Daily Thanthi |
- ‘சோனியா குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்’ நரேந்திரமோடி பிரசாரம்
- சென்னை நர்சிங் கல்லூரிகளில் ரூ.35 லட்சம் லஞ்ச கேட்ட இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் கைது
- 'என் தாய், வீடுகளில் பாத்திரம் கழுவினார்' நான் டீ விற்றேன்: நரேந்திர மோடி உருக்கமான பேச்சு
- தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
- திருமணம் ஆன போது நரேந்திரமோடி ஒன்னும் 'மைனர் இல்லை' நடிகை நக்மா தாக்கு
- கோவிலுக்கு சென்ற புதுமண தம்பதியர் விபத்தில் பலி; அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை சாவு
- 'தமிழ்நாட்டில் மோடி அலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை' கருணாநிதி பேட்டி
- வேட்புமனுக்களில் மனைவியின் பெயரை குறிப்பிடாத மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
- அதிகாரத்தை கொடுத்துள்ளோம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் ராகுல் காந்தி
- தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம்
| ‘சோனியா குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்’ நரேந்திரமோடி பிரசாரம் Posted: 22 Apr 2014 09:05 AM PDT நகரி, 'முதன் முதலாக தேர்தலை சந்திக்கும் தெலுங்கானா மக்கள் ஆட்சியை சோனியா குடும்பத்திடம் கொடுத்துவிடாதீர்கள்' என்று நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார். ஆந்திராவில் நரேந்திர மோடி பிரசாரம் ஆந்திராவில் பாரதீய ஜனதா கட்சியுடன் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்கு மத்திய மந்திரி சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான பவன்கல்யாண் தொடங்கிய ஜனா சேனா கட்சியும் ஆதரவு அளித்து உள்ளது. ஆனால் அவரது கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. பாரதீய ஜனதா மற்றும் தெலுங்குதேச கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திரமோடி ஆந்திராவில் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் ஆந்திராவில் நிஜாமாபாத், ஐதராபாத் மற்றும் பாலமூர் ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாவது:– உயிர்த்தியாகத்தில் உதயமானது தெலுங்கானா ஆந்திராவில் தெலுங்கானா மாநிலத்தை கொண்டு வந்தது நாங்கள் தான் என்று சோனியா காந்தி ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் ராஷ்டிரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவும் கூறிவருகிறார்கள். அவர்கள் யாரும் தெலுங்கானாவை கொண்டு வரவில்லை. தெலுங்கானாவை சேர்ந்த 1100 இளைஞர்களின் உயிர்த்தியாகத்தில் தான் தெலுங்கானா மாநிலம் உதயமானது. நீங்கள் தான் தெலுங்கானாவை கொண்டு வந்தீர்கள். சோனியாவிடம் கொடுக்காதீர்கள் தெலுங்கானா மாநிலம் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. ஊழல் ஆட்சி நடத்திய சோனியா குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள். இந்த தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று யோசித்து வாக்களிக்கவேண்டும். இந்த தேர்தல் மக்களின் அதிர்ஷ்டரேகையை மாற்றும் தேர்தல். எனவே நன்றாக சிந்தித்து ஓட்டளியுங்கள். இந்த பகுதியில் மின் பற்றாக்குறை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. புதிய தொழிற்சாலைகள் உருவாகவும் மின் திட்டங்களை உருவாக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். குஜராத்தில் வளர்ச்சித்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதை இங்கு வசிக்கும் சூரத் மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். குஜராத்தில் பெற்ற வளர்ச்சியானது நாடு முழுவதும் ஏற்படுத்த நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். சொந்த பிள்ளையாக.. தெலுங்கானா மக்களை எங்களது சொந்த பிள்ளையாக கருதுவோம். மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். தாயும் மகனும் நிலக்கரி பைலை திருடி மக்களை இருட்டில் தள்ளினார்கள். காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தி உள்ளது. ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் பிரதமர் பி.வி.நரசிம்மராவை அவமானப்படுத்தியது காங்கிரஸ் கட்சி. பிரதமராக இருந்து மரணம் அடைந்த அவரது உடலுக்கு டெல்லியில் எந்த மரியாதையும் அளிக்காமல் அவரது உடலை உடனடியாக ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்து அவமானப்படுத்தியது. அதேபோன்று ஆந்திராவில் காங்கிரஸ் முதல்–மந்திரியாக இருந்த அஞ்சையாவை ஐதராபாத் விமான நிலையத்தில் ராஜீவ்காந்தி அவமானப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியில் அன்பு இல்லை. அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களை மதிப்பது இல்லை. அவர்கள் ஊழலில் தான் கவனம் செலுத்துவார்கள். இவ்வாறு மோடி கூறினார். News Group Category: |
| சென்னை நர்சிங் கல்லூரிகளில் ரூ.35 லட்சம் லஞ்ச கேட்ட இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் கைது Posted: 22 Apr 2014 08:55 AM PDT சென்னை, இந்திய தணிக்கைத்துறையில் இயக்குனராக பணியாற்றிய பரமசிவம் சென்னையில் உள்ள நர்சிங் கல்லூரிகளில் ரூ.35 லட்சம் லஞ்ச கேட்டார். மேலும், முன்தொகையாக ரூ.5 லட்சத்தை சென்னையில் உள்ள தன் மைத்துனர் டாக்டர் சிவராமிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். பின்னர், அவரை சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு முதன்மை கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதையடுத்து டாக்டர் சிவராமை வருகிற மே 2ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி வணங்காமுடி உத்தரவிட்டார். இந்நிலையில் டெல்லியில் தலைமறைவாக இருந்த பரமசிவனை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை, புதுடெல்லி மற்றும் நொய்டாவில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பரமசிவனின் வீட்டில் சோதனை செய்த போது ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. image: category:News Group Category: |
| 'என் தாய், வீடுகளில் பாத்திரம் கழுவினார்' நான் டீ விற்றேன்: நரேந்திர மோடி உருக்கமான பேச்சு Posted: 22 Apr 2014 08:35 AM PDT துலே, மராட்டிய மாநிலம், துலேயில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உருக்கமாகப் பேசினார். அப்போது அவர், ' நான் டீ விற்று வாழ்க்கை நடத்தினேன். என் தாய், மற்றவர்களின் வீடுகளில் பாத்திரம் கழுவினார். எனவே ஏழை மக்களின் துயரங்களை நான் அறிந்திருக்கிறேன். நாம் அம்பேத்கரைப் பின்பற்றி வந்திருக்கிறேன். என்னை விட உங்கள் பிரச்சினைகளைப் புரிந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது' என குறிப்பிட்டார். image: News Group Category: |
| தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு Posted: 22 Apr 2014 08:20 AM PDT சென்னை, இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் கடந்த 7ந்தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. மொத்தம் 9 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளது. 6 வது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் நாளை மறுநாள் வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. 40 பாராளுமன்ற தொகுதிகளுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலை அமைதியாக நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. image: category:News Group Category: |
| திருமணம் ஆன போது நரேந்திரமோடி ஒன்னும் 'மைனர் இல்லை' நடிகை நக்மா தாக்கு Posted: 22 Apr 2014 07:55 AM PDT இந்தூர், திருமணம் ஆன போது நரேந்திரமோடி ஒன்னும் 'மைனர் இல்லை' என்று நடிகை நக்மா விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மீரட் தொகுதி வேட்பாளாருமான நடிகை நக்மா பல்வேறு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நக்மாவின் கூட்டத்திற்கு கடும் கூட்டம் வருகிறது. நடிகை நக்மா பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நக்மா, நரேந்திர மோடிக்கு திருமணம் ஆனபோது அவர் மைனர் என்று கூறுவது மிகவும் பெரிய பொய். அவருக்கு எப்போது திருமண்ம் ஆனது என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளது. திருமணம் ஆனபோது அவர் மைனர் இல்லை, விவரம் தெரிந்த பெரியவராகிவிட்டார் என்று கூறியுள்ளார். மேலும், முன்பு நடந்த தேர்தல்களில் நரேந்திர மோடி தனது திருமணம் குறித்தான நிலையை தெரிவிக்காத நிலையில் தேர்தல் நேரத்தில் அது குறித்து பேசுவது ஒன்றும் தவறு இல்லை என்று நக்மா கூறியுள்ளார். மேலும், மோடியின் மனைவி யசோதா பென்னுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். குஜராத் மாடல் குறித்து அவர் பேசியபோது, சமீபத்தில் மாதாசா மாவட்டத்தில் தலீத் பெண் 14 இளைஞர்களால் தீ வைக்கப்பட்டது சுட்டிக்காட்டி, இது போன்ற மாடல் மோடியின் திட்டம் நாடு முழுவதும் பிரதிபலிக்குமா என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அமேதி தொகுதியில் போட்டியிடும் நடிகையும், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஸ்மிரிதி இராணியையும் சாடியுள்ளார். மிகவும் முக்கியமான தொகுதியில் நிறுத்தும் அளவுக்கு இராணி நாட்டிற்காக எதனை செய்துள்ளார் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று நக்மா கூறியுள்ளார். image: News Group Category: |
| கோவிலுக்கு சென்ற புதுமண தம்பதியர் விபத்தில் பலி; அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை சாவு Posted: 22 Apr 2014 07:34 AM PDT மும்பை, மும்பையில் கோவிலுக்கு சென்ற புதுமண தம்பதியர் விபத்தில் பலியானார்கள். அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை உயிர் இழந்தார். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– புதுமண தம்பதி தானே மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தம் பத்ரிகார் (வயது 28). இவரது மனைவி மேத்தா (வயது 24). புதுமண தம்பதியரான இவர்கள், தாகுனுவில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். இவர்கள் விரார் மும்பை– அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சாக்வார் கிராமம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதனால் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். பெண்ணின் தந்தையும் சாவு இந்நிலையில் விபத்தில் பலியான தம்பதியரின் உடலை பெற்று செல்ல அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று புதுமணதம்பதியரின் உடல்களை பார்த்த மணமகளின் தந்தை தைனேஷ்வாருக்கு (வயது 48) அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவரும் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இந்த சம்பவம் வசாய் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக விரார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். image: category:Tagging:News Group Category: |
| 'தமிழ்நாட்டில் மோடி அலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை' கருணாநிதி பேட்டி Posted: 22 Apr 2014 07:25 AM PDT சென்னை, 'தமிழ்நாட்டில் மோடி அலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:- 144 தடை உத்தரவு கேள்வி:- தேர்தல் ஆணையம் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் மக்களைப் பயமுறுத்துவதை போல 144 தடை விதித்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அதனை எதிர்த்து இருக்கின்றன. அது சம்பந்தமான உங்கள் கருத்து என்ன?. பதில்:- பயமுறுத்துவதை போல தெரியவில்லை. எந்த எண்ணத்தோடு அதை பிறப்பித்திருக்கிறார்கள் என்று இப்போது கூற முடியாது. கேள்வி:- இந்தியாவில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள், பிரவீன் தொகாடியா போன்றவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். அது அபாயகரமான விஷயமாக உள்ளது. நீங்கள் தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் ஆதரவோடு இந்த தேர்தலை சந்திக்கிறீர்கள். பா.ஜ.க.வினர் இவ்வாறு மோடி பிரதமரானால் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே?. பதில்:- அவ்வாறு ஒருசிலர் பேசுகின்ற கருத்துகளால் சிறுபான்மையினரை பயமுறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத சண்டைக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறார்கள். இந்த சூழலில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. மோடி அலையா? கேள்வி:- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெரிய அபாயம் என்று நினைக்கிறீர்களா?. பதில்:- அப்படி கருதாமல் இருக்க முடியாது. கேள்வி:- தமிழகத்தில் மோடி அலை இருப்பதாக பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். அப்படி மோடி அலை இருக்கிறதா?. பதில்:- தமிழகத்தில் அப்படி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இவ்வாறு கருணாநிதி கூறினார். image: category:News Group Category: |
| Posted: 22 Apr 2014 07:13 AM PDT சென்னை, சட்டசபை தேர்தல்களில் மனைவியின் பெயரை குறிப்பிடாத பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- மனைவியின் பெயர் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, யசோதா பென் என்ற பெண்ணை தனது 17-வது வயதில் திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர், சில ஆண்டுகளிலேயே அவரை விட்டு பிரிந்து நரேந்திர மோடி சென்று விட்டார். தற்போது, குஜராத் மாநிலத்தின் 4-வது முறையாக முதல்-மந்திரி பதவியை நரேந்திர மோடி வகித்து வருகிறார். இவர், குஜராத் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும்போது, தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தன் மனைவியின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தலில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தன் மனைவியின் பெயர் யசோதா பென் என்று குறிப்பிட்டுள்ளார். நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, வேட்புமனுவில் தன்னை பற்றிய தகவல்களை குறிப்பிடாமல் மறைத்து இருந்தால், அது கிரிமினல் குற்றமாகும். குஜராத் சட்டசபை தேர்தலில் 4 முறை போட்டியிடும்போது, தன் மனைவியின் பெயரை வேட்புமனுக்களில் குறிப்பிடாமல் இருந்ததற்காக, நரேந்திர மோடி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 20-ந் தேதி கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் மனுவின் அடிப்படையில் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அதில் கூறியிருந்தார். விசாரணைக்கு உகந்தது அல்ல இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவுகளின் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று முடிவு செய்கிறோம். மேலும், மனுதாரர் தன்னுடைய கோரிக்கை மனுவை கடந்த 20-ந் தேதி அனுப்பி விட்டு, அடுத்த நாளே, அதாவது 21-ந் தேதி இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால், இந்த வழக்கை விசாரிக்க எந்த காரணமும் ஏற்படவில்லை. மனுதாரரின் கோரிக்கை குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. image: News Group Category: |
| அதிகாரத்தை கொடுத்துள்ளோம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் ராகுல் காந்தி Posted: 22 Apr 2014 06:42 AM PDT தூர்க், நாங்கள் உங்களுக்கு அதிகாரத்தை கொடுத்துள்ளோம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சத்தீஷ்கார் மாநிலம் தூர்க் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியபோது, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசைவிட நாங்கள் 2 மடங்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்துள்ளோம். மற்றும் 3 மடங்கு அதிகமான சாலைகளை அமைத்துள்ளோம். நாங்கள் உங்களுக்கு அதிகாரத்தை கொடுத்துள்ளோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். என்னைப் பற்றி அல்லது பிரதமர் மன்மோகன் பற்றி கேட்கலாம். நாங்கள் விவசாயிகளுக்காக ரூ. 70 ஆயிரம் கோடி கொடுத்துள்ளோம். ஆனால் நரேந்திர மோடி 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அடானி குரூப்பிற்கு கொடுத்துள்ளார் என்று கூறினார். image: News Group Category: |
| தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் Posted: 22 Apr 2014 06:28 AM PDT சென்னை, தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதி, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பூச்சாண்டி காட்டுவதாக தேர்தல் ஆணையத்தின் செயல் உள்ளது. ஆளும் கட்சி நடத்தும் அவலங்களை தடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால் தேர்தல் ஆணையம் அதிகாரவர்க்கத்திற்கு ஆலவட்டம் சுற்றுகிறது. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் அடிமையாக இருப்பதாகவும் கடுமையாக சாடியுள்ளார். மேலும், ஜனநாயகம் போய் சர்வாதிகாரம் வந்துவிடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார். image: category:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |