Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 22 Apr 2014 12:28 PM PDT



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

புவி நாள் (Earth Day) - ஏப்ரல் 22

Posted: 22 Apr 2014 12:03 PM PDT

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 1969-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் ...

144 தடை உத்தரவு என்றால் என்ன ?

Posted: 22 Apr 2014 12:02 PM PDT

144 தடை உத்தரவு என்றால் என்ன ? நண்பர்களே ! எனக்கு இதை விளக்க முடியுமா? புன்னகை
.
என்ன பண்ணலாம் என்ன பண்ணக் கூடாது? சொல்லுங்கோ !

வேட்பாளரின் வேண்டுகோள்

Posted: 22 Apr 2014 12:01 PM PDT

அன்பின் வாக்காளர்களே உங்கள் வேட்பாளன் வேண்டுகோள்... வாக்களியுங்கள் வாக்களிப்பது உங்கள் கடமை ஆட்சி செய்வது எனது லட்சியம் வாக்களியுங்கள். உங்களின் தேவை எல்லாம் அறிவேன் வாக்களியுங்கள்... குழந்தைகள் படிப்பு படித்தோர்க்கு வேலை கை நிறைய வருவாய் குடிக்கத் தண்ணீர் (உலகத் தேவை இது) நல்ல மருத்துவம் வாகனப் போக்குவரத்துக்கு சிறந்த சாலை சக்திக்கேற்ற வேலை தேவைக்கேற்ற வசதி இப்படி இப்படி இன்னும் பல எல்லாம் அறிவேன் வாக்களியுங்கள் தேவைகள் நிறைவேற்ற வாக்களியுங்கள் வாக்களிப்பது ...

கருவின் கதை.. மின்நூல்

Posted: 22 Apr 2014 10:51 AM PDT

நமது ஈகரைத்தளத்தில் வெளிவந்த கருவின்கதை தொடர்பதிவு மின்நூல் வடிவில்...

பதிவிறக்க..

கருவின்கதை

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Posted: 22 Apr 2014 09:54 AM PDT

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ...

கொலம்பஸ் என்கிற கொடுங்கோலன்!

Posted: 22 Apr 2014 09:33 AM PDT

ஸ்பானிய மன்னரின் ஆசி பெற்று, தங்கம் இருக்கும் இந்தியாவைத் தேடிப் புறப்பட்ட கொலம்பஸ், இந்தியா என்று நம்பி இறங்கியது, இப்போது கரீபியத் தீவுகள் என்றறியப்படும் நிலப் பகுதியில்தான். அங்கு வாழ்ந்த அரவாக் பூர்வ குடியினர் கொலம்பஸை எப்படி வரவேற்றனர்? "அரவாக்குகள் எங்களை நோக்கி உணவு, தண்ணீர் ஏந்தி ஓடிவந்தனர். கிளிகளையும் பஞ்சுப் பந்துகளையும் ஈட்டிகளையும் பரிசாகக் கொடுத்தார்கள். அவர்களின் கைகளில் ஆயுதங்கள் இல்லை. ஆயுதங்கள் என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களிடம் ஒரு வாளியைக் கொடுத்தேன். ...

சந்தோஷம் என்பது...

Posted: 22 Apr 2014 09:08 AM PDT

சாரல் காற்று, 'சிலுசிலு'வென்று வீச, மலையடிவாரத்தில், இயற்கை சூழலில் அமைந்திருந்த அந்த தங்கும் விடுதியின் அறையில், குழந்தைகள் குதூகலத்துடன் சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். குளிப்பதற்குத் தேவையான துணிகளை, ஒரு பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் உமா. ''உமா, அப்பாவுக்கும் மறந்துடாம மாத்து துணி எடுத்து வைச்சுரு.'' ''எல்லாருக்கும் எடுத்து வச்சுட்டேன்ங்க; மாமா வெளியே போர்டிகோவில் இருக்காரு... கூப்பிடுங்க போகலாம். ஐந்தருவி போய் குளிச்சுட்டு, அப்புறம் மெயின் பால்ஸ் போவோம்.'' வெளியே ...

படித்ததில் பிடித்தது :) - இதையுமா வீடியோ எடுப்பர் ??????????

Posted: 22 Apr 2014 08:59 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

கருவாய்...உருவாய்..அருள்வாய்... மின்நூல்

Posted: 22 Apr 2014 08:38 AM PDT

டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்த
கருவாய்..உருவாய்..அருள்வாய்..மின்நூல் வடிவில

பதிவிறக்க
கருவாய்...உருவாய்..அருள்வாய்

மின்சாரம் திருடினாரா சந்தானம்?

Posted: 22 Apr 2014 08:05 AM PDT

சென்னையில், நடிகர் சந்தானம் அலுவலகத்தில், மின்சாரம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மாலை, அரைமணி நேரம், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சென்னை, விருகம்பாக்கம், எஸ்.பி.ஐ., காலனி, பழைய எண்: 31; புதிய எண்: 10/5 என்ற முகவரியில் உள்ள குடியிருப்பில், நடிகர் சந்தானத்தின் அலுவலகம் உள்ளது. இதற்கு, சந்தானம் வாடகை கொடுத்து வருகிறார். வீட்டு மின் இணைப்பு பெற்றுள்ள, இந்த அலுவலகத்தை, குறும்படம், விளம்பரங்கள் எடுக்க பயன்படுத்தியதாக தெரிகிறது. இது, வர்த்தக பயன்பாட்டின் கீழ் வருகிறது. மின்சாரம் ...

நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 22 Apr 2014 07:54 AM PDT

30-11-2013-குமுதம் ஹெல்த் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/7gl961bgz0uh3xx/Kumudam+Health+30-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 25-11-2013-பசுமை விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/qdhh49t95n0k4l8/Pasumai+Vikatan+25-11-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 27-11-2013-இந்தியா டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/1lrm62m6uiimgvt/IndiaToday+Tamil+27-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 30-11-2013-டைம் ...

தமிழகத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு: தேர்தலுக்காக முதன் முதலாக அமல்!

Posted: 22 Apr 2014 07:41 AM PDT

சென்னை: தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தலுக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தமிழகத்தில் தேர்தலின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பு ...

லேடி காரணமல்ல எனது டாடி தான் காரணம்: ஸ்டாலின்

Posted: 22 Apr 2014 07:11 AM PDT

புதுக்கோட்டையில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசியபோது, ஜெயலலிதாவால் மக்கள் கோரிக்கைகளை அறிந்து கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா கூறியது போல, தமிழகத்தின் பொருளாதர வளர்ச்சிக்கு அவர் காரணமல்ல. அந்த லேடி காரணமல்ல. எனது 'டாடி' தான் காரணம். மத பிரச்னையில் மோடியும், ஜெயலலிதாவும் ஒரே கருத்தை கொண்டவர்கள்தான் என்று பேசினார். முன்கதைச்சுருக்கம்: சென்னை: இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; தமிழகத்தின் இந்த லேடி என தென்சென்னை அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசாரத்தில் ...

நாடாளுமன்ற தேர்தல் 2014 கருத்துக்கணிப்பு

Posted: 22 Apr 2014 06:39 AM PDT

பித்தம் தணிக்கும் பழைய சோறு!

Posted: 22 Apr 2014 05:45 AM PDT

'அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்... வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!'' - வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடி பெரிசுகள் பேசும் இந்த டயலாக், வெறும் வார்த்தை மட்டுமல்ல... 100 சதவிகிதம் உண்மை. 'ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில்தான் அத்தனை சத்துகளும் இருக்கின்றன' என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துணைப் பேராசிரியர் உஷா ஆன்டனி. பட்ட ...

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Posted: 22 Apr 2014 05:27 AM PDT

பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன்

சீனாவில் 43 வினாடிகளில் 95 மாடிகளை கடக்கும் அதிவேக லிப்ட்

Posted: 22 Apr 2014 05:22 AM PDT

சீனாவின் குவாங்ஷு நகரில் 111 அடுக்கு மாடியுடன் கூடிய சி.டி.எப். நிதி நிறுவன மையம் கட்டப்பட்டு வருகிறது. 530 மீட்டர் உயர கொண்ட அந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 2016–ம் ஆண்டு நடைபெற உள்ளது. அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் தற்போது 'லிப்ட்' பொருத்தப்பட்டு வருகிறது. இதை ஜப்பானின் 'ஹிட்டாச்சி' நிறுவனம் தயாரித்துள்ளது. இது அதிவேகத்தில் இயங்க கூடியது. இந்த லிபட் 43 வினாடிகளில் 95 மாடிகளை கடக்கும் திறன் படைத்தது. இதுபோன்ற 2 'லிப்டு'கள் இங்கு பொருத்தப்படுகிறது. இது இரட்டை அடுக்கு மாடிகளை கொண்டது. சக்தி ...

பாகிஸ்தான்: மனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க வயிற்றுக்குள் கருவி

Posted: 22 Apr 2014 04:22 AM PDT

பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கணவருக்கு எதிராக கோர்ட்டில் திடுக்கிடும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது:- எனக்கும் முகம்மது பயாஸ் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஒரு நாள் இரவு மாஜிஸ்திரேட் அக்ரம் ஆசாத் என்பவருடன் குடி போதையில் வந்த என் கணவர் என்னை அந்த மாஜிஸ்திரேட்டுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார். இதற்கு நான் மறுத்ததால், என் கணவரின் ஒத்துழைப்புடன் மாஜிஸ்திரேட் என்னை பலவந்தமாக ...

தென்கொரிய கப்பல் விபத்து: 28 உடல்கள் மீட்பு; 268 பேரை தேடும் பணி தீவிரம்

Posted: 22 Apr 2014 04:21 AM PDT

தென்கொரிய கப்பல் விபத்தில் உயிரிழந்த 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 268 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தென்கொரியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் புதன்கிழமை காலை பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்தது. கடலுக்குள் மூழ்கிய 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உள்ளிட்ட 475 பயணிகளை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் 28 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 268 பயணிகள் மாயமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து ...

கத்தாரில் சக தொழிலாளியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற இந்தியர் கைது

Posted: 22 Apr 2014 04:20 AM PDT

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் உள்ள ஒரு குளிர்சாதன இயந்திரங்கள் பழுது நீக்கும் நிறுவனத்தில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ரிஸ்வானுல் ஹக்(26), கேரளாவை சேர்ந்த சாந்தி ஷியாம் கிருஷ்ணன் நாயர்(43) ஆகியோர் பணியாற்றி வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இவர்களுக்குள் திடீரென்று ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறும் சூழல் உருவானதைக் கண்ட இதர தொழிலாளர்கள், இருவரையும் சமரசம் செய்து பிரித்து அனுப்பினர். இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட ஆவேசம் தணியாத கிருஷ்ணன் நாயர், அறையில் யாரும் இல்லாத போது, வீட்டின் ...

வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் இறந்த தினம்: ஏப்.22- 2013

Posted: 22 Apr 2014 04:12 AM PDT

லால்குடி ஜெயராமன் (செப்டம்பர் 17, 1930 - ஏப்ரல் 22, 2013) தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசை அறிஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர். இவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து கற்றார். ஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12-ம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார். இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கர்நாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்: அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், ...

தனியொருவனாய்...

Posted: 22 Apr 2014 03:55 AM PDT

தனியொருவனாய்... இருள் படர்ந்த வேளையிலே யாருமில்லா சாலையிலே தனிஒருவனாய் நான் மட்டும் நடந்து வந்தேன் ... கண்களில் கண்ணீர் வழிந்தோடி கணங்களை தாண்டி – சில துளிகள் தார்ச்சாலையின் மேல் விழுந்ததன ... நெஞ்சமெல்லாம் சோகங்களாய் நினைவெல்லாம் கவலைகளாய் வாழ்க்கை இருண்டு விட்டதா - இல்லை திடீரென உலகம் சுருங்கி விட்டதா ??? இருளை தவிர இங்கு வேறொன்றும் இல்லை ... மெல்ல வானத்தை நோக்கினேன் மின்மினி பூச்சிகளாய் நட்சத்திரங்கள் ஒற்றை புள்ளியில் நிலை கொண்டது நிலா தோல்விகளும் தொல்லைகளும் ...

40 தொகுதிகளின் நிலவரம்

Posted: 22 Apr 2014 03:52 AM PDT

தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!  இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும் களமிறங்கியிருக்கிறார்கள். வேட்புமனு இறுதி செய்யும் சமயத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு சின்னம் கிடைத்தது. அதுவரை வேட்பாளர் பெயரை மட்டுமே சொல்லி வாக்குகளைக் கேட்டது, ரவிக்குமாருக்கு மைனஸ். ...

முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி

Posted: 22 Apr 2014 03:48 AM PDT

புதுடில்லி: ''முஸ்லிம்களின் தொப்பியை மோடி அணியாததில், எந்த தவறும் இல்லை. சிலர் முஸ்லிம்களின் தொப்பியை அணிந்து, அம்மக்களை ஏமாற்றுகின்றனர். அவ்வாறு இல்லாமல், 'முஸ்லிம் தொப்பியை அணிய மாட்டேன்' என மோடி கூறுவது, அவரின் திடமான நம்பிக்கையை குறிக்கிறது,'' என, முஸ்லிம் மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி கூறினார். கடந்த 7ல் துவங்கி, மே 12 வரை நடைபெறும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ...

தேர்{ஆறு}தல் கவிதைகள்

Posted: 22 Apr 2014 03:29 AM PDT

* வெற்றி பெறுவதற்கு யாகம் செய்கிறார்கள் வேட்பாளர்கள் * சுறுசுறுப்பாகச் சுற்றிய சுயமரியாதைப் பம்பரம் தாமரையிடம் தஞ்சம். * வாரிசுகள் வருகை வரவேற்கிறதா? வெறுக்கிறதா? வருங்கால அரசியல். * கையெடுத்து கும்பிடுகிறார்கள் காலில் விழுந்து எழுகிறார்கள் ஐந்தாண்டுகளுக் கொரு முறை. * எதிர்ப்பு, குழப்பம், மௌனம் மூத்தத் தலைவர்கள் தத்தளிக்கிறார்கள் தாமரை இலைத் தண்ணீராய்…

எமது புகைப்படத்தை எவ்வாறு பதிவிடலாம்?

Posted: 22 Apr 2014 03:28 AM PDT

ப்ரோபயிலில் எமது புகைப்படத்தை எவ்வாறு பதிவிடுவது?

காடுகளை வேட்டையாடும் ஒரே மிருகம்...

Posted: 22 Apr 2014 03:17 AM PDT

- காடுகளை வேட்டையாடும் ஒரே மிருகம் மனிதன் - --------------------------- - வீதியில் கிடைக்கிறது ஞானம் பழைய புத்தகக் கடை - ---------------------------- - இறந்த அப்பா இன்னும் வழி காட்டுகிறார் அலமாரியில் புத்தகங்கள் - --------------------------- - வேண்டாதவர் எதிரில் தப்பிக்க வைத்தது கையில் புத்தகம் - ----------------------------- - வெட்டப்படும் மரங்கள் காயப்படும் வானம் - --------------------------- - விருப்பத்திற்கு மாறாய் ஒரு போதும் வருவதில்லை கவிதை - =============================== >கம்பம் ...

சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்: ஏப்.15- 1976

Posted: 22 Apr 2014 03:13 AM PDT

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது. * 1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜான்சன் அமெரிக்காவின் 17-வது அதிபரானார். * 1892 ...

ஒரு நகைச்சுவை தனிப்பாடல்...

Posted: 22 Apr 2014 03:08 AM PDT

--- ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமான் பிரமசாரியாக இருப்பதற்கு காரணம் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லையாம்.. அதை விநாயகரிடமே தெரிவிக்கிறார் கவிஞர் - ''உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார். உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி. உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு. உன்னுடைய முகமோ யானை முகம். உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன். உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி. உனக்கோ பானை வயிறு? - பின்பு யார் பெண் கொடுப்பார்...?'' - "வீரம் ...

எற்வாறு சுத்தம் செய்யலாம்?

Posted: 22 Apr 2014 03:05 AM PDT

கணனியின் திரையை துடைத்து சுத்தம் செய்யப் பொருத்தமான முறை யாது?அனுபவத்தைக் கொண்டு கூறவும்.

கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்?

Posted: 22 Apr 2014 03:01 AM PDT

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி 2001ல், பதவி ஏற்ற பிறகு, விவசாயத்தில் அம்மாநிலம் அடைந்த வளர்ச்சி அபரிமிதமானது. தொழில் துறை மட்டுமல்லாது, விவசாயத்திற்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்தது தான் இதற்கு காரணம்.அவர் முதல்வராவதற்கு முன், குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகள் கடும் வறட்சியில் சிக்கித் தவித்தன. மோடியின் முயற்சியால், பெரிய கால்வாய் திட்டம் மூலம், நர்மதா அணை நீர் இப்பகுதிக்கு கிடைத்த பிறகு, சவுராஷ்டிராவும், கட்ச்சும் செல்வம் கொழிக்கும் பகுதிகளாக மாறி உள்ளன. இது எப்படி சாத்தியம்: இந்தியாவின் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (237)

Posted: 22 Apr 2014 02:49 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

அரசியல் தொலைநிலைக்கல்வி - நகைச்சுவை

Posted: 22 Apr 2014 01:34 AM PDT

கல்விக்காக உண்மையாகவே தொண்டாற்றுவோரின் எண்ணிக்கை, என்றைக்கோ, 'இறந்த காலம்' ஆகிவிட்டது. இப்போது கல்வி நிறுவனங்களை நடத்துவோர், பெரும்பாலும் அரசியல்வாதிகள். தெரிந்தோ தெரியாமலோ, 'சகலகலா வல்லவர்'களாக திகழும் இவர்கள், எத்தனையோ படிப்புகளை, தங்கள் கல்வி நிறுவனங்களில் நடத்தினாலும், வெளியே சொல்லாத சில, 'கற்பனை' படிப்புகளையும் இவர்கள் நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும். அ.தி.மு.க., 'அஜால் குஜால்' கல்லூரி 'திடீர் ஞானோதய' பட்டப்படிப்பு: தேர்தல், 'கிளைமேக்ஸ்' வரை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, திடீரென பாரதிய ...

என்னைப் பற்றி அறியலாமே!

Posted: 22 Apr 2014 01:32 AM PDT

பெயர்:மு.ஹ.ஜவ்ஹர்
சொந்த ஊர்:இலங்கை,கிண்ணியா (திருகோணமலை மாவட்டம்)
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:தேடல் மூலம்
பொழுதுபோக்கு:கண்டதையும் கற்பது பிடித்ததை ஏற்று நடப்படு
தொழில்: எழுதுவினைஞர்
மேலும் என்னைப் பற்றி:சமூக சேவை செய்வது தொண்டுசெய்வோருக்கு கை கொடுப்பது
  

சென்னை கலை இலக்கியப் பேரவையின் சாதனையாளர் விருது உங்கள் ஆதிராவுக்கு.....

Posted: 22 Apr 2014 12:55 AM PDT

சென்னை கலை இலக்கியப் பேரவையின் சார்பில் இன்று (19.04.14) நடந்த பதம்ஸ்ரீ டாக்டர். சிவந்தி ஆதித்தனார் நினைவுநாள், படத்திறப்பு, மற்றும் உதவிகள் வழங்கும் விழாவில்.... சாதனையாளர் என்னும் விருதினை வழ்ங்கினார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. ச. மோகன் அவர்கள். உடன் இந்நாள் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. எஸ். விமலா கலமாமணி அரிமா. டாக்டர் மணிலால், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கெ. ராஜன், அரிமா ச்க்தி வேல் ஆகியோர்

முதியோர் வாழ்க...!! { கட்டுரை }

Posted: 21 Apr 2014 11:13 PM PDT

- ந.க. துரைறவன் - . - * முதுமைக் காலத்தை, முதியோர் பூரணமாக உணர்ந்து அனுபவித்து தன் இறுதி நாட்களைக் கழித்து வர வேண்டி இருக்கிறது. அவ்வப்போது ஏற்படும் இன்பத் துன்பங்களைக் கடந்து, உறவுகள் வெறுக்கும் சூழலைக் கடந்து முன்னேற வேண்டியிருக்கிறது. முதியோர்களின் உள்ளக் கிடங்கில் எத்தனை எத்தனையோ மனச் சுமைப் புதையல்கள் மண்டிக் கிடக்கின்றன. அவைகளையெல்லாம் மறந்து கொஞ்சமேனும் முதியோர் குறித்த செய்திகள். விவரங்கள், நல்ல இலக்கியங்கள் படித்தறிந்து மன ஆறுதல் பெற்று வாழ்ந்திடல் அவசியம். முதுமை, வாழ்வில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™