தருவதாக உள்ளது பாகிஸ்தான்
| தென் கொரிய கப்பல் மூழ்கும்போது உயிர் காப்பு கவசத்தை நண்பனுக்கு அளித்து உயிரிழந்த மாணவன் Posted: 23 Apr 2014 09:22 AM PDT சியோல், தென்கொரியாவில் இருந்து சுற்றுலா சென்ற கப்பல் விபத்தில் சிக்கி மூழ்கும்போது, அதில் பயணம் செய்த 17 வயது மாணவன் தன் சக நண்பரை காப்பாற்றுவதற்காக தன்னிடம் இருந்த உயிர் காப்பு கவசத்தை அவனுக்கு அளித்துள்ளான். உயிர் தப்பிய 100 பேரில், துரதிர்ஷ்டவசமாக ஜங் என்ற அந்த மாணவன் இல்லை. தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜூ தீவுக்கு 475 பேருடன் சென்ற கப்பல் கடந்த வாரம் புதன்கிழமை அன்று நடுக்கடலில் மூழ்கியது. இந்த கப்பலில் பயணம் செய்தவர்களில், அன்சன் பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 339 பேரும் அடங்குவர். மாயமானவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி மூழ்கியவர்களில் 146 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தென்கொரியாவின் தென்மேற்கு கடற்கரையில் அதிக குளிரில் கப்பல் நீருக்குள் மூழ்க தொடங்கியபோது, ஜங் சா&வூங் என்ற 17 வயது மாணவனுக்கு உயிர் காக்கும் கவசம் கிடைத்துள்ளது. எனினும், தன் அருகே பயத்தில் நடுங்கி கொண்டிருந்த இருந்த நண்பனுக்கு அந்த கவசத்தை வூங் அளித்து காப்பாற்றினான். ஆனால், வூங்கிற்கு உயிர் தப்பும் அதிர்ஷ்டம் இல்லை. இதனை அறிந்த அந்த மாணவனின் தாய், என்னால் நம்ப முடியவில்லை என்று கதறி அழுததுடன், தனது மகன் படித்த பள்ளி கூடத்தின் மேஜையில் சரிந்து விழுந்தார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ஜங் ஒரு ஹீரோ என்று கூறி சென்றார்கள். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. image: category:Tagging:News Group Category: |
| மாயமான மலேசிய விமானத்தை தேட புதிய முயற்சி; சர்வதேச விசாரணைக்கு மலேசியா ஒப்புதல் Posted: 23 Apr 2014 08:45 AM PDT பெர்த்/கோலாலம்பூர், 239 பேருடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 'எம்எச் 370' கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் சென்ற வழியில், கடந்த மாதம் 8-ந்தேதி நடுவானில் மாயமானது. அந்த விமானத்தின் கதி என்ன ஆனது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. இருப்பினும், இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற ரேடார் தகவலின் பேரில், விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வந்த 'பிங்' சமிக்ஞையை கேட்டு, அது இருக்கிற இடத்தை தேடிக்கண்டு பிடிக்கும் முயற்சியில் 'புளுபின்-21' என்ற நீர்மூழ்கி 'ரோபோ' பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடலுக்கு அடியில் 80 சதவீத பரப்பை அந்த நீர்மூழ்கி ரோபா ஸ்கேன் செய்தும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில், 29 ஆண்டுகளுக்கு முன்பு டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை கண்டுபிடிக்க பயன்படுத்திய ஆற்றல் வாய்ந்த முறையினை பயன்படுத்துவது தொடர்பாக ஆஸ்திரேலியா ஆய்வு செய்து வருகிறது. இதுதொடர்பாக மலேசியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை ஆஸ்திரேலியா ஆலோசித்து வருகிறது. இந்தத் தகவலை ஆஸ்திரேலிய ராணுவ மந்திரி டேவிட் ஜான்சன் தெரிவித்தார். இந்நிலையில் மலேசிய அமைச்சரவை மாயமான மலேசிய விமான விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் கூறியுள்ளார். கோலால்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஹூசேன், விமான மாயம் குறித்து விசாரணை நடத்தி, விமான விபத்துக்கான காரணத்தை அறிந்து, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதே சர்வதேச விசாரணை குழுவின் முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார். image: category:News Group Category: |
| வாரணாசியில் ஆம் ஆத்மி தலைவர் சோம்நாத் பார்தி மீது தாக்குதல் Posted: 23 Apr 2014 08:32 AM PDT வாரணாசி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பா.ஜனதாவில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் எம்.எல்.ஏ.வும் போட்டியிடுகின்றனர். அங்கு ஆம் ஆத்மி தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்கின்றனர். வாரணாசி தொகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த கெஜ்ரிவால் மீது ஏற்கனவே கற்களும், செங்கற்களும் சரமாரியாக வீசப்பட்டன. இந்நிலையில் வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசவந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சோம்நாத் பார்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. அவரது கார் டிரைவரும் தாக்கப்பட்டுள்ளார் என்றும் தாக்கியவர்கள் பாரதீய ஜனதா கட்சியினை சேர்ந்தவர்கள் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. சோம்நாத் பார்தி முன்னாள் புதுடெல்லி சட்டமந்திரி ஆவார். டெல்லியில் ஆப்பிரிக்க பெண்கள் அதிமாக குடியிருந்த பகுதியில் இரவில் சோதனை மேற்கொண்டு சர்ச்சையில் சிக்கியவர். image: News Group Category: |
| எனது பையில் 500 ரூபாய் உள்ளது, பழைய ஜீப் உள்ளது வாரணாசியில் கெஜ்ரிவால் பிரசாரம் Posted: 23 Apr 2014 08:20 AM PDT வாரணாசி, வாரணாசியில் போட்டியிடும் 'ஆம் ஆத்மி' நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்தின் போது எனது பையில் 500 ரூபாய் உள்ளது, பழைய ஜீப் உள்ளது என்று கூறினார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பா.ஜனதாவில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் எம்.எல்.ஏ.வும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் மே மாதம் 12–ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாரணாசி தொகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த கெஜ்ரிவால் மீது கற்களும், செங்கற்களும் சரமாரியாக வீசப்பட்டன. வாரணாசியில் கெஜ்ரிவால் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உத்தரப்பிரதேச மாநில ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கெஜ்ரிவாலுடன் உடன் சென்றனர். முன்னதாக அரங்கு சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், எனது பையில் 500 ரூபாய் உள்ளது, பழைய ஜீப் உள்ளது என்று கூறினார். "நான் எனது பையில் ரூ. 500 கோடி வைத்துள்ளேன். தேர்தலில் போட்டியிட எனக்கு பணம் இல்லை. நான் எனது வேட்புமனுவை தாக்கல் செய்ய பழைய ஜீப்பில் செல்கிறேன்" என்று கூறினார். நரேந்திர மோடி வாரணாசியில் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் "நீங்கள் நரேந்திரமோடியை ஹெலிகாப்டரில் வைத்து தான் பார்க்க முடியும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கெஜ்ரிவால் வாரணாசியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனக்கும், தன் மனைவி சுனிதாவுக்கும் ரூ.2 கோடியே 14 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ரூ.55 லட்சம் மதிப்புள்ள வீடு, அரியானா மாநிலம் சிவானியில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள வீடு, மனைவி பெயரில் குர்கானில் உள்ள ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு ஆகியவையும் அடங்கும். மேலும், தனக்கு ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.17 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளதாக கூறியுள்ளார். தன் கையில் ரூ.15 ஆயிரமும், மனைவியின் கையில் ரூ.10 ஆயிரமும் இருப்பதாக கூறியுள்ளார். தனக்கு கடன் இல்லை என்றும், தன் மனைவிக்கு ரூ.41 லட்சம் கடன் இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 2012-2013-ம் நிதி ஆண்டில், தனது வருமானம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் என்றும், மனைவியின் வருமானம் ரூ.9 லட்சத்து 84 ஆயிரம் என்றும் அவர் கூறியுள்ளார். image: News Group Category: |
| தேர்தல் பிரசாரம் செய்ய சென்ற குஜராத் மந்திரி ஹெலிகாப்டரில் ரூ.1¾ லட்சம் பறிமுதல் Posted: 23 Apr 2014 08:00 AM PDT ராஜ்கோட், குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் மீன் வளத்துறை மந்திரியாக இருப்பவர் பர்சோத்தம் சோலங்கி. இவர் ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் மோகன்குன்டரியாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய ஜஸ்டன் நகருக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அவரது ஹெலிகாப்டர் விஞ்சையா ரோடு அருகே தரையிறங்கியது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது ஹெலிகாப்டரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது ஹெலிகாப்டரில் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபற்றி மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். image: News Group Category: |
| வீடு புகுந்து பெண்ணுக்கு கத்திக்குத்து கள்ளக்காதலனின் மகனுக்கு போலீஸ் வலைவீச்சு Posted: 23 Apr 2014 07:52 AM PDT பெங்களூர், பெங்களூரில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதையொட்டி தலைமறைவான கள்ளக்காதலனின் மகனை போலீசார் தேடிவருகிறார்கள். கள்ளக்காதல் பெங்களூர் சந்திரா லே–அவுட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மெட்ரோ லே–அவுட்டில் வசித்து வருபவர் அஸ்லம் பாட்ஷா. இவரது மனைவி தஸ்லிம்மா(வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கே.ஆர்.மார்க்கெட்டில் அஸ்லம் பாட்ஷா வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், கங்கொண்டனஹள்ளியை சேர்ந்த சாந்த் பாட்ஷா(40) என்பவருடன் தஸ்லிம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியதாகவும், அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி சாந்த் பாட்ஷாவின் மனைவிக்கு தெரியவந்தது. உடனே அவர், தஸ்லிம்மாவுடன் உள்ள உறவுவை கைவிடும்படி தனது கணவரை கண்டித்தார். மேலும் சாந்த் பாட்ஷாவின் மனைவிக்கும், தஸ்லிம்மாவுக்கும் இடையே சண்டையும் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று அஸ்லம் பாட்ஷா வெளியே சென்றிருந்தார். தஸ்லிம்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்து ஒரு வாலிபர் தன்னிடம் இருந்த கத்தியால் தஸ்லிம்மாவின் வயிறு, கழுத்து, கையில் சரமாரியாக குத்திவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அக்கம் பக்கத்தினர் தஸ்லிம்மாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு தஸ்லிம்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பரபரப்பு முன்னதாக சம்பவ இடத்திற்கு சென்று சந்திரா லே–அவுட் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது தஸ்லிம்மாவுடன் இருந்த கள்ளத்தொடர்பால், சாந்த் பாட்ஷாவுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சாந்த் பாட்ஷாவின் மகன் நிஜாம், தஸ்லிம்மாவை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரா லே–அவுட் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சாந்த் பாட்ஷாவின் மகனை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. image: category:Tagging: |
| நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு பாகிஸ்தான் ஆதரவு இங்கிலாந்து செய்தி நாளிதழ் Posted: 23 Apr 2014 07:38 AM PDT லண்டன், வெளிநாட்டுக்கொள்கை தொடர்பான மோடியின் கருத்து ஊக்கம் தருவதாக உள்ளது என்று டெல்லியில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அபுல் பாசித் கூறியுள்ளார். இந்நிலையில் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக இங்கிலாந்து செய்தி நாளிதழ் 'தி டெலகிராப்' பாகிஸ்தான் தூதர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டி, செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியில், 'சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதி நரேந்திரமோடி இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆக வேண்டும். ஏனென்றால், அவர் அமைதிப்பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தேவையான வலிமை வாய்ந்த தலைமைத்துவத்தை தருவார் என பாகிஸ்தான் நம்புகிறது' என குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவமும், தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கவனத்தை செலுத்துகிற வகையில், இந்தியாவுடன் சமரசப் பேச்சு நடத்துவதற்கு ஆதரவாக உள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. image: category:News Group Category: |
| மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டவர்கள் டைம் கருத்துக்கணிப்பில் மோடியை முந்திய கெஜ்ரிவால் Posted: 23 Apr 2014 07:28 AM PDT நியூயார்க், உலக அளவில் மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டவர்கள் தொடர்பாக டைம் பத்திரிக்கை கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் புதுடெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை முந்தியுள்ளார். அமெரிக்கன் பாடகியுமான கேட்டி பெர்ரி இருவருக்கும் முன்னே உள்ளார். இந்திய பாராளுமன்றத் தேர்தல் மூன்று வாரங்களில் முடிவடைய உள்ளது. மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்ட 100 தலைவர்கள் பட்டியலில் இவர்கள் இடம் பெறலாமா என்ற கேள்வியுடன் டைம் பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மொத்தம் 3,168,308 மக்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் 71.5 சதவீத பேர் ஆம் என்றும் 28.5 சதவீத பேர் இல்லை என்றும் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5,075,588 பேர் வாக்களித்துள்ளனர். இதில் 49.7 சதவீத பேர் ஆம் என்றும் 50.5 சதவீத பேர் இல்லை என்றும் வாக்களித்துள்ளனர். இல்லை என்ற வாக்குகளே அதிகமாக பதிவாகியுள்ளது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு மொத்தம் 96,070 மக்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் 16.5 சதவீத பேர் ஆம் என்றும், 83.5 சதவீத மக்கள் இல்லை என்றும் வாக்களித்துள்ளனர். image: category:News Group Category: |
| ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை Posted: 23 Apr 2014 07:15 AM PDT துபாய், 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் திருவிழா ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்கும் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே–ஆப்' என்ற அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் துபாயில் நடைபெறும் 10–வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கோதாவில் இறங்கியுள்ளன. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஷேன் வாட்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாட உள்ளது. image: category:Tagging:News Group Category: |
| வெளிநாட்டுக்கொள்கை தொடர்பான மோடியின் கருத்து ஊக்கம் தருவதாக உள்ளது பாகிஸ்தான் Posted: 23 Apr 2014 07:04 AM PDT புதுடெல்லி, மத்தியில் அமையவுள்ள பாரதீய ஜனதா அரசு, முந்தைய வாஜ்பாய் அரசு பின்பற்றி வந்த வெளிநாட்டுக்கொள்கையை முன்னெடுத்துச் செல்லும்; ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை அளிப்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். வெளிநாடுகளுடனான உறவுகளின் அடிப்படையில், ஒத்துழைப்பு அமைய வேண்டும் என்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லியில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அபுல் பாசித், பெண் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம், மோடிக்கு ஆதரவு தராதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று பாரதீய ஜனதா தலைவர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்திருக்கிறாரே? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அவரது கட்சியும், அவரும் கூறிய எல்லா கருத்துக்களையும், விமர்சனங்களையும் நான் வாசித்தேன். அவற்றில் சிறந்த கருத்து பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரிடமிருந்து வந்ததாகும். அந்தக் கருத்து எனக்கு மிகுந்த ஊக்கம் தருவதாக உணர்கிறேன். பாகிஸ்தானைப் பற்றி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறபோது அவர் அளித்த பதில் மிகவும் ஆக்கப்பூர்வமானதாக அமைந்துள்ளது. ஆக்கப்பூர்வமான காரியங்கள் இனி நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. நான் ஊக்கம் அடைந்துள்ளேன் என பதில் அளித்தார். image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |